Friday, March 9, 2012

மார்ச் 9


மார்ச் 9
1832 - அரசியலில் ஈடுபடப் போவதாக Abraham Lincon அறிவித்தார். Illinois மாநிலத் தேர்தலில் நின்று தோல்வியைத் தழுவினார். அடுத்த முப்பதாண்டுகளில் அவர் அமெரிக்காவின் அதிபரானார்.
1847 - ஐக்கிய அமெரிக்காவின் படைகள் ஜெனரல் வின்ஃபீல்ட் ஸ்கொட் தலைமையில் மெக்சிக்கோவைத் தாக்கினர்.
1919- எகிப்தில் 1919 புரட்சி வெடித்தது.
1923 - விளாடிமிர் லெனினுக்கு மூன்றாம் தடவையாக மாரடைப்பு ஏற்பட்டது.
... 1945 - இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க பி-29 போர் விமானங்கள் டோக்கியோவில் குண்டுகளை வீசியதில் ஏற்பட்ட தீயினால் 100,000 பேர் கொல்லப்பட்டனர்.
1956 - ஜோர்ஜியாவில் இடம்பெற்ற மாபெரும் மக்கள் எதிர்ப்புப் போராட்டம் சோவியத் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது.
1957 - அலாஸ்காவில் அண்ட்றியானொவ் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலத்த சேதமும் ஆழிப் பேரலையும் ஏற்பட்டது.
1959 - பார்பி பொம்மை முதன் முதலாக விற்பனைக்கு வந்தது.
1967 - ஜோசப் ஸ்டாலினின் மகள் சிவெட்லானா அலிலுயேவா ஐக்கிய அமெரிக்காவுக்குஹ்ட் தப்பிச் சென்றார்.
1986 - சலேஞ்சர் விண்ணோடத்தின் அழிந்த சிதைவுகளை ஐக்கிய அமெரிக்காவின் ஆழ்கடலோடிகள் கண்டுபிடித்தனர். இறந்த ஏழு விண்வெளி வீரர்களினதும் உடல்கள் உள்ளே இருந்தன.
2006 - சனியின் துணைக்கோளான என்செலாடசில் திரவ நிலையில் நீர் கண்டுபிடிக்கப்பட்டது.

No comments: