ஜுலை 19
மியான்மார் - பர்மிய மாவீரர் நாள்
நிக்கரகுவா - தேசிய விடுதலை நாள் (1979)
1553 - 9 நாட்களே இங்கிலாந்தின் அரசியாக இருந்த ஜேன் கிறே பதவியிழந்தாள். முதலாம் மேரி அரசியாக முடி சூடினாள்.
1870 - பிரான்ஸ் புரூசியா மீது போரை ஆரம்பித்தது.
1900 - பாரிசில் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை ஆரம்பமாயிற்று.
1912 - அரிசோனா மாநிலத்தில் 190 கிகி எடையுள்ள விண்கல் ஒன்று வீழ்ந்து கிட்டத்தட்ட 16,000 துகள்களாகச் சிதறுண்டது.
1940 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலியப் போர்க்கப்பல் ஒன்று மூழ்கியதில் 121 பேர் கொல்லப்பட்டனர்.
1947 - பர்மா தலைநகர் ரங்கூனில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தபோது ஆயுதம்
தாங்கிய சிலர் உள்ளே நுழைந்து பிரதமர் ஆங்சானையும் ஆறு அமைச்சர்களையும்
சுட்டுக் கொன்றனர்.
1979 - நிக்கராகுவாவில் அமெரிக்க சார்பு சமோசா அரசு சண்டினீஸ்டா கிளர்ச்சிவாதிகளால் கவிழ்க்கப்பட்டது.
1980 - ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மொஸ்கோவில் ஆரம்பமாயின.
1985 - விண்வெளிக்குச் செல்லும் முதல் ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் Christa McAulife.
1996 - 100 ஆண்டு ஒலிம்பிக் வரலாற்றைக் குறிக்கும் வகையில் அட்லாண்டாவில்
மிகப் பிரம்மாண்டமான முறையில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கின.
1996 -
ஓயாத அலைகள் ஒன்று: முல்லைத்தீவில் இலங்கைக் கடற்படையின் ரணவிரு பீரங்கிப்
படகு விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது. ஏழு கடற் கரும்புலிகள்
வீரச்சாவடைந்தனர்
No comments:
Post a Comment