துவரையில் தரமான விதை உற்பத்தி முறைகள்
நிலம் தேர்ந்தெடுத்தல்
துவரை விதைப் பயிருக்காக தேர்ந்தெடுத்த நிலத்தில் அதற்கு முந்திய பயிர் சான்று பெறாத அதே துவரை இரகமோ அல்லது வேறு இரகமோ இருக்கக் கூடாது. ஏனெனில், நிலத்தில் தங்கியுள்ள விதைகள் இப்பருவத்தின் போது முளைத்து கலவனாக தோன்றும் வாய்ப்புள்ளது. இதனால் விதைச் சான்று பெற இயலாது. மேலும் வாடல் மற்றும் வேர் அழுகல் நோய் தோன்றாத நிலமாயிருத்தல் அவசியம். நல்ல வடிகாலுள்ள செம்மண் மற்றும் வண்டல் மண் திரட்சியான விதைகளைத் தரும்.

J தான்தோன்றி பயிர்கள் என்றால் என்ன?
வயலில் உள்ள மண்களில் கலந்துள்ள விதைகளிலிருந்து முளைக்கும் பயிர்களே தான்தோன்றி பயிர்களாகும். இவ்விதைகள் முந்தைய கால பருவ பயிர்களில் இருந்து கீழே விழுந்தவை ஆகும். விதைக்காமல் தானகவே முளைத்து வளரக்கூடியவை என்பதால் இந்தப் பெயர். முந்தைய பருவத்தில் வேறு இரக நெல் பயிரிடப்படாத வயலைத் தேர்ந்தெடுத்தல் மிகவும் அவசியம். இவ்வாறு செய்வதால் “தான் தோன்றிப் பயிர்களால்” ஏற்படும் இனக் கலப்பை தவிர்க்கலாம்.

இனத் தூய்மையை பராமரிக்க பயிர் விலகு தூரம்
துவரைப் பயிர் ஓர் அயல் மகரந்தச் சேர்க்கை கொண்ட பயிர். எனவே, இனக் கலப்பைத் தடுக்க துவரைப் பயிரை, சான்று பெறாத அதே இரகமோ அல்லது வேறு இரகத்திடமிருந்தோ விலக்கி வைத்திருக்க வேண்டும். இதற்கு குறைந்தது 200மீ. (600 அடி) இடைவெளி விதைப் பயிருக்கும் மற்ற துவரை பயிருக்கும் இடையே இருத்தல் அவசியம்.

விதைப்பயிர் செய்ய ஏற்ற பருவம்
விதைகள் முதிரும் போது அதிக மழையோ, வெயிலோ, குளிரோ இல்லாத பருவமாக அமைந்திருத்தல் அவசியம். இதற்கு ஆடி மற்றும் மாசிப்பட்டம் மிகவும் ஏற்றது.

நிலம் தயாரித்தல்
நிலத்தை நன்கு உழுது பண்படுத்த வேண்டும். துவரையின் வேர்கள் நீண்டு செல்லக்கூடியதால் ஆழமாக உழுதல் அவசியம். பின்னர் இரகத்திற்கு ஏற்றவாறு 60 செ.மீ. (2 அடி) அல்லது 90 செ.மீ.
அடி ) இடைவெளிகளில் பார்கள் அமைக்க வேண்டும்.

உரமும் உரமிடுதலும்
ஒரு ஏக்கருக்கு பத்து வண்டி மக்கிய தொழுஉரம் இட வேண்டும். பின்னர் ஒரு ஏக்கருக்கு யூரியா 20 கிலோவும், சூப்பர் பாஸ்பேட் 60 கிலோவும் அடியுரமாக பார்களின் பக்கவாட்டில் இடவேண்டும்.

விதைத் தேர்ந்தெடுத்தலின் அவசியம்
விதைப்பயிர் உற்பத்திக்கு சான்று பெற்ற விதைகளையே பயன்படுத்த வேண்டும். ஏனெனில், சான்று விதைகள் இரகத்தின் மரபுத் தன்மைகளுடன் அதிக முளைப்பு திறனும், வீரியத் தன்மையும் கொண்டிருப்பதால் அவைகள் விரைவாக முளைத்து வீரியமுள்ள நாற்றுக்களை கொடுக்கும். இதனால் பயிர் எண்ணிக்கை அதிகரித்து, அதிக மகசூலுக்கு வழிவகுக்கும்.
துவரை விதைகளின் இடையே காணப்படும் சுருங்கிய விதை, பூச்சிகள் சேதம் செய்த விதை “மீன் வாய்” சேதாரம் ஆன விதை மற்றும் அதிக முதிர்ச்சி அடைந்த விதைகளை நீக்க வேண்டும். அதிக முதிர்ச்சி அடைந்த விதைகள் கரும்சிவப்பு நிறம் கொண்டவை.
விதை அளவு
இரகத்திற்கு ஏற்றவாறு விதை அளவு நான்கிலிருந்து ஆறு கிலோ வரைத் தேவைப்படும்.

கடின விதைகள்
பயறுவிதைகளை விதைத்து, அவை முளைக்கும்போது சில விதைகள் கல் போன்று கடினமாக இருக்கும். இவைகளை கடின விதைகள் என்கிறோம். இவ்விதைகள் நீரில் ஊரவைக்கும் போது நீர் உறிஞ்சாமல் கல்போன்று காணப்படும்.
விதை உற்பத்தியின்போது பயிருக்கு போதுமான தண்ணீர் கிடைக்காதது, அதிக வெப்பம் போன்ற காரணங்களால் கடினவிதைகள் உருவாகின்றன. சேமிப்பின் போது பொதுவாக, கடினத்தன்மை நீங்கிவிடும். எனினும் கடினவிதை காணப்பட்டால் அவற்றை நீக்கி விடவேண்டும்.
கடின விதையை அறிய, விதைகளை நீரில் ஊரப்போட வேண்டும். ஒரு மணி நேரம் ஊறிய பின்பும், சில விதைகள் நீரை உறிஞ்சாது அப்படியே காணப்படும். அவ்வாறு நீர் உறிஞ்சாத விதைகள் கடின விதைகளாகும். அவற்றை நீக்கிவிட்டு மற்ற விதைகளை விதைப்புக்கு பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதால் விதைகள் வயலில் ஒரே சீராக முளைக்கும்.

நுண்ணூட்ட விதைநேர்த்தி
துவரைப்பயிர் வறட்சியை தாங்கி வளரக் கூடியதனாலும், நிலத்தின் நுண்ணூட்டச் சத்துக்களைப் பொறுத்து அதன் விதைபிடிப்பு மாறக்கூடும். இதில் முக்கிய நுண்ணூட்டசத்து துத்தநாகமாகும். துத்தநாகம் இனப்பெருக்கத்திற்கு தேவையான சத்து. எனவே ஒரு ஏக்கருக்குத் தேவையான துவரை விதைகளை ஒரு கிராம் துத்தநாக சல்பேட்டுக்கு ஒரு லிட்டர் நீர் என்ற விகிதத்தில் தயாரித்த துத்தநாகசல்பேட் கரைசலில் மூன்று மணி நேரம் ஊறவைத்து பின்பு நிழலில் நன்கு உலர்த்தி விதைக்க பயன்படுத்தலாம்.

பூசணக்கொல்லி விதை நேர்த்தி
கடின விதைகளை நீக்கிவிட்டு விதைப்பதன் மூலம் வயலில் நாம் சீரான முளைப்புத்திறனை பெறமுடியும் என்று பார்த்தோம். இருப்பினும் விதைகளை நோய்த் தாக்குதலிருந்து பாதுகாப்பதன் மூலம் கட்டாயமாக முளைப்புத்திறன் ஒரே சீராக இருக்கும். எனவே விதைக்கும் முன் விதைநேர்த்தி செய்வது அவசியம்.
முளைக்கும் போது மண்ணில் காணப்படும் பூசணத்தின் தாக்குதலினால் விதை அழுகல் ஏற்பட்டு அவற்றின் முளைப்பு பாதிக்கப்படும். இதனைக் கட்டுப்படுத்த ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற விகிதத்தில் காப்டான் அல்லது திராம் என்ற பூசணக் கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

ரைசோபிய நுண்ணுயிரியை பயன்படுத்துவது எப்படி?
பயறு வகைப் பயிர்களின் வேர்களில் முடிச்சுகள் காணப்படும். இந்த வேர் முடிச்சுகளில் ரைசோபியம் என்ற நுண்ணுயிர் இருக்கின்றன. இவை காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து பயறுவகைச் செடிகளுக்கு அளிக்கின்றன. இதனால் செடிகள் நன்கு வளர்ந்து அதிக மகசூல் கொடுக்கின்றன.
இதற்கு துவரைப் பயிருக்கு பரிந்துரைக்கப்படும் ச.சி.1 என்ற ரைசோபிய நுண்ணுயிரை உபயோகித்தால் நல்ல பயன் அடையலாம். ஒரு பொட்டலம் நுண்ணுயிர் கலவையை 300 மில்லி ஆர வைத்த கஞ்சியுடன் கலந்து பின்னர் 4-6 கிலோ விதையுடன் நன்கு கலக்க வேண்டும். இவ்வாறு கலந்த விதையை 3 முதல் 4 மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும்.
பூசணக் கொல்லி விதை நேர்த்தி செய்திருந்தால், பூசணக்கொல்லி மருந்து கலந்து 24 மணி நேரம் கழித்து ரைசோபிய விதை நேர்த்தி செய்ய வேண்டும். இல்லாவிடில் மருந்தினால், நுண்ணுயிர் பாதிப்புக்குள்ளாகும்.

விதைப்பு
விதைகளை இரகத்திற்கு ஏற்றவாறு இடைவெளி விட்டு, 2 செ.மீ. ஆழத்தில் விதைக்க வேண்டும்.

நெட்டை இரகம் 90X30 செ.மீ. (எஸ்.ஏ.1, கோ.6)
குட்டை இரகம் 60X30 செ.மீ. (கோ.2, கோ.3, கோ.5, வம்பன்1)

நீர் நிர்வாகம்
விதைப்பயிருக்கு தகுந்த பருவத்தில் தேவையான நீர் பாய்ச்சுதல் அவசியம். விதைப்பு நீர், மூன்றாம் நாள் உயிர் நீர் பின்னர் மண்ணின் தன்மைக்கேற்ப வாரம் ஒரு முறை நீர்ப்பாய்ச்சுதல் வேண்டும். பூ மற்றும் காய்ப்பருவங்களில் தகுந்த நீர் நிர்வாகம் செய்யாவிடில் பூக்கள் உதர்ந்து மகசூல் குறைய நேரிடும், விதைகளும் சிறுத்துவிடும்.

இலைவழி உரம்
தரமான விதை உற்பத்திக்கு, போதிய ஊட்டச்சத்து கொடுப்பது அவசியம். சிறுவர்களுக்கு, வளரும் போது எவ்வாறு ஊட்டம் அவசியமோ, அதேபோன்று விதைகள் உண்டாகி வளரும் போதும் அவற்றிற்கு அதிக ஊட்டச்சத்து தேவைப்படுகின்றது. இதற்கு வேர்கள் மண்ணில் இருந்து பெறப்பட்ட சத்துக்கள் மட்டும் போதாது. இலை மூலமாகவும் அளித்திடல் வேண்டும். இவ்வாறு இலை மூலம் நாம் ஊட்டச்சத்து அளிக்கும் போது வளரும் விதைகளுக்கு எளிதில் ஊட்டம் போய்ச் சேரும். அதனால் அவை விரைவில் வளர்ந்து வீரிய விதை உற்பத்திக்கு வழி வகுக்கும்.
இலைவழி உரம் அளிப்பதற்கு டி.ஏ.பி. உரக்கரைசலை பயன்படுத்த வேண்டும். இந்த டி.ஏ.பி.உரக் கரைசலைத் தயாரிப்பது எவ்வாறு என்பதைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
- 4 கிலோ டி.ஏ.பி உரம்
- 13 லிட்டர் நீர்
- 15 லிட்டர் பிளாஸ்டிக் வாளி
- வடிகட்ட ஒரு துணி
அ. முதலில் 4 கிலோ டி.ஏ.பி உரத்தை 13 லிட்டர் நீரில், தெளிப்பதற்கு முந்திய நாள் மாலை ஊரவைக்க வேண்டும்.
ஆ. மறுநாள் தெளிந்த நீரை மட்டும் எடுத்து, துணியின் துணை கொண்டு வடிகட்டி விட வேண்டும்.
இ. பின்னர் ஒரு லிட்டர் கரைசலை எடுத்து அதனுடன் 14 லிட்டர் நீரை ஊற்றி நன்கு கலக்க வேண்டும்.
ஈ. இவ்வாறு தயாரித்த நீர்த்த கரைசலை கைத்தெளிப்பான் கொண்டு மாலை வேலையில் செடிகளின் மீது நன்கு படுமாறு தெளிக்கவேண்டும்.
உ. ஒரு ஏக்கருக்கு தெளிக் 200 லிட்டர் நீர்த்த கரைசல் தேவைப்படும்.
ஊ.மாலை நேரங்களில் (நான்கு மணிக்கு மேல்) தெளித்தால் இலைகள் கருகாமல் பார்த்துக் கொள்ளலாம்.
எ. டி.ஏ.பி கரைசல் தெளித்த உடன் நீர்ப் பாய்ச்சுதல் மிகவும் அவசியம்.
இக்கரைசலை பயிரின் 50 சத பூப்பு பருவத்தில் ஒரு முறையும் பின்னர் 15 நாட்கள் கழித்து ஒரு முறையும் அடிக்க வேண்டும்.

வளர்ச்சியூக்கி தெளித்தலும் அதன் நன்மைகளும்
பயறுவகைச் செடிகளில் பூத்த பூக்களில் பாதி கொட்டிவிடும். இதற்கு பெரும்பாலும் செடிகளில் போதிய வளர்ச்சியூக்கி இல்லாமையே காரணமாகும். பூக்கள் உதர்வதால் காய்ப் பிடிப்பு குறைந்து, விதை உற்பத்தி குறைந்து விடுகிறது. எனவே, பயறுவிதை உற்பத்தியின் போது வளர்ச்சியூக்கி தெளிப்பது இன்றியமையாதது.
பூக்கள் உதிர்வதைத் தடுக்க, 50 சத பூப்பின் போது, லிட்டருக்கு 4 மில்லி என்ற அளவில் பிளானோஃபிக்ஸ் என்ற வளர்ச்சி ஊக்கியை தெளிக்க வேண்டும்.

களை நிர்வாகம்
துவரை விதைப்பயிரில் களைகளை நீக்குவதால் துவரைச் செடிகள் வேகமாக வளர்ந்து விளைச்சலுக்கு உதவும். விதைத்த முதல் 10 நாட்களில் ஒரு களையும் பின்னர் 15 நாட்கள் கழித்து இரண்டாவது களையும் எடுப்பது அவசியம். மேலும், விதைத்தவுடன் தெளித்தலும் 1 லிட்டர் நீரில் 1 மி.லி பாசலின் களைக்கொல்லியைத் தெளித்தும் களைகளைக் கட்டுப்படுத்தலாம்.

பயிர் பாதுகாப்பின் அவசியம்
பயறுவகைப் பயிர்கள் பூச்சி மற்றும பூசணத் தாக்குதலினால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றன. துவரைக் காய்ப்புழுவை கட்டுப்படுத்த ஏக்கருக்கு எண்டோசல்பான் 200 மில்லி அல்லது மானோகுரோட்டாபாஸ் 80 மில்லி தெளிக்க வேண்டும். பூவண்டு பூக்களை உண்ணுவதால் காய்ப்பிடிப்பு பாதிக்கப்படும். இதனைக் கட்டுப்படுத்த வண்டுகளைப் பிடித்து அழித்து விட வேண்டும். கீழ்ச்சாம்பல் நோய் தாக்குதலால் இலைகளின் கீழ் பரப்பில் சாம்பல் நிற படிவங்கள் காணப்படும். இதற்கு நனையும் கந்தகத்தை ஏக்கருக்கு 240 கிராம் என்ற அளவில் நீரில் கரைத்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

மலட்டுத் தேமல் நோய் கண்ட செடிகள்
வளர்ச்சி குன்றி, இலைகளில் இளம் பச்சை நிறம் கொண்டிருக்கும் இச்செடிகள்
பூக்காது. இந்நோயை கட்டுப்படுத்த பாதித்த செடிகளை பிடுங்கி அழித்துவிட
வேண்டும். வேரழுகல் நோயினால் வேர்களில் பூசணம் படர்ந்து செடிகள் வளர்ச்சி
குன்றி, காய்ந்துவிடும். அழுகிய செடிகளை பிடிங்கி அழிப்பதுடன், நோய் கண்ட
இடத்தில் லிட்டருக்கு ஒரு கிராம் பெவிஸ்டின் பூசணக் கொல்லியை கரைத்து
ஊற்றி பூசணம் மேலும் பரவாமல் தடுக்கலாம்.
0.1 சதம் மற்றும் 1 சதம் பேவிஸ்டின் கரைசலை தயார் செய்வது எப்படி?
1 கிராம் பேவிஸ்டினை 1 லிட்டர்
நீரில் கரைப்பது 0.1 சதம் கரைசலாகும். 10 கிராம் பேவிஸ்டினை 1 லிட்டர்
நீரில் கரைப்பது 1 சதம் கரைசலாகும்
கலவன் அகற்றுதல்
பிற இரகம் விதைப்பயிரில் கலந்து விடுவதை கலவன் என்கிறோம். கலவன்கள் விதைப் பயிரின் இனத்தூய்மையை பாதிக்கின்றன. மேலும், சிலவகைக் கலவன்களினால் பூச்சி மற்றும் நோய் பரவும் வாய்ப்புகளும் உண்டு.
துவரைப் விதைப் பயிரில் கலவன்களை கீழ் காணும் பருவங்களில் கண்டிப்பாக நீக்குதல் அவசியம்.

- பூக்கும் பருவத்திற்கு முன்னர்
- பூப்பின் போது
- காய்ப்பிடிப்பின் போது
- அறுவடைக்கு முன்னர்
பூப்பு பருவத்திற்கு முன்னர்,
விதைப் பயிரில் செடியின் உயரத்தைக் கொண்டு, உயரமான செடிகள் மற்றும்
குட்டையான செடிகள், தண்டின் நிறம், முந்திக் கொண்டு பூக்கும் செடிகள்
ஆகியவற்றை நீக்க வேண்டும்.
பூப்பின் போது, பூவின் நிறம் மற்றும் அளவு போன்றவற்றைக் கொண்டு கலவன்களை அகற்றவேண்டும் மேலும் பூக்காத செடிகள், மலட்டுத் தேமல் நோய் கண்ட செடிகள் ஆகியவற்றையும் நீக்க வேண்டும். காய்ப்பிடிப்பின் போது, காய்களின் நிறம், அகலம், நீளம் கொண்டு கலவனை அடையாளம் கண்டு அகற்றலாம்.
இவ்வாறு கலவன் நீக்குவதால், விதைப்பயிரின் இனத்தூய்மையை நாம் எளிதில் பாதுகாக்க முடியும்.

☺ உங்கள் கவனத்திற்கு
துவரை இரகங்களின் குணங்கள் கீழ்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. ☺

எச்சரிக்கை
அனைத்துகலவன்களையும் விதை வயலில் இருந்து உடனடியாக அகற்றி அழித்துவிடவேண்டும்
அறுவடை
பூத்த நாற்பது நாட்களில் காய்கள்
அறுவடைக்கு வரும். அறுவடையின் போது காய்கள் பச்சை நிறம் மாறி செம்பழுப்பு
நிறமடையும். இதுவே அறுவடைக்கு ஏற்ற தருணம். தாமதமாக அறுவடை செய்தால்
காய்கள் வெடித்து, விதைகள் கீழே கொட்டி வீணாகிவிடும்.
அறுவடைக்கு முன்னர், பயறுவண்டுகளின் சேதத்தைத் தடுக்க, எண்டோசல்பான் மருந்தை லிட்டருக்கு இரண்டு மில்லி என்ற அளவில் கலந்து காய்களின் மீது நன்கு படுமாறு தெளிக்க வேண்டும்.
அறுவடை செய்த செடிகளை நிழலில் இரண்டு நாட்களுக்கு நன்கு உலர்த்தி பின்னர் மரப் பலகைமேல் அடித்து விதைகளைப் பிரித்து எடுக்க வேண்டும். பின்னர் விதைகளுடன் கலந்துள்ள தூசி, துப்பு போன்றவற்றை பிரிக்க, காற்றில் தூற்றி எடுத்து காயவைக்க வேண்டும். நன்கு காய்ந்த விதைகளையே விதை உருவாக்க பயன்படுத்த வேண்டும்.

அறுவடைக்குப் பின் துவரை காய்களை காய வைக்கும் பொழுது இரு இரகங்களுக்கு இடையே போதுமான இடைவெளி இருக்கவேண்டும். குறைந்த பட்சம் 10 அடி இடைவெளி இருப்பது காய்கள் வெடிக்கும் பொழுது தெறிக்கும் விதைகள் மற்ற இரகத்தடன் கலந்து விடாமல் தடுக்கலாம்.

விதை உருவாக்கம்
திறட்சியான விதைகளைப் பெற, விதைகளை இரகத்திற்கு ஏற்றவாறு 3.35 மில்லி மீ. அல்லது 2.8 மில்லி மீ. வட்டக்கண் சல்லடை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். சுத்திகரிப்பு செய்யப்பட்ட விதைகளில் காணப்படும் உடைந்த மற்றும் நோய்த்தாக்கிய விதைகளை நீக்கி நல்ல தரமான விதைகளையே சேமிப்புக்கு பயன்படுத்த வேண்டும்.

விதைச் சேமிப்பு
விதை உற்பத்தி செய்வதில் எவ்வளவு கவனம் தேவையோ அதே அளவு கவனம் விதைகளை அடுத்த விதைப்புப் பருவம் வரை சேமித்து வைப்பதிலும் தேவைப்படுகிறது.

விதையின் ஈரப்பதம்
விதையின் ஈரப்பதத்தைப் பொறுத்து விதையின் தரம் மாறுபடுகிறது. விதையின் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் விதைகள் முளைப்புத்திறனை விரைவில் இழக்கின்றன. குறைந்த கால சேமிப்புக்கு விதைகளை 9 சத ஈரப்பதத்திற்கு காய வைத்து துணிப்பைகளிலோ அல்லது சாக்குப் பைகளிலோ நிறைத்து சேமியுங்கள். நீண்ட காலம் விதைகளை சேமிக்க விதைகளின் ஈரப்பதத்தை 8 சத அளவிற்குக் குறைத்து காற்றுப்புகாத பாலித்தீன் பைகளில் சேமித்து வையுங்கள்.

☺நினைவில் கொள்ளவேண்டியது
காற்றுப்புகாத பாலித்தீன் பைகளில்
விதைகளை சேமிக்கும் பொழுது விதைகளின் ஈரப்பதத்தை 8 சத அளவிற்குக் குறைத்து
விட வேண்டும். ஏனெனில் காற்றுப்புகாத பாலித்தீன் பைகளில் இருந்து ஈரம்
வெளியேராமல் விதைகள் சேதமடையம் வாய்ப்பண்டு.
விதை நேர்த்தி
விதைகளை சேமிப்புக்கு முன் பூசணக்
கொல்லி கொண்டு விதை நேர்த்தி செய்யுங்கள். இதற்கு திராம் அல்லது கேப்டான்
மருந்தை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற விகிதத்தில் கலந்து வையுங்கள்.
விதைச் சேமிப்புப் பைகள்
விதைகள் காற்றிலுள்ள ஈரத்தை கிரகிக்கும் தன்மை உடையவை என்பது உங்களுக்குத் தெரிந்ததே. ஆகையால் காற்றின் ஈரத்தன்மை அதிகமுள்ள கடலோரப் பகுதிகள் மற்றும் நதி கரைகளில் விதைகளை சேமித்திட ஈரக்காற்று புகா பைகளையே உபயோகிக்க வேண்டும். ஈரக்காற்று புகா பைகள் எவை? 700 அடர்வுள்ள பாலிதீன் பைகளே காற்று புகாத பைகள். எப்போதும் புதிய பைகளையே உபயோகப்படுத்துங்கள்.
விதைகளை, கிடங்குகளில் சேமித்து வைக்கும்போது முன்னெச்சரிக்கையாக இருங்கள். சாக்குப் பைகளை ஒன்றன் மேல் ஒன்றாக வைக்கும்பொழுது 6 அல்லது 7 வரிசைக்கு மேல் அடுக்க வேண்டாம். ஏனென்றால், மேலே உள்ள முட்டைகளின் பாரம் அடியிலுள்ள மூட்டைகளைப் போட்டு அழுத்துவதால் அடி மூட்டையில் உள்ள விதைகளின் முளைப்புத் திறன் பாதிக்க வாய்ப்பு உள்ளது.
விதை முட்டைகளை வெறும் தரையின் மீது அடுக்கி வெப்பத்தைத் தவிர்க்க வேண்டும். இதனால் தரை மற்றும் சுற்றில் உள்ள ஈரப்பதம் விதைகளில் ஊடுருவி அவற்றைப் பாதிப்பதைத் தடுக்கலாம். எப்பொழுதும் விதை முட்டைகளை மரக்கட்டைகளின் மீது அல்லது தார்பாய்களின் மீது அடுக்கி வையுங்கள்.

விதைச் சேமிப்புக் கிடங்கு பராமரிப்பு
சேமிப்புக் கிடங்கை பூச்சிகள் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். விதை சேமிப்புக் காலத்தில் விதைகளை பூச்சிகள் தாக்கினால் புகை மூட்டம் போடலாம். காற்றுப் புகாமல் விதைக் கிடங்கை நன்கு அடைத்து விட்டு, செல்பாஸ் (அலுமினியம் பாஸ்பைடு) நச்சு மாத்திரைகளை ஒரு கன மீட்டருக்கு ஒரு மாத்திரை என்ற அளவில் விதை கிடங்கினுள்ளே 3 நாட்கள் வைத்து விடுங்கள். மூன்று நாட்களுக்குப் பின்னர் நச்சுக்காற்றை வெளியேற்ற நல்ல காற்றோட்டம் இருக்கும்படி விதைக்கிடங்கை திறந்து வையுங்கள். இவ்வாறு செய்வதால் விதைகள் பூச்சி தாக்குதலிருந்து பாதுகாக்கப்படுகின்றன.

விதைகளை நன்கு சேமிக்க, அவற்றை 7 - 8 சத ஈரப்பதம் வரை காய வைத்து பின்னர் கிலோவுக்கு 2 கிராம் காப்டான் பூசணக் கொல்லி மருந்துடன் விதைநேர்த்தி செய்து சேமிக்க வேண்டும்.

பயறுவிதை மற்றும் தானிய சேமிப்பு
விவசாயிகள் பயறு விதைகளை தானியத்திற்காகவும் விதைக்காகவும் சேமிப்பதுண்டு. அவ்வாறு செய்யும் போது விதைகளுக்க பூசணக்கொல்லி மருந்து கலந்து கொண்டு சேமித்தால் அவற்றை தானியத்திற்காக பயன்படுத்த முடியாது. மருந்து கலந்து சேமிக்காவிடில் விதைகள் பயறு வண்டுகளினால் பாதிப்புக்குள்ளாகும். எனவே விதைகளை தானியத்திற்காகவும் விதைக்காகவும் சேமிக்க வேண்டும் என்றால் அவற்றை ஊக்குவிக்கப்பட்ட களிமண் கொண்டு விதைநேர்த்தி செய்வது நல்லது.
நூறு கிலோ விதையுடன் ஒரு கிலோ ஊக்குவிக்கப்பட்ட களிமண் என்ற அளவில் கலந்து சேமிக்கலாம். இதனால் பயறு வண்டு சேதாரம் இருக்காது, விதைகளை விதைக்கும் போது ஒரு கிலோ விதையுடன் இரண்டு கிராம் கேப்டான் அல்லது திராம் கொண்டு விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும். விதைகள் விதைப்புக்குத் தேவைப்படாத போது ஊக்குவிக்கப்பட்ட களிமண்ணை நன்கு கழுவி சுத்தம் செய்து தானியமாகப் பயன்படுத்தலாம்.

☺ஊக்குவிக்கப்பட்ட களிமண் என்றால் என்ன?
ஊக்குவிக்கப்பட்ட களிமண் என்பது சாதரணமான வெள்ளை களிமண் ஆகும். இது ஈரப்பதம் நீக்கப்பட்டு, அமிலத்தினால் கழுவப்பட்டது என்பதால் பூச்சிகளின் மேல்புரத்தை தாக்கி அழிக்கும். இது மிகவும் குறைந்த விலை கொண்டது மற்றும் மனிதர்களுக்கு தீங்கற்றது. ஒரு கிலோ விதைக்கு ஒரு கிராம் ஊக்குவிக்கப்பட்ட களிமண் என்ற அளவில் நேர்த்தி செய்யவேண்டும். ஊக்குவிக்கப்பட்ட களிமண் சொரசொரப்பான மேல் தோல் கொண்டதால் பயறு வண்டுகளை வெட்டு விடும். வெட்டு படுவதால் விரைவில் உடலிலுள்ள நீரினை இழந்து வண்டுகள் இறந்து விடும்.

ஊக்குவிக்கப்பட்ட களிமண் விதை நேர்த்தி
பயறு விதைகளை தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் (அ) வேப்பபெண்ணயெ் ஆகியவற்றையும் கொண்டும் ஒரு கிலோ விதைக்கு 100 மி.லி. என்ற அளவில் நேர்த்தி செய்யலாம். இவை சுற்றுப்புறத்திற்கு தீங்கு விளைவிக்காத மற்றும் விவசாயிகள் எளிதில் உபயோகிக்கும் முறைகளாகும்.
சுற்றுப்புறத் தோழமை வாய்ந்த தாவரங்களான வேப்பம், புங்கம் மற்றும் அரப்பு ஆகியவற்றை கொண்டும் ஒரு கிலோ விதைக்கு 100 மி.லி. என்ற அளவில் நேர்த்தி செய்யலாம். இவை பூச்சி விரட்டியாகவும், சேமிப்பின் பொழுது ஏற்படும் தாக்குதலை தடுக்க வல்லதாகவும் இருக்கும். மஞ்சள் பொடியும் உபயோகிக்கலாம்.
விதைச் சான்றளிப்பு
தரமான விதைகள் என்பது தன்னுடைய இனத்தூய்மையில் சிறிதும் குன்றாமலும், களைவிதை, பிற இரக விதை, நோய்தாக்கிய விதை ஆகியவை இல்லாமலும் இருக்கும். மேலும் தரமான விதை அதிக வீரியத்துடனும், முளைப்புத் தன்மையும் கொண்டிருக்கும். இதனால் விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்தும் போது வயல்களில் அதிக இடைவெளி இல்லாமல் சரியான செடிகளின் எண்ணிக்கை பராமரிக்க முடியும். அதிக வீரியத்துடன் வளர்வதால் நோய் மற்றும் பூச்சி எதிர்ப்பு தன்மை கொண்டிருக்கும். எனவே விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்தும் போது மூட்டுவழி செலவுகளை குறைக்க முடியும்.
விதை உற்பத்தி தரக்கட்டுபாடுக்கென்று சட்டபூர்வமாக ஏற்படுத்தப்பட்ட முறையே விதைச் சான்றளிப்பாகும். இதைத் தரமான விதை விநியோகிப்பின் பாதுகாவலன் என்று கூட சொல்லாம். மிக உன்னதமான பயிர் இரகங்களின் விதைகளை மிகுந்த இனத்தூய்மையும், அதிக சுத்தத்தன்மையும், மிகுந்த முளைப்புத் திறனும் உள்ள விதைகளாக விவசாயிகளுக்கு கிடைக்கச் செய்வதே விதைச் சான்றளிப்பின் முக்கிய நோக்கமாகும்.
விதைச் சான்று பல்வேறு நிலைகளில் செய்யப்படுகின்றது. விதைப்புக்கு உபயோகிக்கும் விதைகள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து வாங்கப்பட்டுள்ளதா என்பது முதல், விதைப் பயிருக்கு உரிய தனிமைப்படுத்தும் தூரம், பயிர் வளர்ச்சிப் பருவம், பூக்கும் தருணம், அறுவடை சமயம், விதைச் சுத்திகரிப்பு, மூட்டை பிடித்தல் முதலியவை சரியாக உள்ளனவா என்பது வரை ஆய்வு செய்யப்படுகிறது. மேலும் விதைகளை முளைப்புச் சோதனைக்கு உட்படுத்தி சோதனை முடிவுகளைக் கொண்டு சான்று அட்டைகள் வழங்கப்படுகின்றன. இவ்விதமாக விதை உற்பத்தியின் பல்வேறு நிலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
ஆய்வின் போது வயல் தரம் மற்றும் விதைத் தரம் குறித்து பரிந்துரைக்கப்பட்ட தரம் இருந்தால் மட்டும் உற்பத்தி செய்யப்பட்ட விதைகளுக்கு சான்றளிக்கப்பட்டு அவை விற்பனைக்கு தயாராகின்றன.
எனவே, விதை உற்பத்திக்கான வயல்களை விதைச் சான்றளிப்புக்கு உட்படுத்துவதன் மூலம் இனக்கலப்பற்ற, சுத்தத்தன்மை உடைய நல்ல தரமான விதைகளை உற்பத்தி செய்ய முடியும்.

சான்றுவிதை உற்பத்தி செய்யும்போது உற்பத்தி செய்த விதைகளில் கீழ்க்கண்ட விதைத்ததரம் இருத்தல் அவசியம்
காணைிகள் |
அதிகபட்சம் (%)
|
|
ஆதார நிலை
|
சான்று நிலை
|
|
வயல் தரம் | ||
கலவன்கள் |
0.10 சதம்
|
0.2 சதம்
|
விதைத் தரம் | ||
சுத்தமான விதைகள் (குறைந்த பட்சம்) |
98 சதம்
|
98 சதம்
|
தூசி (அதிக பட்சம்) |
2 சதம்
|
2 சதம்
|
பிற இனப்பயிர் விதைகள் (அதிக பட்சம்) |
5/கிலோ
|
10/கிலோ
|
களை விதைகள்(அதிக பட்சம்) |
5/கிலோ
|
40/கிலோ
|
பிற இரக விதைகள் (அதிக பட்சம்) |
10/கிலோ
|
20/கிலோ
|
முளைப்புத்திறன் (குறைந்த பட்சம்) |
75 சதம்
|
75 சதம்
|
ஈரத்தன்மை (அதிக பட்சம்) |
9 சதம்
|
9 சதம்
|
அட்டவணை
கலவன் அகற்றும் பொழுது கருத்தில் கொள்ள வேண்டிய சில துவரை இரகங்களின் குணாதிசயங்கள்
(கீ்ழ்கண்ட குணங்களில் மாற்றம் கொண்ட செடிகளை அகற்றவேண்டும்)

குணாதிசயங்கள் |
எஸ்.ஏ.1 | கோ.3 | கோ.4 | கோ.5 | பி.எஸ்.ஆர்.1 |
பெற்றோர் | திருப்பத்தூர் இரகத்திலிருந்து தனிவழித் தேர்வு |
கோ.1 லிருந்து சடுதி மாற்றம் |
கோயமுத்தூர் இரகத்திலிருந்து தேர்வு | கோ.1 - லிருந்து சடுதி மாற்றம் | மைலாடும் பாறை இரகத்திலிருந்து தனிவழித் தேர்வு |
50 சதம் பூக்கும் நாள் | 120 - 130 | 90 - 95 | 90 - 95 | 70 - 75 | 100 - 110 |
வயது (நாள்) | 180 | 130 | 130 | 110 | 180 |
செடியின் உயரம் (செ.மீ) |
120 - 150 | 105 -110 | 120 | 90 | 200 - 250 |
செடி படர் தன்மை | அதிகமாக படராது | குத்து | அதிகமாக படராது | அதிகமாக படராது | அதிகமாக படராது |
பூவின் நிறம் | மஞ்சள் சிவப்பு நரம்புகள் | மஞ்சள் | மஞ்சள், ஊதா நிற நரம்புகள் | மஞ்சள், ஊதா நிற நரம்புகள் | பூக்களின் பின்பக்கம் சிகப்பு |
காயின் நிறம் | பச்சை, ஊதா நிறக் கோடுகள் | பச்சை, ஊதா நிறக் கோடுகள் | பச்சை, ஊதா நிறக் கோடுகள் | பச்சை, ஊதா நிறக் கோடுகள் | சிகப்பு |
விதை நிறம் | செம்பழுப்பு | செம்பழுப்பு | செம்பழுப்பு | செம்பழுப்பு | பழுப்பு |
நூறு விதைகளின் எடை(கிராம்) | 8.5 | 7.2 | 8.5 | 8.0 | 12.0 |
விதை மகசூல் (கிலோ/ஏ) |
500 | 400 | 600 | 400 | செடிக்கு 0.75 - 1 கிலோ |
கலவன் அகற்றும் பொழுது கருத்தில் கொள்ள வேண்டிய சில துவரை இரகங்களின் குணாதிசயங்கள்
(கீ்ழ்கண்ட குணங்களில் மாற்றம் கொண்ட செடிகளை அகற்றவேண்டும்)
(கீ்ழ்கண்ட குணங்களில் மாற்றம் கொண்ட செடிகளை அகற்றவேண்டும்)
குணாதிசயங்கள் |
கோ.6 | கோ(ஆர் ஜி) 7 | வம்பன் 1 | விபிஎன் (ஆர் ஜி) 3 | கோ.பி.எச்.1 ஒட்டு இரகம் |
கோ.பி.எச்.2 ஒட்டு இரகம் |
பெற்றோர் | எஸ்.ஏ.1 - லிருந்து சடுதி மாற்றம் செய்யப்பட்டது |
பிபி9825 இரகத்திலிருந்து தேர்வு | (பிரபாத் X எச்வை3எ) X (டி21X102) |
வம்பன் 1 X குல்பர்கா | எம்.எஸ்.டி.21X ஐ.சி.பி.எல்.87109 |
எம்.எஸ். கோ 5 x ஐ.சி.பி.எல் 83021 |
50 சதம் பூக்கும் நாள் | 120 - 130 | - | 78 - 100 | - | 65-70 | 60-75 |
வயது (நாள்) | 170 - 180 | 120-130 | 96 - 100 | 100-105 | 115-120 | 120-130 |
செடியின் உயரம் (செ.மீ) |
166 | - | 80 -90 | - | 100-150 | 70-90 |
செடி படர் தன்மை | அதிகமாக படராது | - | நிமிர்ந்து நிற்கும், குத்து இரகம் | - | நிமிர்ந்து நிற்கும் | நிமிர்ந்து நிற்கும் |
பூவின் நிறம் | பூக்களின் பின்பாகத்தில் ஊதாநிறக் கோடுகள் | - | மஞ்சள் | - | மஞ்சள்,சிவப்பு நிற நரம்புகள் | மஞ்சள்,சிவப்பு நிற பெரிய நரம்புகள் |
காயின் நிறம் | பச்சையில் ஊதா நிறக்கோடுகள் | - | பச்சையில் ஊதா கோடுகள் | - | பச்சையில் ஊதா கோடுகள் | பச்சையில் ஊதா கோடுகள் |
விதை நிறம் | செம்பழுப்பு | - | பழுப்பு | - | செம்பழுப்பு | மஞ்சள்பழுப்பு |
நூறு விதைகளின் எடை(கிராம்) | 8.8 | - | 6.7 | - | 10.3 | 9.0-0.5 |
விதை மகசூல் (கிலோ/ஏ) |
600 | 400 | - | 500 | 380 |
தரமான வீரிய ஒட்டு விதை உற்பத்தி முறை (கோ.பி.எச்1)
விதை தரமானதென்றால் அது தனது பாரம்பரிய குணங்களில் இருந்து சிறிதும் குறையாமல் இருக்க வேண்டும். மேலும் களை, பிற ரகம் மற்றும் பிற பயிர் விதைகள் கலப்பில்லாமலும், பூச்சி பூஞ்சாணங்களால் தாக்கப்படாமலும், தூசி துப்பு இல்லாமலும் இருப்பது அவசியம். விதை விதைத்தவுடன் நன்கு முளைத்து செழிப்பாகவும், சீராகவும் வளர்ந்து அதிக மகசூலுக்கு அடிப்படையாக இருப்பது தரமான விதையே ஆகும்.
துவரை அயல் மகரந்தச் சேர்க்கை கொண்டிருந்தாலும், வீரிய ஒட்டு இரக விதை உற்பத்தியின் போது ஆண் மலட்டுத் தன்மை கொண்ட பெண் இரகத்துடன் ஆண் மலட்டுத் தன்மை நீக்கக்கூடிய ஆண் இரகத்துடன் இனப்பெருக்கம் செய்யும் போது தோன்றுவதே வீரிய ஒட்டு இரகமாகும்.

ஆண் மலட்டுத் தன்மை கொண்ட இரகம்
துவரை இரகங்கள் சிலவற்றில் மகரந்தப் பை மகரந்தம் உற்பத்தி செய்யா நிலையே ஆண் மலட்டுத்தன்மை என்கிறோம். இந்த இரகத்தையே பெண் இரகமாக வைத்து வேறொரு இயல்பான இரகத்துடன் இனப்பெருக்கம் செய்கிறோம்.

ஆண் இரகம்
வீரிய ஒட்டு விதை உற்பத்தியின் போது, ஆண் மலட்டுத்தன்மை கொண்ட பெண் இரகத்துடன், இயல்பான மகரந்தப் பை கொண்ட இரகத்துடன் இனச் சேர்க்கை செய்யப்படுகிறது. இந்த இயல்பான மகரந்தம் கொண்ட இரகத்தையே ஆண் இரகம் என்று அழைக்கிறோம்.
நிலம் தேர்ந்தெடுத்தல்
வீரிய ஒட்டு துவரை
பயிருக்காக தேர்ந்தெடுத்த நிலத்தில் அதற்கு முந்திய பயிர் சான்று பெறாத
அதே துவரை இரகமோ அல்லது வேறு இரகமோ இருக்கக் கூடாது. ஏனெனில், நிலத்தில்
தங்கியுள்ள விதைகள் இப்பருவத்தின் போது முளைத்து கலவனாக தோன்றும்
வாய்ப்புள்ளது. இதனால் விதைச் சான்று பெற இயலாது. மேலும் வாடல் மற்றும்
வேர் அழுகல் நோய் தோன்றாத நிலமாயிருத்தல் அவசியம். நல்ல வடிகாலுள்ள
செம்மண் மற்றும் வண்டல் மண் திரட்சியான விதைகளைத் தரும்.
இனத் தூய்மையை பராமரிக்க பயிர் விலகு தூரம்
வீரிய ஒட்டுத் துவரை பயிர் ஓர் அயல் மகரந்தச் சேர்க்கை கொண்ட பயிர். எனவே, இனக் கலப்பைத் தடுக்க துவரைப் பயிரை, சான்று பெறாத அதே இரகமோ அல்லது வேறு இரகத்திடமிருந்தோ விலக்கி வைத்திருக்க வேண்டும். இதற்கு குறைந்தது 200 மீ. (600 அடி) இடைவெளி விதைப் பயிருக்கும் மற்ற துவரை பயிருக்கும் இடையே இருத்தல் அவசியம்.

வீரிய ஒட்டு விதைப்பயிர் செய்ய ஏற்ற பருவம்
விதைகள் முதிரும் போது அதிக மழையோ, வெயிலோ, குளிரோ இல்லாத பருவமாக அமைந்திருத்தல் அவசியம். இதற்கு வைகாசி மற்றும் மார்கழிப்பட்டம் மிகவும் ஏற்றது.
விதைகள் முதிரும் போது அதிக மழையோ, வெயிலோ, குளிரோ இல்லாத பருவமாக அமைந்திருத்தல் அவசியம். இதற்கு வைகாசி மற்றும் மார்கழிப்பட்டம் மிகவும் ஏற்றது.
நிலம் தயாரித்தல்
நிலத்தை நன்கு உழுது பண்படுத்த வேண்டும். துவரையின் வேர்கள் நீண்டு செல்லக்கூடியதால் ஆழமாக உழுதல் அவசியம். பின்னர் பார்கள் அமைக்க வேண்டும்.
நிலத்தை நன்கு உழுது பண்படுத்த வேண்டும். துவரையின் வேர்கள் நீண்டு செல்லக்கூடியதால் ஆழமாக உழுதல் அவசியம். பின்னர் பார்கள் அமைக்க வேண்டும்.
உரமும் உரமிடுதலும்
ஒரு ஏக்கருக்கு பத்து வண்டி மக்கிய தொழு உரம் இட வேண்டும். பின்னர் ஒரு ஏக்கருக்கு யூரியா 25 கிலோவும், சூப்பர் பாஸ்பேட் 60 கிலோவும் அடியுரமாக பார்களின் பக்கவாட்டில் இடவேண்டும்.
ஒரு ஏக்கருக்கு பத்து வண்டி மக்கிய தொழு உரம் இட வேண்டும். பின்னர் ஒரு ஏக்கருக்கு யூரியா 25 கிலோவும், சூப்பர் பாஸ்பேட் 60 கிலோவும் அடியுரமாக பார்களின் பக்கவாட்டில் இடவேண்டும்.
விதைத் தேர்ந்தெடுத்தலின் அவசியம்
விதைப்பயிர் உற்பத்திக்கு சான்று பெற்ற விதைகளைப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில், சான்று விதைகள் இரகத்தின் மரபுத் தன்மைகளுடன் அதிக முளைப்பு திறனும், வீரியத் தன்மையும் கொண்டிருப்பதால் அவைகள் விரைவாக முளைத்து வீரியமுள்ள நாற்றுகளை கொடுக்கும். இதனால் பயிர் எண்ணிக்கை அதிகரித்து, அதிக மகசூலுக்கு வழிவகுக்கும்.

வீரிய துவரை ஒட்டு இரக உற்பத்தியின் போது ஆண் மற்றும் பெண் இரகங்களை பயன்படுத்துவதால் இரு இரக விதைகளும் ஒன்றோடொன்று கலந்து விடாமல் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஆண் இரகம் (ஐ.சி.பி.எல் - 87109): 16 கிலோ/ஏக்கர்
பெண் இரகம் (எம்.எஸ்.டி.21) : 2 கிலோ/ஏக்கர்
பெண் இரகம் (எம்.எஸ்.டி.21) : 2 கிலோ/ஏக்கர்
விதை நேர்த்தி
கடின விதைகளை நீக்கிவிட்டு
விதைப்பதன் மூலம் வயலில் நாம் சீரான முளைப்புத்திறனை பெறமுடியும்.
இருப்பினும் விதைகளை நோய்த் தாக்குதலிலிருந்து பாதுகாப்பதன் மூலம்
கட்டாயமாக முளைப்புத்திறன் ஒரே சீராக இருக்கும். எனவே விதைக்கும் முன்
விதைநேர்த்தி செய்வது அவசியம்.
முளைக்கும் போது மண்ணில் காணப்படும் பூசணத்தின் தாக்குதலினால் விதை அழுகல் ஏற்பட்ட அவற்றின் முளைப்பு பாதிக்கப்படும். இதனைக் கட்டுப்படுத்த ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற விகிதத்தில் காப்டான் அல்லது திராம் என்ற பூசணக் கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
முளைக்கும் போது மண்ணில் காணப்படும் பூசணத்தின் தாக்குதலினால் விதை அழுகல் ஏற்பட்ட அவற்றின் முளைப்பு பாதிக்கப்படும். இதனைக் கட்டுப்படுத்த ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற விகிதத்தில் காப்டான் அல்லது திராம் என்ற பூசணக் கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
ரைசோபிய நுண்ணுயிரியை பயன்படுத்துவது எப்படி?
பயறு வகைப் பயிர்களின் வேர்களில் வேர்முடிச்சுகள் காணப்படும். இந்த வேர் முடிச்சுகளில் ரைசோபியம் என்ற நுண்ணுயிர் இருக்கின்றன. இவை காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து பயறுவகைச் செடிகளுக்கு அளிக்கின்றன. இதனால் செடிகள் நன்கு வளர்ந்து அதிக மகசூல் கொடுக்கின்றன .
இதற்கு துவரைப் பயிருக்கு பரிந்துரைக்கப்படும் சி.சி.1 என்ற ரைசோபிய நுண்ணுயிரை உபயோகித்தால் நல்ல பயன் அடையலாம். ஒரு பொட்டலம் நுண்ணுயிர் கலவையை 300 மில்லி ஆர வைத்த கஞ்சியுடன் கலந்த பின்னர் 16 கிலோ பெண் இரக விதையுடனும் மேலும் இரண்டு கிலோ இரக விதையுடனும் நன்கு கலக்க வேண்டும். இவ்வாறு கலந்த விதையை 3 முதல் 4 மணி நேரம நிழலில் உலர்த்த வேண்டும் (வரைபடம் 2).
பூசணக் கொல்லி விதை நேர்த்தி செய்திருந்தால் பூசணக்கொல்லி மருந்து கலந்து 24 மணி நேரம் கழித்து ரைசோபிய விதை நேர்த்தி செய்ய வேண்டும். இல்லாவிடில் மருந்தினால், ரைசோபிய நுண்ணுயிர் பாதிப்புக்குள்ளாகும்.

விதைக்கும் போது ஆண் மற்றும் பெண் இரகங்களை தனித்தனியாக வரிசைகளில் விதைக்க வேண்டும். பெண் இரகத்திலிருந்து வீரிய ஒட்டு விதை எடுப்பதால் பொதுவாக பெண் வரிசை ஆண் வரிசையைக் காட்டிலும் அதிக எண்ணிக்கை கொண்டிருக்கும். கோ.பி.எச்.1 விதை உற்பத்தியின் போது நான்கு வரிசை பெண் இரகமும் இரண்டு வரிசை ஆண் இரகமுமாக விதைக்க வேண்டும் (வரைபடம் 5). ஆண் இரகமான ஐ.சி.பி.எல்.87109 விதைகளை பெண் இரகம் விதைத்த ஒரு வாரம் கழித்து விதைக்க வேண்டும். செடிக்குச்செடி இடைவெளியாக ஆண் மற்றும் பெண் இரகங்களின் அரையடியாக இருக்க வேண்டும்.
வீரிய ஒட்டு இரக விதை உற்பத்தி வயலைச் சுற்றி எல்லைப்பயிராக ஆண்
இரகத்தையே இரண்டு வரிசைகளாக விதைக்க வேண்டும். இதனால் ஆண் இரக மகரந்தம் பெண் இரகத்திற்கு அதிகமாக கிடைக்கச் செய்யலாம்.
நீர் நிர்வாகம்
விதைப்பயிருக்கு தகுந்த பருவத்தில் தேவையான நீர் பாய்ச்சுதல் அவசியம். விதைப்பு நீர், மூன்றாம் நாள் உயிர் நீர் பின்னர் மண்ணின் தன்மைக்கேற்ப வாரம் ஒரு முறை நீர்ப்பாய்ச்சுதல் வேண்டும். பூ மற்றும் காய்ப்பருவங்களில் தகுந்த நீர் நிர்வாகம் செய்யாவிடில் பூக்கள் உதிர்ந்து மகசூல் குறைய நேரிடும், விதைகளும் சிறுத்துவிடும்.

தரமான விதை உற்பத்திக்கு, போதிய ஊட்டச்சத்து, கொடுப்பது அவசியம். சிறுவர்களுக்கு, வளரும் போது எவ்வாறு ஊட்டம் அவசியமோ, அதேபோன்று விதைகள் உண்டாகி வளரும் போதும் அவற்றிற்கு அதிக ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. இதற்கு வேர்கள் மண்ணில் இருந்து பெறப்பட்ட சத்துக்கள் மட்டும் போதாது. இலை மூலமாகவும் அளித்திடல் வேண்டும். இவ்வாறு இலை மூலம் நாம் ஊட்டச்சத்து அளிக்கும் போது, வளரும் விதைகளுக்கு எளிதில் ஊட்டம் போய்ச் சேரும் அதனால் அவை விரைவில் வளர்ந்து வீரிய விதை உற்பத்திக்கு வழி வகுக்கும்.
இலைவழி உரம் அளிப்பதற்கு டி.ஏ.பி. உரக்கரைசலை பயன்படுத்த வேண்டும். டி.ஏ.பி. உரக் கரைசலைத் தயாரிப்பது எவ்வாறு என்பதைப் பார்ப்போம்.

- 4 கிலோ டி.ஏ.பி. உரம்
- 13 லிட்டர் நீர்
- 15 லிட்டர் பிளாஸ்டிக் வாளி
- வடிகட்ட ஒரு துணி
அ. முதலில் 4 கிலோ டி.ஏ.பி. உரத்தை 13 லிட்டர் நீரில், தெளிப்பதற்கு முந்திய நாள் மாலை ஊரவைக்க வேண்டும்.
ஆ. மறுநாள் தெளிந்த நீரை மட்டும் எடுத்து, துணியின் துணை கொண்டு வடிகட்டி விட வேண்டும்.
இ. பின்னர் ஒரு லிட்டர் கரைசலை எடுத்து அதனுடன் 14 லிட்டர் நீரை ஊற்றி நன்கு கலக்க வேண்டும்.
ஈ. இவ்வாறு தயாரித்த நீர்த்த கரைசலை கைத்தெளிப்பான் கொண்டு மாலை வேலையில் செடிகளின் மீது நன்கு படுமாறு தெளிக்கவேண்டும்.
உ. ஒரு ஏக்கருக்கு தெளிக்க 200 லிட்டர் நீர்த்த கரைசல் தேவைப்படும்.
ஊ. மாலை நேரங்களில் (நான்கு மணிக்கு மேல்) தெளித்தால் இலைகள் கருகாமல் பார்த்துக் கொள்ளலாம்.
எ. டி.ஏ.பி கரைசல் தெளித்த உடன் நீர்ப் பாய்ச்சுதல் மிகவும் அவசியம்.
இக்கரைசலை பயிரின் 2 சத பூப்பு பருவத்தில் ஒரு முறையும் பின்னர் 15 நாட்கள் கழித்து ஒரு முறையும் அடிக்க வேண்டும்.

☺50% பூப்பு காலம் என்றால் என்ன?
வீரிய இரக விதை உற்பத்தியில் 50% செடிகள் பூக்கும் காலமே 50% பூப்பு காலம் ஆகும்.

பயிர் வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் அதன் பயன்கள்
பயறு வகைகளில் 50% பூக்கள் கொட்டிவிடும். பயிர் வளர்ச்சி ஊக்கிகளின் குறைபாடே இதற்கு காரணம். பூக்கள் கொட்டிவிடுவதால் காய் உருவாதலும் விதை மகசூலும் குறைந்துவிடும். ஆதலால் பயிர் வளர்ச்சி ஊக்கிகள் தெளிப்பது மிகவும் அவசியமாகும்.
பூக்கள் கொட்டுவதை குறைப்பதற்கு 10 லி நீரில் ப்ளானபிக்ஸ் 4 மி.லி. கலந்து 50% பூப்பு காலத்தில் தெளிக்க வேண்டும்.
களை நிர்வாகம்
வீரிய ஒட்டத் துவரை விதைப்பயிரில் களைகளை நீக்குவதால் துவரைச் செடிகள் வேகமாக வளர்ந்து விளைச்சலுக்கு உதவும். விதைத்த முதல் 10 நாட்களில் ஒரு களையும் பின்னர் 15 நாட்கள் கழித்து இரண்டாவது களையும் எடுப்பது அவசியம். மேலும், விதைத்தவுடன் ஒரு லிட்டர் நீரில் 1 மில்லி பாசலின் களைக் கொல்லியைத் தெளித்தும் களைகளைக் கட்டுப்படுத்தலாம்.

பயறுவகைப் பயிர்கள் பூச்சி மற்றும் பூசணத் தாக்குதலினால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றன.

துவரைக் காய்ப்புழு
பூ மற்றும் காய்களைத் துளைத்து உள்ளே புகுந்து விதைகளை உண்ணவதால், மகசூல் குறைகின்றன. இதனைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு எண்டோசல்பான் 200 மில்லி அல்லது மேனோகுரோட்டோபாஸ் 80 மில்லி தெளிக்க வேண்டும்.

பூவண்டு
பூக்களை உண்ணுவதால் காய்ப்பிடிப்பு பாதிக்கப்படும். இதனைக் கட்டுப்படுத்த வண்டுகளைப் பிடித்த அழித்த விட வேண்டும்.

கீழ்ச்சாம்பல் நோய்:
இலைகளின் கீழ் பரப்பில்
சாம்பல் நிற படிவங்கள் காணப்படும். இதற்கு நனையும் கந்தகத்தை ஏக்கருக்கு
240 கிராம் என்ற அளவில் நீரில் கரைத்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
மலட்டுத் தேமல் நோய்:
நோய் கண்ட செடிகள் வளர்ச்சி குன்றி, இலைகளில் இளம் பச்சை நிறம் கொண்டிருக்கும் இச்செடிகள் பூக்காது. இந்நோயை கட்டுப்படுத்த பாதித்த செடிகளை பிடுங்கி அழித்துவிட வேண்டும்.
இந்நோய் கட்டுப்படுத்த பாதித்த செடிகளை பிடுங்கி அழித்துவிட வேண்டும். இந்நோய் மேலும் பரவுவதைத் தடுக்க ஏக்கருக்கு 200 மில்லி மோனோகுரோட்டோபாஸ் தெளிக்கலாம்.

வேரழுகல் நோய்
வேர்களில் பூசணம் படறுவதால் செடிகள் வளர்ச்சி குன்றி, காய்ந்துவிடும். அழுகிய செடிகளை பிடுங்கி அழிப்பதுடன், நோய் கண்ட இடத்தில் லிட்டருக்கு ஒரு கிராம் பெவிஸ்டின் பூசணக் கொல்லியை கரைத்து ஊற்றி பூசணம் மேலும் பரவாமல் தடுக்கலாம்.

பிற இரகம் விதைப்பயிரில் கலந்து
விடுவதை கலவன் என்கிறோம். கலவன்கள் விதைப் பயிரின் இனத்தூய்மையை
பாதிக்கின்றன. மேலும், சிலவகைக் கலவன்களினால் பூச்சி மற்றும் நோய் பரவும்
வாய்ப்புகளும் உண்டு.
வீரிய ஒட்டு இரக உற்பத்தியின் போது ஆண் மற்றும் பெண் இரகங்களின் தனித்தனியாக கலவன்களை அடையாளம் கண்டு அகற்றுதல் முக்கியம். இதற்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள முறைகளை கையாளலாம்.

விதைப் பிடிப்பை அதிகரிக்கும் முறைகள்
- ஆண் இரகப் பயிரை பெண் இரகம் விதைத்த ஒரு வாரம் கழித்து விதைப்பதால் பெண் இரக இனச்சேர்க்கைக்கு ஆண் இரக பூக்கள் அதிகமாகக் கிடைக்கும்.
- ஆண் இரகப் பயிரை எல்லைப் பயிராக விதைப்பதன் மூலம் அயல் மகரந்தத்தின் பாதிப்பைக் குறைக்கலாம்.
- ஆண் இரகத்தில் ஆரம்பத்தில் தோன்றும் பிஞ்சுக் காய்களே உடன் நீக்குவதன் மூலம் அதிக பூக்கள் தோன்ற வாய்ப்புள்ளது. இதனால் பெண் இரக இனச்சேர்க்கை அதிகமாகி விதை பிடிப்பு கூடும்.
- வீரிய ஒட்டு இரக விதை உற்பத்தி வயலைச் சுற்றி சூரியகாந்தி பயிரை விதைப்பதால் தேனீக்கள் சூரியகாந்திப் பூவிற்கு மகரந்தம் சேர்க்க வரும்போது துவரையிலும் மகரந்தச் சேர்க்கையைத் தூண்டி அதிக விதைப் பிடிப்புக்கு உதவும்.
அறுவடை
பூத்த நாற்பது நாட்களில் காய்கள்
அறுவடைக்கு வரும். அறுவடயின் போது காய்கள் பச்சை நிறம் மாறி செம்பழுப்பு
நிறமடையும். இதுவே அறுவடைக்கு ஏற்ற தருணம். தாமதமாக அறுவடை செய்தால்
காய்கள் வெடித்து, விதைகள் கீழே கொட்டி வீணாகிவிடும்.
அறுவடைக்கு முன்னர், பயறுவண்டுகளின் சேதத்தைத் தடுக்க, எண்டோசல்பான் மருந்தை லிட்டருக்கு இரண்டு மில்லி என்ற அளவில் கலந்து காய்களின் மீது நன்கு படுமாறு தெளிக்க வேண்டும்.
பெண் இரகத்தில் பெறப்படும் விதைகளை வீரிய ஒட்டு இரக விதைகளாகும். எனவே, இக்காய்களை பரித்து களத்தில் காயப்போட வேண்டும். ஆண் இரகத்திலிருந்து பரித்த காய்களை காய வைத்து பிரித்தெடுக்கும் விதைகளை தானியமாகத்தான் பயன்படுத்த வேண்டும்.
பின்னர் விதைகளுடன் கலந்துள்ள தூசி, துப்பு போன்றவற்றை பிரிக்க, காற்றில் தூற்றி எடுத்து காயவைக்க வேண்டும். நன்கு காய்ந்த விதைகளையே விதை உருவாக்க பயன்படுத்த வேண்டும்.

திறட்சியான விதைகளைப் பெற, விதைகளை
இரகத்திற்கு ஏற்றவாறு 3.35 மில்லி மீ. அல்லது 2.8 மில்லி மீ. வட்டக்கண்
சல்லடை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். சுத்திகரிப்பு செய்யப்பட்ட
விதைகளில் காணப்படும் உடைந்த மற்றும நோய்த்தாக்கிய விதைகளை நீக்கி நல்ல
தரமான விதைகளையே சேமிப்புக்கு பயன்படுத் வேண்டும்.
விதைச் சேமிப்பு
விதை உற்பத்தி செய்வதில் எவ்வளவு கவனம் தேவையோ அதே அளவு கவனம் விதைகளை அடுத்த விதைப்புப் பருவம் வரை சேமித்து வைப்பதிலும் தேவைப்படுகிறது.
விதை உற்பத்தி செய்வதில் எவ்வளவு கவனம் தேவையோ அதே அளவு கவனம் விதைகளை அடுத்த விதைப்புப் பருவம் வரை சேமித்து வைப்பதிலும் தேவைப்படுகிறது.
விதையின் ஈரப்பதம்
விதையின் ஈரப்பதத்தைப் பொறுத்து விதையின் தரம் மாறுபடுகிறது. விதையின் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் விதைகள் முளைப்புத்திறனை விரைவில் இழக்கின்றன. குறைந்த கால சேமிப்புக்கு விதைகளை 9 சத ஈரப்பதத்திற்கு காய வைத்து துணிப்பைகளிலோ அல்லது சாக்குப் பைகளிலோ நிறைத்து சேமியுங்கள். நீண்ட காலம் விதைகளை சேமிக்க விதைகளின் ஈரப்பதத்தை 8 சத அளவிற்குக் குறைத்து காற்றுப்புகாத பாலித்தீன் பைகளில் சேமித்து வையுங்கள்.
விதையின் ஈரப்பதத்தைப் பொறுத்து விதையின் தரம் மாறுபடுகிறது. விதையின் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் விதைகள் முளைப்புத்திறனை விரைவில் இழக்கின்றன. குறைந்த கால சேமிப்புக்கு விதைகளை 9 சத ஈரப்பதத்திற்கு காய வைத்து துணிப்பைகளிலோ அல்லது சாக்குப் பைகளிலோ நிறைத்து சேமியுங்கள். நீண்ட காலம் விதைகளை சேமிக்க விதைகளின் ஈரப்பதத்தை 8 சத அளவிற்குக் குறைத்து காற்றுப்புகாத பாலித்தீன் பைகளில் சேமித்து வையுங்கள்.
விதை நேர்த்தி
விதைகளை சேமிப்புக்கு முன் பூசணக் கொல்லி கொண்டு விதை நேர்த்தி செய்யுங்கள். இதற்கு திராம் அல்லது கேப்டான் மருந்தை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற விகிதத்தில் கலந்து வையுங்கள்.

விதை சேமிப்புப் பைகள்
விதைகள் காற்றிலுள்ள ஈரத்தை கிரகிக்கும் தன்மை உடையவை என்பது உங்களுக்குத் தெரிந்ததே. ஆகையால் காற்றின் ஈரத்தன்மை அதிகமுள்ள கடலோரப் பகுதிகள் மற்றும் நதி கரைகளில் விதைகளை சேமித்திட ஈரக்காற்று புகா பைகளையே உபயோகிக்க வேண்டும். ஈரக்காற்று புகா பைகள் எவை? 700 அடர்வுள்ள பாலிதீன் பைகளே காற்று புகாத பைகள். எப்போதும் புதிய பைகளையே உபயோகப்படுத்துங்கள்.
விதைகளை, கிடங்குகளில் சேமித்து வைக்கும்பொழுது முன்னெச்சரிக்கையாக இருங்கள். சாக்குப் பைகளை ஒன்றின் மேல் ஒன்றாக வைக்கும்பொழுது 6 அல்லது 7 வரிசைக்கு மேல் அடுக்க வேண்டாம். ஏனென்றால், மேலே உள்ள முட்டைகளின் பாரம் அடியிலுள்ள முட்டைகளைப் போட்டு அழுத்துவதால் அடி மூட்டையில் உள்ள விதைகளின் முளைப்புத் திறன் பாதிக்க வாய்ப்பு உள்ளது.
விதை மூட்டைகளை வெறும் தரையின் மீது அடுக்கி வைப்பதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல் சுவற்றின் மீது சாய்த்து அடுக்குதலையும் தவிர்க்க வேண்டும். இதனால் தரை மற்றும் சுவற்றில் உள்ள ஈரப்பதம் விதைகளில் ஊடுருவி அவற்றைப் பாதிப்பதைத் தடுக்கலாம். எப்பொழுதும் விதை மூட்டைகளை மரக்கட்டைகளின் மீது அல்லது தார்பாய்களின் மீது அடுக்கி வையுங்கள் (வரைபடம் 3).

