Friday, September 28, 2012

பூதக்கோள் வியாழனின் வளையத்தைச் சிதைத்த வால்மீன் முறிவு

பூதக்கோள் வியாழனின் வளையத்தைச் சிதைத்த வால்மீன் முறிவு

 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
http://www.youtube.com/watch?v=6j3w3G0Dttk
[Comet Shoemaker Levy colliding with Jupiter]
பூதக்கோள் வியாழன் பரிதியின்
புறக்கோள் களில் ஒன்று !
விண்மீனாய் ஒளிவீச  முடியாமல்
கண்ணிழந்து போனது !
சனிக்கோளின் பருத்த இடுப்பில்
அசுரச் சுழல்வீச்சில் சுற்றும்
ஆயிரம் ஆயிரம் வளையங்கள்  !
பூதக்கோள் இடுப்பில் சுற்றுவது
ஒற்றை
ஒட்டி யாணம்  !
வியாழக் கோள் ஈர்ப்புத் தளத்தில்
விழுந்த வால்மீன் தூளாகி
கலக்கி முறித்தது வளையத்தை   !
புறக்கோள் நான்கில் மட்டும்
வளையங்கள் சுற்றிடும்
புதிராய் !
+++++++++++++
நாமறிந்தவை எல்லைக்கு உட்பட்டவை! நாமறியாதவை கணக்கில் எண்ணற்றவை! புரிந்து கொள்ள முடியாத கரையற்ற ஒரு கடல் நடுவே, சிறு தீவு ஒன்றில் அறிவு படைத்த நாம் அடைபட்டுள்ளோம் ! நமக்குத் தொழில் ஒவ்வொரு பிறவியிலும் நாம் மேலும் சிறிது புதுத் தளத்தைக் கைப்பற்றுவதுதான் !
தாமஸ் ஹக்ஸ்லி [Thomas Huxley] (1825-1895)

தாக்கிய பளு மிக்க வால்மீன் குப்பைகள்  வியாழக்கோள் வளையத்தைச் சிதைத்து, அதன் தூசிகளையும் விண்ணோக்கியில் காண முடிந்தது.
ஜோ பேர்ன்ஸ், கார்நெல் பல்கலைக் கழகம்
வால்மீன் வியாழக் கோளில் விழுந்து வளையத்தைக் கலைத்தது !
1979 இல் ஏவப்பட்ட வாயேஜர் -1 [ Voyager -1 ] விண்கப்பல்  முதன்முதலில் பூதக்கோள் வியாழனில் சனிக்கோள் போல் சில வளையங்கள் இருப்பதைப் படம் எடுத்தது.  சனிக் கோள் வளையங்கள் போல் ஒளிவீச்சின்றி  வியாழனின் வளையங்கள் மிகவும் மங்கியவை. எண்ணிக்கையில் குறைந்தவை.   அவை எல்லாம் தூசிகளே.   அந்த தூசிகள் பல்லாண்டுகள் கடந்து நாளடைவில் வளையம் முழுவதும் வியாழனில் மறைந்து விடும் என்று ஊகிக்கப்படுகிறது.    மேலும் கோள்கள் தோன்றி 5 பில்லியன் ஆண்டுகள் கடந்துள்ள போது,  புறக்கோள்களின் வளையங்கள் தோன்றி சில மில்லியன் ஆண்டுகள்தான் ஆகி யிருக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்.
வாயேஜர் -1 அனுப்பிய முதல் படத்தில் பூதக்கோளின் மங்கிய வளையம்  150,000 மைல் (250,000 கி.மீ) விட்டத்தில் இருப்பதாகக் காட்டியது.   வளையத்தின் தடிப்பு 20 மைலுக்கும் (30 கி.மீ)  குன்றியதாக இருப்பதாய் அறிய முடிந்தது.   வியாழக் கோளின் கோசமர் (Gosamer) வளையத் தூள்கள் கோளின் இரண்டு துணைக்கோளிலிருந்து  [Thebe and Amalthea] விழுந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்.    அடுத்த முக்கிய, மெலிந்த, ஒடுங்கிய வளையம் வேறிரண்டு துணைக் கோளிலிருந்து [Adrassstea, Metis] விழுந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.

1990 இல் வியாழனைச் சுற்றிய கலிலியோ விண்ணுளவி  வளையத்தைப் பற்றித் தெளிவாக விளக்கம் அளித்தது.  அடுத்து சனிக்கோளுக்கு அனுப்பிய் காஸ்ஸினி விண்ணுளவி போகும் வழியில் பூதக்கோள் வியாழனை நெருங்கி மேம்பட்ட தகவல் அனுப்பியது.   வியாழன், சனிக்கோள், யுரேனஸ், நெப்டியூன் ஆகிய புறக்கோள் நான்கிலும் விந்தையாக ஏனோ வளையங்கள் உள்ளன.   தற்போது புளுடோ புறக்கோளை நோக்கிச் செல்லும்  “நியூ ஹொரைசன்” விண்ணுளவியும் வியாழன் வளையத்தை ஆழ்ந்து ஆய்வு செய்தது.
வால்மீன் சூமேக்கர்-லெவி 9 [Shoemaker-Levy 9]  பூதக்கோள் மீது விழுந்தது.
புறக்கோளின் வளையங்களை  பல்லாண்டுகள் ஆராய்ந்து வரும் வானியல் விஞ்ஞானி மார்க் ஷோவால்டர்  [Mark Showalter] சனிக்கோளின் வளையங்களை ஏதோ ஒன்று பாதித்து வருவாய் அறிந்தார்.   சனிக்கோளின் ஈர்ப்பியல் விசை வளையங்களில் அலைகளை எழுப்புவதாய் கருதினார்.   1996 இல் கலிலியோ விண்ணுளவி அனுப்பிய பூதக்கோள் வியாழனின் வளையங்களை நோக்கினார்.   அப்போது வளையங்களில் மர்மமான அதே மாதிரி அலைகள் எழுவதைக் கண்டார்.   அந்த அலைகளின் அசைவு நீளத்தைக் [Osச்cillation Length]  கணக்கிட்டு இரண்டு நிகழ்ச்சிகள் அதைத் தூண்டியிருக்க வேண்டும் என்று யூகித்தார்.   அதாவது 1990 அடுத்து 1994 ஆகிய ஈராண்டுகளில் ஏதோ ஒரு நிகழ்ச்சி பாதித்திருக்கிறது என்று தீர்மானித்தார்.   வியாழக் கோளை நெருங்கும் வால்மீன் சூமேக்கர்-லெவி [9] 1992 இல் கண்டுபிடிக்கப் பட்டது.   1994 இல் அந்த வால்மீன் வியாழக் கோளில் மோதி நொறுங்கித் தூள் தூளானது.    அப்படி மோதி வியாழனில் பசிபிக்கடல் பரப்பளவில் ஒரு பெரிய கறையை உண்டாக்கியது.   ஷோவால்டர் வால்மீன் முறிவே பூதக்கோள் வளையத்தில் அத்தகைய அலைகளை உண்டாக்கியிருக்க வேண்டும் என்று அறிவித்தார்.  1994 இல் வால்மீன் தூசிக் குப்பைகள் வியாழனைச் சுற்று வீதியில் சுற்றி, அதன் வளையத்தோடு சேர்ந்து கொண்டன.

காலிலியோ தொலைநோக்கியில் கண்டுபிடித்தவை !
1610 ஆண்டுகளில் முதல் பௌதிக விஞ்ஞானியாகக் கருதப்படும் இத்தாலி தேசத்தின் காலிலியோ (1564-1642) தன் தொலைநோக்கியில் ஆராய்ந்த அண்டக்கோள்கள் நிலவு, வெள்ளி, வியாழன் & சனிக்கோள் ஆகியவை.  அவர் பூதக்கோள் வியாழனை ஆராய்ந்த போது அதன் முக்கிய நான்கு துணைக்கோள்களை முதன்முதல் கண்டுபிடித்தார்.  சூரிய மண்டலத்தில் எல்லாக் கோள்களைக் காட்டிலும் உருவத்தில் பெரியது வியாழன் என்று எந்த வித விண்ணுளவியும் இல்லாமலே வானியல் ஞானிகள் கண்டறிந்தார்கள் !  பூதக்கோளின் மத்திய ரேகைப் பகுதி விட்டம் : 88846 மைல் (142984 கி.மீ.)  அனைத்துக் கோள்களின் மொத்த பளுவைப்போல் இரண்டரை மடங்கு பெரியது வியாழன் !  பரிதிக்குப் பிறகு சூரிய மண்டலத்தில் மிக முக்கியக் கோள்களில் வியாழனே முதலிடம் பெறுகிறது !  அதன் பூத வடிவத்தில் 1321 பூமிகளைத் திணிக்கலாம் !
பரிதியின் புறக்கோள்களில் முதலான வியாழன் ஒரு பூத வாயுக்கோள் ! அதன் அசுரப் புயல் சூழ்வெளியில் உள்ள பிரதான வாயுக்கள் 90% ஹைடிரஜன் 10% ஹீலியம் !  அது அகக் கோள்களான புதன், சுக்கிரன், பூமி, நிலவு, செவ்வாய் போல் திடக்கோள் (Solid Planet) இல்லை ! அதன் உட்கருவில் திரவ ஹைடிரஜன் உலோக வடிவில் திணிவாகிச் சுற்றிலும் ஹைடிரஜன் திரவக் கோளமாகச் சூழ்ந்துள்ளது !  அந்த திரவக் கோளத்தைச் சுற்றிலும் ஹைடிரஜன் வாயு அடர்த்தியாகப் போர்த்தி யுள்ளது !

வியாழன் ஏன் பரிதிபோல் சுயவொளி விண்மீனாக வில்லை ?
4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் சூரிய மண்டலம் உருவாகிக் கொண்டிருந்த போது அனைத்து கோள்களையும் விடப் பெரிய பூதக்கோள் ஏராளமான கொள்ளளவு ஹைடிரஜன் எரிவாயுவைக் கொண்டிருந்தது !  அந்த வாயுப் பந்து பிள்ளைப் பிராயச் சூரியன் போல வாயுக் கோளத்தைச் சுருக்கி சூடாகிக் கொண்டிருந்தது !  ஆனால் சூரியனைப் போல் பேரளவு வாயுப் பளுவில்லாத வியாழன் தன் உட்கரு உஷ்ணத்தை மிகையாக்கி அணுப்பிணைவு இயக்கத்தை எழுப்ப முடியாது தத்தளித்துக் கொண்டிருந்தது !  பூதக் கோளின் உட்கருவில் பல மில்லியன் டிகிரி செல்ஸியஸ் உஷ்ணம் தூண்டப்படாமல் சில பத்தாயிரம் டிகிரி உஷ்ணமே உண்டாக்க முடிந்தது !  ஆகவே வியாழன் உட்கருவில் ஓரளவு வெப்பச் சக்தி கொண்ட செந்நிறமாகி ஓர் சிவப்புக் குள்ளி விண்மீன் (A Red Dwarf Star) போலானது !  அந்த வெப்பம் வியாழனின் உட்புறத் துணைக்கோள்களைச் சூடாக்கி தேய்ந்து போக வியாழன் உட்கரு குளிர்ந்து போனது !
1969 ஆம் ஆண்டில் அமெரிக்க பௌதிக விஞ்ஞானி டாக்டர் பிராங்க் லோ (Dr. Frank Low (1933- XXXX)] பூதக்கோள் வியாழன் தனித்துவ முறையில் “உட்புறச் சக்தியை” உற்பத்தி செய்து (Generating Internal Energy) வருவதாகக் கண்டு பிடித்தார் !  பெற்றுக் கொள்ளும் சூரிய சக்தியை விட இருமடங்கு கதிர்ச்சக்தியை வியாழன் வெளியேற்றுவதாக அறிந்தார் !  அச்சக்தி வியாழன் பூர்வீகத்தில் உண்டாகும் போது சேமித்த கனல்சக்தியாக இருக்கலாம்;  அல்லது வியாழக் கோள் சிறுகச் சிறுகக் குறுகிக் கொண்டு குள்ளமாகலாம் !  அதே சமயத்தில் அதைவிடச் சிறியதான சனிக்கோள் பரிதி அளிக்கும் சக்தியை விட மூன்று மடங்கு கதிர்ச்சக்தியை விண்வெளியில் வெளியேற்றுகிறது !  அதாவது சனிக்கோளின் உட்கருவை நோக்கி மேல் தளத்தில் தங்கியுள்ள ஹீலியம் வாயு மெதுவாக எளிய ஹைடிரஜன் வாயுவுடன் மூழ்கிச் சென்று ஈர்ப்பியல் சக்தியை (Gravitational Energy) விடுவித்து விடுகிறது !  மாறாக பூதக்கோள் வியாழனின் உட்புற உஷ்ண நிலையில் ஹைடிரஜனும், ஹீலியமும் கலந்தே உள்ளன !  மெய்யாக வியாழனில் இருப்பது இன்னும் குளிர்ந்த ஹைடிரஜன் என்றே கருதப்படுகிறது !  அந்த கொள்ளளவை விட மிகுந்து (75 மடங்கு) ஹைடிரஜன் இருந்தால் வியாழனின் உட்புற அழுத்தமும் உஷ்ணமும் பற்றிக் கொண்டு “அணுப்பிணைவு இயக்கம்” (Fusion Reaction) எழுந்து பரிதியைப் போல் சுயவொளி வீசியிருக்கும் !

ஹைடிரஜன் திணிவை மிகையாக்க மிகையாக்க அதன் கொள்ளளவு அணுப்பிணைவு சக்தியைத் தூண்டும் தொடரியக்கம் உண்டாக்கும் “பூரண நிறையை” (Critical Mass to ignite A Reaction for Fusion Energy) அடைகிறது !  கோளின் உள்ளே ஹைடிரஜன் வாயுவின் பளு அழுத்த ஆரம்பித்துக் கொள்ளளவு சுருங்குகிறது.  அப்போது உட்கருவின் உஷ்ணம் பல மில்லியன் டிகிரி செல்ஸியஸ் ஆகி அணுப்பிணைவுத் தொடரியக்கம் துவங்கி ஹைடிரஜன் அணுக்கரு ஹீலியமாக மாறுகிறது.  அந்த அணுக்கருப் பிணைப்பில் ஐன்ஸ்டைன் பளு-சக்தி சமன்பாட்டின்படி [(Mass Energy Equation) (Energy = Mass X Velocity of Light Square)] திணிவிழப்பு வெப்பச் சக்தியாக மாறுகிறது.
பூதக்கோள் வியாழன் தோல்வியுற்ற விண்மீன் !

வியாழனின் உருவம் சிறிதாகவும் உட்புற வாயுக்கள் ஒன்றாகவும் இருப்பதால் அது பழுப்புக் குள்ளி (Brown Dwarf) அல்லது சிறு விண்மீன் போல் உள்ளது என்று கருதப்படுகிறது !  அதற்குப் போதுமானத் திணிவு ஹைடிரஜன் சேமிப்பாகி யிருந்தால் அதிலும் பரிதிபோல் அணுப்பிணைவு சக்தி தூண்டப்பட்டு சூரிய மண்டலம் “இரட்டை விண்மீன்” குடும்பமாகி இருக்கும் !  ஆனால் அப்படி வியாழன் சுயவொளி விண்மீனாக அதைப் போல் 75 மடங்கு ஹைடிரஜன் திணிவு தேவைப்படும் !  விஞ்ஞானிகள் விளக்கப்படி பழுப்புக் குள்ளிகள் குறைந்தது 13 மடங்கு வியாழன் நிறை கொண்டிருக்க வேண்டும்.  அந்த நிலையில் பழுப்புக் குள்ளிகளில் கன ஹைடிரஜன் எனப்படும் ஹைடிரஜன் ஏகமூலம் டியூட்டீரியம் (Heavy Hydrogen “Deuterium” Hydrogen Isotope) அணுப்பிணைவு இயக்கம் ஆரம்ப காலத்தில் தொடங்குகிறது.  பளு குன்றிய நிஜக் குள்ளியான வியாழன் “தோல்வியுற்ற விண்மீன்” என்றே விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது !

பூதக்கோள் வியாழனுக்கும் சனிக்கோளுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள்
வியாழனும், சனிக்கோளும் சூரியனின் புறக்கோள்கள் !  பெரும்பான்மை ஹைடிரஜன், ஹீலிய வாயுக்கள் நிரம்பியவை !  வெவ்வேறு உயரங்களில் மத்திய ரேகைக்கு இணையாக வெவ்வேறு வேகத்தில் வாயுப் புயல்கள் அடித்துக் காலநிலைக் கொந்தளிப்பு முகிலடுக்குத் தளங்களை உண்டாக்குபவை !  வெளிச்சம் மிக்க வண்ணம் கொண்ட வெவ்வேறு முகில் அடுக்குகள் வியாழனிலும், சனிக்கோளிலும் தோன்றுகின்றன !  அவ்விதம் முகில் கிளப்புபவை அம்மோனியா பனிக்கட்டி, அம்மோனியம் ஹைடிரோ ஸல்·பைடு & நீரியல் பனிக்கட்டி.  முகிலடுக்குகளில் வண்ண வரிசை ஒழுக்கப்பாடு : சிவப்பு, வெள்ளை, பழுப்பு !  அதி உஷ்ண உட்புறங்களில் நீல நிறம் காணப்படும்.
சனிக்கோளின் வாயுச் சூழ்நிலை பூதக்கோள் வியாழனை விடப் படர்ந்து அடர்த்தியானது !  சனிக்கோளில் 300 கி.மீ. ஆழத்திலும் வியாழனில் 150 கி.மீ. ஆழத்திலும் படர்ந்துள்ளது.  வண்ண முகில் அடுக்குகள் “அரங்குகள்” (Zones) என்று அழைக்கப் படுகின்றன !  அழுத்த மான நிற அரங்குகள் “இடுப்பணிகள்” (Belts) என்றும் மெலிந்த நிற அரங்குகள் “பட்டைகள்” (Bands) என்றும் குறிப்பிடப் படுகின்றன !  1600 இல் ஆங்கில விஞ்ஞானி ராபர்ட் ஹூக் (Robert Hooke) பூதக்கோள் வியாழனின் “உன்னதச் செந்நிறத் திலகத்தைக்” (The Great Red Spot) கண்டுபிடித்தார் ! நீள்வட்ட வடிவில் உள்ள செந்திலகத்தின் உருவம் பூமியை விடப் பெரியது.  நீளம் : 15,000 மைல் உயரம் : 9000 மைல் !

ஏறக்குறைய வியாழனும், சனிக்கோளும் தம் அச்சில் சுழலும் நேரம் சுமார் 10 மணி (பூமி நேரம்).  பூமி 24 மணி நேரத்தில் தன்னை ஒருமுறை சுற்றுகிறது.
பூமியின் சுற்றளவு = சுமார் 25,000 மைல்.  அதாவது பூமியின் சுற்று வேகம் = 25000/24 = சுமார் 1000 mph..
வியாழனின் சுற்றளவு = 250, 000 மைல். வியாழனின் சுற்று வேகம் = 250,000/10 = 25,000 mph..
சனிக்கோளின் சுற்றளவு = சுமார் 214,000 மைல், சனியின் சுற்று வேகம் = 214,000/10 = 21400 mph.. சனிக்கோளின் அசுரச் சுழல்வீச்சு விசையும், காந்த சக்தியும் வியாழனை விட மிகையானதால் வியாழனை விடச் சனிக்கோளுக்கு அழகிய வண்ண வளையங்கள் அதிகமாக உண்டாகியிருக்கலாம் என்று சொல்லலாம் !
வியாழக் கோளின் பொது விஞ்ஞான விபரங்கள்
சூரிய மண்டலத்தின் அகக்கோள்களான [Inner Planets] புதன், சுக்கிரன், பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய பாறைக் கோள்களைப் [Rocky Planets] போன்றில்லாது, புறக்கோள்களில் [Outer Planets] ஒன்றான வியாழன் சூரியனைப் போல் வாயுக்கள் திரண்ட கோளம்! சூடான பாறையும், திரவ உலோகம் [Liquid Metal] சிறிதளவு உட்கரு கொண்டிருந்தாலும், மேல் தளத்தில் திரட்சியான [Solid] திடப் பொருள் எதுவும் வியாழனில் கிடையாது. பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரமாகும் போது, பூத வடிவான வியாழன் 9:50 மணி நேரத்தில் வினாடிக்கு 8 மைல் வேகத்தில் வெகு விரைவாகத் தன்னைத் தானே சுற்றி விடுகிறது.

வியாழக்கோள் ஐந்தாவது சுழல்வீதியில் [Solar Orbit] சுமார் 484 மில்லியன் மைல் தூரத்தில், சூரியனைச் சுமார் 12 பூகோள ஆண்டுகளுக்கு [Earth Years] ஒருமுறைச் சுற்றி வருகிறது. சூரிய வெளிச்சத்தை எதிர்ஒளிக்கும் திறமையில், சந்திரன், வெள்ளி இவற்றுக்கு அடுத்தபடி தான் வியாழக் கோள் கருதப் படுகிறது. பூமியிலிருந்து சுமார் 97 மில்லியன் மைல் தொலைவில் சூரியனைச் சுற்றும், வியாழன் பூமியின் விட்டத்தைப் போல் 11 மடங்கு விட்டத்தைக் கொண்டது. வியாழனின் பளு [Mass] பூமியைப் போல் சுமார் 318 மடங்கு மிகையானது. புவி ஈர்ப்பு விசையைப் போல் 2.5 மடங்கு ஈர்ப்பு விசை பெற்றது, வியாழன்.
பூதக்கோளின் மத்திம ரேகை விட்டம் [Equatorial Diameter] சுமார் 88,700 மைல்! சப்பையான துருவ விட்டம் [Polar Diameter] சுமார் 83,000 மைல்! வாயுக் கோளமான வியாழன், மிகக் குன்றிய நேரத்தில் [9 மணி 50 நிமிடம்] தன்னைத் தானே வெகு வேகமாய்ச் சுற்றும் சுழற்சியால்தான் துருவங்கள் சற்றுத் தட்டையாய் சப்பிப் போயின! சூரிய மண்டலத்தின் பாதிப் பளுவைப் பூதக்கோள் வியாழன் தன்னகத்தே ஆக்கிரமித்துக் கொண்டு, குட்டித் துணைக் கோள்கள் [Asteroids], வால் விண்மீன்கள் [Comets] போன்ற அற்ப அண்டங்களைத், தனது அபார ஈர்ப்பு விசையால் இழுத்து அடிமை யாக்கிக் கொண்டு, தன்னைச் சுற்றும்படி அவற்றைக் கட்டுப்படுத்துகிறது.

வியாழக் கோளத்தின் உள்ளமைப்பும், கலப்பு வாயுக்களும்
பூதக்கோள் வியாழன் பூமியைப் போல் சுமார் 11 மடங்கு விட்டமும், 1300 மடங்கு கொள்ளளவும் [Volume] கொண்டது. அதன் பளு [Mass] பூமியைப் போல் 318 மடங்கு! ஆனால் வியாழக் கோளின் திணிவு [Density] 1.33 gm/cc, பூமியின் திணிவில் [5.52 gm/cc] சுமார் நான்கில் ஒரு பங்கு. வியாழக் கோளின் பெரும் பகுதி, ஹைடிரஜன்,ஹீலியம் போன்ற எளிய மூலக [Light Elements] வாயுக்கள் மண்டியுள்ளதே இதற்குக் காரணம். வாயுக் கோளான வியாழன் வெகு விரைவாகத் தனது அச்சில் சுழல்வதால், துருவ முனைகளில் சப்பி உருண்டை 7% தட்டையாகிப் போனது!
காலிலியோ ஆய்வுச்சிமிழ் வியாழச் சூழ்நிலையில் உலவும் சூறாவளிக் காற்றின் வேகத்தை அளந்து, நீர் மூலக்கூறுகள் [Water Molecules] இல்லாமையை எடுத்துக் காட்டியது! ஒவ்வொரு ஹீலிய அணுவிலும் 13 ஹைடிரஜன் அணுக்கள் [Atoms] இல்லாது, 6.4 ஹைடிரஜன் மூலக்கூறுகள் [Hydrogen Molecules] உள்ளதைக் காட்டி, சூரிய வாயுப் பண்டங்கள் உருவாக்கிய ஒரு கோள், வியாழன் என்னும் விஞ்ஞான நியதியை மெய்ப்பித்துக் காட்டியது.

விஞ்ஞானிகள் துணைக் கோள்களின் வேகத்தைக் கணித்த பிறகு, அவற்றைக் கவரும் வியாழனின் ஈர்ப்பு விசையைக் கணக்கிட்டு, வியாழக் கோளின் பளுவையும் நிர்ணயம் செய்தார்கள். வியாழனை நெருங்கிப் பயணம் செய்த விண்வெளிக் கப்பல்கள் அதன் ஈர்ப்புத் திறனையும், மண்டல உள்ளமைப்பை அனுமானிக்கவும் உதவின. வியாழச் சூழகத்தில் அங்கிங்கு எனாதபடி, எங்கும் பெரும்பான்மை வாயு மண்டலமே! ஹைடிரஜன், ஹீலியம், கார்பன் மனாக்ஸைடு [CO], ஹைடிரஜன் ஸல்·பைடு [H2S], ஹைடிரஜன் ஸயனைடு [HCN], மீதேன் [Methane], ஈதேன் [Ethane], அம்மோனியா, நீர், நீர்ப்பனி, அஸடிலீன் [Acetylene], ஃபாஸ்ஃபீன் [Phosphine] போன்றவை வியாழ மண்டலத்தில் தென்பட்டன.
வாயு மண்டலப் புறத்தோல் [Outer Layer] 600 மைல் உயரம் உள்ளது. அதற்குக் கீழே இருக்கும் அடுக்கில் அழுத்தமும், வெப்பமும் மிகுந்திருப்பதால், ஹைடிரஜன், ஹீலிய வாயுக்கள் திரவ [Liquid Gases] மாகி, அடுத்து உட்கருவில் 3 மில்லியன் பூவழுத்தத்தில் [Earth Atmosphere, 45 மில்லியன் psi] வாயு உலோகமாய் [Metallic Hydrogen] பாறைபோல் இறுகிப் போனது! அக்கரு உருண்டை திரவ உலோகம் [Liquid Metal] போல் இயங்கி, ¨ஹைடிரஜன் அணுக்கள் மின்னியல்பு [Inonized] பெற்று, நேர்க்கொடைப் புரோட்டான்களாகவும் [Positively Charged Protons], எதிர்க்கொடை எலக்டிரான்களாகவும் [Negatively Charged Electrons] பிரிந்து மின்கடத்தி [Electrical Conductor] ஆக மாறுகிறது. வியாழக்கோள் மாபெரும் காந்த மண்டலமாக இருப்பதற்கு இதுவே காரணம்!

பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள இடைவெளியை விட 5 மடங்கு தூரத்தில் வியாழன் இருப்பதால், அதன் மீது படும் சூரிய சக்திப் பூமியின் மேல் விழும் சக்தியில் 4% அளவுதான் என்று கணிக்கப் பட்டுள்ளது. அவ்வாறு எதிர்கொள்ளும் சூரிய சக்தியை விட 1.67 மடங்கு அதிக சக்தியை, வியாழக்கோள் விண்வெளி நோக்கி அனுப்புகிறது. இந்த மிஞ்சிய சக்தி, 4.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய வியாழக் கோளின் கருப் பண்டங்கள், அதன் அபரிமித ஈர்ப்புச் சுருக்கத்தால் [Gravitational Compression] இறுகி வெளியாக்கிய வெப்ப சக்தியின் சுரங்கமான உட்கருவில் இருந்து தொடர்ந்து எழுகிறது.
கொந்தளிக்கும் செந்திலகம்! பூதக்கோளில் புயல் காற்று!
வியாழனின் சூழ்வெளியில் பொங்கி எழும் வாயு மண்டலம் வடக்கிலும் தெற்கிலும் பாய்ந்து விரிகிறது! மத்திம ரேகைப் பிரதேசத்தை நோக்கி வீசும் காற்று நீண்ட பாதையில் செல்லும் போது, துருவ முனை நோக்கிப் போகும் காற்றுக் குறுகிய பாதையில் அடிக்கிறது. அவ்வாறு திருப்பம் அடையும் காற்றுகள், மேக மண்டல அடுக்குகளை அறுத்துப் பட்டை, பட்டையாய் [Bands] பிரிக்கின்றன! அப்பட்டை நிற மேகங்கள், சுற்றும் அச்சுக்கு ஒப்பாக 24 மணி நேரத்தில் கிழக்கு நோக்கி 11 டிகிரி கோண அளவு திரிந்து மாறுகிறது! புயல் காற்று மத்திம ரேகையில் அடிக்கும் உச்ச வேகம் 360 mph!
மாபெரும் புயல்கள் வியாழ மண்டலத்தில் திடீர் திடீரென வீசி அடிக்கின்றன! சூரியனின் தட்ப, வெப்ப மாறுதலால், பூமியில் சூறாவளி, ஹரிக்கேன் ஆகியவை ஏற்படுகின்றன. ஆனால் வியாழக் கோளின் சூறாவளிப் புயல்கள், கொந்தளிக்கும் உட்தள வாயுக் குமிழ்களால் [Gas Bubbles] எழும்பி, அடர்த்தியான முகில் அடுக்குகளைக் கலக்கி அடிக்கின்றன! வாயுக் குமிழ்கள் தாறுமாறான வெப்பத் திட்டுகளை தாங்கிக் கொண்டு, புயல் காற்றுக்களைக் கட்டுப் படுத்த, வியாழனில் மேடு, பள்ளங்கள், மலைகள் ஏதும் இல்லாது, எல்லாத் திசைகளிலும், குறுக்கு நெடுக்காக முறுக்கி அடிக்கின்றன!

வியாழனின் பெயர் பெற்ற ‘உன்னத செந்திலகம் ‘ [The Great Red Spot] சீரிய தொலை நோக்கி தோன்றிய நாள் முதல், 300 ஆண்டுகளுக்கும் மேலாகக் காணப்பட்டு கொந்தளித்து வருகிறது! செந்திலகம் முட்டை வடிவானது! அதன் கொந்தளிப்புக்குக் காரணம் இன்னும் அறியப் படவில்லை. முகில் ஆட்டத்திற்குச் செந்நிறத்தைத் தருபவை, புறவூதா [Ultraviolet] ஒளியை விழுங்கும், கந்தகம் [Sulfur], ஃபாஸ்ஃபரஸ் [Phosphorus] போன்றவற்றின் இரசாயனக் கூட்டுறுப்புகள் [Compounds]. மாறிக் கொண்டே வரும் செந்திலகத்தின் தற்போதைய பரிமாணம் 16200 மைல் நீளம்; 8700 மைல் அகலம்.
வியாழனின் வளையங்களும், சுற்றிவரும் சந்திரன்களும்
சனி, வியாழன், யுரானஸ் [Uranus] போன்ற பூத வடிவக் கோள்கள் யாவும், விண்ணளாவிய மாபெரும் வளையங்களை, மத்திம ரேகை மட்டத்தில் [Equtorial Plane] அணிந்துள்ளன. 4040 மைல் அகண்ட வியாழ வளையத்தின் தடிப்பு சுமார் அரை மைல்! 88700 மைல் விட்டமுள்ள வியாழ வளையத்தின் வெளிமுனை 35,000 மைல் தூரத்தில் உள்ளது! வளையத்திற்கு உள் எல்லை எதுவும் இல்லாது, சுழலும் துணுக்குகள் வியாழக் கோளோடு ஒன்றாய்க் கலந்து விடுகின்றன. உடைந்து போன துணைக் கோள்களின் பாறைகள், தூசிகள், பனிக்கற்கள் போன்றவை வளையத் தளத்தில் வியாழனைச் சுற்றி வரலாம் என்று கருதப் படுகிறது.

