இ,பாஸ்புக் வந்து விட்டது பி.எப் எவ்வளவு இருக்கிறது? மாதந்தோறும் பார்க்கலாம் |
உங்கள்
பி.எப். கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது? இதை தெரிந்து கொள்ள ஆண்டுக்கு
ஒரு முறை தரும் பி.எப் சிலிப்புக்காக காத்திருக்க வேண்டாம். பி.எப்
ஆபீசுக்கும் போக வேண்டாம். ஆன்லைனில் மாதந்தோறும் தெரிந்து கொள்ளலாம். ஆம்,
ஆன்லைனில் இ,பாஸ்புக் பெற்று கொள்ளலாம். அதாவது, பி.எப் இணையதளத்தில்
பதிவு செய்தால், உங்களுக்கு இ,பாஸ்புக் ரெடியாகி விடும். அதை பாஸ்வேர்டு
கொடுத்து மாதந்தோறும் பார்த்து அப்டேட் செய்து கொள்ளலாம்.
இது பற்றி, டெல்லியில் நேற்று நடைபெற்ற தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி(பி.எப்) சட்டம் குறித்த கருத்தரங்கில் பி.எப் ஆணையர் ஆர்.சி.மிஸ்ரா கூறியதாவது:
இ,பாஸ்புக் பெற பி.எப். சந்தாதாரர்கள் இபிஎப்ஓ இணையதளத்தில் தங்கள் பி.எப் எண்ணை குறிப்பிட்டு பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்தவர்களுக்கு இ,பாஸ்புக் தயாராகி விடும். அதில் அவர்களின் கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என பார்த்து கொள்ளலாம்.
அதன்பின், மாதந்தோறும் அந்த தொகை அப்டேட் செய்யப்படும். எனவே, சந்தாதாரர்கள் ஆன்லைனில் பி.எப். கணக்கு விவரங்களை அவ்வப்போது தெரிந்து கொள்ளலாம்.
அந்த இ,பாஸ்புக்கில் பெயர், பிறந்ததேதி உள்ளிட்ட விவரங்களும் இடம் பெறும். இந்த வசதி தற்போது மாதச் சந்தா செலுத்தி வருபவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். ஏற்கனவே கணக்கு முடித்தவர்கள் அல்லது செயல்படாத கணக்குகளுக்கு உரியவர்களுக்கு கிடைக்காது.
மேலும், பி.எப் கடன், கணக்கு முடித்து தொகை பெறுதல் ஆகியவற்றுக்கும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியை விரைவில் கொண்டு வரவுள்ளோம். தற்போது மண்டல அளவில் ஆன்லைன் செயல்பாடு உள்ளது. இதை மாற்றி தேசிய அளவில் விவரங்கள் சேகரிக்க முயற்சித்து வருகிறோம். அது முடிந்ததும் ஆன்லைனில் எங்களது 80% வேலைகள் முடிந்து விடும். சந்தாதாரர்களுக்கும் சிறப்பான சேவை கிடைக்கும். இவ்வாறு மிஸ்ரா தெரிவித்தார். பி.எப் அலுவலக இணையதள முகவரி

www.epfindia.com
No comments:
Post a Comment