மூலிகை பயிர்கள்
இரகம் | விவரிப்பு | விவரிப்பு |
1.ஜெரேனியம் | ||
கொடைக்கானல். 1 (1987) | இந்த இதகம் வெகு வேகமாக வளரக்கூடியது. மகசூல் ஒரு எக்டருக்கு 45.2 டன் இலைகள் கிடைக்கும். வாசனை எண்ணெய் ஒரு எக்டருக்கு 54.4 கிலோ கிடைக்கும். முதல் அறுவடை செடிகள் நட்ட எட்டு மாதத்திற்கு பிறகு அறுவடை செய்யலாம். அதன் பிறகு மூன்று மாதத்திற்கு ஒரு முறை அறுவடை செய்யலாம். | |
2. ரோஸ்மேரி: | ||
ஊட்டி – 1 | இது ஒரு வருடத்தில் நல்ல மகசுல்களை தரக்கூடிய இரகம் ஆகும். ரோஸ்மேரியின் இலைகள் உணவு பொருட்களுக்கு பயன்படுத்த உதவும். சாகுபடி செய்யும் காலம் ஜீன் முதல் ஜீலை வரை மற்றும் செப்டம்பர் முதல் அக்டோபர் வரை மகசூல் ஒரு எக்டருக்கு 12.4 டன் கிடைக்கும். | |
3. சென்னா | ||
கிள்ளிகுளம் – 1 (2001) | இந்த இரகம் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் வெளியிடப்பட்டது. செடிகள் அடர்த்தியாக காணப்படும். மகசூல் ஒரு எக்டருக்கு 712 கிலோ காய்ந்த இலைகள் மற்றும் காய் மகசூல் ஒரு எக்டருக்கு 266 கிலோ கிடைக்கும். | |
4. தைம் | ||
ஊட்டி (TV .1) (2006) | சாகுபடி செய்யும் காலம் ஜீன் முதல் ஜீலை வரை. மழை காலத்தில் சாகுபடி செய்ய ஏற்ற காலம் செப்டம்பர் முதல் அக்டோபர் வரை. பச்சை இலைகளுக்கு காய்ந்த இலைகளும் உணவு தரத்திற்கு ஏற்றதாகும். மகசூல் ஒரு எக்டருக்கு 11.5 இலைகள் கிடைக்கும். |
No comments:
Post a Comment