பூதக்கோள் வியாழனை 67 (2012 வரை) சந்திரன்கள் சுற்றி வருகின்றன. 1610 இல் காலிலியோ முதன் முதலில் வியாழனைப் பார்த்த போது, 4 பெரிய சந்திரன்களைக் கண்டு பிடித்தார். முதல் தொலை நோக்கிக் கருவி அமைக்கப்பட்ட போது, ஜெர்மன் விஞ்ஞானி ஸைமன் மாரியஸ் [Simon Marius] தனியாகக் கண்டு அவற்றை நிரூபித்துக் காட்டினார். நான்கு சந்திரன்களும் முதலில் கண்டு பிடித்தவர் நினைவாகக், காலிலியோ துணைக் கோள்கள் [Galilean Satellites] என அழைக்கப் படுகின்றன. அவை நான்கும் விண்வெளியில் மின்னுவதால் கூரிய கண்பார்வை உடையவர் எவரும் கண்டு விடலாம்!  வியாழனின்  பெரிய சந்திரன்கள்  நான்கின் பெயர்கள்: கானிமெடே [Ganymede], காலிஸ்டோ [Callisto], அயோ [Io], யூரோப்பா [Europa]. பெரிய சந்திரன்களுக்குப் பெயரிட்டவர், ஸைமன் மாரியஸ். 3165 மைல் விட்டம் உடைய கானிமெடே எல்லா வற்றுக்கும் பெரிய சந்திரன். சுமார் 642,000 மைல் தூரத்தில் வியாழனைச் சுற்றி வருகிறது. மற்ற 12 சந்திரன்களில் மிகவும் சிறுத்தது 10 மைல் அளவு, பெருத்தது 170 மைல் அளவு.

[தொடரும்]
தகவல்கள்:
Picture Credits: NASA, JPL; National Geographic; Sky & Telescope, Time Magazine, Astronomy Magazine.
1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – Is Jupiter a Failed Star ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world [1998]
8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
10 National Geographic Picture of Our Universe By Roy Gallant: (1986)
11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
14 The Giant Planets Jupiter & Saturn By Professor Robert Nowack Purdue University, USA
15 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206171&format=html (Jupiter)
16 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40308283&format=html (Galileo Spaceship Orbits Jupiter)
17.  http://en.wikipedia.org/wiki/Comet_Shoemaker%E2%80%93Levy_9 [Comet Shoemaker–Levy 9]  (September 13, 2012)
18.   http://www2.jpl.nasa.gov/sl9/  [NASA REPORT - Comet Shoemaker-Levy Collision with Jupiter] (March 14, 2000)
19.   https://www.e-education.psu.edu/astro801/content/l11_p7.html   [2011]
20.  http://en.wikipedia.org/wiki/Moons_of_Jupiter  [September 14, 2012]
20.   http://www.dailygalaxy.com/my_weblog/2012/09/the-rings-of-jupiter-.html  (September 13, 2012)
******************

முக்கியத்துவம் அடைந்துவரும் வீரிய ஒட்டு மக்காச்சோளப்பயிர்

மக்காச்சோளப்பயிர் ஏற்கனவே சாகுபடியில் இருந்தது. சாதாரண ரகம் சாகுபடியில் இருந்தது. இதன் தட்டைகள் கறவை மாடுகளுக்கு கொடுக்கப்பட்டு வந்தது. மக்காச்சோளக் கதிர்கள் உலர்த்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஏக்கர் சாகுபடியில் சுமார் ரூ.7,000 வரை லாபம் கிடைத்து வந்தது.
தற்போது தஞ்சைப்பகுதியில் வீரிய ஒட்டு மக்காச்சோளம் நெல் சாகுபடியுடன் செய்யப்படுகின்றது. நெல் சாகுபடியைத் தொடர்ந்து செய்யப்பட்டதால் நிலவளம் பாதிக்கப்பட்டு வந்தது. இப்போது ஒரு போகம் வீரிய ஒட்டு மக்காச் சோளத்தையும் மற்றும் ஒரு போக நெல் சாகுபடி விவசாயிகள் செய்யத் துவங்கிவிட்டனர். வீரிய ஒட்டு மக்காச் சோளத்தை மாற்றுப்பயிர் என்று சுந்தரம் கூறுகிறார். (யார் இந்த சுந்தரம்? தினமலரைத்தான் கேக்கனும்)
தஞ்சாவூர் பகுதியில் விவசாயத்திற்கு வேலை ஆட்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. மக்காச் சோள சாகுபடி இதனால் பாதிக்கப்படுவது இல்லை.
  • இதற்கு தேவைப்படும் வேலை ஆட்கள் மிகவும் குறைவு.
  • சாகுபடியில் இயந்திரங்கள் உதவுகின்றன.
  • இயந்திரங்கள் மூலம் உழவு, விதைப்பு மற்றும் அறுவடை செய்யப்படுகின்றது.
  • வீரிய ஒட்டு மக்காச் சோளத்தை மிகக் கொடிய பூச்சி, நோய் தாக்குவது இல்லை.
மிகவும் கெட்டியான மண், அதில் வடிகால் வசதி இல்லாத நிலத்தை விட்டு மண் நல்ல வடிகால் வசதியுள்ள இடத்தில் விவசாயிகள் வீரிய ஒட்டு மக்காச் சோளத்தை சாகுபடி செய்கிறார்கள்.
மக்காசோளம்
மக்காசோளம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் எள், உளுந்து சாகுபடி கணிசமான லாபத்தைக் கொடுத்துவந்தன. இப்பயிர்களைவிட வீரிய ஒட்டு மக்காச்சோளம் அதிக பலனைத் தருகின்றது. காரணம் எள், உளுந்து சாகுபடியில் பூச்சி, வியாதி தாக்கினால் அவைகளை அழிக்க செலவு மிக அதிகம். தஞ்சாவூரில் சரியான நேரத்தில் கால்வாயில் நீர் வந்தால் குறுவைப்பயிரை சாகுபடி செய்வார் கள். தண்ணீர் வராத நிலையில் வீரிய ஒட்டு மக்காச்சோளத்தை சாகுபடி செய்தவர்கள் நல்ல வருவாய் பெற்றனர்.
வடிமுனை தண்ணீர் கிடைத்ததால் வீரிய ஒட்டு மக்காச்சோளத்தில் நல்ல வருவாயினை விவசாயிகள் பெற்றனர். தமிழகத்திற்கு மக்காச் சோளத் தேவை அதிகம். விவசாயிகள் வெளி மாநிலங்களிலிருந்து அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. தற்போது மக்காச்சோளத்தை தாங்களே சாகுபடி செய்ய இயன்றதால் விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
விளைச்சல் 2 2லீ டன். கிலோ ரூ.12 வீதம் வரவு-30,000.00. நிகர லாபம் – 17,700.00
தரமான வீரிய ஒட்டு மக்காச்சோள விதைகள் கம்பெனிகாரர்கள் விவசாயிகளுக்கு கொடுத்தார்கள். இதனால் விதை கிடைக்காத நிலை தோன்றவில்லை.
வீரிய ஒட்டு மக்காச்சோளத்தின் வயது 100-110 நாட்கள். கோடையில் விவசாயிகள் மார்ச் 15 முதல் ஏப்ரல் 15க்குள் சாகுபடி செய்யலாம். குறுவை சாகுபடி சமயம் மே 15 தேதியில் இருந்து ஜூன் 7ம் தேதி வரை சாகுபடி செய்யலாம். இம்மாதிரியான அனுபவங்கள் விவசாயிகளுக்கு மக்காச்சோளத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும்.
மானாவாரி சாகுபடியில் பலன் தந்த மக்காச்சோளம்:
சேலம், நாமக்கல், தர்மபுரி போன்ற மாவட்டங்களில் விவசாயிகள் மானாவாரியில் மக்காச்சோளம் சாகுபடி செய்தனர். நல்ல பலன் கிடைத்ததால் மக்காச்சோளம் விவசாயிகளால் விரும்பப்படுகிறது. விவசாய அதிகாரிகள் விவசாயிகளை ஊக்குவிக்கின்றனர். கிருஷ்ணகிரி, ஓசூர், பாகலூர் இங்கெல்லாம் அதிக நிலப்பரப்பில் விவசாயிகள் மக்காச்சோளத்தை பயிரிடுகின்றனர். இப்பகுதிகளிலும் மக்காச்சோளம் முக்கியத்துவம் அடைந்து வருகின்றது.
முக்கியத்துவத்தைப் பற்றி பேசும்போது மக்காச்சோளக் கதிர்களை மக்கள் வேகவைத்து சாப்பிடுவதைப்பற்றியும் பேச வேண்டும்.தள்ளுவண்டியில் ரோட்டில் மக்காச்சோளக் கதிர்களை விற்பதைப் பார்த்தோம். திடீரென்று இந்த காட்சி மாறி வருகின்றது. தற்போது குளிர்சாதன வசதி கொண்ட பெரிய கடைகளில் மக்காச்சோளத்தை பலவிதமாக தயாரித்து விற்று வருவது ஆகும். இச்சூழ்நிலையில் நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் மக்காச்சோள சாகுபடி அதிகரிக்கக் கூடும் என்பதாகும். இதை மனதில் கொண்டுதான் சுந்தரம் மக்காச்சோளம் சீக்கிரம் தமிழகத்தில் ஒரு மாற்றுப்பயிர் ஆகக்கூடும் என்கிறார்.
தினமலர் செய்தி
எஸ்.எஸ்.நாகராஜன்
திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த விவசாயி சுந்தரம்

காரமான மிளகிற்கு வேம் உரம்

காரமான மிளகினை உற்பத்தி செய்ய பல வகையான ஊட்டச்சத்துக்களை நிலைநிறுத்தும் ஊட்டச்சத்துக்களை மண்ணிலிருந்து தாவரங்களின் வேர்கள் எளிதாக எடுத்துக்கொள்ளும் நிலைக்கு, மாறறக்கூடிய நுண்ணுயிர் உரமான வேம் வேர் உட்பூசணம் கண்டுபிடிக்கப்பட்டு மேலும் அவற்றின் செயல் திறன், பயிரின் வளர்ச்சி, இனப்பெருக்கத்தின் மூலம் அறியப்பட்டுள்ளது.
மிளகு - படம் (c) http://mooligaivazam-kuppusamy.blogspot.in/2009/06/blog-post_30.html
மிளகு (c) http://mooligaivazam-kuppusamy.blogspot.in/2009/06/blog-post_30.html
எனவே மிளகுப்பயிரின் வளர்ச்சி, விளைச்சலை அதிகரிக்க மண்ணில் உள்ள மணி, சாம்பல் சத்தைக் கரைத்து பயிர்களுக்கு வழங்கு கின்ற வேர் உட் பூசணத்தை மிளகுக் கொடி நடும்போது ஒரு கொடிக்கு 10 கிராம் இட்டும், காய்க்கின்ற தருணத்தில் ஒரு கொடிக்கு 100 கிராம் வீதம் வேரின் அடிப் பகுதியில் வட்டவடிவ குழி எடுத்து இடுவதன்மூலம் தரமான, காரமான மிளகு விதையினை அறுவடை செய்யலாம்.
வேர் உட்பூசணம் தன்னுடைய நூலிழை போன்ற அமைப்பின் மூலம் பரவி மணிச்ததினை கிரகித்து பயிர்களுக்கு அளிக்கின்றது. வேர்கள் நன்கு வளர்வதால் பயிர்களின் நீர் உறிஞ்சும் திறனை அதிகரிக்கச் செய்கிறது. செடிகளுக்கு வறட்சியை ஓரளவிற்கு தாங்கும் சக்தியைக் கொடுக்கிறது. எளிதான முறையில் செம்பு, துத்தநாக நுண்ணூட்டச் சத்துக்களை செடிகளுக்கு அளிக்கிறது. வேர் உட் பூசணம் இடுவதன்மூலம் 20-25 சதவீத மணிச்சத்து இடுவதைக் குறைக்கலாம். வேர் உட்பூசணம் பயிர் வேர்ப்பகுதியில் வாழ்வதால் நோயை உண்டாக்கும் நுண்ணுயிர்கள் தாக்குதலிலிருந்து பயிரைக் காக்கிறது. மண்ணின் வளமும் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது.

தினமலர் செய்தி -டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

நிச்சயமற்ற மழையைச் சமாளிக்க சம்பா பருவத்தில் நேரடி புழுதி நெல் விதைப்பு

மாறிவரும் கிராம சமூக பொருளாதார காரணிகளால் வேளாண்மைக்கு பணியாளர்கள் கிடைப்பது ஒரு பிரச்னையாக மாறி வருகிறது. இதை சமாளிக்க தமிழக அரசு வேளாண்மையில் இயந்திர மயமாக்கலை ஊக்குவித்து வருகிறது. மேலும் டெல்டா மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை குறைந்து குறுவை சாகுபடி குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் போதுமான நீர் இல்லாமையால் எதிர்வரும் சம்பா பருவமும் நிச்சயமற்ற சூழல் விவசாயிகளிடையே எழுந்துள்ளது.
நேரடி புழுதி நெல் விதைப்பு பணி
நேரடி புழுதி நெல் விதைப்பு பணி
இந்நிலையில் சம்பா பருவத்தில் நேரடி புழுதி விதைப்பு செய்தால் வெற்றிகரமான சாகுபடி செய்யமுடியும் என்கிறார் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை வேளாண் உதவி இயக்குநர் எஸ்.ரமேஷ். நேரடி புழுதி விதைப்பு குறித்து அவர் தெரிவித்தது:
சம்பா பருவத்துக்கு நாற்று விடும் பருவமான ஆகஸ்ட் மாத இறுதியில் அல்லது செப்டம்பர் மாத முதல் வாரத்தில் பாசனத்துக்கு மேட்டூர் நீர் கிடைக்காது என்ற சூழ்நிலை ஏற்பட்டால் புழுதி நேரடி விதைப்பு முறை ஒரு சிறந்த தீர்வாகும். இம்முறை கடந்த 2004-ல் இதேபோன்ற நிச்சயமற்ற காலநிலையில் வேளாண் துறையால் இம்முறை பரிந்துரைக்கப்பட்டு விவசாயிகளால் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட ஒன்றாகும்.
புழுதி விதைப்பு செய்வது எப்படி?
அவ்வப்போது கிடைக்கும் மழைக்கேற்ப நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை புழுதி உழவு செய்துகொள்ள வேண்டும். செப்டம்பர் 5 லிருந்து 15 தேதிக்குள் விதைப்பு செய்து படல் இழுத்து விதைகளை மூட வேண்டும். இதை டிராக்டரைக் கொண்டு செய்ய முடியும். இவ்வாறு புழுதி விதைப்பு செய்யப்பட்ட விதைகள் மழை மூலமோ, பாசனம் செய்தோ போதுமான ஈரப்பதம் கிடைக்கும்போதோ முளைத்து வரும். வாரக்கடைசியில் மழை இல்லாவிட்டாலும் விதைகள் பாதிக்கப்படுவதில்லை. சில சமயம் மழை போதுமானதாக அமையாவிடில் வயலில் மேலாக உள்ள விதைகள் மட்டும் முளைத்துவரும். அடுத்து வரும் மழைக் காலங்களில் மீத விதைகள் முளைக்கும். இதனால் ஏற்படும் நாற்றின் வயது வேறுபாட்டை உர மேலாண்மை மூலம் சரிபடுத்திக் கொள்ள முடியும்.
விதை அளவு:
சம்பா பருவத்துக்கு நாற்றங்காலுக்கு பரிந்துரைக்கப்படும் அளவான ஏக்கருக்கு 16 கிலோவை போல இருமடங்கு அளவு விதையளவு நேரடி புழுதி விதைப்புக்கு பயன்படுத்த வேண்டும். அதாவது ஒரு ஏக்கருக்கு 30 லிருந்து 35 கிலோ வரை விதைகளை, விதைப்பு செய்யலாம். நேரடி புழுதி விதைப்புக்கு விதை டிரம் அல்லது விதைக் கருவி (நங்ங்க் ஈழ்ண்ப்ப்) கொண்டு விதைப்பு மேற்கொள்ளலாம். இவ்வாறு செய்யும்போது ஏக்கருக்கு 12 அல்லது 15 கிலோ விதையே போதுமானதாக இருக்கும். இம்முறையை கடைபிடித்தால் வேளாண்மைத்துறை வழங்கிவரும் திருத்திய நெல் சாகுபடிக்கான மானிய உதவிகளை பெற முடியும்.
நேரடி விதைப்புக்கு ஏற்ற ரகங்கள் மற்றும் வயது விவரம்:
காவித்திரி (இத-1009)- வயது 160 நாள், மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி – 140 நாள், அஈப-38- 135 நாள், இஞ-43 – 135 நாள், இஞ(த)-48, இஞ (த)-50 , ஆஆப-5204 – 135 நாள். செப்டம்பர் 15 தேதியிலிருந்து 30 வரை விதைப்பு செய்யும்போது அஈப-39 (125 நாள் பயிர்) ரகத்தை விதைப்பு செய்யலாம்.
களை நிர்வாகம்:
நேரடி புழுதி விதைப்பின் பிரச்னையாக கருதுவது களை எடுக்கும் பணி. இதற்கு விவசாயிகள் ரசாயன களைக்கொல்லிகளைப் பயன்படுத்தி தீர்வு காணலாம். பயிர் முளைத்து 15 நாட்களிலிருந்து 25 நாட்களுக்குள் வயலில் எம்மாதிரியான களைகள் முளைத்துள்ளன என்பதற்கேற்ப களைக் கொல்லிகளை தேர்வு செய்து களைகளை கட்டுப்படுத்தலாம். வயலில் கோரைகள் மட்டும் இருப்பின் 2,4 ஈ கலைக்கொல்லியை ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம். வயலில் புல் வகை களைகள் மட்டும் இருப்பின் ஃபெளோக்சா புரோப்பாரிதல் 9.3 சதவீத நஇ களைக் கொல்லியை ஒரு லிட்டர் நீருக்கு 2.5 மி.லி என்ற அளவில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம். வயலில் கோரைகள், புற்கள் என இரண்டு விதமான களைகளும் இருப்பின் பிஸ்பைரிபேக் சோடியம் 10 சதவீதம் நஇ களைக் கொல்லியை ஒரு லிட்டர் நீருக்கு 1 மி.லி என்ற அளவில் சேர்த்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம். இந்த களைக்கொல்லியைப் பயன்படுத்துகையில் வயலில் நீர் தேங்கி நிற்கக்கூடாது.
உர நிர்வாகம்:
பயிர் முளைத்தலிலிருந்து 30-ம் நாள் வயலில் நீர் நிறுத்தி அடியுரம் இட வேண்டும். அடியுரம் இட்டதிலிருந்து 20 நாட்கள் இடைவெளியில் மேலுரம் இட வேண்டும்.
பயிர் எண்ணிக்கை பராமரித்தல்:
நேரடி விதைப்பில் பயிர் எண்ணிக்கை சரியான முறையில் பராமரிக்க முடியும். நடவு செய்யும்போது ஆட்கள் பற்றாக்குறையால் பயிர் எண்ணிக்கை சரியாக பராமரிக்க முடிவதில்லை. நேரடி விதைப்பில் பயிர் எண்ணிக்கை ஒரு சதுரமீட்டருக்கு 60-ஐ விட அதிகமாக இருப்பின் களைத்து விட வேண்டும். பயிர் எண்ணிக்கை மிக குறைந்துவிட்டால் திருத்திய நெல் சாகுபடி செய்வது போன்று மேட்டுப்பாத்தி நாற்றாங்கால் விட்டு 12 முதல் 16 நாள் வயதுடைய நாற்றுகளை விட்டு பயிர் எண்ணிக்கை பராமரிக்க வேண்டும்.
நேரடி புழுதி விதைப்பின் நன்மைகள்: இதன் மூலம் சாகுபடி செலவு குறைவு. நாற்றங்கால் தயாரித்தல், நாற்று பறித்தல், நடவு செய்தல் ஆகிய பணிகள் இல்லாமையால் ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வரை சாகுபடி செலவு மிச்சமாகிறது. நெற்பயிரின் வயது 10 நாட்கள் வரை குறைகிறது. பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்படுவதால் கூடுதல் மகசூல் கிடைக்கிறது. எனவே டெல்டா மாவட்ட விவசாயிகள் நீர் நிச்சயமற்ற காலநிலையில் நம்பிக்கை இழக்காமல் வரும் சம்பா பருவத்தில் நேரடி புழுதி விதைப்பின் மூலம் சாதனை படைக்கலாம்

தினமணி செய்தி
ஜி.சுந்தரராஜன்
பரங்கிப்பேட்டை வேளாண் உதவி இயக்குநர் எஸ்.ரமேஷ்.

சுழற்சி முறையில் பயிர் சாகுபடிக்கான தேர்வு முறைகள்!

விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியான பயிரை சாகுபடி செய்வதைத் தவிர்த்து, சுழற்சி முறையில் பயிர்களைத் தேர்வு செய்து சாகுபடி செய்தால் கூடுதல் மகசூலும், அதிக லாபமும் பெறலாம்.
பயறு வகைகளுக்குப் பிறகு:
பயறு வகைகள் பயிரிடும் விவசாயிகள் அதன் பிறகு பயறு அல்லாது வேறு பயிர்களை தேர்வு செய்ய வேண்டும் கோதுமை, மக்காச் சோளம், முதலில் செய்த பயிர் அல்லது தானியங்களை ஊடுபயிராக பயிரிடலாம்.
சில வகைப் பயிர்கள் மண்ணில் உள்ள சத்துகள் அனைத்தையும் உறஞ்சிவிடும் தன்மை கொண்டவை. எள், கடலை ஆகியவை இத்தகையத் தன்மை கொண்டவை. எனவே, இத்தகையப் பயிர்களைப் பயிரிட்ட பிறகு பயறு வகைகளைப் பயிரிட்டால் சத்துக்களை மண்ணில் நிலை நிறுத்தும்.
இலைகள் மண்ணில் உதிர்வதற்கு:
அவ்வப்போது இலைகள் மண்ணில் உதிரும் வண்ணம் உள்ள செடிகளையும் பயிரிடலாம்.
  • பருத்தி,
  • நெல்,
  • கோதுமை,
  • பயறு வகைகள்
இதற்கு சிறந்த உதாரணமாகும்.
தானியப் பயிர்களுக்குப் பிறகு:
மானாவாரியாகவோ, இறவைப் பயிராகவோ தானியங்களை பயிரிடும் விவசாயிகள், தானிய விளைச்சலுக்குப் பிறகு பசுந்தாள் உரத் தாவரங்களைப் பயிரிடலாம். சனப்பை, நெல், துவரம் பருப்பு, பச்சைப் பயறு, மக்காச்சோளம் ஆகியவற்றைத் தேர்வு செய்யலாம். நல்ல அதிக ஊட்டச்சத்து தேவையுடைய பயிர்களுக்குப் பிறகு குறைந்த ஊட்டச்சத்து தேவையுடைய பயிர்களைப் பயிரிட வேண்டியது அவசியம். மக்காச் சோளம்,  உளுந்து, பூசணி வகைகளை சாகுபடி செய்யலாம்.
பருவம் சார்ந்தவை:
பருவம் சார்ந்த பயிர்களை பயிரிட்ட பிறகு ஓராண்டுக்கு தாவரங்களைப் பயிரிட வேண்டும். நேப்பியர், கரும்பு பயிரிட்ட பிறகு நிலக்கடலை, தட்டைப் பயறு பயிரிடலாம்.
காய்கறி சாகுபடி செய்த பிறகு:
காய்கறி வகைகளை சாகுபடி செய்த பிறகு தீவனப் பயிர்களைப் பயிரிடலாம்.
  • சோளம்,
  • தட்டைப் பயறு,
  • உருளைக்கிழங்கு,
  • முட்டைகோஸ்,
  • வெங்காயம்
என சுழற்சி முறையில் பயிர் செய்தால் கூடுதல் வருவாய் கிடைக்கும். விதைத் தவாரங்களுக்குப் பிறகு வேர்த் தாவரங்களைப் பயிரிடலாம்.
மறுதாம்புப் பயிர்களுக்குப் பிறகு:
மறுதாம்புப் பயிர்களுக்குப் பிறகு ஆழமான வேர்கள் செல்லக் கூடிய பயிர்களை சாகுபடி செய்யலாம்.
  • உருளைக் கிழங்கு,
  • மஞ்சள்,
  • பீட்ரூட்,
  • கேரட்,
  • நெல்,
  • வெங்காயம்,
  • காய்கறி
என சுழற்சி முறையை கடைப்பிடிக்கலாம்.
ஆழமான வேர்களைத் தொடர்ந்து:
ஆழமான வேர்களைத் தொடர்ந்து மேலோட்டமான வேருள்ன பயிர்களை விதைக்கலாம். இதற்கு
  • பருத்தி,
  • ஆமணக்கு,
  • துவரம்பருப்பு,
  • உருளைக் கிழங்கு,
  • பச்சைப் பயறுகள்
சிறந்தவை.
கோடை உழவுக்குப் பிறகு:
அதிக ஆழமான உழவு தேவைப்படும் பயிர்களை, கோடை உழவு முடிந்த பின்னர் சாகுபடி செய்வது அவசியம். சற்று இறுகிய மண்ணிலும் வளரக் கூடிய தாவரங்களைப் பயிரிடலாம்.
  • உருளைக் கிழங்கு,
  • முள்ளங்கி,
  • சர்க்கரைவள்ளிக் கிழங்கு,
  • கரும்பு,
  • உளுந்து,
  • பசுந்தாள் உரம்
என சுழற்சி முறையில் வகைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இரு விதையிலைத் தவார சாகுபடிக்குப் பிறகு:
இரு விதையிலைத் தவாரங்களை சாகுபடி செய்த விவசாயிகள் அடுத்தபடியாக ஒரு விதையிலைத் தாவரங்களைப் பியிரட வேண்டும். ஊடுபயிர் இல்லாத தனிப் பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் அரிதாள் கட்டை விடும் பயிர்களை சாகுபடி செய்வது சிறந்தது.
பூச்சித் தாக்குதலில் இருந்து காக்க:
சில வகை பூச்சிகள்  குறிப்பிட்ட பயிர்களைத் தாக்கும் ஆற்றல் கொண்டவை. எனவே, அத்தகையப் பயிர்களைப் பயிரிடும் விவசாயிகள் அடுத்த முறை அதற்கு மாற்றாக உள்ள பயிர்களைத் தேர்வு செய்ய வேண்டும். சில பயிர்களில் குறிப்பிட்ட வகை களைச் செடிகள் தொர்ந்து முளைத்த வண்ணம் இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த சுழற்சி முறை பயிர் சாகுபடி அவசியமானது. மேய்ச்சல் பயிர்களுக்குப் பிறகு தீவனம் அல்லது விதைப் பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும்
  • பாராபுல்,
  • சோளம்,
  • அவரை,
  • நெல்
என வரிசைப்படுத்திக் கொள்ளலாம்.
சுத்தப்படுத்தும் தாவரங்களுக்குப் பிறகு:
சுத்தப்படுத்தும் தாவரங்களுக்குப் பிறகு விதைத் தாவரங்களை தேர்வு செய்ய வேண்டும். மக்காச் சோளம், நிலக்கடலை, வெங்காயம், அவரை, கம்பு என திட்டமிடல் வேண்டும். ஒரே வகை பயிர்களை சாகுபடி செய்யாமல் மேற்கண்டபடி சுழற்சி முறையில் பயிர்களை சாகுபடி செய்தால் விவசாயிகளுக்கு மிகுந்த லாபத்தை ஈட்டித் தரும். மண் வளமும் பாதுகாக்கப்படும். மேலும், விவரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
தினமணி செய்தி

மின்சாரத்தை `உற்பத்தி செய்து சேமிக்கும்’ அதிசய மின்கலம்!

மின்சாரத்தை `உற்பத்தி செய்து சேமிக்கும்’ அதிசய மின்கலம்!

Power
புதுப்பிக்கவல்ல எரிசக்தி உற்பத்தி தொழில்நுட்பங்களில் பொதுவாக, இரு தனிப்பட்ட செயல்முறைகள் உண்டு. ஒன்று, சூரிய ஒளி, காற்று ஆகியவற்றை பயன்படுத்தி எரிசக்தியை உற்பத்தி செய்வது. மற்றொன்று, உற்பத்தி செய்த எரிசக்தியை மின்கலம் போன்றவற்றில் சேமித்து வைப்பது.
இந்த இரு செயல்முறைகளும் எப்போதுமே தனித்தனிப் பிரிவுகளில்தான் மேற்கொள்ளப்படுகின்றன. அதாவது, முதலில் சூரிய ஒளி அல்லது காற்று போன்றவற்றில் இருக்கும் எரிசக்தியை மின்சாரமாக மாற்றுவது. பின்னர், அந்த மின்சாரத்தை வேதியியல் எரிசக்தியாக மாற்றி மின்கலத்தில் சேமிப்பது. இதுவரையில் இப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது.
ஆனால், உலகில் முதல் முறையாக, ஒரே கருவியில் எரிசக்தியை உற்பத்தியும் செய்து, சேமிக்கவும் முடியும் என்று நிரூபித்து அசத்தியிருக்கிறார்கள் அமெரிக்காவின் ஜார்ஜியா தொழில்நுட்ப ஆய்வு மைய பொறியியலாளர்கள்.
மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்போது, முதலில் விசை ஆற்றல் மின்சாரமாக மாற்றப்பட்டு, பின்னர் மின்சாரமானது வேதியியல் எரிசக்தியாக மாற்றப்படும். ஆனால் இந்த புதிய கருவியில், விசை ஆற்றலானது நேரடியாக வேதியியல் ஆற்றல் அல்லது எரிசக்தியாக மாற்றப்பட்டுவிடுகிறது.
அடிப்படையில், இந்த கருவியானது ஒரு `கலப்பு மின்னியற்றி மின்கலமாக' செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சுருங்கச் சொல்வதானால், இந்த புதிய கருவி `தனக்குத்தானே மின்னேற்றிக்கொள்ளும்' ஒரு மின்கலமாக செயல்படுகிறது என்று சொல்லலாம்.
மின்கல தொழில்நுட்பத்தில் ஒரு புதிய அணுகுமுறையை அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த ஆய்வு முயற்சிக்கு, பொதுவான மற்றும் விரிவான பயன்பாடுகள் இருக்கிறது என்கிறார் இதனைக் கண்டறிந்த ஆய்வுக்குழுவின் மூத்த ஆய்வாளர் சாங் லின் வாங்.
பெரும்பாலும் கையடக்க கருவிகளை இயக்கப் பயன்படக்கூடிய இந்த புதிய மின்னியற்றி மின்கலத்துக்கு, பிற மின்கலங்களில் மின்னேற்றத் தேவைப்படும் ஜெட் டி.சி. கருவி அவசியமில்லை என்கிறார் வாங்.
இந்த மின்னியற்றி மின்கலத்தை உருவாக்க, நாணயத்தைப் போல இருக்கும் லித்தியம் அயான் மின்கலத்தின் இரு மின்முனைகளை பிரிக்கும் பாலிஎத்திலீன் பகுதி அகற்றப்பட்டு, அந்த இடத்தில் `பி.வி.டி.எப்.' படலம் ஒன்று பொருத்தப்பட்டது. அடிப்படையில் ஒரு பீசோஎலக்ட்ரிக் அல்லது அழுத்த மின்சார பொருளான பி.வி.டி.எஃப், அழுத்தம் கொடுக்கப்படும்போது மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய மின்கலத்தில், பி.வி.டி.எப். படலமானது மின்கலத்தின் இரு முனைகளுக்கு இடையில் பொருத்தப்படுவதால், மின்கலத்தின் உள்ளே ஒரு மின்சார சமநிலையை பராமரிக்க, லித்தியம் அயான்கள் காத்தோட் மின்முனையில் இருந்து ஆனோட் மின்முனைக்கு பயணப்படுகின்றன. பி.வி.டி.எப். படலத்தின் மூலம் ஏற்படும் இந்த லித்தியம் அயான் நகர்வே மின்கலத்துக்கு மின்னேற்றுகிறது. இதனாலேயே, இந்த மின்கலத்தினால் தனக்குத்தானே மின்னேற்றிக்கொள்ள முடிகிறதாம். அதாவது `சுய மின்னேற்றம்'.
அழுத்தப்பட்டால் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறனுள்ள இந்த பி.வி.டி.எப். படலத்துக்கு அழுத்தம் கொடுக்க, நாணய அளவுள்ள இந்த மின்கலம் ஒரு ஷூவின் அடிபாகத்தில் பொருத்தப்பட்டது. இதன்மூலம், ஒருவர் நடக்கும்போது உண்டாகும் அழுத்தமே மின்கலத்துக்கு முழுமையாக மின்னேற்ற போதுமானதாக இருக்கிறது என்பது கண்டறியப்பட்டது.
உதாரணமாக, 2.3 ஹெர்ட்ஸ் அளவுள்ள ஒரு அழுத்த விசையானது, சுமார் 4 நிமிடத்தில் இந்த கருவியின் மின்சாரத்தை 327 மில்லி வோல்ட்டில் இருந்து 395 மில்லி வோல்ட்டாக அதிகப்படுத்தியது.
ஆனால், இந்த மின்கலத்தை ஒரு பி.வி.டி.எப். பீசோஎலக்ட்ரிக் மின்னியற்றியாகவும், பாலிஎத்திலீன் உள்ள ஒரு லித்தியம் அயான் மின்கலமாகவும் வெவ்வேறாக பிரித்தபோது, இதிலிருந்து வெறும் 10 மில்லி வோல்ட் மின்சாரமே உற்பத்தியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பரிசோதனையில் இருந்து, விசை ஆற்றலை நேரடியாக வேதியியல் எரிசக்தியாக மாற்றும்போது உற்பத்தி ஆகும் மின்சாரத்தின் அளவு, விசை ஆற்றலில் இருந்து முதலில் மின்சாரத்தை உற்பத்தி செய்து, பின்னர் அந்த மின்சாரத்தை வேதியியல் எரிசக்தியாக மாற்றும்போது உற்பத்தியாகும் மின்சாரத்தின் அளவைவிட பலமடங்கு அதிகமாக இருக் கிறது என்பது தெரியவருகிறது.
இந்த மின்னியற்றி மின்கலத்தின் மீதான அழுத்தம் நீக்கப்படும் போது அதன் மின்சாரம் பயன்பாட்டுக்கு தயாராகி விடுகிறதாம். ஏனென்றால், அழுத்தம் கொடுக்கப்படும்போது பி.வி.டி.எப். மூலம் காத்தோட் மின்முனையில் இருந்து ஆனோட் மின்முனைக்குச் செல்லும் லித்தியம் அயான்கள், அந்த அழுத்தம் நீக்கப்படும்போது காத்தோடில் இருந்து மீண்டும் ஆனோட் மின்முனைக்கே திரும்பி சென்றுவிடுகின்றனவாம்.
இதனால் சுயமின்னேற்றம் தடைபட்டு, மின்கலத்தில் இருக்கும் மின்சாரம் பயன்பாட்டுக்கு தயாராகிவிடுகிறது என்கிறார் ஆய்வாளர் வாங்!
சுயமின்னேற்றம் செய்துகொள்ளக்கூடிய இந்த மின்கலங்கள் சுமார் 1.5 வோல்ட் அளவு மின்சாரத்தையும் சுயமாக உற்பத்தி செய்யக்கூடியவை என்பதையும் நிரூபித்திருக்கிறது வாங்கின் ஆய்வுக்குழு.
இதன்மூலம் இந்த மின்கலத்தின் பயன்பாடுகள் கையடக்க மின்னணு கருவிகள் மட்டுமல்லாது இதர பல மின்னணு கருவிகளுக்கும் விரிவடையும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

Thursday, September 27, 2012

பூசணி செடியில் சிவப்பு வண்டு

சிவப்புபூசணி வண்டு புடலை, பூசணி, வெள்ளரி, தடியன்காய், பீர்க்கன்காய் போன்றவற்றை தாக்கக்கூடும்.

பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்:

வண்டுகள் இலைகள், பூக்கள் போன்றவற்றில் வட்டவடிவமான துவாரங்களை உண்டுபண்ணி, திசுக்களை கடித்து உண்டு சேதம் விளைவிக்கின்றன. இளம் செடிகளில் வண்டுகளின் தாக்குதல் அதிகமாகக் காணப்படும். தாக்குதல் அதிகமாக இருக்கும்போது இலைகள் எல்லாம் வண்டுகளால் துளைக்கப்பட்டு சேதப்படுத்தப் படுவதால் செடிகள் மடிந்துவிடக்கூடும். வளர்ந்த செடிகளின் இலைகளில் அனேக துவாரங்கள் உண்டுபண்ணினாலும் அவை மடிந்துவிடுவதில்லை. ஆனால் செடியின் வளர்ச்சி அதிகளவில் பாதிக்கப்படுகிறது. மண்ணில் இருக்கக்கூடிய புழுக்கள் செடிகளின் வேர்களைக் கடித்து, உண்டு சேதம் விளைவிக்கும். அவை மண்ணில் வந்து தொடும் காய்களையும் துளைத்து உட்புறத்திலுள்ள சதைப்பகுதியை உண்டு சேதம் விளைவிக்கக் கூடியவை.

பூசணிக்கொடி

பூசணிக்கொடி

பூச்சியின் வாழ்க்கை சரிதம்:

பெண் வண்டு, ஆரஞ்சு நிற, நீண்ட குழாய் வடிவ முட்டைகளை தனித்தனியாக அல்லது சிறு சிறு குவியல்களாக செடிகளின் அடியில், ஈரமான மண்ணின் மேல் இடும். ஒரு வண்டு சுமார் 300 முட்டைகள் வரை இடக்கூடியது. முட்டைகளிலிருந்து வெளிவரும் இளம்புழுக்கள் 13-25 நாட்களில் முழு வளர்ச்சியடையும். வளர்ந்த புழுக்கள் மண்ணுக்கடியில் கூண்டுப்புழுக்களாக மாறி, 7-15 நாட்களில் வண்டுகளாக வெளிவரும். வண்டுகளின் மேல்பரப்பு ஆரஞ்சு கலந்த சிவப்பு நிறத்துடனும் அடிப்பரப்பு கருமைநிறத்துடனும், வெண்மையான மிருதுவான ரோமங்களைக் கொண்டும், முன் இறக்கைகள் ஆரஞ்சு கலந்த சிவப்பு நிறத்துடனும் காணப்படும்.

பூச்சிக்கட்டுப்பாடு:
  • நிலத்தை நன்கு உழுது, கூண்டுப்புழுக்களை வெளிக்கொணர்ந்து அழிக்கலாம்.
  • கை வலை பயன்படுத்தி, பூச்சிகளைப் பிடித்து அழிக்கலாம்.
  • பூச்சி தாக்குதல் அதிகம் காணப்படும் செடியின் பாகங்களை அப்புறப்படுத்தி அழித்துவிட வேண்டும்.
  • நிலத்தில் உள்ள களைகளை பிடுங்கி அழித்துவிட வேண்டும்.
  • ஏக்கருக்கு மாலத்தியான் 400மில்லி வீதம் 400 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
  • தாக்கப்பட்ட காய்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தி அழித்துவிட வேண்டும்.

முனைவர் கோ.பி.வனிதா,
வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்சி நிலையம், மதுரை.
முனைவர் ரா.கோபாலகிருஷ்ணன்,
ரோவர் வேளாண்மைக்கல்லூரி, பெரம்பலூர்.

பலன் தரும் பழப் பண்ணை

பழத் தோட்டம் என்பது நெடுங்கால முதலீட்டுத் திட்டமாகும். இதற்கு சீரிய முறையில் திட்டமிடுதல் அவசியமானது. அதிகபட்ச உற்பத்தியைப் பெறுவதற்குத் தகுந்த இடம், நிலப் பரப்பு, நடவு முறை, நடவு தூரம், ரகங்கள், நாற்றுகள் ஆகியவற்றைக் கவனத்துடன் தேர்தெடுக்க வேண்டும்.

நிலப் பரப்பு:
பழத் தோட்டம் அமைப்பதற்கான இடத்தை முறையாகத் தேர்வு செய்ய வேண்டும். ஏற்கெனவே பழங்கள் சாகுபடி செய்யப்படும் இடத்தில் அமைப்பதன் மூலம் பிற சாகுபடியாளர்களின் அனுபவத்தைப் பெறலாம். இதன் மூலம், பிற சாகுபடியாளர்களுடன் இணைந்து கூட்டுறவு முறையில் உற்பத்தி, விற்பனைக்கான வாய்ப்புக் கிடைக்கும்.
சாகுபடி செய்யப்படும் இடத்துக்கு அருகில் சந்தை இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் பழங்களை சாகுபடி செய்வதற்கான கால நிலையை உறுதி செய்ய வேண்டும். ஆண்டு முழுவதும் போதுமான நீர்ப் பாசன வசதி செய்து தர வேண்டும்.
தோட்டம் அமைப்பதற்கு முன் செய்ய வேண்டியவை:
மண்ணின் பொருந்து திறன், வளம், அடி மண்ணின் இயல்பு, மண்ணின் ஆழம் ஆகியவற்றை மதிப்பிட வேண்டும். மண்ணில் முறையான வடிகால் வசதி மற்றும் மழைக் காலங்களில் நீர் தேக்கமற்றதாகவும் இருக்க வேண்டும். சிறந்த தரமான பாசன நீர் அவசியம். தரை வழியாகவோ, இருப்புப் பாதை வழியாகவோ பொருள்களை எடுத்துச் செல்லும் வசதி இருக்க வேண்டும்.
சாகுபடி செய்யப்படும் பழங்களுக்கு சந்தையில் நிலையான தேவை உள்ளதா என்பதை ஆராய்ந்து சாகுபடி செய்ய வேண்டும்.
முதல் கட்ட செயல்கள்:
சாகுபடிக்கேற்ற இடம், நிலப் பரப்பு ஆகியவற்றைத் தேர்வு செய்த பின்னர் நிலத்தில் உள்ள மரங்களை வேர்களுடன் அகற்ற வேண்டும். புதர்கள், களைகளையும் அகற்ற வேண்டும். நிலத்தை நன்கு உழுது சமன் செய்து எரு இட வேண்டும். நீர்ச் சிக்கனத்துக்கும், மண் அரிப்பைத் தடுக்கவும் நிலத்தை சமன் செய்ய வேண்டியது அவசியமானது. மலைப் பகுதிகளில் நிலத்தை அடுக்கு நிலங்களாகப் பிரித்து சமன் செய்ய வேண்டும். வளம் குன்றிய மண்ணாக இருந்தால் நடவு செய்வதற்கு முன் பசுந்தாள் எருப்பயிரை வளர்த்து நிலத்துடன் சேர்த்து உழுது மண்ணின் தரத்தை உயர்த்தலாம்.

பழத் தோட்டத்தை திட்டமிடுதல்:
ஓர் அலகு நிலத்தில் அதிக எண்ணிக்கை மரங்களை நடுவதற்கான போதுமான இடைவெளி அமைக்க வேண்டும். சேமிப்பு அறை மற்றும் அலுவலகக் கட்டடத்தை பழத் தோட்டத்தின் மத்தியில் அமைத்து முறையாகக் கண்காணிக்க வேண்டும். நான்கு ஹெக்டேர்களுக்கு இரண்டு என்ற விகிதத்தில் கிணறுகள் தேவையான ரகங்களில் அமைக்க வேண்டும்.
ஒவ்வொரு பழ வகையையும் தனித் தனி பகுதிகளில் நடவு செய்ய வேண்டும். ஒரே காலத்தில் கனியும் பழங்களை ஒரு குழுவாக இணைக்க வேண்டும். இலையுதிர் வகை பழ மரங்களுக்கு இடையே சில மகரந்தத்தைத் தருவிக்கும் மரங்களை நட வேண்டும். இந்த மரங்களை ஒவ்வொரு மூன்று வரிசையிலும் மூன்றாவது மரமாக நட வேண்டும்.
சாய்வு முறையில் பாசன வாய்க்கால்களை அமைப்பதால் நீரைச் சேமிக்கலாம். ஒவ்வொரு 30 மீட்டர் நீள வாய்க்காலுக்கும் 7.5 செ.மீ. சரிவு ஏற்படுத்த வேண்டும்.
போக்குவரத்துப் பாதைகள் குறைந்தபட்ச இடத்தையே ஆக்கிரமித்திருக்க வேண்டும். முதல் வரிசை மரங்களுக்கும் காற்றுத் தடுப்பு வேலிக்கும் இடையே உள்ள இடத்தைப் பாதையாகப் பயன்படுத்தலாம்.
முன்பக்கத்தில் குறுகிய வளர்ச்சியுடைய மரங்களையும், பின்பக்கத்தில் உயரமாக வளரும் மரங்களையும் வளர்ப்பதால் எளிதாகக் கண்காணிக்கப்படுவதோடு பார்வைக்கும் உகந்ததாக இருக்கும்.
பசுமை மாறா மரங்களை முன் பகுதியில் இடம் பெறச் செய்ய வேண்டும். பறவைகள் மற்றும் விலங்குகளை ஈர்க்கும் மர வகைகள் காவலாளியின் கொட்டகைக்கு அருகிலேயே இடம் பெற வேண்டும்.
ஒரு நல்ல வேலி அவசியம். உயிர் வேலியே சிறந்த பயன்தரும். வறட்சி எதிர்ப்புத் திறன் விதையின் மூலம் சுலபமான பயிர் பெருக்கம், விரைவான வளர்ச்சி, அடர்த்தியான இலைகள், கடும் கவாத்துக்கு தாங்கும் திறன் உடைய செடிகளை உயிர் வேலிக்கு தேர்வு செய்யலாம். கற்றாழை, கருவேல மரம், கொடுக்காப்புளி மரம், அலரி ஆகியவற்றை வரிசைகளில் நெருக்கமாக நட்டு சிறந்த உயிர் வேலியாகப் பயன்படுத்தலாம்.
உயிர் வேலி
உயிர் வேலி
காற்றுத் தடுப்பு வேலிகளைப் பழத் தோட்டத்தைச் சுற்றிலும் பல வரிசைகளில் நடுவதன் மூலம் காற்று அதிகம் வீசும் தருணங்களில் தோட்டத்துக்குச் சிறந்த பாதுகாப்பாக அமையும்.
காற்றுத் தடுப்பு வேலிக்குத் தேர்வு செய்யப்படும் மரங்களை செங்குத்தாகவும், உயரமாகவும், விரைவாக வளரக் கூடியதும் கடின வறட்சியை எதிர்க்கவல்ல உறுதியான மரங்களை தேர்வு செய்ய வேண்டும். சவுக்கு, வெண்ணாங்கு, அசோக மரம், தையில மரம், சவுக்கு, வேம்பு ஆகிய மரங்களைக் காற்றுத் தடுப்பு வேலியாகப் பயன்படுத்தலாம்.
இவை மட்டுமல்லாது பழத் தோடங்களின் வடிவமைப்புகளில் செங்குத்து வரி நடவு அமைப்பு, ஒன்று விட்டு ஒன்றான வரி நடவு அமைப்பு, நடவு இடைவெளி ஆகியவற்றையும் உரிய பரிந்துரைகளுக்கேற்ப கையாள வேண்டும். மேலும், விவரங்களுக்கு அந்தந்தப் பகுதியில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகங்களை நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம்.

தினமணி செய்தி

மஞ்சளில் நோய் மேலாண்மை

இந்தியா மற்றும் இதர நாடுகளில் மஞ்சள் ஒரு முக்கியமான பயிராகும். தமிழகத்தில் சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் முக்கியப் பயிராக மஞ்சள் விளங்குகிறது.
பூஞ்சாணம், பாக்டீரியா, வைரஸ் நோய்கள் மஞ்சளைப் பரவலாகத் தாக்குகின்றன. பூஞ்சாண நோய்களில் இலைப்புள்ளி, செந்நிற இலைக் கருகல் நோய், வேர் அழுகல் நோய்கள் மஞ்சள் பயிரைத் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது.

இந்த நோய்களின் அறிகுறிகள் மற்றும் மேலாண்மை குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இலைப்புள்ளி நோய்:
கொலிட்ரோடிரைக்கம் கேப்சைசி என்ற பூஞ்சணத்தால் உருவாக்கப்படும் இலைப்புள்ளி நோய், தென் இந்தியப் பகுதிகளில் தீவிரமாகக் காணப்படுகிறது.
பயிர் நட்ட 40-45 நாள்களுக்குப் பிறகு தோன்றும் இந்த நோய், ஈரமான பருவ நிலையில் தீவிரமாகப் பரவுகிறது. கருமை நிறவளையங்களை உள்புறமாகக் கொண்ட பழுப்பு நிற புள்ளிகள், இலையின் மேல் பரப்பில் காணப்படும். இளம் மற்றும் முதிர்ச்சியடைந்த செடிகளில் வெவ்வேறு அளவுகளில் புள்ளிகள் காணப்படும். முதலில் சாம்பல் நிற உள்புறத்தைக் கொண்ட நீள வடிவப் புள்ளிகளாகத் தோன்றும்.
ஓர் இலையின் எண்ணற்ற புள்ளிகள் தோன்றி நோயின் தீவிரம் அதிமாகும் போது புள்ளிகள் விரிந்து இலையின் முழுப் பரப்பையும் கரும்புள்ளிகளாக ஆக்கிரமித்துக் கொள்கிறது.
தீவிரமாகத் தாக்கப்பட்ட இலைகள் காய்ந்து வாடிவிடுகின்றன. தாக்கப்பட்ட கிழங்குகளின் செதில்களில் கருமை நிற ஸ்ட்ரோமா காணப்படுகிறது. மழைக் காலங்களில் இந்த நோய் தீவிரமாகப் பரவுகிறது. இந்த நோய் கிழங்குகளின் மகசூலில் 60 சதம் வரை இழப்பை ஏற்படுத்துகிறது.
செந்நிற இலைக் கருகல் நோய்:
செந்நிற இலைக் கருகள் நோயின் தாக்கம் தற்சமயம் மஞ்சள் சாகுபடி செய்துள்ள இடங்களில் பெருமளவு காணப்படுகிறது. இந்த நோய் டாப்பரினா மேக்கிலன்ஸ் என்ற பூஞ்சாணத்தால் ஏற்படுகிறது. இந்த நோயின் அறிகுறிகள் முதிர்ந்த இலைகளில் முதலில் காணப்படும்.
இலை ஓரங்களில் பழுப்பு நிறத்தில் காயத் தொடங்கும். பின்னர் இலையின் மைய நரம்பு நோக்கி பரவும், தீவிரமாகத் தாக்கப்பட்ட செடி வளர்ச்சி குன்றி, சிறுத்துக் காணப்படும். இதனால், மஞ்சளின் தரம் பெருமளவு பாதிக்கும்.
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
இலைப்புள்ளி மற்றும் செந்நிற இலைக் கருகல் நோய்களைந்ப்க் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட இலைகளை அகற்றி எரிக்கவும், சூடோமோனாஸ் பாக்டீரியா துகள் கலவை 0.5 சதம் கரைசலை நடவுக்கு பின் 45 நாள்கள் கழித்து 30 நாள்கள் இடைவெளியில் மூன்று (அ) நான்கு முறை இலைகளின் மேல் பகுதியில் தெளிக்க வேண்டும்.
ரசாயன பூஞ்சாண கொல்லிகளான கார்பண்டாசித்துடன் மேங்கோசெப் 2 கிராம் (அ) கேப்டானுடன் ஹெக்ஸகொனசோல் 2 கிராம் (அ) பென்கொனசோல் 1.5 மில்லி (அ) குளோரோதலோனில் 2 கிராம் இவற்றில் ஏதாவது ஒன்றை ஒட்டும் திரவம் சேர்த்து இலைகளின் மேல் தெளித்து இலைப்புள்ளி மற்றும் செந்நிற இலைக் கருகல் நோயை கட்டுப்படுத்தலாம்.
கிழங்கு அழுகல் நோய்:
கிழங்கு அழுகல் நோய் பித்தியம் அபானிடெர்மேட்டம் என்ற பூஞ்சாணத்தால் ஏற்படுகிறது. இந்த நோயின் அறிகுறிகள் இலை, தண்டு, கரணைகளில் அதிகளவு காணப்படும். முதலில் இந்த நோய் தாக்கிய இலை ஒரங்கள் காய்ந்து பின்பு நடு நரம்பு காய்ந்துவிடும். செடி மேலிருந்து கீழாக காயத் தொடங்கும். தரையை ஓட்டிய தண்டுப் பகுதி வலுவிழந்து காணப்படும். மஞ்சள் கிழங்கு அழுகி உருக்குலைந்து பழுப்பு நிறத்தில் காணப்படும். இதனால், அதிக மகசூல் இழப்பு ஏற்படும்.
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
ஒரு ஹெக்டருக்கு 2.5 கிலோ சூடோமோனாஸ் பாக்டீரியா துகள் கலவை மற்றும் 2.5 கிலோ டிரைக்கோடெர்மா பூஞ்சாணம் துகள் கலவையை 100 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து மண்ணில் இடலாம்.
சூடோமோனாஸ் பாக்டீரியா துகள் கலவையை 0.5 சதம் கரைசலை 30 நாள்கள் இடைவெளியில் மூன்று அல்லது நான்கு முறை செடியின் தண்டுப் பகுதி மற்றும் செடியை சுற்றியுள்ள மண் நனையும் படி ஊற்றுவதால் கிழங்கு அழுகல் நோய் பெருமளவு குறையும். இந்த உயிரியல் கட்டுப்பாட்டு முறையைப் பயன்படுத்துவதால் மஞ்சளில் நோயைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்கிறது.
மேலும், ரசாயன முறையில், மெட்டலாக்சிலுடன் மேங்கோசெப் 2 கிராம் அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு 3 கிராம் அல்லது காப்பர் ஹைட்ராக்சைடு 1.5 கிராம் இவற்றில் ஏதாவது ஒன்றை தூர்ப் பகுதி நனையும்படி ஊற்றி நோயைக் கட்டுப்படுத்தலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நோயைக் கட்டுப்படுத்தி மகசூலை அதிகம் பெறலாம்.
தினமணி செய்தி
கிருஷ்ணகிரி மாவட்டம், பையூர் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையப் பயிர் நோயியல் துறை உதவிப் பேராசியர் கி.கல்பனா

சமயலறையில் பயோகாஸ் தயாரிக்க

வருசத்துக்கு 6 சிலிண்டர். அத மீறினா 850 ரூபாய் ஒரு சிலிண்டர். பிரைவேட்டில் இப்பவே 12 லிட்டர் சிலிண்டர் 1200க்கு மேல.. புலம்பும் குடும்பத் தலைவர்கள் தலைவிகளுக்கான பதிவு இது.
அன்மையில் சக்தி சொரூபி என்கிற சிறிய சாண எரிவாயு கலன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சாணம் மட்டுமில்லாமல் காய்கறிக் கழிவுகள், அரிசி களைந்த நீர் போன்றவற்றை ஊற்றியும் எரிவாயு தயாரிக்க முடியும். வழக்கமாக சாண எரிவாயு கலன் அமைக்க பெரிய இடம் தேவைப்படும். குழி எடுத்து அதிகச் செலவு செய்தால்தான் சாண எரிவாயு தயாரிக்க இயலும். எனவேதான் ஊருக்கு மொத்த குப்பைக் குழியாக சாண எரிவாயு கலனையும், பொது கலனிலிருந்து ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலமாக எரிவாயுவும் எடுத்துச் செல்லப்பட்டது.
ஆனால் இந்தப் புதிய முறையில் எரிவாயு கலனுக்கு அதிக இடம் தேவையில்லை.  சமையல் அறையில் உள்ளே கூட வைத்துக்கொள்ள முடியும். இதற்கு 17ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. மானியமாக ௹2500  அரசு தருகிறது. சாண எரிவாயு தயாரிப்பதில் பல முறைகள் உள்ளன. ஆர்வம் உள்ளவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டால் பயிற்சி அளிக்கத் தயாராக இருக்கிறோம்.

விபரத்திற்கு
திட்ட மேலாளர்,
இயற்கை வள அபிவிருத்தி திட்டம்,
விவேகானந்தா கேந்திரம்,
கல்லுவிளை,
லீபுரம்,
கன்னியாகுமரி
தொலைபேசி – 04652 246296

கூரான பொருள் குத்துவது ஏன்?

கூரான பொருள் குத்துவது ஏன்?

pin
கூரான ஊசி, பொருட்களின் ஊடே ஏன் சுலபமாகத் துளைத்துக்கொண்டு செல்கிறது என்று நீங்கள் வியந்ததுண்டா? துணியின் வழியாகவோ, அட்டையின் வழியாகவோ கூரான ஊசியை எளிதாகச் செலுத்த முடிகிறது. ஆனால் மழுங்கலான ஆணியைச் செலுத்துவது மிகவும் கடினமாயிருக்கிறதே, ஏன்? கூரான ஊசியைச் செலுத்தும்போது முழுச் சக்தியும் அதன் முனை மீது செலுத்தப்படுகிறது. ஆனால் மழுங்கலான ஆணியின் முனையின் பரப்பு அதிகமாயிருப்பதால் அதே சக்தி அதிகப் பரப்பின் மீது செயல்பட வேண்டியிருக்கிறது. எனவே, அதே சக்தியைச் செலுத்தினாலும், மழுங்கலான ஆணியால் எளிதாக துளைத்துச் செல்ல முடிவதில்லை.
அழுத்தத்தைக் குறிக்கும்போது சக்தியின் அளவை மட்டுமின்றி, அது செயல்படும் பரப்பின் அளவையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும்.
ஒரு நபருக்கு 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்று சொன்னால் அதிலிருந்து இது அதிகமா, குறைவா என்று கண்டுகொள்ள முடியாது. ஏனெனில் இச்சம்பளம் மாதத்துக்கா, வருடத்துக்கா என்று நமக்குத் தெரியாது. அதுபோலவே ஒரு சக்தியின் செயல், அது ஒரு சதுர சென்டிமீட்டர் மீது பரவியுள்ளதா, ஒரு சதுர மில்லி மீட்டரில் நூறில் ஒரு பங்குப் பரப்பின் மீது பரவியுள்ளதா என்பதைச் சார்ந்திருக்கிறது.
பனிச்சறுக்கு மட்டைகள் நம்மை பொலபொலப்பான வெண்பனியின் மீது எளிதில் எடுத்துச் செல்கின்றன. அவை இல்லாவிட்டால் நாம் பனியினுள் அழுந்திவிடுவோம். ஏன்?
பனிச்சறுக்கு மட்டைகளை அணிந்துகொள்ளும்போது உடல் எடை அதிகப் பரப்பின் மீது பரவியுள்ளது. மட்டைகளின் பரப்பு, நமது உள்ளங்கால்களின் பரப்பை விட 20 மடங்கு அதிகமாயிருக்கிறது என்று வைத்துக்கொண்டால், மட்டைகள் அணிந்திருக்கும்போது வெண்பனியின் மீது நாம் செலுத்தும் அழுத்தம், அவை இல்லாமல் இருக்கும்போது செலுத்தும் அழுத்தத்தை விட 20 மடங்கு குறைவாக இருக்கும். ஏற்கனவே கூறியபடி, பனிச்சறுக்கு மட்டைகளை நாம் அணிந்துகொண்டால்தான் வெண்பனி நம்மைத் தாங்கும். அவை இல்லாவிட்டால், பனியினுள் நாம்புதைய வேண்டியதுதான்.

ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் புற்றுநோய் மட்டுமின்றி இதய நோய் ஆகியவற்றை தவிர்க்கலாம் !!

ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் புற்றுநோய் மட்டுமின்றி இதய நோய் ஆகியவற்றை தவிர்க்கலாம் !!

நமது தோலின் மேல்பகுதி எபிடெர்மிஸ், அடிப்பகுதி ஹைப்போடெர்மிஸ், மையப் பகுதி டெர்மிஸ் என்று அழைக்கப்படுகிறது. மூன்று அடுக்கும் சீராக பணிபுரிந்தால்தான் அ
ழகிய, ஆரோக்கியமான தோல் நமக்கு கிட்டும். நாம் தற்சமயம் பயன்படுத்தும் அழகு சாதனப்பொருட்கள், களிம்புகள், முகப்பூச்சு மருந்துகள் தோலின் மூன்று அடுக்கு வரை ஊடுருவுவதில்லை. அதனால்தான் விலையுயர்ந்த களிம்புகளை பயன்படுத்தினாலும ் பூரண பலன் கிடைப்பதில்லை. சாதாரணமான தோலை அழகாக புத்துணர்ச்சியுடனும் மினுமினுப்புடனும் திகழச்செய்து ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் அற்புத மூலிகைதான் ஆலிவ்.

இதன் இலை மேற்புறம் கரும் பச்சை வண்ணத்திலும் அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். கனியின் நடுவில் கடினமான விதையும் சுற்றி திடமான சதைப் பகுதியும் இருக்கும். கனிகள் உருண்டை, நீளுருண்டை எனப் பலவடிவில் இருக்கும்.காய் பச்சை நிறத்திலும், கனிந்த பின் பழுப்பு, சிவப்பு அல்லது கறுப்பு நிறத்திலுமிருக்கும். இலைகளில் எண்ணெய்ச் சத்து அதிகம்.

ஓலியா யுரோபியா என்ற தாவரவியல் பெயர்கொண்ட ஓலியேசியே குடும்பத்தைச் சார்ந்த மரங்களின் பழக்கொட்டைகளே ஆலிவ் விதை. இவற்றிலிருந்து எடுக்கப் படும் எண்ணெய் ஆலிவ் எண்ணெய் என்றும் மேற்கத்திய மருத்துவத்திலும், சைத்தூன் எண்ணெய் என்று இந்திய மருத்துவத்திலும் அழைக்கப்படுகிறது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

ஆலிவ் எண்ணெயில் ஓலிரோசைடு, ஒலிரோபின், ஒலினோலிக் அமிலம், லிவ்டியோலின், எபிஜெனின் பிளேவனாய்டுகள், பால்மிட்டிக் மற்றும் ஸ்டீரிக் அமிலங்கள் பெருமளவு காணப்படுகின்றன.

திரவத் தங்கம்

ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கு வெண்மையும், கேசத்திற்கு போஷாக்கும் அளிக்கிறது. ஆலிவ் எண்ணெயில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அடங்கியுள்ளன. ஆன்டி ஆக்ஸிடென்டல், புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்துகள், காணப்படுகின்றன.

கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம், செலினியம் போன்றவை உள்ளன.

வைட்டமின் பி 1,2,3,5,6 ப்ரோ வைட்டமின் ஏ பீட்டா கரோட்டீன், வைட்டமின் ஈ. கே, போன்றவை இதில் அதிகம் காணப்படுகிறது. இதன் காரணமாகவே ஆலிவ் எண்ணெய் திரவத்தங்கம் என்று மதிக்கப்படுகிறது.

தோலினை மினுமினுப்பாக்கும்

இவை தோலில் ஹைப்போடெர்மிஸ் வரை ஊடுருவி, தோலின் அனைத்து அடுக்குகளையும் பளபளப்பாகவும் வழுவழுப்பாகவும் வைத்திருப்பதுடன் தசைக்கும் தோலுக்கும் இடையே வறட்சி ஏற்படாமல் பாதுகாக்கிறது. 100மிலி ஆலிவ் எண்ணெயில் ஏறத்தாழ 20 கிராம் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்களும், 12மிகி வைட்டமின் ஈ, 62 மைக்ரோகிராம் வைட்டமின் கே காணப்படுகிறது.

குளிக்கும்பொழுது இளவெந்நீரில் 10மிலி ஆலிவ் எண்ணெய் மற்றும் சில சொட்டுகள் லேவண்டர் எண்ணெய் கலந்து குளிக்கலாம். குழந்தைகளுக்கும் குளிப்பாட்டலாம். உள்ளங்கை கடினம் மாற ஆலிவ் எண்ணெயையும் சீனியையும் கலந்து உள்ளங்கையில் 10 நிமிடங்கள் தேய்த்து பின் கழுவ மென்மையடையும்.

இதயநோயை தடுக்கும்

ஆலிவ் எண்ணெய், விளக்கெண்ணெய், தேன், முட்டை வெண்கரு மற்றும் ரோஸ்மேரி எண்ணெய் ஆகியவற்றை நன்கு கலந்து முகம் மற்றும் தோல் வறட்சி உள்ள பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் கழித்து இளஞ்சூடான நீரில் கழுவிவர வறட்சி நீங்குவதுடன், தோலும் மென்மையாகும். ரோமங்களை நீக்கியபின் முகம் மற்றும் தோலில் ஏற்படும் ஒவ்வாமை நீங்க அந்த இடங்களில் ஆலிவ் எண்ணெய் மற்றும் நகச்சொத்தை நீங்க ஆலிவ் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வரலாம். ஆலிவ் எண்ணெயை முடி நுனியில் தோன்றும் வெடிப்பில் தடவலாம்.

மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும்

தூய்மையான ஆலிவ் எண்ணெயில் காணப்படும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு குணப்படுத்துவதற்கும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாலிஃபீனால் மார்பகப் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டின் ஐசிஓ அமைப்பும், கிரனடா பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வு முடிவு இதனைத் தெரிவித்துள்ளது.

ஆலிவ் எண்ணெயில் இருந்து பிரித்து வடிகட்டப்பட்டு, பின்னர் திடப் பொருளாக்கப்பட்டதைக் கொண்டு நடத்திய ஆய்வில், மார்பகப் புற்றுநோயை தடுக்கும் ஆற்றம் இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே மார்பகப் புற்றுநோய் வராமல் இருக்கவும், அந்நோய் உள்ளவர்கள் அதில் இருந்து நிவாரணம் பெறவும், ஆலிவ் எண்ணெயை உபயோகிக்கலாம்.

இதயநோயை தடுக்கும்

இதயத்துக்கு ஏற்ற மிகச்சிறந்த எண்ணெய் என்றால் ஆலிவ் எண்ணெய்யைத்தான் (Oilve Oil) சொல்ல வேண்டும். உலக அளவில் மேலை நாடுகளில் இதயத்துக்கு ஏற்ற சிறந்த சமையல் எண்ணெய்யாக ஆலிவ் எண்ணெய்தான் கருதப்படுகிறது. இந்த எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் மேலை நாடுகளில் இதய நோய்களின் தாக்கம் மிகமிகக்குறைவாக இருப்பதாக பலவகையான ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன.

ஸ்பெயின் நாட்டில் நடந்த ஆராய்ச்சியில், ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் புற்றுநோய் மட்டுமின்றி இதய நோய், ரத்த தமனி பாதிப்பு ஆகியவற்றையும் தவிர்க்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. தினம் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் வாரம் ஒருநாள் உட்கொண்டுவர இதயநோய் வருவதை தடுக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணையைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.

சில்லறை வணிகத்தில் வால் மார்ட்! மலிவு விலையில் மரணம்!!

காதிபத்தியங்கள் பல இருந்தாலும் அவற்றின் தலைவனாகவும் மேலாதிக்கச் சக்தியாகவும் அமெரிக்கா இருப்பதைப் போல, சில்லறை வணிகத்தில் பல பன்னாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டிருந்தாலும், வால்மார்ட் அவை அனைத்துக்கும் மேலான ஒரு பயங்கரமான அழிவுச் சக்தி. அமெரிக்க இராணுவம் நடத்தும் ஆக்கிரமிப்புப் போருக்கும் வால்மார்ட் தொடுக்கும் வர்த்தகப் போருக்கும் பெரிய வேறுபாடு கிடையாது — துப்பாக்கி ஒன்றைத் தவிர.
அமெரிக்க மேலாதிக்கத்திற்க்கும் வால்மார்ட்டுக்கும் இடையிலான தொப்புள் கொடி உறவைப் புரிந்து கொள்ள உதவும் சமீபத்திய உதாரணம் ஒன்று இருக்கிறது. அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தை எப்படியாவது நிறைவேற்றுவதற்கு மன்மோகன் சிங் நியமித்த தூதர்களில் முக்கியமானவர் வால்மார்ட்டின் இந்தியக் கூட்டாளியான மிட்டல். சில்லறை வணிகத்திற்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்திற்கும் உள்ள தொடர்புதான் வால்மார்ட்டுக்கும் மறுகாலனியாக்கத்திற்கும் உள்ள தொடர்பு.
மலிவு விலை என்பதுதான் மக்களை வீழ்த்த வால்மார்ட் ஏந்தியிருக்கும் ஆயுதம். இந்த ஆயுதத்தின் மூலம் உலக மக்களின் உணவு, உடை, பழக்க வழக்கங்கள், பண்பாடு முதல் அவர்களுடய அரசியல் கருத்துகள் வரை அனைத்தையும் மாற்றுகிற வால்மார்ட், நுகர்தலே மகிழ்ச்சி, நுகர்தலே வாழ்க்கை, நுகர்தலே இலட்சியம் என்று அமெரிக்க சமூகத்தையே வளைத்து வசப்படுத்தி வைத்திருக்கிறது வால்மார்ட். அதற்குப் பலியான அமெரிக்க மக்கள், தம் இரத்தத்தில் ஊறி சிந்தனையையும் செரித்து விட்ட வால்மார்ட் எனும் இந்த நச்சுக் கிருமியிடமிருந்து விடுபடமுடியாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவின் உடலுக்குள் நுழைந்து விட்டது அந்த நச்சுக்கிருமி. இதனை எதிர்த்த போராட்டம் நீண்டது, நெடியது. அந்தக் கிருமியின் வரலாற்றைச் சுருக்கமாகத் தெரிந்து கொள்வது இந்த தொற்று நோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் எதிர்த்துப் போராடவும் உதவும்.
வால்மார்ட்
ரண்டாம் உலகப்போரில் உளவுத்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற சாம் வால்டன், அமெரிக்காவின் அர்கன்ஸாஸ் மாநிலத்தின் ரோஜர்ஸில் வாங்கிய தள்ளுபடி விற்பனைக் கடைதான் வால்மார்ட். துவக்க காலத்தில் மற்ற பலசரக்குக் கடைகளில் விற்கப்படாத மிக மலிவான பொருட்களும், மற்ற கடைகளில் விற்கப்படும் பொருட்களை சந்தை விலையை விட மலிவாகவும் விற்றது வால்மார்ட்.
உறுதியாக நட்டம் விளைவிக்கக் கூடிய இந்த வியாபார உத்தியை மேற்கொள்ள சாம்வால்டன் இரண்டு வழிமுறைகளைக் கையாண்டார். ஒன்று, ஊழியர்களுக்கு மிகக் குறைந்த சம்பளம், இரண்டாவது, உற்பத்தியாளர்களிடம் குறைவான விலையில் சரக்கெடுப்பது. இந்தக் கொள்கைகள் காரணமாக வால்மார்டின் வளர்ச்சி மெதுவாக இருப்பினும் 1969ம் ஆண்டுக்குள் 31 மில்லியன் டாலர் ஆண்டு வருமானத்துடன் தன் முதல் கடைக்கு 200 மைல் சுற்றளவிற்குள்ளாகவே 32 கடைகளைத் திறந்தார் சாம் வால்டன்.
இந்த வணிகமுறையினால் வருமானத்தை மீறி கடன்பட்ட சாம் வால்டன், தன் நிறுவனத்தைக் காப்பாற்ற அதிரடியாக மேலும் பல கடைகளை திறந்தால்தான் சாத்தியம் என்பதை உணர்ந்து பல வங்கிகளிடம் கடன் கோரினார். வங்கிகள் சாம் கோரியது போல் அல்லாமல் கடனுக்கு வரம்பு விதித்தனர். வங்கிகளை நம்பிப் பயனில்லை என உணர்ந்த சாம் பங்குச் சந்தையின் உதவியை நாடினார். அமெரிக்காவின் அந்நாளைய சட்டப்படி எந்த ஒரு நிறுவனமும் முதல்முறை நேரடியாக தன் பங்குகளை விற்க முடியாது, வேறொரு நிதி நிறுவனத்தின் மூலமாக மட்டுமே பங்குகளை விற்க முடியும்.
இந்தப் பணிக்கு சாம் இரண்டு பெரும் கிரிமினல் வங்கிகளை தனக்காக அமர்த்தினார். ஒன்று, அமெரிக்க உளவுத்துறையின் அடியாளாக அறியப்பட்டு, ஆயுதம் மற்றும் போதை மருந்து கடத்தலுக்காக 1990இல் தண்டிக்கப்பட்ட அர்கன்ஸாஸின் ஸ்டீபன்ஸ் வங்கி. மற்றொன்று, ஆங்கிலேய அரசுக்கு கைக்கூலியாக இருந்து, அமெரிக்கப் புரட்சிக்கு துரோகமிழத்த பாஸ்டன் தேசிய வங்கி. பின்னாளில் ஒயிட்வெல்ட் ஸ்விஸ் கடன் வங்கி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்த வங்கி, போதைப் பொருள் கடத்தல் மற்றும் நிதி ஊழலுக்காகவும் 1985இல் தண்டிக்கப்பட்டது.
இந்த இரண்டு கிரிமினல் வங்கிகளும் 1970இல் 4.5 மில்லியன் டாலர் பணத்தை சாம் வால்டனுக்குப் பங்குச் சந்தை மூலமாகப் பெற்றுத் தந்தனர். இதற்குப் பிரதி உபகாரமாக கிரிமினல் பேர்வழி ஸ்டிபன்ஸை வால்மார்டின் ஒரு இயக்குனராக்கினார் சாம் வால்டன்.
70களில் பங்குச் சந்தையின் உதவியை நாடியது வால்மார்ட். 80களிலோ நாப்தா, எஃப்.டி.ஏ.ஏ போன்ற சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களின் மூலம் தென் அமெரிக்க நாடுகளையும் கனடாவையும் ஊடுருவ வால்மார்டின் உதவி அமெரிக்கப் பங்குச் சந்தைக்குத் தேவைப்பட்டது. வால்மார்ட் தயாராக இருந்தது.

உலகமயமாக்கம் வால்மார்ட்டின் அசுர வளர்ச்சி

வால் மார்ட் ! மலிவு விலையில் மரணம் !!
2010ல் வால்மார்ட் – படத்தை அழுத்தி பெரியதாக பார்க்கவும்
தகவல் தொழில்நுட்பப் புரட்சியைத் தொடர்ந்து அத்துறையில் கொள்ளை இலாபமீட்டுவதற்கான வாய்ப்பு இருப்பதை உணர்ந்து கொண்ட அமெரிக்க முதலாளிகள், தம் மூலதனத்தை உற்பத்தித் துறையிலிருந்து அதற்கு மாற்றினர். அமெரிக்கச் சந்தைக்குத் தேவையான நுகர்பொருட்களை மலிவான ஊதியத்தில் உற்பத்தி செய்து தரும் ஏழை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் போக்கு அதிகரித்தது. பல அமெரிக்க உற்பத்தித் தொழில்கள் அழிந்தன. தொழிலாளர்கள் வேலையிழந்தனர். ஏழை நாடுகளின் கொத்தடிமைக் கூடாரங்களில் உருவாக்கப்படும் மலிவு விலை பொருட்களை நுகரும் சமூகமாக அமெரிக்கா மாறியது.
இத்தகைய பொருட்களை அமெரிக்காவெங்கும் விற்பனை செய்யும் ஒரு பிரம்மாண்டமான நிறுவனமாக வால்மார்ட் உருவாகியிருந்தது. அமெரிக்காவின் மற்ற உற்பத்தியாளர்களும் பெருவணிகர்களும் வால்மார்டின் குறைந்த விலை கொள்முதலுக்கு அடிபணியாவிட்டால் அழிந்து விடக்கூடிய நிலைக்கு அமெரிக்காவின் பல தொழில்களை மாற்றியிருந்தது வால்மார்ட். வால்மார்ட்டை உலகமயமாக்கலின் சிறந்த ஆயுதமாகக் கண்டு கொண்ட அமெரிக்க பங்குச் சந்தை, வால்மார்ட்டிற்கு பணத்தை வாரியிறைத்தது. வால்மார்ட் வெறித்தனமாக வளர்ந்தது.
80களின் இறுதி வரை 70,000 சதுரஅடி பரப்பிலான பிரம்மாண்டமான கடைகளை நடத்தி வந்தது. (மற்ற அமெரிக்கப் பெருவணிகக் கடைகளின் சராசரி அளவு 40,000 சதுர அடி). போட்டியாளர்களை அழிக்க ஆணி முதல் உணவு வரை 1,20,000 பொருட்களை விற்கும் 2,00,000 சதுரஅடி பரப்பிலான (4 கால்பந்து மைதானம் அளவில்) சூப்பர் சென்டர்களை 1987 முதல் வால் மார்ட் நிறுவனம் துவங்கியது.
1990ல் அமெரிக்காவில் வெறும் 5 சூப்பர் சென்டர்களை கொண்டிருந்த வால்மார்ட், அடுத்த 12 ஆண்டுகளில் 1268 சூப்பர் சென்டர்களை நிறுவி 25,000% வளர்ச்சியடைந்தது. இதே காலகட்டத்தில்தான் உலகமயமாக்கல் கொள்கையைப் பயன்படுத்தி அயல்நாடுகளிலும் கால்பதிக்கத் துவங்கியது.
1990ல் மெக்ஸிகோவில் ஒரே ஒரு கடை மட்டும் திறந்திருந்த வால்மார்ட், இன்று அர்ஜென்டினா, பிரேசில், கனடா, கோஸ்டாரிகா, சீனா, எல்சால்வடார், ஜெர்மனி, குவாதிமாலா, ஹோன்டுராஸ், ஜப்பான், மெக்ஸிகோ, நிகராகுவா, போர்டோரிகோ மற்றும் பிரிட்டன் முதலிய நாடுகளில் 2700 கடைகளைத் திறந்திருக்கிறது. பலநாடுகளில் சில்லறை வணிகத்தில் முதல் இடத்தில் இருக்கிறது.

வளர்ச்சியின் மர்மம்

வால்மார்ட்
வால்மார்டின் வளம் – படத்தை அழுத்தி பெரியதாக பார்க்கவும்
வால்மார்டின் இந்த அசுரத்தனமான வளர்ச்சிக்கும், அமெரிக்க ஏகபோகங்கள் ஏழை நாடுகளைதனியார்மயம், தாராளமயம், உலகமயம் கொண்டு அழித்து வருவதற்குமான உறவு தற்செயலானதல்ல. இத்தனை ஆயிரம் கடைகளைக் கட்டத் தேவையான பல லட்சம் கோடி டாலர்கள், வரிச்சலுகைகளாகவும், இன்றைய தேதியில் வால்மார்டின் கடன் எத்தனை லட்சம் கோடி என்று வெளியே தெரியாத அளவிற்கு கடன் பத்திரங்களாகவும் உலகின் முன்னணி வங்கிகள், மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் காப்பீடு நிறுவனங்களின் ஆண்டறிக்கைகளில் மறைந்துள்ளன.
இந்த வால்மார்ட் சாம்ராஜ்ஜியம் உலகம் முழுவதிலிருந்தும் உறிஞ்சும் பல லட்சம் கோடி டாலர்களும் நிறுவனத்தின் பங்குகளில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேல் வைத்திருக்கும் சாம் வால்டனின் குடும்பத்தின் வயிற்றுக்குள் செல்கிறது. லாப ஈவுத்தொகை (Dividend) மூலமாக மட்டும் ஆண்டுக்கு 5 பில்லியன் டாலர்களைக் கொள்ளையடிக்கும் சாம் வால்டன் குடும்பத்தினர், அமெரிக்காவின் முதல் 10 பணக்காரர்களின் வரிசையில் 5 முதல் 9 இடம் வரை நிரம்பியுள்ளனர். இவர்களின் சொத்து மதிப்பைக் கூட்டினால் உலகின் நிரந்தரப் பணக்காரக் குடும்பமே இவர்கள்தான்.
உலக அரசியலின் படுபிற்போக்கு சக்திகளான புஷ், டிக் செனி வகையறாக்களுக்கு சாம் வால்டன் குடும்பம்தான் நிரந்தரப் புரவலர்கள். அமெரிக்காவில் கல்வியை முற்றிலுமாகத் தனியார்மயமாக்குவதற்குத் தீவிரமாக முயலும் கும்பல்களுக்கும் தலையாய புரவலராக இருப்பதுடன், பின்தங்கிய நாடுகளை அதன் பிடியில் வைத்திருக்கும் பல அரசுசாரா நிறுவனங்களையும் வால்டன் குடும்பம் பராமரித்து வருகிறது.
உலகமயமாக்கல் கொள்ளைக்காகத் திட்டமிட்டே வளர்க்கப்பட்ட வால்மார்ட் இன்று 6100 கடைகள், 18 லட்சம் ஊழியர்கள், ஆண்டு விற்பனை 312.4 பில்லியன், லாபம் மட்டும் 11.2 பில்லியன் என உலகத்தின் மிகப் பெரிய கம்பெனியாகியுள்ளது. 42 மணி நேரத்திற்கு ஒரு புதிய கடை என திறந்த வண்ணம் உள்ளது. வால்மார்ட் ஒரு நாடாக இருந்திருந்தால் உலகின் 21வது பணக்கார நாடாக இருந்திருக்கும். இதன் ஆண்டு வருமானம் பல ஏழை நாடுகளின் வருமானத்தை விடவும் அதிகம்
வால் மார்ட்! மலிவு விலையில் மரணம்!!
ஒரு வால்மார்ட் சூப்பர் சென்டரின் உள்ளே….

ஏகபோகத்தின் வீச்சு

வாரத்திற்கு 10 கோடி அமெரிக்கர்கள் வால்மார்ட்டின் கடைகளில் பொருட்கள் வாங்குகின்றனர். அமெரிக்காவின் மொத்த பலசரக்கு மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனையில் 35%, மொத்த மருந்து மாத்திரை சந்தையில் 25%, வீட்டு உபயோகப் பொருட்கள், சோப்பு, ஷாம்பு போன்றவைகளில் ஏறத்தாழ 40%, ஆடியோ வீடியோ விற்பனையில் 25%  என்று அமெரிக்கச் சந்தையையே தனது கோரப்பிடிக்குள் கைப்பற்றி வைத்திருக்கிறது வால்மார்ட்.
அமெரிக்காவின் மிகப்பெரிய செய்தித் தாள் விற்பனையாளரும் வால் மார்ட்தான். வெளிவரும் பத்திரிகைகளில் ஏறத்தாழ 20% வால்மார்ட் மூலம் விற்பனையாகிறது. அமெரிக்கச் சந்தையில் இப்படியென்றால் மெக்ஸிகோ போன்ற நாடுகளின் மொத்தச் சந்தையில் 50% வால்மார்ட்டின் கையில் இருக்கிறது.
அதேபோல பிரொக்டர் அண்ட் காம்பிள் (விக்ஸ் கம்பெனி), லீவைஸ் (ஜீன்ஸ் கம்பெனி), ரெவ்லான் (அழகு சாதனங்கள்) போன்ற பல முன்னணி அமெரிக்க நிறுவனங்கள் தமது பொருட்களில் 20% – 40% வரை வால்மார்ட் மூலமாகவே விற்பனை செய்கின்றன.
இத்தகைய ஏகபோகத்தின் மூலம் உற்பத்தியாளர்களைத் தன்னை அண்டிப் பழக்கும் அடிமைகளாகவே மாற்றியிருக்கிறது வால்மார்ட். தன்னுடன் வர்த்தகம் செய்யும் பன்னாட்டு நிறுவனங்களையே ஆட்டிப் படைக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்னால் தமது பொருட்களின் விற்பனை விலை என்ன என்பதை பல பன்னாட்டு நிறுவனங்கள் வால்மார்டிற்குச் சொல்லி வந்தன. இன்றோ சந்தையைத் தன் பிடியில் வைத்திருக்கும் வால்மார்ட், தான் சொல்கிற பொருளை, கோருகிற விலையில் இந்நிறுவனங்கள் கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்று நிர்ப்பந்தம் செலுத்துகிறது.
வால்மார்டிற்குப் பிடிக்கவில்லையா, பத்திரிகையின் அட்டை வடிவமைப்பு மாற்றப்பட வேண்டும், வால்மார்ட் ஆட்சேபித்தால் காசெட்டின் பாடல் வரிகள் தணிக்கை செய்யப்பட வேண்டும். வால்மார்ட் கோரினால் பொருட்களின் நிறத்தை மாற்ற வேண்டும். விலையைக் குறைக்கும் பொருட்டு உற்பத்திப் பொருளின் தரத்தைக் குறைக்கச் சொன்னால் அதையும் செய்யவேண்டும். அமெரிக்க மக்களின் தலைவலி காய்ச்சலுக்கான மாத்திரையை முடிவு செய்வது கூட வால்மார்ட்தான்.
தனது ஆணைக்குக் கட்டுப்பட மறுக்கும் நிறுவனங்களின் பொருட்களை வால்மார்ட் விற்பனை செய்யாது. அதே போன்ற வேறு நிறுவனத்தின் பொருட்கள் ஏழை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும்.
ஏற்கெனவே சீனாவிலிருந்து அமெரிக்கா செய்து வரும் இறக்குமதியில் 15%க்கு மேல் வால்மார்டின் பங்குதான். பிரிட்டனும் ரஷ்யாவும் பல்வேறு வெளி நாடுகளிலிருந்து செய்யும் இறக்குமதியின் மொத்த மதிப்பைக் காட்டிலும் வால்மார்ட் செய்யும் இறக்குமதியின் மொத்த மதிப்பு அதிகம்.
வால் மார்ட்! மலிவு விலையில் மரணம்!!

உற்பத்தியைக் கட்டுப்படுத்துதல்

ஒவ்வொரு நாளும் பென்டான்வில் எனப்படும் வால்மார்ட்டின் தலைமையகத்திற்கு உலகம் முழுவதிலுமிருந்து உற்பத்தியாளர்கள் படையெடுக்கிறார்கள். அவர்களை இனவாரியாகப் பிரித்து தனியறைகளில் அமர்த்தி வால்மார்ட் தலைகீழ் ஏலத்தைத் துவங்குகிறது.
அதாவது, யார் மிகக் குறைவான விலையைக் கூறுகிறார்களோ அவர்களுக்கே அவ்வாண்டு ஒப்பந்தம் மீண்டும் அடுத்த ஆண்டு சென்ற ஆண்டின் விலையை விடக் குறைத்துக் கொடுக்க அந்நிறுவனங்கள் நிர்பந்திக்கப்படும். கச்சாப் பொருட்களின் விலையேற்றம், ஊழியர்களின் ஊதிய உயர்வு என அந்நிறுவனங்கள் மறுத்தால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, புதிதாக ஏலம் துவங்கும். வால்மார்டின் மூலமாக இந்நிறுவனங்களின் வியாபாரம் பன்மடங்கு அதிகரித்தாலும், கட்டுப்படியாகாத உற்பத்திச் செலவினால் பல நிறுவனங்கள் திவாலாகின்றன. அல்லது அமெரிக்காவில் ஆலைகளை மூடிவிட்டு, உற்பத்தியை சீனா, பங்களாதேஷ், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு மாற்றியிருக்கின்றனர்.
அமெரிக்காவின் ஐந்து பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஜெனரல் எலக்டிரிகல்ஸ், வால்மார்டின் நிர்பந்தத்தினால் தனது உற்பத்தியை மெக்ஸிகோவிற்கும், சீனாவிற்கும் பிற ஆசிய நாடுகளுக்கும் மாற்றிவிட்டது. அமெரிக்க (IUE) யூனியனின் கூற்றுப்படி கடந்த ஏழு ஆண்டுகளில் ஜெனரல் எலக்டிரிகல்ஸில் மட்டுமே 1,00,000 தொழிலாளர்கள் வேலையிழந்து உள்ளனர்.
பிளாஸ்டிக் கச்சா பொருள் விலை கடுமையாக உயரவே, தனது தயாரிப்புகளின் விலையைக் கூட்ட முடிவெடுத்தது அமெரிக்காவின் மிகப்பெரிய பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ‘ரப்பர் மெய்ட்’. வால்மார்ட் விலையுயர்விற்கு சம்மதிக்கவில்லை. மாறாக ரப்பர்மெய்டின் பொருட்களை விற்பதை நிறுத்தியது. அதன் விளைவாக ரப்பர்மெய்ட் நிறுவனம் திவாலாகி தனது நிறுவனத்தை போட்டிக் கம்பெனியான நியுவெல்லிடம் விற்றுவிட்டது. இன்று நியூவெல் நிறுவனம் தொடர்ந்து வால்மார்ட்டுடன் வர்த்தகம் செய்வதற்காக தனது 400 ஆலைகளில் 69ஐ மூடிவிட்டு ஆசியாவிற்கு உற்பத்தியை மாற்றியது. இதனால் இந்நிறுவனத்தில் இதுவரை வேலை இழந்தோர் 11,000 பேர்.
இதேபோன்று லீவைஸ், தாம்சன் டி.வி, உள்ளிட்டு விற்பனையில் கொடிகட்டிப் பறந்த பலப்பல அமெரிக்க நிறுவனங்களை மூடச்செய்து 15 லட்சம் அமெரிக்கத் தொழிலாளர்களின் வாழ்க்கையை அழித்திருக்கிறது வால்மார்ட்.

உழைப்புச் சுரண்டல்

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களை மடக்கிப் போட்டு வியர்வைக் கடைகள் எனப்படும் கொடூரமான கொத்தடிமைக் கூடாரங்களை வால்மார்ட் இரகசியமாக நடத்துகிறது. சீனா மற்றும் இதர ஆசிய நாடுகளிலோ வெளிப்படையாகவே இவை நடத்தப்படுகின்றன. இங்கு ஆணி, பொம்மைகள், மின்விசிறிகள் போன்ற பல்லாயிரம் விதமான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
நாளொன்றுக்கு 13 முதல் 16 மணி நேரம் வேலை, வார விடுமுறை கிடையாது என்று தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்படும் இது போன்ற கூடாரங்களில் விழாக்கால, பண்டிகை விற்பனை சீசன்களில் 20 மணி நேரம் வரை தொழிலாளர்கள் வேலை வாங்கப்படுகிறார்கள்.
நினைத்தே பார்க்க முடியாத இந்தக் கொடூர வேலைக்கு மாதச்சம்பளம் 42 டாலர்கள். இது சீனாவின் குறைந்தபட்ச கூலியை விட 40% குறைவு. இந்த தொழிலாளர்கள் 7 அடிக்கு 7 அடி அறையில் 12 பேர் அடைக்கப்பட்டு அதற்கு வார வாடகை 2 டாலர்களும், மட்டமான உணவிற்கு வாரத்திற்கு 5.50 டாலர்களும் வசூலிக்கப்படுகிறது. இந்த வேலைக் கொடுமையினால் அவர்கள் நோய்வாய்ப்பட்டால் அது அவர்களுடைய சொந்தச் செலவு. சீனாவில் மட்டும் வால்மார்டிற்கு இது போன்ற 5000 கொத்தடிமைக் கூடாரங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஏழை நாடுகளின் தொழிலாளர்களைப் போலவே தனது சொந்த ஊழியர்களையும் வால்மார்ட் ஒடுக்குகிறது. உலக அளவில் வால்மார்ட்டின் ஊழியர்கள் 15 லட்சம் பேர். ஆனால், எங்குமே பெயருக்குக் கூட ஒரு தொழிற்சங்கம் கிடையாது. முன்னர் எந்தக் காலத்திலாவது ஏதாவது ஒரு தொழிற்சங்கத்தில் ஒருவர் இருந்திருந்தால் கூட அவருக்கு வால்மார்ட்டில் வேலை வாய்ப்பு இல்லை.
அதே போல எந்தக் கடையிலாவது தொழிற்சங்கம் அமைக்கப்படும் எனச் சந்தேகித்தால் அந்தக்கடை ஊழியர்களை ரகசியக் காமிராக்கள் கொண்டு கண்காணித்து சந்தேகத்திற்கு உரிய நபர்களை நிர்வாகம் பணிநீக்கம் செய்கிறது. தனது தலைமையகத்தில் இதற்கென்றே உருவாக்கி வைத்திருக்கும் சிறப்பு தொழிற்சங்க எதிர்ப்புப் படையை வரவழைத்து கருங்காலிகளை உருவாக்கி, சங்கம் அமைக்கும் முயற்சியை முளையிலேயே கிள்ளுகிறது.
தொழிற்சங்கங்கள் இருக்கும் மற்ற நிறுவனங்களின் ஊழியர்களை விட வால்மார்ட் ஊழியர்களின் சம்பளம் 23% குறைவு. வால்மார்ட் ஊழியர்களில் மூன்றில் இரண்டு பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கிறார்கள். காப்பீடு செய்யவில்லையென்றால் மருத்துவமே பார்த்துக் கொள்ள முடியாது என்ற நிலையில் உள்ள அமெரிக்காவில், வெறும் 38% வால்மார்ட் ஊழியர்களுக்கு மட்டுமே மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது.
சிறப்பு விற்பனை நாட்களில் தனது ஊழியர்களை வெளியில் செல்லக்கூட அனுமதிக்காமல், கடையில் வைத்துப் பூட்டும் வால்மார்ட், கூடுதல் பணி நேரத்திற்கு தொழிலாளிகளுக்கு ஒரு பைசா கூட ஓவர்டைம் வழங்குவதில்லை. பெண் தொழிலாளிகளுக்கு ஆண்களை விட குறைவான சம்பளம், ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்க மறுப்பது, குழந்தைத் தொழிலாளர் முறை என நீண்டு கொண்டே செல்கின்றன வால்மார்டின் தொழிலாளர் விரோதக் கொள்கைகள்.
இந்தக் கொடுமைகளை எதிர்த்து கனடா நாட்டில் வால்மார்டின் இறைச்சிக்கடை ஊழியர்கள் சங்கம் அமைத்தவுடன், அந்நாடு முழுவதுமுள்ள தனது கடைகளில் இறைச்சிப்பகுதியையே இழுத்து மூடி தொழிலாளர்களுக்கு மிரட்டல் விடுத்தது. தனது தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்காக அமெரிக்காவின் 38 மாநிலங்களில் வழக்குகளைச் சந்தித்து வருகிறது வால்மார்ட். இது தவிர அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரிய வழக்கான 16 லட்சம் முன்னாள், இந்நாள் வால்மார்ட் ஊழியர்கள் இணைந்து தொடுத்துள்ள வழக்கும் அதன்மேல் நிலுவையில் உள்ளது.
வால் மார்ட்! மலிவு விலையில் மரணம்!!

அடுத்த குறி இந்தியா

சமூகச் செல்வங்களான உழைப்பையும், உற்பத்தியையும் தின்று செரித்து, வேலையின்மையையும், வறுமையையும் எச்சங்களாக விட்டுச் செல்லும் பொருளாதாரப் புற்று நோய் வால்மார்ட். இதன் அடுத்த இலக்கு இந்தியா. சில்லறை வணிகத்தை நம்பி வாழும் 4 கோடி குடும்பங்கள், பல கோடி விவசாயிகள் ஆகியோருடைய வாழ்க்கையையும், 10 லட்சம் கோடி மதிப்பு கொண்ட உலகின் நான்காவது பெரிய சில்லறை விற்பனைச் சந்தையுமான இந்தியாவை விழுங்க பல்லாயிரம் கோடி முதலீட்டுடன், வருகிறது வால்மார்ட்.
மலிவு விலையில் கிடைக்கிறது என்பதால் நாம் மரணத்தை வாங்கப் போகிறோமா?