Friday, March 9, 2012

மார்ச் 7


மார்ச் 7
1793 - ஸ்பெயின் மீது பிரான்ஸ் போரை அறிவித்தது.
1798 - பிரெஞ்சு இராணுவம் ரோமினுள் நுழைந்தது. ரோமன் குடியரசு அமைக்கப்பட்டது.
1799 - பிரான்சின் முதலாம் நெப்போலியன் பாலஸ்தீனத்தின் ஜாஃபா நகரைக் கைப்பற்றினான். அவனது படைகள் கிட்டத்தட்ட 2,000 அல்பேனியர்களைக் கொன்றனர்.
1814 - பிரான்சின் முதலாம் நெப்போலியன் குரோன் நகரில் உருசியர்களுக்கும் புருசியர்களுக்கும் எதிரான போரில் வெற்றி பெற்றான்.
... 1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: வடமேற்கு ஆர்கன்சாவில் அமெரிக்கப் படைகள் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புப் படையினரை வென்றனர்.
1876 - அலெக்சாண்டர் கிரகம் பெல் தொலைபேசிக்கான காப்புரிமம் பெற்றார்.
1981 - கலிபோர்னியாவில் நார்மன் ஷம்வே என்பவர் இதயம் மற்றும் நுரையீரல் ஒட்டு மாற்று அறுவை சிகிச்சையை முதன் முதலாகச் செய்து காட்டினார்.
1987 - James Smith என்ற வீரரை வீழ்த்தி இளைய வயதில் உலகக் குத்துச் சண்டை heavyweight விருதை வென்றார் Mike Tyson.

1902 - இரண்டாம் போவர் போர்: தென்னாபிரிக்காவின் போவர்கள் பிரித்தானியர்களுக்கு எதிரான கடைசிச் சமரில் வெற்றியீட்டினர்.
1911 - மெக்சிக்கோவில் புரட்சி வெடித்தது.
1912 - தென் முனையைத் தாம் டிசம்பர் 14, 1911 இல் அடைந்ததாக ருவால் அமுன்சென் அறிவித்தார்.
1918 - முதலாம் உலகப் போர்: பின்லாந்து ஜெர்மனியுடன் கூட்டுச் சேர்ந்தது.
1936 - லொக்கார்னோ உடன்படிக்கைகள், வெர்சாய் ஒப்பந்தம் ஆகியவற்றிற்கு எதிராக ரைன்லாந்தை ஜெர்மனி கைப்பற்றியது.
1951 - கொரியப் போர்: கொரியாவில் ஐநாப் படைகள் சீனப் படைகளுக்கெதிராகத் தாக்குதலை ஆரம்பித்தனர்.
1969 - கோல்டா மெயிர் இசுரேலின் முதற் பெண் பிரதமரானார்.
1989 - மக்கள் சீனக் குடியரசு திபெத்தின் லாசா பகுதியில் இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தனர்.
1996 - பாலஸ்தீனத்தில் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது.
2006 - காசியில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
2007 - இந்தோனீசியாவின் யாஹ்யகர்த்தா விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்த கருடா விமானம் வயல் ஒன்றில் வீழ்ந்து வெடித்ததில் 49 பேர் கொல்லப்பட்டனர்.

No comments: