Monday, March 5, 2012

நடமாடும் பணம் நாட்டு கோழி

 நடமாடும் பணம் நாட்டு கோழி
நாட்டுக்கோழி வளர்ப்பு நல்ல வருமானம் தரும் சுய தொழில் ஆகும். நாட்டுக்கோழிகளை அனைவரும் எந்த சிரமமும் இன்றி வளர்க்கலாம்.பெண்கள் பகுதி நேர தொழிலாக நாட்டுக்கோழி வளர்ப்பை செய்ய்லாம்.தற்போது புறக்கடை கோழிகள் எந்த வித நவீன தொழில்நுட்பங்களையும் பின்பற்றாமல் வளர்க்கப்படுகிற்து.அதனால் தேவையான் சத்துக்கள் கிடைக்காமல் உற்பத்தி திறன் குறைந்து காணப்படுகிறது.எனவே கீழே குறிப்பிட்டுள்ள சிறந்த தொழில்நுட்ப்முறைகளை நாட்டுக்கோழி வளர்ப்போர் பின் பற்றி அதிக் இலாபம் பெறாலாம்.

முட்டைகளை சேகரித்தல் மற்றும் பாதுகாத்தல்

பெரும்பாலும் கோழிகள் பகல் நேரங்களிலேயே முட்டையிடும்.பொதுவாக முட்டைகளை உணவுதானிய பானைகளில் வைத்துதான் பாதுகாக்கிறார்கள்.இப்படி பாதுகாத்து அடைக்கு வைக்கும் முட்டைகளின் குஞ்சு பொரிப்பு திறன் குறைவாக உள்ளது.எனவே முட்டைகளின் குஞ்சு பொரிப்பு திறனை அதிகரிக்க, ஒரு இரும்பு ச்ட்டியில் மணல் பரப்பி தண்ணீர் தெளித்து அதன் மேல் சாக்கை போட வேண்டும். முட்டைகளை இதன் மேல் வைத்து பருத்தி துணி போட்டு மூடவேண்டும்.இவ்வாறு பாதுகாக்கும் முட்டைகளின் குஞ்சு பொரிப்பு திறன் 97 சதவிகிதகம் வரை இருக்கும்.

அடை வைத்தல்

சிறிய முட்டைகளையும் முதலில் இடும் முட்டைகளையும் அடைக்கு வைக்கும் போது குஞ்சு பொரிப்பு சதவிகிதம் குறைவாக இருப்பதால் இதனை அடைக்கு வைக்காமல் உணவுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம்.


கோழிகளுக்கு தகுந்தாற் போல் 10 முதல் 12 முட்டைகள் வரை மட்டுமே அடைக்கு வைக்க வேண்டும்.அடை வைக்கும் கூடையை அறையின் இருட்டான பகுதியில் வைக்க வேண்டும்

குஞ்சு பொரிப்பான் இயந்திரம் மூலம் அடைவைத்து ஆரோக்கியமான குஞ்சுகளை பெறலாம்.தற்போது 100 முட்டைகள் முதல் 500 முட்டைகள் வரை அடை வைக்கும் திறன் உடைய இயந்திரம் கிடைக்கின்றன.( இயந்திரம் தேவைபடுவோர் அனுக வேண்டிய மின்னாஞ்சல் முகவரி .vtjana07@gmail.com, K.Venkatesh venkat998877@gmail.com )

கருக்கூடிய முட்டைகளை கண்டறிதல்

பெரும்பாலும் அடை வைக்கும் எல்லா முட்டைகளும் பொரிப்பதில்லை அதனால் கருக்கூடா முட்டைகள் வீணாகின்றன. இதை தடுக்க அடை வைத்த ஏழாம் நாள் முட்டை கருக்கூடிவிட்டதா இல்லையா என்பதை கண்டறிந்து கருக்கூடாத முட்டைகளை உணவுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம்.இதற்கு,நோட்டு அட்டையில் முட்டை அளவுக்கு துவாரம் இடவேண்டும். நோட்டு அட்டையின் மேல் பகுதில் முட்டையை வைத்து கீழ் பகுதியில் ஒரு டார்ச் விளக்கு ஒளியை பாய்ச்ச வேண்டும். கருக்கூடிய முட்டையில் வெளிச்சம் பாயும் போது முட்டையின் கரு கருப்பாக இருப்பதுடன் அதிலிருந்து சிவப்பாக இரத்த கோடுகள் செல்வதை காண முடியும். கருக்கூடாத முட்டை மஞ்சள் நிறமாக இருக்கும்.

இளம் குஞ்சு பராமரிப்பு

குஞ்சு பொரித்தவுட்ன் முதல் ஒரு மாதம் மூங்கில் கூடையில் அடைத்து பாதுகாக்க வேண்டும். குஞ்சு பொரித்த பிறகு எஞ்சிய மஞ்சள் கரு கரைவதற்க்கு வெப்பம் தேவைப்படும். போதிய அளவு வெப்பம் கிடைக்கவில்லை என்றால் குஞ்சுகள் இறந்துவிடும்.இதனால் ஒரு மாதம் மூங்கில் கூடையில் அடைத்து 100 வாட் மூலம் வெப்பம் அளிக்க வேண்டும்.

தீவன பராமரிப்பு

கோழிகளுக்கு தினமும் மேய்ச்சலுடன் 50 கிராம் தீவனம் அளித்து வந்தால் உற்பத்தி திறன் அதிகரிக்கும்.

சோளம் (அ) கம்பு 500 கிராம்
தவிடு 300 கிராம்
புண்ணாக்கு 150 கிராம்
தாது உப்பு 20 கிராம்

நோய் தடுப்பு
கோழிகளை தாக்கும் நோய்களில் வெள்ளை கழிச்சல் நோய் மிகவும் முக்கியமானது.இந்த நோய் கோடைகால மற்றும் குளிர்கால பருவ மாற்றத்தின்போது அதிகமாக பாதிக்கும்.இதை கொக்கு நோய் என்றும் கூறலாம்.இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகளின் குடலும் நரம்புமண்டலமும் பாதிக்கப்படும். இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகள் தீவனம் எடுக்காது.தண்ணீர் குடிக்காது.வெள்ளையாக கழியும். எச்சமிடும்போது ஒரு காலை தூக்கிகொள்ளும்.ஒரு இறக்கை மட்டும் செயலிழந்து தொங்கும்.

வெள்ளை கழிச்சல் நோய் வராமல் தடுக்க குஞ்சு பொரித்த 7 நாட்களில் RDVF அல்லது Lasota என்ற் தடுப்பூசியை ஒன்று அல்லது இரண்டு சொட்டுகள் கண்ணில் விடவேண்டும்.இந்த தடுப்பு மருந்து இரண்டு மாதம் வரை நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். 2 மாத வயதிற்க்கு பிற்கு RDVK என்ற் தடுப்பூசியை 8 சொட்டுகளை இறக்கையின் தோலுக்கடியில் போட வேண்டும். இந்த தடுப்பு மருந்து ஒரு வருடம் வரை நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்.பிறகு ஒவ்வொரு வருடமும் தடுப்பூசி போடவேண்டும்.

1 comment:

Sree kaviya farms said...

இயற்கை முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு , வெள்ளாடு வளர்ப்பு , இயற்கை விவசாயம் பற்றி தெரிந்துகொள்ள,
மற்றும் நாட்டுகோழி, நாட்டுக்கோழி குஞ்சுகள், வெள்ளாடு விற்பனைக்கு உள்ளது. அணுகவும் ஸ்ரீ காவிய பார்ம்ஸ் – அலை பேசி:8903979039