Monday, July 16, 2012

தூதுவளை

தூதுவளை ஈரமான இடங்களில் செழித்துப் புதர் போல வளரும். இதன் இலை கரும்பச்சை நிறமானது. பூ ஊதா நிறமானது. சிறிய காய்கள் தோன்றிப் பழுக்கும். இதன் கொடியிலும் இலையிலும் கூரிய முட்கள் காணப்படும்.
தூதுவளை இலை மூலிகை மருத்துவத்தில் பயன்படுகிறது.

ச‌ளி ‌பிடி‌ப்பதா‌ல் ஏ‌ற்படு‌ம் ப‌ல்வேறு உட‌ல் உபாதைக‌ளி‌ல் இருமலு‌ம் ஒ‌ன்று. ச‌ளி போனாலு‌ம் இரும‌ல் போகாம‌ல் பாடு படு‌த்து‌ம். இருமலை‌ப் போ‌க்க எ‌ளிதான வ‌ழி உ‌ள்ளது. தூதுவளை‌‌ இலையை 4 அ‌ல்லது 5 எடு‌த்து அத‌ன் மு‌ட்களை ‌நீ‌க்‌கி‌வி‌ட்டு கழு‌வி‌க் கொ‌ள்ளவு‌ம். இலை‌க்கு‌ள் 4 அ‌ல்லது 5 ‌மிளகு வை‌த்து வெ‌ற்‌றிலை‌ப் போ‌ல் மடி‌த்து வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சா‌ப்‌பிட இர‌ண்டே நா‌ளி‌ல் மா‌ர்‌பு‌ச் ச‌ளி போ‌ய், தொட‌ர்‌ந்து வ‌ந்த கு‌‌த்த‌ல் இருமலு‌ம் காணாம‌ல் போகு‌ம்.

தூதுவளையை உளு‌த்த‌ம் பரு‌ப்பு, பு‌ளி வை‌த்து துவைய‌ல் செ‌ய்து‌ம் சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள். ச‌ளி ‌பிடி‌த்தவ‌ர்களு‌க்கு இ‌ந்த துவையலை‌ செ‌ய்து கொடு‌த்தா‌ல் எ‌ந்த மரு‌ந்து‌க்கு‌ம் அசராத ச‌ளியு‌ம் கரை‌ந்து காணாம‌ல் போ‌ய் ‌விடு‌ம். தூதுவளை இலை உடலு‌க்கு உஷ‌்ண‌த்தை‌க் கொடு‌க்கு‌ம் எ‌ன்பதா‌ல், சூ‌ட்டு உட‌ம்பு‌க் கார‌ர்க‌ள் அ‌திகமாக சா‌ப்‌பிட‌க் கூடாது.

தூதுவளைக் கீரை முட்கள் நிறைந்த ஒருவகை கீரையாகும். முட்கள் நிறைந்த மூலிகைகளின் பூக்களில், நரம்புகளை வலுவாக்கும் தன்மையை இறைவன் வைத்திருக்கிறான். தூதுவளைப் பூவைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நமது உணர்வு நரம்புகள் பலப்பட்டு, சரும நோய்கள், பார்வைக் குறைவு, காது கேளாமை, ருசியின்மை போன்ற கோளாறுகள் மாயமாய் மறையும்.

தூதுவளை தோசை



முட்கள் நீக்கப்பட்ட தூதுவளை இலைகளை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து, அத்துடன் அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து விழுதாய் அரைக்கவும். இதனை எட்டு கரண்டி தோசை மாவில் கலந்து தோசை வார்க்கவும். இது சிறுவர் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட ஏற்றது; சுவையானது. இதனை வாரம் இருமுறையேனும் உட்கொண்டு வந்தால் சளி, இருமல், கப நோய்கள் அனைத்தும் குணமாகும்.
தூதுவளை ரசம்
முட்கள் நீக்கப்பட்ட தூதுவளை இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து சிறிதாய் அரிந்து கொள்ளவும். மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை மைய தட்டி எடுத்துக்கொள்ளவும். கறிவேப்பிலை, மல்லி இலைகளையும் சிறிதாய் அரிந்து, அவற்றை தூதுவளை இலையுடன் சேர்த்து வதக்கி, அதில் தக்காளிக் கரைசலைச் சேர்த்து, மிளகு, சீரகம், பூண்டு, உப்பு ஆகியவற்றையும் சேர்த்து சூடு செய்யவும். கொதி வருவதற்கு முன் இறக்கி சுவையாய் சாப்பிட, சளி, இருமல் மூக்கடைப்பு, ஈஸ்னோபீலியா, தும்மல், சைனஸ், ஆஸ்துமா போன்ற அனைத்துக் குறைகளும் தீ ரும்

நல்ல பசி உண்டாக...



தூதுவளை இலைகள் மூன்று, மிளகு மூன்று, சிறிது மஞ்சள் ஆகியவற்றைத் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்துச் சாப்பிட, நல்ல பசி உண்டாகும்.



தொண்டைச் சதை கரைய...



தூதுவளை இலை ஒரு கைப்பிடி, அதிமதுரம், சித்தரத்தை, சுக்கு ஆகியவை வகைக்கு பத்து கிராம் எடுத்து நன்கு நசித்து, ஒரு லிட்டர் தண்ணீரி லிட்டுக் கொதிக்க வைத்து, நான்கில் ஒரு பங்காய்ச் சுண்டச் செய்து, வேளைக்கு அறுபது மி.லி. வீதம் தினம் மூன்று வேளை சாப்பிட்டு வர, ஏழு தினங்களில் தொண்டையில் வளர்ந்துள்ள சதை (பர்ய்ள்ண்ப்ண்ற்ண்ள்) கரையும்.



விடாத இருமல் விலக...



தூதுவளை இலை ஒரு கைப்பிடி, உலர்ந்த திராட்சை முப்பது எண்ணிக்கை, அதிமதுரம் ஒரு துண்டு, சீரகம் பத்து கிராம் ஆகியவற்றை எடுத்து, அனைத்தையும் நசித்து, ஒரு லிட்டர் தண்ணீரிலிட்டுக் கொதிக்க வைத்து, நான்கில் ஒரு பங்காய் சுண்டச் செய்து, நூறு மி.லி. அளவில் காலை, ம தியம், இரவு மூன்று வேளையும் பனை வெல்லம் சேர்த்து அருந்தி வர, எப்பேர்ப்பட்ட இருமலும் மூன்று தினங்களில் குணப்படும்.



ஆஸ்துமா, மூச்சுத் திணறல் குணமாக...



தூதுவளை, துளசி, முசுமுசுக்கை, கண்டங் கத்திரி ஆகிய நான்கையும் காயவைத்து, வகைக்கு நூறு கிராம் எடுத்துக்கொள்ளவும். இத்துடன் சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, அதிமதுரம், ஜாதிக்காய், மாசிக்காய், ஜாதிப்பத்திரி, ஏலக்காய், கருஞ்சீரகம், அக்ரகாரம், கடுக்காய் ஆகியவற்றை வகைக்கு பத்து கிராம் எடுத்து, அனைத்தையும் ஒன்றாகக் கலந்து தூள் செய்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு (அரை ஸ்பூன்) பொடியை எடுத்து, தேனில் குழைத்து தினம் இருவேளை சாப்பிட்டு வர, ஆஸ்துமா, மூச்சுத் திணறல், நுரையீரல் கோளாறுகள் போன்ற அனைத்தும் தீ ரும்
சைனஸ் - தொடர் தும்மல் குணமாக...
தூதுவளை, குப்பைமேனி, துளசி, நிலவேம்பு, திப்பிலி, அதிமதுரம், சுக்கு, சித்தரத்தை ஆகியவற்றை வகைக்கு பத்துகிராம் எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீரில் தட்டிப்போட்டு கசாயமிட்டு, நான்கில் ஒரு பங்காய் சுண்டச் செய்து, நூறு மி.லி. அளவில் தினமும் இருவேளை சாப்பிட்டு வர, தும்மல், மூக்கடைப்பு, மூக்கில் நீர் கொட்டுதல் போன்றவை குணமாகும்.
நரம்புத் தளர்ச்சி நீங்க...
தூதுவளைப் பூக்களை நிழலில் உலர்த்தி நூறு கிராம் அளவு எடுத்துக்கொள்ளவும். இத்துடன் மாதுளம் பூ நூறு கிராம், ஜாதிக்காய் நூறு கிராம் சேர்த்து அரைத்து பத்திரப்படுத்தவும். இதில் காலை- மாலை இரண்டு கிராம் அளவில் சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக் குறைவு நீங்கி புத்திரப்பேறு உண்டாகும்.

தூதுவளை மிக நுண்ணறிவு தரும் மூலிகையாகும். இதனை அலட்சியம் செய்யாமல் பிறவிப்பயன் பெற வேண்டி, குருவின் திருவடி சரணடைந்து வணங்கி, ஏதேனும் ஒரு வகையில் உட்கொண்டு வரவேண்டும். இதனால் தேக அசுத்தம் நீங்கி, தேகம் வலுவாகி, உடம்பில் ஒளி, தேஜஸ், காந்தம் உண்டாகும். அதுவே முக்திக்கும் ஏதுவாகும்.



அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் பாதம் பணிவோம். அவர் வழிகாட்டிய ஞான மூலிகையாம் தூதுவளையைச் சரணடைந்து, பிறவிப் பயன் பெறுவோம்

நன்றி
நக்கீரன்

No comments: