Thursday, September 27, 2012

சமயலறையில் பயோகாஸ் தயாரிக்க

வருசத்துக்கு 6 சிலிண்டர். அத மீறினா 850 ரூபாய் ஒரு சிலிண்டர். பிரைவேட்டில் இப்பவே 12 லிட்டர் சிலிண்டர் 1200க்கு மேல.. புலம்பும் குடும்பத் தலைவர்கள் தலைவிகளுக்கான பதிவு இது.
அன்மையில் சக்தி சொரூபி என்கிற சிறிய சாண எரிவாயு கலன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சாணம் மட்டுமில்லாமல் காய்கறிக் கழிவுகள், அரிசி களைந்த நீர் போன்றவற்றை ஊற்றியும் எரிவாயு தயாரிக்க முடியும். வழக்கமாக சாண எரிவாயு கலன் அமைக்க பெரிய இடம் தேவைப்படும். குழி எடுத்து அதிகச் செலவு செய்தால்தான் சாண எரிவாயு தயாரிக்க இயலும். எனவேதான் ஊருக்கு மொத்த குப்பைக் குழியாக சாண எரிவாயு கலனையும், பொது கலனிலிருந்து ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலமாக எரிவாயுவும் எடுத்துச் செல்லப்பட்டது.
ஆனால் இந்தப் புதிய முறையில் எரிவாயு கலனுக்கு அதிக இடம் தேவையில்லை.  சமையல் அறையில் உள்ளே கூட வைத்துக்கொள்ள முடியும். இதற்கு 17ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. மானியமாக ௹2500  அரசு தருகிறது. சாண எரிவாயு தயாரிப்பதில் பல முறைகள் உள்ளன. ஆர்வம் உள்ளவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டால் பயிற்சி அளிக்கத் தயாராக இருக்கிறோம்.

விபரத்திற்கு
திட்ட மேலாளர்,
இயற்கை வள அபிவிருத்தி திட்டம்,
விவேகானந்தா கேந்திரம்,
கல்லுவிளை,
லீபுரம்,
கன்னியாகுமரி
தொலைபேசி – 04652 246296

1 comment:

Unknown said...

எங்கள் வீட்டில் சாண ஏறி வாயு கலன் நல்ல நிலையில் உள்ளது; ஆனால் நாங்கள் அதை உபயோகிப்பது இல்லை;
எங்கள் ஊரில் யாருமே உபயோகிப்பது இல்லை; ஏன்?
வெளியே வரும் சாணத்தைநல்லபடியாக உபயோகிக்க முடியவில்லை;வெளியே வரும்போது சத்துக்கள் அதிகம் இருக்கலாம்; ஆனால் குழிக்குள் விட்டு சாண உரத்தை விதைக்கும் பக்குவத்திற்கு கொண்டு வந்து விதைத்தாலோ,அல்லது வேறு குப்பையுடன் கலக்கி வைத்திருந்து விதைத்தாலோ வெள்ளாமை நன்றாக வருவதில்லை;எங்களை பொறுத்தவரை கலனுக்குள் போடும் சாணம் வேஸ்ட் ஆகிவிடுகிறது