Friday, March 9, 2012

மார்ச் 8


மார்ச் 8
1618 - ஜொஹான்னெஸ் கெப்லர் கோள்களின் இயக்கங்களுக்கான மூன்றாவது விதியைக் கண்டுபிடித்தார்.
1761 - வடக்கு லண்டனில் ஹாம்ப்ஸ்டட் நகரில் நிலநடுக்கம் பதியப்பட்டது.
1782 - ஐக்கிய அமெரிக்காவின் ஒகைய்யோ மாநிலத்தில் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறிய 90 அமெரிக்க இந்தியப் பழங்குடிகள் பென்சில்வேனியாவின் துணை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 68 பேர் குழந்தைகளும் பெண்களுமாவர்.
1817 - நியூ யோர்க் பங்குச் சந்தை நிறுவன மயப்படுத்தப்பட்டது.
... 1857- அனைத்துலக உழைக்கும் மகளிர் நாள் அறிவிப்பு
1906 - பிலிப்பைன்சில் அமெரிக்கத் துருப்புக்களால் ஏறத்தாழ 600 ஏதிலிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
1911 - அனைத்துலக மகளிர் நாள் முதன் முதலாக டென்மார்க்கில் கொண்டாடப்பட்டது.
1917 - சரியான உணவு கொடுக்கவில்லை என்பதற்காக ரஷ்யாவில் நெசவுத் தொழிற் சாலைகளில் பணிபுரிந்து கொண்டிருந்த ஆண், பெண் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அந்த வேலை நிறுத்தம் மற்ற நகரங்களுக்கும் பரவியது. அந்நிகழ்ச்சியே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது.
1921 - ஸ்பெயின் பிரதமர் எடுவார்டோ டாட்டோ மாட்ரிட்டில் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறும்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
1942 - இரண்டாம் உலகப் போர்: ஜாவாவில் ஜப்பானியப் படைகளிடம் டச்சுப் படைகள் சரணடைந்தனர்.
1942 - இரண்டாம் உலகப் போர்: பர்மாவின் ரங்கூன் நகரை ஜப்பான் கைப்பற்றியது.
1950 - சோவியத் ஒன்றியம் தன்னிடம் அணுக்குண்டு இருப்பதாக அறிவித்தது.
1957 - எகிப்து சூயஸ் கால்வாயை மீண்டும் திறந்தது.
1965 - வியட்நாம் போர்: 3,500 அமெரிக்கப் படைகள் தென் வியட்நாமில் தரையிறங்கினர்.

No comments: