Thursday, July 12, 2012

ஜுலை 10

ஜுலை 10
அமைதி நாள்
988 - டப்ளின் நகரம் அமைக்கப்பட்டது.
1553 - லேடி ஜேன் கிறே இங்கிலாந்தின் அரசியாக முடி சூடினாள்.
1778 - அமெரிக்கப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயி பிரித்தானியா மீது போரை அறிவித்தான்.
1796 - ஒவ்வொரு நேர் முழு எண்ணும் அதிகபட்சம் மூன்று முக்கோண எண்களின் கூட்டுத்தொகையாகக் கொடுக்கலாம் என்பதை கார்ல் ஃப்ரெடெரிக் காஸ் கண்டுபிடித்தார்.
1800 - உருது, இந்தி மற்றும் உள்ளூர் மொழிகளை ஊக்கப்படுத்தவென கல்கத்தாவில் போர்ட் வில்லியம் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
1806 - வேலூர் சிப்பாய் எழுச்சி: தமிழ்நாட்டில் வேலூர்க் கோட்டையில் நிகழ்ந்த எழுச்சியில் நூற்றுக்கணக்கான ஆங்கிலப் படையினர் கொல்லப்பட்டனர்.
1890 - வயோமிங் ஐக்கிய அமெரிக்காவின் 44வது மாநிலமாக சேர்க்கப்பட்டது.
1909 - ஜெர்மனியின் எம்டன் நாசகாரிக் கப்பல் சேவைக்கு விடப்பட்டது.
1925 - சோவியத் ஒன்றியத்தின் செய்தி நிறுவனம் டாஸ் ஆரம்பிக்கப்பட்டது.
1925 - இந்திய ஆன்மிகத் தலைவர் மெஹெர் பாபா இறக்கும் வரையான (44-ஆண்டுகள்) மௌன விரதத்தை ஆரம்பித்தார். இந்நாள் அமைதி நாளாக அவாரின் பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.
1941 - இரண்டாம் உலகப் போர்: போலந்தின் ஜெட்வாப்னி நகரில் நூற்றுக்கணக்கான யூதர்கள் நாசி ஜெர்மனியரினால் படுகொலை செய்யப்பட்டனர்.
1958 - அலாஸ்காவில் மிகப் பெரும் சுனாமி அலை (524 மீட்டர் உயரம்) பதியப்பட்டது.
1962 - உலகின் முதல் தொலைத் தொடர்பு விண்கலமான டெல்ஸ்டார் விண்ணில் ஏவப்பட்டது.
1973 - வங்காள தேசத்தை அங்கீகரிக்கும் தீர்மானம் பாகிஸ்தான் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
1973 - பஹாமாஸ் பொதுநலவாயத்தின் கீழ் முழுமையான விடுதலை அடைந்தது.
1976 - இத்தாலியின் மிலான் நகரில் இக்மெசா ரசாயனத் தொழிற்சாலையில் கடுமையான வெடிவிபத்து ஏற்பட்டது. அப்பகுதி முழுவதும் காற்றில் Dioxin என்ற நச்சு கலந்து பல்லாயிரக்கணக்கானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
1991 - யாழ்ப்பாணம் ஆனையிறவு இராணுவத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் போர் தொடுத்தனர்.
2006 - இந்தியாவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்சாட்-4 செயற்கைக் கோளை ஏற்றிச் சென்ற ஜி.எஸ்.எல்.வி. விண்கலம் இயந்திரக் கோளாறினால் கடலில் வீழ்ந்தது.

No comments: