குஜராத்தில் சாத்தியமானால் இங்கும் சாத்தியமே..!
========================== =============
நாட்டில் விவசாயம் செய்பவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது. விவசாயம் செயதால் எதிர்காலம் இல்லை என்ற நிலை பல மாநிலங்களில் உள்ளது.
ஆனால் குஜராத் மாநிலம் ஒரு விதிவிலக்கு.
ஒரு வருடம் இல்லை, இரண்டு வருடம் இல்லை, 2001 முதல் 2011 வரை 10.97% சதவீதம் ஒவ்வொரு வருடமும் விவசாயம் அதிகரித்து உள்ளது.
இந்தியாவிலேயே குஜராத் மட்டுமே இந்த சாதனையை படைத்து உள்ளது.
இதே கால கட்டத்தில் அகில இந்தியாவில் விவசாயம் 3% சதவீதம் தான் உயர்ந்து உள்ளது.
இதற்கான காரணங்கள் என பல பத்திரிகைகள் அலசி பார்த்ததில் இந்த உண்மைகள் வெளி வந்து உள்ளன:
நாட்டில் ஊழல் குறைந்த மாநிலங்களில் குஜராத் மூன்றாம் இடத்தில உள்ளது. விவசாயத்திற்கு என்று ஒதுக்கப்பட்ட நிதிகள் அவர்களை அடைகின்றன. மற்ற மாநிலங்களை போல நடுவில் சுருட்ட படுவதில்லை
நாட்டில் மிகவும் தொழிர்மயமான மாநிலங்களில் ஒன்று குஜராத். அதனால், விவசாயத்திற்கும், தொழிற்சாலைகளும் மின்சாரத்திற்கு போட்டி போடுகின்றன. இதை அரசு எப்படி சமாளித்தது?
விவசாயத்திற்கு என்று தனி மின்சாரம் விநியோகம். இரவு நேரத்தில் விவசாயத்திற்கு மின்சாரம். இப்படி சமாளிக்கிறது
குஜராத் ஒரு வறண்ட மாநிலம் அதிகமாக மழை இல்லை. பெரிய நதிகளும் இல்லை. இதனால், 200000 மழை சேமிப்பு அணைகளை (Rain water harvesting Check dams)கட்டினர். அதனால், நீர் மட்டம் நன்றாக ஏறியது. விவசாயம் கொழிகிறது
அரசாங்கம் சொட்டு நீர் பாசனத்தை நன்று விளம்பரபடுத்தி மாநிலம் முழுவதும் செயல் படுத்தியது. வறண்ட இடங்களிலும் நீர் மட்டம் ஏறியதால், சொட்டு நீர் பாசம் சாத்தியமானது.
மாநிலம் முழுவதும் பயிர் விரிவாக்க சேவைகள் (Agricultural extension services) நன்றாக நடத்த படுகின்றன. இதனால், விவசாயிகளுக்கு தேவையான விவரங்கள் அவர்களை சரியாக சென்று அடைகின்றன
இந்தியாவின் முன்னால் ஜனாதிபதி, அப்துல் கலாம் அவர்கள் குஜராத்தை பார்த்து மற்ற மாநிலங்கள் எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் கூறி உள்ளார்..
இவை எல்லாம் நம் எல்லோர்க்கும் தெரிந்த Common Sense விஷயங்கள் தான். வித்தியாசம் செயல் பாட்டில் தான். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. நமது முதல்வர் செய்வாரா?
==========================

No comments:
Post a Comment