சேமிப்புக் கிடங்கை பூச்சிகள் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். விதை சேமிப்புக் காலத்தில் விதைகளை பூச்சிகள் தாக்கினால் புகை மூட்டம் போடலாம். காற்றுப் புகாமல் விதைக் கிடங்கை நன்கு அடைத்து விட்டு, செல்பாஸ் (அலுமினியம் பாஸ்பைடு) நச்சு மாத்திரைகளை ஒரு கன மீட்டருக்கு ஒரு மாத்திரை என்ற அளவில் விதை கிடங்கினுள்ளே 3 நாட்கள் வைத்து விடுங்கள். மூன்று நாட்களுக்குப் பின்னர் நச்சுக்காற்றை வெளியேற்ற நல்ல காற்றோட்டம் இருக்கும்படி விதைக்கிடங்கை திறந்து வையுங்கள். இவ்வாறு செய்வதால் விதைகள் பூச்சி தாக்குதலிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன.
சேமிப்புக் கிடங்கை பூச்சிகள் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். விதை சேமிப்புக் காலத்தில் விதைகளை பூச்சிகள் தாக்கினால் புகை மூட்டம் போடலாம். காற்றுப் புகாமல் விதைக் கிடங்கை நன்கு அடைத்து விட்டு, செல்பாஸ் (அலுமினியம் பாஸ்பைடு) நச்சு மாத்திரைகளை ஒரு கன மீட்டருக்கு ஒரு மாத்திரை என்ற அளவில் விதை கிடங்கினுள்ளே 3 நாட்கள் வைத்து விடுங்கள். மூன்று நாட்களுக்குப் பின்னர் நச்சுக்காற்றை வெளியேற்ற நல்ல காற்றோட்டம் இருக்கும்படி விதைக்கிடங்கை திறந்து வையுங்கள். இவ்வாறு செய்வதால் விதைகள் பூச்சி தாக்குதலிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன.
விதைச் சேமிப்பு
விதைகளை நன்கு சேமிக்க, அவற்றை 7 - 8 சத ஈரப்பதம் வரை காய வைத்து பின்னர் கிலோவுக்கு 2 கிராம் காப்டான் பூசணக் கொல்லி மருந்துடன் விதைநேர்த்தி செய்து சேமிக்க வேண்டும்.
விதைகளை நன்கு சேமிக்க, அவற்றை 7 - 8 சத ஈரப்பதம் வரை காய வைத்து பின்னர் கிலோவுக்கு 2 கிராம் காப்டான் பூசணக் கொல்லி மருந்துடன் விதைநேர்த்தி செய்து சேமிக்க வேண்டும்.
பயறுவிதை மற்றும் தானிய சேமிப்பு
விவசாயிகள் பயறு விதைகளை தானியத்திற்காகவும் விதைக்காகவும் சேமிப்பதுண்டு. அவ்வாறு செய்யும் போது, விதைகளுக்கு பூசணக்கொல்லி மருந்து கலந்து கொண்டு சேமித்தால் அவற்றை தானியத்திற்காக பயன்படுத்த முடியாது. மருந்து கலந்து சேமிக்காவிடில் விதைகள் பயறு வண்டுகளினால் பாதிப்புக்குள்ளாகும். எனவே விதைகளை தானியத்திற்காகவும், விதைக்ககாகவும் சேமிக்க வேண்டும் என்றால் அவற்றை ஊக்குவிக்கப்பட்ட களிமண் கொண்டு விதைநேர்த்தி செய்வது நல்லது.
நூறு கிலோ விதையுடன் ஒரு கிலோ ஊக்குவிக்கப்பட்ட களிமண் என்ற அளவில் கலந்து சேமிக்கலாம். இதனால் பயறு வண்டு சேதாரம் இருக்காது. விதைகளை விதைக்கும் போது ஒரு கிலோ விதையுடன் இரண்டு கிராம் காப்டான் அல்லது திராம் கொண்டு விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும். விதைகள் விதைப்புக்குத் தேவைப்படாத போது ஊக்குவிக்கப்பட்ட களிமண்ணை நன்கு கழுவி சுத்தம் செய்து தானியமாகப் பயன்படுத்தலாம்.

தரமான விதைகள் என்பது தன்னுடைய இனத்தூய்மையில சிறிதும் குன்றாமலும், களைவிதை, பிற இரக விதை, நோய்தாக்கிய விதை ஆகியவை இல்லாமலும் இருக்கும். மேலும் தரமான விதை அதிக வீரியத்துடனும், முளைப்புத் தன்மையும் கொண்டிருக்கும். இதனால் விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்தும் போது வயல்களில் அதிக இடைவெளி இல்லாமல் சரியான செடிகளின் எண்ணிக்கை பராமரிக்க முடியும். அதிக வீரியத்துடன் வளர்வதால் நோய் மற்றும் பூச்சி எதிர்ப்பு தன்மை கொண்டிருக்கும். எனவே விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்தும் போது முட்டுவழி செலவுகளை குறைக்க முடியும்.
விதை உற்பத்தி தரக்கட்டுபாடுக்கென்று சட்டபூர்வமாக ஏற்படுத்தப்பட்ட முறையே விதைச் சான்றளிப்பாகும். இதைத் தரமான விதை விநியோகிப்பின் பாதுகாவலன் என்று கூட சொல்லலாம். மிக உன்னதமான பயிர் இரகங்களின் விதைகளை மிகுந்த இனத்தூய்மையும், அதிக சுத்தத்தன்மையும், மிகுந்த முளைப்புத் திறனும் உள்ள விதைகளாக விவசாயிகளுக்கு கிடைக்கச் செய்வதே விதைச் சான்றளிப்பின் முக்கிய நோக்கமாகும்.

விதைச் சான்று பல்வேறு நிலைகளில்
செய்யப்படுகின்றது. விதைப்புக்கு உபயோகிக்கும் விதைகள் அங்கீகரிக்கப்பட்ட
நிறுவனத்திலிருந்து வாங்கப்பட்டுள்ளதா என்பது முதல், விதைப் பயிருக்கு
உரிய தனிமைப்படுத்தும் தூரம், பயிர் வளர்ச்சிப் பருவம், பூக்கும் தருணம்,
அறுவடை சமயம், விதைச் சுத்திகரிப்பு, மூட்டை பிடித்தல் முதலியவை சரியாக
உள்ளனவா என்பது வரை ஆய்வு செய்யப்படுகிறது. மேலும் விதைகளை முளைப்புச்
சோதனைக்கு உட்படுத்தி சோதனை முடிவுகளைக் கொண்டு சான்று அட்டைகள்
வழங்கப்படுகின்றன. இவ்விதமாக விதை உற்பத்தியின் பல்வேறு நிலைகளில் ஆய்வு
மேற்கொள்ளப்படுகிறது.
ஆய்வின் போது வயல் தரம் மற்றும் விதைத் தரம் குறித்து பரிந்துரைக்கப்பட்ட தரம் இருந்தால் மட்டும் உற்பத்தி செய்யப்பட்ட விதைகளுக்கு சான்றளிக்கப்பட்டு அவை விற்பனைக்குத் தயாராகின்றன.
எனவே, விதை உற்பத்திக்கான வயல்களை விதைச் சான்றளிப்புக்கு உட்படுத்துவதன் மூலம் இனக்கலப்பற்ற, சுத்தத்தன்மை உடைய நல்ல தரமான விதைகளை உற்பத்தி செய்ய முடியும்.
ஆய்வின் போது வயல் தரம் மற்றும் விதைத் தரம் குறித்து பரிந்துரைக்கப்பட்ட தரம் இருந்தால் மட்டும் உற்பத்தி செய்யப்பட்ட விதைகளுக்கு சான்றளிக்கப்பட்டு அவை விற்பனைக்குத் தயாராகின்றன.
எனவே, விதை உற்பத்திக்கான வயல்களை விதைச் சான்றளிப்புக்கு உட்படுத்துவதன் மூலம் இனக்கலப்பற்ற, சுத்தத்தன்மை உடைய நல்ல தரமான விதைகளை உற்பத்தி செய்ய முடியும்.
சான்றுவிதை உற்பத்தி செய்யும்போது உற்பத்தி செய்த விதைகளில் கீழ்க்கண்ட விதைத்தரம் இருத்தல் அவசியம்
விதைத் தரம்
சுத்தமான விதைகள் (குறைந்த பட்சம்) | 98 சதம் |
தூசி (அதிக பட்சம்) | 2 சதம் |
பிற இனப்பயிர் விதைகள் (அதிக பட்சம் ) | 1 சதம் |
களை விதைகள் (அதிக பட்சம்) | 1 சதம் |
முளைப்புத்திறன் (குறைந்த பட்சம்) | 75 சதம் |
ஈரத்தன்மை (அதிக பட்சம்) | |
காற்றுப்புகாத பை | 8.0 சதம் |
காற்றுப்புகும் பை | 9.0 சதம் |
No comments:
Post a Comment