Thursday, July 5, 2012

ஜுலை 5

ஜுலை 5
தமிழீழம் - கரும்புலிகள் நாள்
1295 - இங்கிலாந்துக்கு எதிராக ஸ்கொட்லாந்தும் பிரான்சும் கூட்டை உருவாக்கி
1610 - நியூபவுண்ட்லாந்து தீவை நோக்கிய தனது பயணத்தை ஜோன் கை பிறிஸ்டலில் இருந்து 39 குடியேறிகளுடன் கடற்பயணத்தை ஆரம்பித்தார்.
1687 - ஐசாக் நியூட்டன் தனது புகழ்பெற்ற பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா நூலை வெளியிட்டார்.
1811 - வெனிசுவேலா ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1830 - பிரான்ஸ் அல்ஜீரியாவினுள் நுழைந்தது.
1865 - Salvation Army இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது.
1884 - ஜெர்மனி கமரூனை ஆக்கிரமித்தது.
1900 - ஆஸ்திரேலியப் பொதுநலவாய சட்டம் பிரித்தானிய நாடாளுமன்றில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1945 - இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சின் விடுதலை அறிவிக்கப்பட்டது.
1948 - National Health Service எனப்படும் தொட்டில் முதல் சுடுகாடு வரை அனைவருக்கும் இலவச மருத்துவ உதவி அளிக்க வகை செய்யும் தேசிய மருத்துவ உதவிச் சட்டம் பிரிட்டனில் நடைமுறைக்கு வந்தது
1950 - கொரியப் போர்: அமெரிக்கப் படைகளுக்கும் வட கொரியாப் படைகளுக்கும் இடையில் முதலாவது மோதல் ஆரம்பமானது.
1951 - சந்தி திரான்சிஸ்டரை வில்லியம் ஷொக்லி கண்டுபிடித்தார்.
1954 - பிபிசி தன் முதல் தொலைக்காட்சிச் செய்தியை ஒளிபரப்பியது.
1962 - பிரான்சிடமிருந்து அல்ஜீரியா விடுதலை அடைந்தது.
1971 - ஐக்கிய அமெரிக்காவில் வாக்களிக்கும் வயது எல்லை 21 இலிருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டது.
1975 - போர்த்துக்கல்லிடம் இருந்து கேப் வேர்ட் விடுதலை பெற்றது.
1977 - பாகிஸ்தானில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமர் சுல்பிக்கார் அலி பூட்டோ பதவி இழந்தார்.
1977 - பாகிஸ்தானில் இராணுவச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இராணுவத்தின் தலைமைத் தளபதி முகம்மது ஜியாவுல் ஹக் இராணுவ ஆட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்
1987 - விடுதலைப் புலிகளின் முதல் கரும்புலித் தாக்குதல் மில்லரினால் யாழ்ப்பாணம், நெல்லியடி இராணுவ முகாம் மீது நடத்தப்பட்டது.
1992 - இயக்கச்சியில் வை-8 விமானம் விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
1998 - செவ்வாய்க் கோளுக்கு தனது முதலாவது விண்கலத்தை ஜப்பான் ஏவியது.
2004 - இந்தோனீசியாவில் முதலாவது அதிபர் தேர்தல் இடம்பெற்றது.
2006 - வட கொரியா குறைந்தது இரண்டு குறுகிய தூரம் பாயும் ஏவுகணைகளையும், ஒரு ஸ்கட் ஏவுகணையையும் ஒரு நீண்ட தூரம் பாயும் ஏவுகணையையும் சோதித்தது

No comments: