Saturday, August 4, 2012

இலுப்பை மரம்

இலுப்பை மரம் அல்லது இருப்பை மரம் (Bassia longifolia) இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு மரமாகும். இதன் விதையிலிருந்து பிழிந்தெடுக்கப்படும் எண்ணெய், இலுப்பெண்ணெய் எனப்படுகின்றது.


இலுப்பை ம‌ர‌த்திற்கு ஆங்கில‌த்தில் "Mowa tree" என்று சொல்வார்க‌ள்.
"ஆலை இல்லா ஊருக்கு, இலுப்பை பூ தான் சக்கரை" என்ப‌து ப‌ழ‌மொழி.


இலுப்பைப் பூ:


இலுப்பை பூவை பாலில் போட்டுக் காய்ச்சி தினம் ஒரு வேளை பருகி வந்தால் தாது விருத்தி ஏற்படும். மேலும் தாகத்தையும் இது விரட்டியடிக்கும்.


நல்ல சுவையுடைய இப்பூவினால் பாம்பு விஷம், வாத நோய் குணமாகும்.


இலுப்பைப் பூவைச் சர்க்கரையுடன் சேர்த்து அரைத்துக் காய்ச்சிய பாலுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிகள் குறையும். உடல் களைப்புத் தீரும்இருமல் குறையும்.


மலையை சார்ந்த காட்டில் முளைக்கும் இப்பூவினால் பித்த நோய், சுவையின்மை வாந்தி ஆகியவை தீரும்.


இலுப்பை மரத்தின் மருத்துவக் குணங்கள்


பட்டை : இலுப்பை மரத்தின் பட்டைக்குப் பசியைத் தூண்டும் தன்மை உள்ளது. இதன் பட்டையைத் தண்ணீரில் ஊறவைத்து புண், சொறி, சிரங்குகள், தோல் நோய்களுக்கு மேல் பூச்சு மருந்தாகப் பயன்படுத்தலாம். இலுப்பை மரப்பட்டையைக் கஷாயமிட்டு சர்க்கரை நோய்,கீல் வாதம், உள்நாக்கு வீக்கத்திற்கு நல்ல மருந்தாகத் தருகிறார்கள்.


எண்ணெய் : இடுப்புவலி, மூல நோய், மலச்சிக்கல், மார்புச் சளி, ஜலதோஷம், மார்பு வலிகளுக்கு இலுப்பை எண்ணெய் மிகச் சிறந்த மருந்தாக விளங்குகிறது. இலுப்பை எண்ணெய், கடுகு எண்ணெய், புங்க எண்ணெய் மற்றும் பசு நெய்யுடன் கலந்து,தண்ணீர் விட்டுக் கடைந்து வெண்ணெய் எடுப்பார்கள். இதை மார்பு வலிகளுக்கும், சைனஸ் பிரச்னைகளுக்கும் மேல்பூச்சு மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். தொடர்ந்து ஒரு வாரம் இதைப் பூசுவதால் நோய் குறையும்.


புண்ணாக்கு : இலுப்பைப் புண்ணாக்கிற்கு நச்சு நீக்கும் தன்மை இருக்கிறது. தற்கொலை செய்து கொள்வதற்காக உண்ட நச்சுப் பொருட்களை இலுப்பைப் புண்ணாக்கு வெளிக் கொணர உதவுகிறது.


பூக்கள் : இலுப்பை மரப் பூக்கள் ஆண்மை சம்பந்தப்பட்ட பிரச்னைகளைப் போக்கப் பயன்படுகிறது.


இலுப்பைப் பூக்களை ஊற வைத்துக் குடிநீர் செய்து குடித்து வந்தால் இருமல், உடல் உஷ்ணத்தால் வரும் காய்ச்சல், தண்ணீர் தாகம் குணம் பெறும்.


பழம்: இலுப்பைப் பழம் மலச்சிக்கல், வயிற்றுப் பிரச்னைகள்,சிறுநீர் கழிப்பதில் வரும் பிரச்னைகள்,மூட்டு வலி, இடுப்பு வலி, பெண்களின் மாதவிடாய்ப் பிரச்னைகளுக்கும் நல்ல மருந்தாக விளங்குகிறது.

No comments: