Thursday, March 29, 2012

நடவுக்கேற்ற தென்னை

நடவுக்கேற்ற தென்னை

உயிரினங்கள் அனைத்திற்கும் கரு உருவாகி தனது அடுத்த வாரிசு வெளிவர குறிப்பிட்ட காலம் தேவைப்படுகிறது. இந்த விதிமுறைகள் உயிரினங்களுக்கு மட்டுமல்ல. தாவரங்களுக்கும் பொருந்தும். தென்னை மரங்களில் பாளை பூ வெடித்து, சூல் முடியில் ஒட்டிய மகரந்தப்பொடி சூல் பைக்குள் சென்று கருசேர்க்கை ஆனதில் இருந்து 12 வது மாதம் நல்ல நெத்து விதை தேங்காய் கிடைக்கும். இது முளைத்துவர மூன்று மாதங்கள் ஆகும். அடுத்த மூன்று இலை வந்த பிறகு தான் நடவுக்கேற்ற தென்னம்பிள்ளையாக மாறுகிறது. ஆக ஒரு தென்னம்பிள்ளையாக உருபெற 18 மாதங்கள் ஆகின்றன.
விதை இலை சத்துக்கள்
தென்னம்பிள்ளைகளில் முளை தோன்றியதில் இருந்து 3 மாதங்களுக்குள் 2 அல்லது 3 இலைகள் வந்துவிடும். இத்தகைய தென்னம்பிள்ளைகள் நடவுக்கு சிறந்தோடு மட்டுமின்றி 99 சதவீதம் செதம் இன்றி பிழைத்துவிடும். இவ்வாறு உள்ள தென்னம்பிள்ளைகளை தான் தேர்ந்தெடுக்கவேண்டும்.
தாவரங்களில் ஒரு விதையில்லை. இரு விதையிலை என 2 வகைகள் உள்ளன. இதில் தென்னை ஒரு விதையிலை தாவரத்தை சேர்ந்தது ஆகும். விதைகள் இருக்கும் முளைக்குருத்து முளைத்து வளர்ந்து, இயற்கையாக பூமியில் கலந்திருக்கும் அங்கக உணவை கிரகிக்கும் பருவம் வரும் வரை தாவரங்கள் தனது கன்றுகளுக்கு தேவையான சத்துக்களை விதைக்குள் சேர்த்து வைத்துள்ளது. விதை முளைத்து வேர்கள் பூமியில் பதிந்து, பூமியில் உள்ள சத்துக்களை கிரகிக்க அதன் இனங்களை பொறுத்து குறிப்பிட்ட காலம் ஆகிறது. அந்தக் காலம் வரை தனது சந்ததிகளுக்கு விதை இலையில் உள்ள சத்துக்கள் பயன்படுகிறது.
அதிக அளவு மகசூல்
விதை இலையில் உள்ள சத்துக்கள் முழுவதும் தீர்ந்து விதையிலைகள் மக்கி போவதற்குள் நாற்றுகளை எடுத்து நலம் நினைக்கிற இடத்தில் நடுவதால் அந்த நாற்று தாமதமின்றி புதுவேர் விட்டு பிழைத்து விடும். தென்னம்பிளைகலை அதிக காலம் நாற்றங்காலிலே வைத்திருப்பதால் விதையிலைகள் சத்துக்களை இழந்துவிடுகின்றன. 2 அல்லது 3 வருடம் நாற்றங்காலில் வைத்திருந்த பிள்ளைகளை நடும் போது, புது வேர்கள் வளர சக்தியின்றி பிள்ளைகள் காய்ந்து விடுகின்றன. ஓரிரு தென்னம்பிள்ளைகள் பிழைப்பது கூட வயது குறைந்த சிறியவைகளாக தான் இருக்கும். இதிலிருந்து 3 முதல் 4 மாதம் வரையுள்ள தென்னம்பிள்ளைகள் தான் நடவுக்கு சிறந்தது என்பது தெரிய வருகிறது. எனவே தென்னை விவசாயிகள் நடவுக்கேற்ற தென்னம்பிள்ளைகளை வாங்கி நடவு செய்து அதிக அளவு மகசூலிகை பெறலாம்.

கறிக்கோழி வளர்ப்பு

கறிக்கோழி வளர்ப்பு



கோழிக்கறி வகைகளில் அதிகம் விரும்பப்படுவது கறிக்கோறி (ப்ராய்லர்) வகையாகும். பல தனியார் நிறுவனங்கள் விவசாயிகளுடன் இணைந்து ஒப்பந்த முறையில் கறிக்கோழி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். விற்பனையில் எந்தவித சிரமமும் இல்லை. மிருதுவான, மென்மையான சதையை உடைய 1.5-2.0 கிலோ எடையுள்ள 8 வார வயதிற்கு கீழ் உள்ள கோழிகளை ப்ராய்லர் என்கிறோம்.

சிறந்த பராமரிப்பு முறைகள்
கோழிக் கொட்டகையின் வெப்பநிலை: முதல் வாரத்தில் 950 சி இருக்க வேண்டும். பின்பு ஒவ்வொரு வாரமும் 50 சி வெப்பத்தை குறைக்க வேண்டும். 6-ஆவது வாரம் 700 சி வெப்பம் வரும் வரை குறைக்க வேண்டும்.
காற்றோட்ட வசதி : கோழிக் கழிவிலிருந்து வெளிப்படும் அமோனியாவை நீக்கி மூச்சுத்திணறல் வராமல் தடுக்க நல்ல காற்றோட்டத்தைப் பராமரிக்க வேண்டும்.
மின்விளக்கின் மூலம் வெப்பம் அளித்தல்: 200 சதுர அடி தரையளவிற்கு 60 வாட் விளக்குகள் போட வேண்டும்.
தரை இடஅளவு : ஒரு கோழிக்கு 1 சதுர அடி
மூக்கு வெட்டுதல்:1 நாள் வயதுடைய குஞ்சுகளுக்கு மூக்கை வெட்ட வேண்டும்.
கறிக்கோழி (ப்ராய்லர்) சுகாதாரப் பராமரிப்பு
· நோயற்ற குஞ்சுகளைக் கொண்டு தொடங்க வேண்டும்
· மேரக் நோயைத் தடுக்க குஞ்சு பொறிப்பகத்திலேயே தடுப்பூசி போட வேண்டும்.
· 4-5 நாட்களில் ஆர்.டி.வி.எப். 1 போட வேண்டும்.
· கழிச்சல் (காக்கிடியாசிஸ்) நோயினைத் தடுக்க தீவனத்துடன் மருந்துகளைக் கலந்து கொடுக்க வேண்டும்.
· பூஞ்சாண நச்சுகளிலிருந்து தீவனத்தைப் பாதுகாக்க வேண்டும்.
· தரையில் 3 இஞ்ச் ஆழத்திற்கு நிலக்கடலை கழிவு அல்லது நெல் உமி கொண்டு நிரப்ப வேண்டும்.
விற்பனை செய்தல்· 6-8 வாரங்கள் வயதுடைய கோழிகளை விற்பனை செய்ய வேண்டும்.
· கோழிகளைப் பிடிக்கும் போது, காயங்கள் ஏற்படாமல் இருக்க, தீவனத் தட்டுகளையும், தண்ணீர் தட்டுகளையும் அகற்ற வேண்டும்.
· திடீர் வானிலை மாற்றங்களிலிருந்து கோழிகளைக் காக்க வேண்டும்.

சுகுணா (கோயமுத்தூர்), வெங்கடேஸ்வரா (பூனா), பயனியர், ப்ரோமார்க் போன்ற தனியார் நிறுவனங்கள், ஒப்பந்த முறையில் விவசாயிகளுடன் இணைந்து கறிக்கோழி உற்பத்தி செய்கின்றன. மேலும்,
· சிறந்த இனங்கள் கிடைக்குமிடம்
· கோழிக் கொட்டகை அமைத்தல்
· தீவனம் அளித்தல்
· நல்ல வளமான கோழிகளை உருவாக்குதல்
போன்றவற்றில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அருகில் உள்ள கால்நடை பராமரிப்பகத்தையோ அல்லது வேளாண் அலுவலகத்தையோ அணுகவும்.

பனையிலிருந்து பெறப்படும் பயன்கள்

பனையிலிருந்து பெறப்படும் பயன்கள் :

பனையின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பலவகையான பயன்களை மக்கள் பெறுகிறார்கள். பனையிலிருந்து ஏராளமான உற்பத்திப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. முற்காலத்தில் தயாரித்துப் பயன்படுத்தப்பட்ட எத்தனையோ பொருட்கள் நவீன மாற்றீடுகளுக்கு இடம் கொடுத்து ஒதுங்கிக் கொண்டன. பனையிலிருந்து பல உப உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் மனிதர்களின் உணவும், விலங்குகளின் உணவும் அடங்கும். உணவுப்பொருட்களை விட கட்டடப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என பல பொருட்கள் பனையிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.
உணவுப்பொருட்கள்
• நுங்கு
• பனம் பழம்
o பூரான்
o பனாட்டு - (பனை + அட்டு) பனம்பழத்தைப் பிழிந்து எடுத்து உலரவைத்து செய்யப்படும் பொருள்.
o பாணிப்பனாட்டு
o பனங்காய்ப் பணியாரம்
• கள்ளு
o பனங்கள்ளு
o பனஞ்சாராயம்
o வினாகிரி
• பதநீர்
o பனங்கட்டி = கருப்பட்டி = பனைவெல்லம்.
o சில்லுக் கருப்பட்டி
o பனங்கற்கண்டு
o பனஞ்சீனி (பனை வெல்லம்)
• பனங்கிழங்கு
o ஒடியல்
ஒடியல் புட்டு
ஒடியல் கூழ்
o புழுக்கொடியல்
• முதிர்ந்த ஓலை
o விலங்கு உணவு
• குருத்து
உணவுப்பொருள் அல்லாதவை


பனைப் பொருட்கள் கடை


பனை ஓலைச் சுவடிகள்


பனை ஓலைத் தொப்பி
• குருத்தோலை

வீட்டுப்பயன்பாட்டுப் பொருட்கள்:
• பனையோலை
o பெட்டி
o நீற்றுப் பெட்டி
o கடகம்
o பனைப்பாய்
o கூரை வேய்தல்
o வேலியடைத்தல்

பனைப்பாய்

பாயின் பின்னல்

பனையோலைப் பெட்டி

விவசாயப் பயன்பாட்டுப் பொருட்கள்:
• கிணற்றுப் பட்டை
• எரு
• துலா

அலங்காரப் பொருட்கள்:
• பனம் மட்டை
o வேலியடைத்தல்
o நார்ப் பொருட்கள்
o தட்டிகள் பின்னல்

வேறு பயன்பாடுகள்:
• கங்குமட்டை
o தும்புப் பொருட்கள்
o விறகு
• மரம்
o கட்டிடப்பொருட்கள்
o தளபாடங்கள்
• பனம் விதை
o எரிபொருள்

மன அழுத்தத்தை போக்கும் ஏலக்காய்

மன அழுத்தத்தை போக்கும் ஏலக்காய் வாசனை பொருட்களின் அரசி என்று அழைக்கப்படும் ஏலக்காய் சமையலின் போது வாசனைக்காக பயன்படுத்தப்படும் பொருட்களில் முக்கியமான ஒன்று. செரிமான சக்தியைக் கூட்டி, பசியைத் தூண்டுவதில் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.

வாசனைப் பொருளாக பயன்படுத்தப்படும் ஏலக்காயில் மருத்துவ குணம் நிறைந்துள்ளது. இதில் கனியும் விதைகளும் மருத்துவப் பயன் கொண்டவை. நாற்பது ஆண்டுகால ஆய்வுகள் ஏலக்காயில் உள்ள எளிதில் ஆவியாகும் எண்ணெய்களின் மருத்துவத்தை உறுதி செய்கின்றன.

நறுமணம் கொண்ட விதைகள் வயிற்று வலியினை சரிசெய்கின்றன. ஜீரணத்தை தூண்டுபவை. உடலின் வெப்பத்தை கூட்டி ஜீரணத்தினைத் அதிகப்படுத்தும். இது தசை சுரிப்பு கோளாறுகளுக்கு எதிரானது. ஏலக்காயில் பல எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் உள்ளன: போர்னியோல், கேம்ஃபர், பைனின், ஹீயமுலீன், கெரியோஃபில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் போன்றவை இதன் மருத்துவ குணங்களுக்கு அடிப்படையாகும். இந்திய மருத்துவத்தில் ஆஸ்துமா, மூச்சுக்குழல் அழற்சி, சிறுநீராகத்தின் கல், நரம்பு தளர்ச்சி, மற்றும் பலவீனம் நீக்க பயன்படுத்தப்படுகிறது. சீன மருத்துவத்தில் சிறுநீர்ப் போக்கு கட்டுப்பாடின்மையினைப் போக்கவும் வலுவேற்றியாகவும் உதவுகிறது.

வாய் துர்நாற்றம் போக்கவும் ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது. மன அழுத்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் ஏலக்காய் டீ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும் போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சீக்கிரமே குறைகிறதாம். நாவறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு என பல பிரச்சினைகளிலிருந்து ஏலக்காயை சும்மா வாயில் போட்டு மெல்லுவதாலேயே நிவாரணம் பெறமுடியும். எனினும் இதை அதிகமாக, அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லதல்ல. வெயிலில் அதிகம் அலைவதால் வரும் தலைசுற்றல், மயக்கத்திற்கு ஏலக்காய் சிறந்த மருந்தாகும்.

நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் கொஞ்சமாக பனைவெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். விக்கலை உடனே நிறுத்தும் சக்தி ஏலக்காய்க்கு உண்டு. இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி, வடிகட்ட வேண்டும்.

மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தால் விக்கல் உடனே நின்றுவிடும். வாயுத் தொல்லையால் அவதிபடுகிறவர்கள் கூச்சமின்றி நாடவேண்டிய மருந்து ஏலக்காய். ஏலக்காயை நன்கு காயவைத்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாயுத்தொல்லை எப்போதும் இருக்காது.

வேகவைத்த உணவே ஆரோக்கியம்


`கண்டதையும் படிப்பவன் பண்டிதன் ஆவான்' என்ற பழமொழி போல, ``கண்டதையும் தின்பவன் பலவான் ஆவான்' என்ற புது மொழியும் வழக்கத்தில் இருக்கிறது. `கல்லைத் தின்றால் கூட கரைந்து போகும் வயது' என்று வாலிப வயதினரைச் சொல்வதுண்டு. `தின்பது' அதாவது சாப்பிடுவது, இவை இரண்டுமே ஜீரணத்தோடு சம்பந்தப்பட்டதாகும்.

ஜீரணம்- இதை செரித்தல்,செரிமானம் என்று சொல்வதுண்டு. வேக வைத்த உணவு, வேக வைக்காத உணவு, என நாம் சாப்பிடும் உணவு இரு வகைகளாக இருக்கின்றன. சில பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், காய்களை, நாம் வேக வைக்காமல் அப்படியே சாப்பிட முடியும். ஆனால் சிலவற்றை வேக வைத்துத் தான் சாப்பிட முடியும்.

வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளி, கேரட், முட்டைகோஸ் போன்ற காய்கறிகளை, பச்சையாக, வேக வைக்காமல் அப்படியே சாப்பிட முடியும். அதற்காக `நான் பச்சைக் காய்கறிகளைத்தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடித்து, ஒரு கத்திரிக்காயை நம்மால் கடித்துத் தின்ன முடியுமா? முடியாது. அப்படியே சாப்பிட்டாலும் அரை குறையாக ஜீரணமாகி, வயிற்றுப் பிரச்சினையைத் தான் உண்டு பண்ணுமே தவிர, சும்மா இருக்காது.

சமைத்த உணவு அதாவது வேகவைத்த உணவு பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. சமைக்காத அதாவது வேக வைக்காத உணவுகளில் பாக்டீரியாக்கள் உயிரோடு இருக்க வாய்ப்புண்டு. உணவுப் பொருட்கள் வேக வைக்கப்படும் போது, இந்த பாக்டீரியாக்கள் அழிந்து விடுகின்றன. எனவே பாதுகாப்பான உணவு சாப்பிட, உணவை வேக வைப்பது நல்லது.

மேலும் வேக வைக்கப்படுவதால், உணவுப் பொருள்கள் மெல்லுவதற்கும், விழுங்குவதற்கும், ஜீரணம் ஆவதற்கும் மிக மிக உபயோகமாக இருக்கிறது. `வேக வைக்காத உணவு சாப்பிடும் பெரும்பாலானோருக்கு, சாப்பிடும் உணவு சரிவர ஜீரணம் ஆகாமல், உடலுக்கு ஒத்துக்கொள்ளாமல், அஜீரணம் ஆகி விடுகிறது. எனவே மனிதனுடைய உணவு மண்டலம், வேக வைத்த உணவு சாப்பிடுவதற்கு ஏற்ற மாதிரிதான் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று இன்னொரு ஆய்வு கூறுகிறது.

மனித உடலுக்குத் தேவையான சக்தியும், சத்தான பொருள்களும், நாம் சாப்பிடும் உணவிலிருந்துதான் கிடைக்கிறது. நாம் சாப்பிடும் இட்லி, தோசை, சாதம், பிரியாணி, முந்திரி, பாதாம், பிஸ்தா, அக்ரூட் முதலியவைகளில் உள்ள சத்துக்களை, நமது உடம்பு நேரடியாக எடுத்துக் கொள்ள முடியாது. நாம் சாப்பிடும் உணவுப் பொருள்கள் அனைத்தும் துண்டு துண்டாக்கப்பட்டு, தூள் தூளாக்கப்பட்டு, கடையப்பட்டு, கூழாக்கப்பட்டு, முழுவதும் ஜீரணமாகி, கடைசியாகத் தான் உடலுக்கு உபயோகமாகும் பொருளாக மாற்றப்படுகிறது.

எனவே ஜீரணம் என்பதே ஒரு கூட்டு முயற்சியாகும். அதாவது நாம் சாப்பிடும் உணவுப் பொருள் உணவுப் பாதையில் துண்டு துண்டாக்கப்பட்டு, சிறுசிறு துகள்களாக்கப்பட்டு, கூழாக்கப்பட்டு, பின் அந்த சிறு உணவுத் துகள்களிலுள்ள சக்திகளெல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டு, உறிஞ்சப்பட்டு, அதன் பின் இரத்தத்தில் கலக்கப்பட்டு, ரத்தம் மூலமாக உடல் முழுவதுக்கும் கொண்டு போகப்பட்டு, நமது உடல் ஆரோக்கியமாக இருக்க, உதவுவதுதான் `ஜீரணம்' ஆகும்.

ஜீரணமாகாத எஞ்சிய உணவுப் பொருட்கள், அதாவது ஜீரண வேலை நடக்கும் போது, ஜீரணத்துக்குக் கட்டுப்படாத சில உணவுப் பொருள்கள், ஜீரணப்படுத்தப்படாத சில உணவுப் பொருள்கள் ஒன்று சேர்ந்து, கடைசியாக `மலம்' என்ற பெயரில் உடலை விட்டு வெளியேறுகிறது. `உணவு செரிமானம்' உணவுப் பாதையில் தான் நடக்கிறது.

உணவுப் பாதை என்பது வாயில் ஆரம்பித்து, பின் நெஞ்சுப் பகுதியிலுள்ள உணவுக் குழாய், அடுத்ததாக இரைப்பை, அதற்கடுத்து சிறுகுடல், அதற்கடுத்து பெருங்குடல் தாண்டி கடைசியாக ஆசன வாயில் முடிகிறது. வாயில் ஆரம்பித்து, ஆசன வாயில் முடியும் உணவுப் பாதை ஒரு குழாய் போன்று சுமார் இருபத்து நான்கு அடி நீளம் இருக்கிறது.

ஒரு மனிதனின் சராசரி உயரமே, சுமார் ஆறு அடிதானே. இதில் எப்படி இருபத்து நான்கு அடி நீளத்துக்கு உணவுப் பாதை இருக்கிறது என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். உணவு மண்டலத்திலுள்ள சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இரண்டுமே, வயிற்றுக்குள் வளைந்து, வளைந்து சுருண்டு கிடப் பதால், நீளம் தெரிவதில்லை.

மனிதனின் மொத்த உணவுப் பாதையில் சிறுகுடல் மட்டுமே சுமார் இருபத்தி இரண்டு அடிநீளம் இருக்கிறது. அதே மாதிரி அகலம் சுமார் மூன்று செ.மீ. இருக்கிறது. அதே நேரத்தில் பெருங்குடல் சுமார் ஐந்தடி நீளம்தான் இருக்கும். சிறுகுடலை விட பெருங்குடல் அகலமாகவும, நீளம் குறைவாகவும் இரு க்கும். மொத்த உணவுப் பாதையில் ஐந்தில் ஒரு பங்கு நீளம் பெருங்குடலுடையது.

மனிதர்களை ஒப்பிடும்போது, அநேக விலங்கு களுக்கு சிறுகுடலின் நீளம், அதனுடைய உடல் நீளத்தை மாதிரி, சுமார் மூன்றரை மடங்கு அதிகமாக இருக்கும். ஒரு மிகப்பெரிய நாயின் சிறுகுடலின் நீளம், மனிதனை மாதிரியே சுமார் இருபது அடி வரை இருக்கு மாம். மிகப்பெரிய விலங்காகிய யானை ஒரு நாளைக்கு சுமார் இருநூறிலிருந்து மூன்னூறு கிலோ வரை இலை, தழை, காய், கனிகளை உணவாக சாப்பிடுமாம்.

ஆனால் யானையின் ஜீரண சக்தி மிகவும் குறைவாம். சாப்பிடும் அவ்வளவு பொருளையும் அதனால் ஜீரணிக்க முடியாதாம். எனவே சாப்பிடும் மொத்த உணவில், சுமார் ஐம்பது சதவீதம் உணவு மட்டும் தான் ஜீரணமாகி, உடலுக்கு உபயோகப்படும். மீதி ஐம்பது சதவீதம் உபயோகம் ஆகாதாம். சாப்பிடும் உணவு ஜீரணமாகி உணவுப் பாதையிலிருந்து காலியாகி, கழிவாக வெளியே வர, யானைக்கு சுமார் இரண்டரை நாட்கள் ஆகிறது.

இதே மாதிரி நாய்க்கு சுமார் ஒன்பது மணி நேரமும், குதிரைக்கு சுமார் இரண்டு நாட்களும் ஆகுமாம். உணவுப் பாதை நான்கு முக்கிய வேலைகளைப் பார்க்கிறது.

1) நாம் சாப்பிடும் உணவை தொண்டையிலிருந்து உணவுப் பாதைக்குள் இழுத்துக் கொள்கிறது.

) பின் இந்த உணவுப் பொருளை, துண்டு துண்டாக்கி, கூழாக்கி, பின் ரசாயன மாற்றம் செய்யப்பட்ட அதிலுள்ள சத்துப் பொருளையும், சக்திப் பொருளையும் தனியாகப் பிரிக்கிறது.

3) பின் இந்த சத்துப் பொருளையும், சக்திப் பொருளையும் சிறுகுடல், பெருங்குடலிலுள்ள சுவர்கள் வழியாக உறிஞ்சி, உடலின் ரத்த ஓட்டத்திற்கு அனுப்புகிறது.

