Wednesday, September 12, 2012

முளைக்கீரையின் மருத்துவ குணங்கள்

முளைக்கீரையின் மருத்துவ குணங்கள்


முளைக்கீரை சாதாரணமாக இந்தியாவில் எங்கும் பயிரிடடப்படும் ஒரு சிறந்த கீரையாகும். இந்தியாவிலும் இலங்கையிலும் இக்கீரை இதன் சுவைக்காகவம், மருத்துவச் சிறப்புக்காகவும் பயிரிடப்படுகிறது. மிதமண்டல மற்றும் வெப்ப மண்டல நாடுகளில் இக்கீரை நன்றாக வளர்கிறது. உழுது பயிரிடடப்பட்ட நிலங்களிலும், தாரிசு நிலங்களிலும் இக்கீரை சிறப்பாக வளரும் ஆற்றல் பெற்றது.

முளைக்கீரையும், தண்டுக்கீரையும் ஒன்றுதான் எனக் குறிப்பிடுகிறார்கள். இளம் நாற்றுக்களை முளைக்கீரை எனவும் வளர்ந்தனவற்றைத தண்டுக்கீரை எனவும் கூறப்படுவாகக் குறிக்கிறார்கள். ஆனால் இவ்விரு கீரைகளும் வேறு வேறானவை. முளைக்கீரைக்கு இளங்கீரை என்ற மற்ற பெயரும் உண்டு. முளைக்கீரை உணவுச் சத்துக்கள் மிகுந்த ஒரு கீரையாகும்.

இக்கீரையை சமையல் செய்துண்ண நாவுக்கு உருசியைத்தரும். முளைக் கீரையை மற்றப் பருப்பு வகைகளுடன் சேர்த்துக் கூட்டாகவும், மசியலாகவும் செய்துண்ணலாம். முளைக்கீரையில் 85.7 விழுக்காடு நீரும், 4 விழுக்காடு புரதச்சத்தும், 0.5 விழுக்காடு கொழுப்புச் சத்தும், 2.7 விழுக்காடு தாதுப்புக்களும், ஒரு விழுக்காடு நார்ச் சத்தும், 6.3 விழுக்காடு மாவுச் சத்தும் நிறைந்துள்ளன.

இக்கீரை 46 கலோரி சக்தியைக் கொடுக்கக் கூடியது. நூறு கிராம் கீரையில் 397 மில்லி கிராம் சுண்ணாம்புச் சத்தும், 247 மில்லி கிராம் மெக்னிசியமும், 772 மில்லி கிராம் ஆக்ஸாலிக் அமிலமும், 83 மில்லி கிராம் மணிச்சத்தும், 25.5 மில்லி கிராம் இரும்புச் சத்தும், 230 மில்லி கிராம் சோடியமும், 341 மில்லி கிராம் பொட்டாசியமும், 0.33 மில்லி கிராம் தாமிரச் சத்தும்எ 61 மில்லி கிராம் கந்தகச் சத்தும், 88 மில்லி கிராம் குளோரின் சத்தும் அமைந்திருக்கிறது.

முளைக் கீரையானது சிறந்த மருத்துவக் குணங்களைப் பெற்றிருக்கிறது. இதை சமையல் செய்துண்ண நாவுக்கு உருசியைக் கொடுப்பதோடு நல்ல பசியையும் கொடுக்கக் கூடியது இக்கீரையை நன்கு ஆய்ந்து அலம்பிச் சுத்தப்படுத்தி பாத்திரத்திலிட்டு சிறிது அரிந்த வெங்காயத்துடன் பச்சை மிளகாயைக் கூட்டி உப்பிட்டுக் கடைந்து உட்கொண்டால் உட் சூடு, ரத்தக் கொதிப்பு, பித்த எரிச்சல் முதலிய நோய்கள் குணமாகும்.

அத்துடன் கண் குளிர்ச்சியைப் பெறும். சொறி சிரங்கு முதலிய நோய்கள் இக்கீரையை உண்பதினால் குணமடையும். இந்தக் கீரையானது வெப்ப சுரத்தை தணிக்க வல்லது.

நன்றி: மாலை மலர்

No comments: