ஜுலை 13
ஆங்கில Rock இசை உலகின் ஜாம்பவான்களான Mick Jagger, Tina Turnerm Madonna,
Bob Dylan, Paul McCartney போன்றோர் முதன்முதலாக ஒன்று கூடி ஊதியம்
இல்லாமலே இசை மழை பொழிந்தனர்.
1174 - ஸ்கொட்லாந்தின் முதலாம் வில்லியம் இங்கிலாந்தின் இரண்டாம் ஹென்றியின் படையினரால் கைப்பற்றப்பட்டான்.
1643 - இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: இங்கிலாந்தில் ஹென்றி வில்மட்
பிரபுவின் முடியாட்சி சார்புப் படைகள் சேர் வில்லியம் வோலர் தலைமையிலான
நாடாளுமன்ற சார்புப் படைகளைத் தோற்கடித்தனர்.
1844 - இலங்கையில் காவற்துறை நீதிமன்றங்கள் (police courts) அமைக்கப்பட்டன.
1869 - இந்துப் பிள்ளைகளின் கல்விக்கு ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையில் ஓர் ஆங்கிலப் பாடசாலையை நிறுவினார்.
1908 - லண்டனில் இடம்பெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதன் முதலாகப் பெண்கள் பங்குபற்றினர்.
1878 - பெர்லின் உடன்படிக்கை: சேர்பியா, மொண்டெனேகுரோ, ருமேனியா ஆகிய
நாடுகள் ஒட்டோமான் பேரரசில் இருந்து முழுவதுமாக விடுதலை பெற்றன.
1923 -
லாஸ் ஏஞ்சலீசில் ஹாலிவுட்டின் மேல் உள்ள மலையில் "ஹாலிவுட் குறியீடு"
அதிகாரபூர்வமாக எழுதப்பட்டது. ஆரம்பத்தில் இது "ஹாலிவுட்லாந்து" என
எழுதப்பட்டாலும் பின்னர் 1949 இல் தற்போதைய பெயருக்கு மாற்றப்பட்டது.
1930 - முதலாவது உலகக் கோப்பை காற்பந்தாட்டப் போட்டிகள் உருகுவாயில்
ஆரம்பமாயின. லூசியென் லோரென்ட் பிரான்சுக்காக மெக்சிகோவுக்கு எதிராக
முதலாவது கோலைப் போட்டார்.
1941 - இரண்டாம் உலகப் போர்: மொண்டெனேகுரோ மக்கள் அச்சு நாடுகளுக்கு எதிராகக் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.
1977 - மின்சார இழப்பினால் நியூ யோர்க் நகரம் 25 மணி நேரம் இருளில்
மூழ்கியதில் பல கொள்ளைச் சம்பவங்களும் பல்வேறு சமூக விரோத நிகழ்வுகளும்
இடம்பெற்றன.
1997 - சே குவேராவினதும் தோழர்களதும் உடல் எச்சங்கள் கியூபாவுக்குக் கொண்டுவரப்பட்டன.
2001 - சீனாவின் பெய்ஜிங் நகரம் 2008க்கான ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்குத் தகுதி பெற்றது.
No comments:
Post a Comment