ஜுலை 21
பெல்ஜியம் - தேசிய நாள்
பொலீவியா - மாவீரர் நாள்
குவாம் - விடுதலை நாள் (1944)
சிங்கப்பூர் - இன சமத்துவ நாள்
கிமு 356 – ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றான கிரேக்கக் கோயில் ஆர்ட்டெமிஸ் கோயில் தீவைத்துக் கொளுத்தப்பட்டு அழிக்கப்பட்டது.
1545 - ஆங்கிலக் கால்வாயில் வைட் தீவில் முதற்தடவையாக பிரெஞ்சுப் படைகள் தரையிறங்கின.
1774 - ரஷ்யாவும் ஒட்டோமான் பேரரசும் தமது ஏழு ஆண்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.
1831 - பெல்ஜியத்தின் முதலாவது மன்னர் லெப்பால்ட் I முடி சூடிய நாள்.
1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜீனியாவில் மனாசஸ் என்ற இடத்தில்
இடம்பெற்ற முக்கியமான போரில் கூட்டமைப்பு அணி வெற்றி பெற்றது.
1944 -
இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் குவாமில் தரையிறங்கி ஜப்பானியப்
படைகளுக்கெதிராகத் தாக்குதலை ஆரம்பித்தனர் (ஆகஸ்ட் 10 இல் இது
நிறைவடைந்தது).
1954 - ஜெனீவா மாநாட்டில் வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
ஆல்ட்றின் ஆகியோர் அப்பல்லோ 11 விண்கலத்தில் சென்று சந்திரனில் நடந்த முதல் மனிதர் என்ற புகழைப் பெற்றனர்.
1977 - நான்கு நாட்கள் நீடித்த லிபிய-எகிப்தியப் போர் ஆரம்பமானது. 1983 -
உலகின் மிகக் குறைவான தட்பநிலை Antarctica - வின் Vostok ஆய்வு நிலையத்தில்
மைனஸ் அதாவது உறைநிலைக்குக் கீழ் 89 புள்ளி 2 டிகிரி செண்டிகிரேடாகப்
பதிவானது.
2007 - ஹரி பொட்டர் தொடர் நாவலின் கடைசிப் பாகம் வெளிவந்தது.
No comments:
Post a Comment