Monday, July 16, 2012

காய்கறிப் பயிர்கள்

காய்கறிப் பயிர்கள்
இரகம்   விவரிப்பு புகைபடங்கள்
  1. தண்டுக்கீரை  
கோயமுத்தூர் 1 (1968) இது திருநெல்வேலியில் இருந்து சேகரிக்கப்பட்ட இரகமாகும். இது முளைக்கீரைகள் வாழ்நாள் அளவு 25 நாட்கள். தண்டுக்கீரையின் வாழ்நாள் அளவு 50-60 நாட்கள். 25 நாட்கள் கழித்து அறுவடை செய்யும் போது மகசூல் 78 டன்கள் கீரைகள் கிடைக்கும். இலைகள் அகலமாகவும், மொத்தமாகவும், பச்சை கலராகவும் இருக்கும். இதன் விதைகள் மிகச்சிறியதாகவும், கருப்பு நிறமாகவும் இருக்கும். sdfg
  2.முருங்கை
பெரியகுளம் 1 (1989) இந்த இரகமானது துல்லிய தேர்வு முறையில் விதை முருங்கையை தொடர் சுயகலப்பு செய்து திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பெறப்பட்டது. இதன் காயானது மிக நீளமாகவும், நன்கு சதைப்பிடிப்பானதாகவும், சுவையாகவும் இருக்கும். விதைத்த ஆறுமாதத்திற்குள் வளரத்தொடங்கவிடும். மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான காலங்கள் உச்ச அறுவடை காலங்களாகும். ஒரு வருடத்தில் மரத்தின் உயரம் 4-6 மீட்டர், 6-12 முதல் நிலை கிளைகளாகும். இலைகள். இலையின் மேற்பகுதி அடர்பச்சை நிறமாகவும் இருக்கும். மலர்கள் கொத்து கொத்தாக இருக்கும். (25-150/ கொத்து ) பொதுவாக ஒரே ஒரு காய் மட்டும் ஒரு கொத்தில் இருந்து வளரும். எப்பொழுதாவது 2 முதல் 4 காய்கள் ஒரு கொத்தில் இருந்து வளரும். காய்களின் நீளம் 70 செ.மீ., விட்டம் 6.3 செ.மீ, எடை 150 கிராம் ஆகும். சராசரியாக ஒரு மரத்தின் மகசூல் ஒரு ஆண்டுக்கு 218 காய்கள் எடை 35 கிலோ. ஒரு ஹெக்டருக்கு 52.8 டன்கள். மலர் உருவாகி 65 நாட்கள் கழித்து காய்கள் நன்கு வளர்ந்துவிடும். இதன் இலைகள் ஊட்டச்சத்து கீரையாக பயன்படுகிறது. இந்த இரகம் பழத்தோட்டங்கள் மற்றும் தென்னை வயல்களில் ஊடுபயிராக பயன்படுத்தச் சிறந்தது. அதே போல் இந்த முருங்கை மரத்திற்கு இடையில், மிளகாய், வெங்காயம் மற்றும் கடலைப் பயிர்களை ஊடுபயிராக பயன்படுத்தலாம்.
gnfgh
  3. சாம்பல் பூசணி
கோயமுத்தூர் 1 (1971) இது உள்ளூர் வகையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதாகும். வாழ்நாள் அளவு 150 நாட்கள், மகசூல் 20-25 டன்/ஹெக்டர் சமைப்பதற்கு தரமானதாகும். இதன் கொடி 400 செ.மீ உயரம் வரை படரக்கூடியது. இலைகள் அடர் பச்சை நிறமாக இருக்கும். பழங்கள் பச்சை நிறமாகவும், பெரிய நீள் வடிவத்தில் சாம்பல் பூசியது போல் காணப்படும், பழங்களின் நீளம் 35 செ.மீ, விட்டம்  22 செ.மீ, சராசரி எடை அளவு 6.8 கிலோ, இதன் சதைப்பகுதி வெள்ளை, நன்கு தடிப்பாகவும், குறைந்த அளவு விதைகளை (0.8%)  கொண்டிருக்கும், விதைத்த 100 நாட்கள் கழித்து முதல் அறுவடை தொடங்கி 140-150 நாட்கள் வரை அறுவடை செய்யலாம். இந்த இரகம் மிதமான பூச்சி மற்றும் நோய்களை தடை செய்யும்.
  4. பீட்ரூட்  
ஊட்டி 1 (1992) ஊட்டி 1  இரகமானது உள்ளூர் வகையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதாகும். சராசரியான மகசூல் 31.45 டன்/ஹெக்டர் ஆகும். இந்த பீட்ரூட்டானது இரத்தச் சிவப்ப நீளமானதாகவும் மெல்லிய தோல், மற்றும் உயர்ந்த தரமுடையதாகவும் காணப்படும். ஒவ்வொரு 10 கி பீட்ரூட் கூழ் 1.52% புரதம், 10.25 % கார்போஹைட்ரேட், மற்றும் 6 மி.கி விட்டமின் “C” கொண்டிருக்கும். இதன் வாழ்நாள் அளவு 120-130 நாட்கள், நடவு செய்யப்பட்ட பயிராக இருந்தால் 135-150 நாட்கள். உயரம்  40 -52 செ.மீ, மகசூல் 1.5-2.3 டன் விதைகள் /ஹெக்டர். இது தெற்கு இந்தியாவில் உள்ள அனைத்து மலைகளிலும் வளரக்மகூடிய பயிராகும்.
  5.வெண்டை
கோயமுத்தூர் 1 (1976) இந்த இரகம் ஹைதராபாத்திலுள்ள ‘ரெட் வொண்டர்’ இரகத்தை  துல்லிய தேர்வு செய்தன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகும். இந்தச் செடி மிதமான உயரமாகவும், இதன் இலைகள் சோனை, சோனைகளாகவும் காணப்படும். இதன் காய்கள் மென்மையாகவும், சதைப்பாங்காகவும், இருக்கும். சதைப்பகுதி 72% சராசரி விதை அளவு 28%, ஸ்டார்ச் மற்றும் புரதம் 14.80% மற்றும் 18.08% சராசரி மகசூல் 20 காய்கள்/செடி, எடை -300 கிராம். ஒரு ஹெக்டருக்கு 12 டன்கள், வாழ்நாள் அளவு 90 நாட்கள், 15-18 முறை அறுவடை செய்யலாம். ஒரு கிலோவில் 58 காய்கள் கிடைக்கும்.
hfth
  6. பாகற்காய்
கோயமுத்தூர் 1. (1978) துடியலூரிலுள்ள நீல பச்சை வகை, உள்ளூர் வகையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதாகும். மகசூல்  14.4 டன்/ஹெக்டர், கொடியின் உயரம் 130 செ.மீ நீளம், 5முதல் 7 கிளைகள் ஒரு கொடியில் காணப்படும். பழம் அடர் பச்சை நிறமாகவும், மிதமான நீளமாகவும் (25-30 செ.மீ) மற்றும் தடிப்பாகவும் (6-8 செ.மீ) காணப்படும். ஒவ்வொரு கொடியிலிருந்து 20-22 பழங்களும், எடை 100 – 120 கிராம் கிடைக்கும். ஒவ்வொரு பழத்திலும் 24 முதல் 30 விதைகளும், எடை 6 முதல் 8கிராம் இருக்கும். கொடிகளில்  மலர்கள் 45 முதல் 50 நாட்களில் வளரும், விதைத்த 55-60 நாட்களில் முதல் தடவை அறுவடை செய்யலாம். மொத்த செடியின் வாழ்நாள் அளவு 115 நாட்கள், 6முதல் 8 முறை அறுவடை செய்யலாம். gfgh
  7. சுரைக்காய்
கோயமுத்தூர் 1 (1981) இந்த இரகம் மரபணு சேமிப்பின் வகையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதாகும். இதன் தண்டு வெளிர் மஞ்சளாகவும், இலைகள் பச்சைநிறத்துடன் கூடிய  வெளிர்பச்சை நிறத்திலும் இருக்கும். வாழ்நாள் அளவு 135 நாட்கள் மககசூல் 36.0 டன்/ ஹெக்டர். பழங்கள் அடிப்பகுதியில் வட்டமாகவும், பழத்தின் மேற்பகுதி பாட்டிலுள்ள கழுத்து  போலவும் காணப்படும், பழங்கள்/காய்கள் மிதமான அளவாகும், வசீகரமான வெளிர் பச்சை நிறமாகவும் காணப்படும், எடை அளவு 2.03 கிலோ.
  8. கத்திரி
கோயமுத்தூர் 1 (1978) இந்த இரகம் தன்னிலை தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகும். வாழ்நாள் அளவு 160 நாட்கள், செடி நிமிர்ந்து மற்றும் அடர்த்தியுடன் கூடிய பச்சையான தண்டுகள், இலைகள், காணப்படும். பழங்கள் நீள் சதுரமாகவும், வெளிர்பச்சையுடன் கூடிய வெள்ளை நிறமாகவும் காணப்படும். ஒவ்வொரு பழத்தின் சராசரி எடை அளவு 50 முதல் 60 கிராம் ஆகும். நன்கு வளர்ச்சியடைந்த பழங்கள் மிக மிருதுவாக இருக்கும். மிதமான வேர் அழுகல் மற்றும் புழுதாக்குதல் மட்டுமே இருக்கும். மகசூல் 24 டன்/ஹெக்டர் இந்த இரகத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள தெற்கு மாவட்டங்களான (திருநெல்வேலி, இராமநாதபுரம் ஆகியவற்றின் சந்தைகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது
hhj
  9. பட்டர் பீன்ஸ்
கொடைக்கானல் 1 (1991) கொடைக்கானல் 1 இரகத்தில் காய்களின் நீளம் 11.6 செ.மீ, ஒரு காயில் 5 முதல் 6 பீன்ஸ் இருக்கும். வளராத காய்கள் பச்சை நிறத்தில் இருக்கும். பிறகு காய் வளர வளர பாலாடை மஞ்சள் நிறத்துடன் கூடிய வெளிர் காப்பி நிறமாக மாறும். இதன் விதைகள் சமைப்பதற்கு உகந்தது. இந்த இரகம் தமிழநாட்டில் உள்ள மலைப்பகுதிகளில் சாகுபடி செய்ய உகந்தது. விதைத்த 100 நாட்களுக்கு பிறகு முதல் அறுவடை செய்யலாம். இந்த அறுவடை 140 நாட்களுக்கு தொடரலாம். பழுத்த காய்களின் மகசூல் 3.47 டன்கள்/ஹெக்டர்.
  10. காரட்
ஊட்டி 1 (1997) காரட் பயிரானது, வேர்கள் மாறுபாடு அடைந்து காரட் உருவாகிறது. இந்த இரகத்தில் வேர்கள் (காரட்) நீளமாகவும், முனைப்பகுதி கூர்மையாகவும் வசீகரமான அடர் ஆரஞ்சு நிறத்தில் காணப்படும். 1800மீ மலைப்பகுதிகளில் சாகுபடி செய்ய உகந்தது. வாழ்நாள் அளவு 100 முதல் 110 நாடகளாகும். இந்தப் பயிரை மூன்று பருவத்திற்கும் தொடர்ந்து வருடம் முழுவதும் பயிரிடலாம். இந்த இரகம் இலைப்புள்ளி நோய் தாக்கபடாமலும் மற்றும் வறட்சி காலங்களிலும் வளரக்கூடியது. காரட்டில் பீட்டா கரோட்டின் என்னும் வேதிப்பொருள் அதிகமாக உள்ளது. மகசூல் 700 – 1000 கிலோ/ஹெக்டர்.
hjghj
  11. காலிபிளவர்
ஊட்டி 1 (1998) இந்த இரகம் ஊட்டியில் அமைந்துள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பயிரை ஆண்டு முழுவதும் பயிரிடலாம், இப்பயிர் வசீகரமான பாலாடை வெண்மை நிறத்தில் காணப்படும்.ஒரே மாதிரியான அளவில் பூ காணப்படும். ஒவ்வொரு பூ-வின் எடையும் 2.6கிலோ ஆகும். இதனை 7 நாட்கள் வரை சேமித்து வைத்திருக்கலாம். மலைப்பிரதேசங்களில் பயிரிட உகந்தது. hgh
  12. சக்கரவர்த்திக் கீரை  
ஊட்டி 1 (2001) இந்த இரகம் ஊட்டியில் அமைந்துள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செடி 38.2 செ.மீ உயரம்  வரை வளரக்கூடியது மகசூல் 28-9 டன்கள்/ஹெக்டர், மலைப்பகுதியில் 55 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும், சமமான பகுதிகளில் 50 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும். இலைகள் வசீகரமான பச்சையுடன் கூடிய இளஞ்சிவப்பு நிறத்துடன் காணப்படும். சமைப்பதற்கு தரமான ஒன்றாகும். வாழ்நாள் அளவ 145 நாட்கள். விதை தானியத்திற்கு சிறந்தது. மகசூல் 1.2 டன்கள்/ஹெக்டர். இது வறட்சியையும், குளிரையும் தாங்கக்கூடியது. இது இலைப்புள்ளி நோய், வேர் அழுகல் நோயிலிருந்து தப்பித்து வளரக்கூடியது.
fgcgh
  13. மிளகாய்
கோவில்பட்டி 1 (1964) இந்த இரகம் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், கோவில்பட்டியில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செடி நன்கு உயரமாக வளரக் கூடியது. வாழ்நாள் அளவு 210 நாட்கள், மகசூல் 1.8 டன்கள் உலர்ந்த காய்கள்/ஹெக்டர். தமிழ்நாட்டில் உள்ள தெற்கு மாவட்டங்களில் சாகுபடி செய்வதற்கு உகந்தது. பழுத்த பழங்கள் சிவப்பு நிறமாகவும், கேப்சனைன் அளவு அதிகமாகவும் இருக்கும்.
gnvgh
  14. மருந்து கூர்க்கன்
கோயமுத்தூர் 1 (1991) இந்த இரகம் தென்காசியில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டதாகும். மகசூல் 31.93 டன்/ஹெக்டர். வாழ்நாள் அளவு 180 – 190 நாட்கள் இந்த கிழங்கில் 21.5 சதவிகிதம் ஸ்டார்ச் காணப்படும். இந்த கிழங்கு சமைத்த உண்பதற்கு ருசியாக இருக்கும். bfcfg
  15. சேப்பக்கிழங்கு
கோயமுத்தூர் 1 (1991) இதன் மகசூல் 24.3 டன்/ஹெக்டர், கிழங்கில் அதிக அளவு ஸ்டார்ச் 22.5% மற்றும் புரதம் 2.4% காணப்படும். இந்த கிழங்கு குறைந்த அமிலத்தன்மை கொண்டது மற்றும் சமைப்பதற்கு தரமான ஒன்றாகும்.
ghhg
  16. வெள்ளரி
கோயமுத்தூர் 1 (1989) இதன் மகசூல் 25-28 டன்/ஹெக்டர், நன்கு பழுத்த பழங்கள் வசீகரமான நிறமாகவும் இருக்கும். பழங்கள் மிக 60-65 செ.மீ நீளமாகவும், சற்று வளைந்தும் காணப்படும். பழுத்த பழத்தின் எடை 2.0 முதல் 3.0 கிலோ. சந்தையில் இதனை நுகர்வோர்கள் விரும்பி வாங்குவார்கள். வாழ்நாள் அளவு 15 டன்/ஹெக்டர்
ghf
  17. டாலிகஸ் அவரை
கோயமுத்தூர் 1 (1993) இந்த இரகத்தை முதலில் பந்தல் முறையில் சாகுபடி செய்தனர். காய்கள் 80-85 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும். வாழ்நாள் அளவு மற்ற அவரையை விட (210 நாட்க் கோயமுத்தூர் – 5 அவரை) குறைவாகும் அதாவது 165 நாட்கள். காய்கள் அடர்பச்சை நிறமாகவும் சற்று வளைந்தும் காணப்படும். இதில் 4.69% புரதம், 0.12% விட்டமின் C, 0.2% இரும்புசத்து 0.14% மணிச்சத்து, 0.39% கால்சியம் காணப்படும். ,jj
  18.பிரெஞ்சு பீன்ஸ்
தடியன்குடிசை 1 (1988) காய்கள் குறைந்த நார்த்தன்மை கொண்டது. வாழ்நாள் அளவு 90 நாட்கள் , பச்சை காய்கறிகளின் மகசூல் 5.6 டன்கள்/ஹெக்டர். ngf
  19.வெள்ளைபூண்டு
ஊட்டி 1  (1991) மகசூலை பொருத்தவரை இந்த இரகம் ஊட்டி சாகுபடி பொருத்த வரை ஒரு எக்டருக்கு 17.1 டன். பயிரின் வாழ்நாள் காலம் 120 முதல் 130 நாட்கள். பூண்டு பெரியதாகவும், வெள்ளை நிறங்களிலும் காணப்படும். ஒரு பூண்டின் எடை சுமார் 30 முதல் 40 கிராம்.
nkj
20. முருங்கை பீன்ஸ்
கே.கே.எல்.1
KKL.1(1996)
இந்த இரகம் கொடைக்கானல் வட்டத்தில், பல்லங்கி கிராமத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இரகம். பயிரின் காலம் 140 முதல் 160 நாட்கள். மகசூல் ஒரு எக்டருக்கு 7 டன் மகசூல் கிடைக்கும் hjghj
  21. வெங்காயம்
கோயமுத்தூர்.1
 (1965)
பயிர் காலம் 90 நாட்கள் மற்றும் மகசூல் ஒரு எக்டருக்கு 10 டன் கிடைக்கும். வெங்காயம் அளவ நடுத்தர அளவாகவும், சிவப்பு நிறத்திலும் காணப்படும். ஒரு செடியில் உள்ள வெங்காயத்தில் எடை 55-60 கிராம். ghf
  22. பாலாக்கீரை
ஊட்டி 1 (1995) ஊட்டி 1 இரகம் 1995 வெளியிடப்பட்டது. இது வருடம் முழுவதும் வளரும் தன்மை கொண்டது. விதைத்த 45 நாட்கள் கழித்து முதல் அறுவடை செய்யலாம். மகசூல் ஒரு எக்டருக்கு 15 டன் இலைகள் கிடைக்கும். tdt
  23. பட்டானி
ஊட்டி 1 (2000) பயிர் காலம் 90 நாட்கள், இது நீலகிரி மாவட்டத்தின் மூன்று பருவத்திற்கும் ஏற்றது. செடிகள் பச்சை நிறமாகவும், மிருதுவான காய்கள், ஒவ்வொரு காய்களிலும் 9 விதைகளை கொண்டிருக்கும். இந்த இரக பட்டாணி மகசூலில் ஒரு எக்டருக்கு 11.1 டன் கிடைக்கும்.
bhmsd
  24. உருளைக்கிழங்கு  
சி ஒ  சிம்லா உருளை) சிம்லாவில் உள்ள மத்திய உருளை கிழங்கு ஆராய்ச்சி நிலையத்தின் கலப்பினத்தில் இருந்து தேர்வு செய்த இரகம். பருவமழை காலங்களில் தரை பிரதேசத்தில் இந்த இரகங்களை பயிரிடலாம். பயிரின் வாழ்நாள் காலம் 110 நாட்கள், மகசூல் ஒரு எக்டருக்கு 12 டன்.
  25. பூசணிக்காய்
கோயமுத்தூர்.1
Co. 1 (1971)
பயிரின் வாழ்நாள் 180 நாட்கள், மகசூல் ஒரு எக்டருக்கு 25 முதல் 30 டன் வரை கிடைக்கும். கொடிகள் நன்கு வளரக்கூடிய தன்மை கொண்டது. பழத்தின் அடிப்பகுதி தட்டையாக காணப்படும். ஒரு கொடியில் இருந்து சுமார் 6 முதல் 7 பழங்கள் கிடைக்கும். ஒரு பழத்தின் எடை சுமார் 7.0 கிலோ எடை கொண்டது. முதல் அறுவடை 115 நாட்கள் பிறகு அறுவடை செய்யலாம்
  26. முள்ளங்கி
கோயமுத்தூர்.1
Co.1 (1981)
பயிரின் வாழ்நாள் காலம் 40 முதல் 45 நாட்கள் ஆகும். மகசூல் ஒரு எக்டருக்கு 20 முதல் 25 டன் வரை கிடைக்கும். ஒரு காய்களின் எடையளவு 220 கிராம்.
  27.பீர்க்கங்காய்
கோயமுத்தூர்.1
1976
பரப்பளவு அதிகமாக தென்படாது. காய்களின் அளவு பெரியதாக காணப்படும், பார்ப்பதற்கு கண்ணை கவரும் நிலையில் பச்சை நிறமாக இருக்கும். ஒரு காயின் எடை சுமார் 425 கிராம். விதை மகசூல் ஒரு எக்டருக்கு 420 கிலோ கிடைக்கும். மகசூல் ஒரு எக்டருக்கு 14 டன் கிடைக்கும்.
khjgj
  28.புடலங்காய்
கோயமுத்தூர்.1
1976
திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் பகுதியில் இருந்து தனிவழித்தேர்வாக கண்டுபிடிக்கப்பட்டது. கொடிகள் நன்கு வேகமாக வளரக்கூடியது. பயிரின் வாழ்நாள் 135 நாட்கள் மற்றும் மகசூல் ஒரு எக்டருக்கு  18.28 டன் கிடைக்கும்
gcgf
  29. நியூசிலாந்து ஸ்பைனாச்
ஊட்டி 1 இதன் வகைகள் வசீகரமாக பச்சை நிறத்தில் காணப்படும். சமைப்பதற்கு உகந்தது. இலையில் புரதம் 28.75 %, கொழுப்பு சத்து 4%, கால்சியம் 0.34% மக்னீசியம் 0.084% பனிக்காலத்திற்கும், வறட்சி காலங்களையும் தாங்கக்கூடியது. இதனை ஏப்ரல் – ஜீன் மாதங்களில், ஆகஸ்ட் – அக்டோபர் மற்றும் பிப்ரவரி – ஏப்ரல் மாதங்களில் சாகுபடி  செய்யலாம். மகசூல் 33.80 டன்கள்/ஹெக்டர்.
ghfh
  30. சர்க்கரை வள்ளிக்கிழங்கு
கோயமுத்தூர் 1 மகசூல் 28.33 டன்/ஹெக்டர், வாழ்நாள் அளவு 135 நாட்கள். ஒவ்வொரு கொடியிலிருந்தும் 3.2 கிழங்குகள் உற்பத்தியாகும், எடை1.12 கிலோ, கிழங்குகள் இளஞ்சிவப்பு நிறமாகவும், ஸ்டார்ச் சத்து நிறைந்தும் காணப்படும். பச்சையான கிழங்கு கூட சுவையாக இருக்கும். hnj
  31.மரவள்ளிக் கிழங்கு
கோயமுத்தூர் 1 (1977) இந்த செடியானது அடர்பச்சை நிறத்திலும், தண்டு சாம்பல் நிறத்திலும் காணப்படும். வாழ்நாள் அளவு 8.5 முதல் 9 மாதங்கள். கிழங்குகள் வெள்ளையாகவும் காப்பி நிறத்திலும் காணப்படும். ஒரு செடியிலிருந்து 8முதல் 10 கிழங்குகள் கிடைக்கும், எடை அளவு 2.5 முதல் 4.0 கிலோ நீளம் 28.5 செ.மீ விட்டம் 5.8 செ.மீ ஆகும். மகசூல் 29.97 டன்கள்/ஹெக்டர் hghj
  32. தக்காளி  
கோயமுத்தூர் 1 (1969) வாழ்நாள் அளவு 135 நாட்கள், மகசூல் 35 டன்கள்/ஹெக்டர். விதைத்த 50-55 நாட்கள் செடியில் பூ பூத்துவிடும். சராசரியாக 55 பழங்கள் வெளிர் பச்சையிலிருந்து, நன்கு பழுக்கும் பொழுது சிவப்பு நிறத்திலும் காணப்படும். jhghj
  33. தர்பூசணி  
பெரியகுளம் 1 (1993) இந்த இரகத்தின் தோல் பகுதி அடர்பச்சை நிறத்தில் காணப்படும். இதன் உள்பகுதியில் வசீகரமான இளஞ்சிவப்பு நிறத்தில் சதைப்பாங்கான சிவப்பு நிறத்தில் காணப்படும். ஒவ்வொரு பழத்தின் எடையும் 3-4 கிலோ ஆகும். வாழ்நாள் அளவு 120 முதல் 135 நாட்கள். சாகுபடி செய்வதற்கு ஏற்ற மாதங்கள் ஜீன்-அக்டோபர் மற்றும் டிசம்பர்-ஏப்ரல் ஆகும். மகசூல் 36-38 ஹெக்டர். kjjh

No comments: