Tuesday, July 3, 2012

வாய்க்கால் அல்லது வடிகால் தோண்டும் கருவி

வாய்க்கால் அல்லது வடிகால் தோண்டும் கருவி
 
பயன்      : வாய்க்கால் வடிகால் அமைப்பதற்கு
திறன்      : ஒரு மணிக்கு 1700 மீட்டர் நீளம்
விலை     : ரூ.17.000/-
அமைப்பு  : இக்கருவியில் இரண்டு நீளமான வளை பலகைக் கலப்பைகள் ஒன்றன் பின் ஒன்றாக எதிர் எதிராக ஓரே நேர் கோட்டில் ஒரு இரும்புச் சட்டத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த இரும்புச் சட்டம் மும்முனை இணைப்பின் மூலம் டிராக்டருடன் பொருத்தப்படுகிறது. ஒவ்வொரு ளைபலகைக் கலப்பையின் அடிப்பாகத்தில் மண்ணைத் தோண்டுவதற்கான கொழு முனையும். தோண்டப்பட்ட மண்ணை உயர்த்தி இருபுறமும் போடுவதற்கேற்றவாறு வடிவமைக்கப்பட்ட நீணட வளை பலகைகளும் பொருத்தப்பட்டுள்ளன.
சிறப்பு அம்சங்கள்   :
  • ஒரு அடி அகலம் உள்ள வடிகாலோ அல்லது வாய்க்காலோ ஒரு அடி ஆழம் வரை அமைக்கலாம்.

    35 முதல் 45 குதிரை சக்தி கொண்ட டிராக்டரால் இதனை இயக்கலாம்.
  • இக்கருவியை 45 குதிரை திறன் கொண்ட டிராக்டரின் மூலம் இயக்கப்படும் பொழுது ஒரு மணிக்கு ரூ.200 செலவாகிறது.
  • சொட்டு நீர்ப் பாசனக்குழாய்களைப் பதிப்பதற்கேற்ற நீண்ட குழிகளைத் தோண்டலாம்.
  • தென்னை மரங்களைச்சுற்றி உரமிடுவதற்கான குழிகளைத் தோண்டலாம்.
  • கரும்புத் தோட்டங்களில் வடிகால் மற்றும் வாய்க்கால் தோண்டலாம்.
  • ஆட்களைக் கொண்டு வாய்க்கால் வடிகால் தோண்டுவதை ஒப்பிடம்பொழுது இக்கருவியை உபயோகிப்பதன் மூலம். 95.28 99.9 மற்றம் 53 சதவிகிதம் விலை. நேரம் மற்றும் சக்தியானது. களிமண் நிலங்களில் இயக்கும் பொழுது சேமிக்கப்படுகிறது.

No comments: