ஜுலை 18
உருகுவே - அரசியலமைப்பு நாள் (1830)
நெல்சன் மண்டேலா நாள் (ஐநா)
64 - ரோமில் பெரும் தீ பரவி நகரின் வர்த்தக மையத்தில் பெரும் சேதம்
ஏற்பட்டது. அப்போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்று
சொல்லப்படுகிறது.
1656 - போலந்து, மற்றும் லித்துவேனியப் படைகள்
வார்சாவில் சுவீடனின் படைகளுடன் போரை ஆரம்பித்தன. சுவீடிஷ் படைகள்
இப்போரில் வெற்றி பெற்றனர்
1872 - ஐக்கிய இராச்சியத்திலும் அயர்லாந்திலும் இரகசிய வாக்கெடுப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
1944 - இரண்டாம் உலகப் போர்: போரில் ஏற்பட்ட பல தோல்விகளை அடுத்து ஜப்பானியப் பிரதமர் ஹிடெக்கி டோஜோ பதவியைத் துறந்தார்.
1965 - சோவியத்தின் சோண்ட் 3 விண்கலம் ஏவப்பட்டது.
1966 - நாசாவின் ஜெமினி 10 விண்கலம் ஏவப்பட்டது.
1977 - வியட்நாம் ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்தது.
1982 - குவாத்தமாலாவில் பெண்கள், குழந்தைகள் உட்பட 268 மாயன் பழங்குடியினர் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1995 - கரிபியன் தீவான மொன்செராட்டில் சௌபியரே மலை வெடித்ததில் வெடித்துச்
சிதறியதன் காரணமாக மொன்செராட்டின் தலைநகரம் அழிக்கப்பட்டதுடன் மண்டலத்தின்
மக்கட்தொகையின் மூன்றில் இரண்டு பகுதியினர் தீவை விட்டு வெளியேறினர்.
1996 - ஓயாத அலைகள் ஒன்று: முல்லைத்தீவு இலங்கைப் படைமுகாம் விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டது.
1997 - மும்பாயில் 10 சிறுவர்கள் காவற்துறையினரால் கொல்லப்பட்ட
நிகழ்வுக்குப் பின்னர் சுமார் 8000 தலித் மக்கள் கலகத்தில் ஈடுபட்டனர்.
2002 - இந்தியாவின் 12 வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் திரு. APJ Abdul Kalam.
No comments:
Post a Comment