4) எல்லா சத்துக்களையும் உறிஞ்சி எடுத்த பின்னர், கடைசியாக எஞ்சியுள்ள உணவுச் சக்கையை, கழிவுப் பொருளை வெளியே தள்ளுகிறது.

அதாவது நாம் சாப்பிடும் உணவு, வாயிலிருந்து அப்படியே வழுக்கி, தொண்டையைக் கடந்து, நெஞ்சுப் பகுதியிலுள்ள உணவுக் குழாய் வழியாக கீழே இறங்கி, இரைப்பையை வந்தடைகிறது. பின் இரைப்பையிலிருந்து, சிறுகுடலின் மூன்று பகுதிகளைக் கடந்து, பெருங்குடலுக்கு வந்தடைகிறது.

முக்கால்வாசி ஜீரண வேலையும், சத்துப் பொருட்கள் உறிஞ்சப்படுவதும் இரைப்பையிலும், சிறு குடலிலுமே முடிவடைந்து விடுகிறது. மீதி இருக்கும் தண்ணீரும், கழிவுப்பொருளும், பெருங்குடலின் மூன்று பகுதிகளைக் கடந்து, ஆசன வாய் வழியா `மலம்' என்ற பெயரில் வெளியேற்றப்படுகிறது.

புற்று நோயை கண்டுபிடிக்க நவீன ரத்தப் பரிசோதனை


மனிதர்களின் இயல்பு வாழ்க்கையில் இடியைத் தூக்கி போட்டு நிலைகுலையச் செய்துவிடும் புற்றுநோயை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும். இல்லையென்றால் அது வேர்விட்டு, கிளைவிட்டு பெரிய ஆல மரமாக விஸ்வரூபம் எடுத்துவிடும். அதன்பிறகு அதனை எதிர்கொண்டு வெற்றி பெறுவதும், மீண்டு வருவதும் குதிரைக் கொம்புதான் என்கிறது அறிவியல்.
`புற்றுநோய் என்ன மரமா? அதெப்படி வேர்விட்டு, கிளைவிட்டு விஸ்வரூபம் எடுக்க முடியும்' என்று யோசிக்கிறீர்களா?
உண்மைதான், மண்ணில் விழும் ஒரு விதை போதிய நீரும், ஊட்டச்சத்துகளும் கிடைக்கும்போது வேர்விட்டு வளர்ந்து கிளைக்கத் தொடங்கும். அதுபோலவே உடலின் ஓர் உயிரணு அல்லது திசுவில் உருவாகும் புற்றுநோய் மெல்ல மெல்ல வளர்ந்து புற்று நோய் கட்டியாகி விடும். அதன்
பிறகு அந்தக் கட்டி உடைந்து அதிலிருந்து வெளியாகும் புற்றணுக்கள் ரத்த ஓட்டத்தில் கலந்துவிடும். இவற்றை சுழலும் புற்றணுக்கள் (Circulating Tumor Cells) என்கிறார்கள்.
புற்றுநோய் ஓர் உயிர்கொல்லி நோயாவதே இந்த சுழலும் புற்றணுக்களால்தான். அதாவது, ஒரு குறிப்பிட்ட உடல் பகுதியை பாதிக்கும் புற்றுநோய் சுழலும் புற்றணுக்கள் மூலமாக ரத்த ஓட்டத்தில் கலந்து உடலின் பல்வேறு பகுதிகளையும் பாதிக்கிறது. இதனால் உடல் முழுவதும் நலிவுற்று மரணம் ஏற்படுகிறது. இந்த பாதிப்பை தொடக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதே புற்றுநோய் மருத்துவத்தின் தலையாய நோக்கமாக இருக்கிறது.
இதற்கு சுலபமான வழி ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள் அமெரிக்காவின் ஸ்கிரிப்ஸ் ஆய்வு மைய ஆய்வாளர்கள்.
ரத்த ஓட்டத்தில் கலந்திருக்கும் சுழலும் புற்றணுக்களை கண்டறிந்து, அவற்றை மேலும் விரிவாக ஆய்வு செய்ய உதவும் அதி நவீன ரத்த பரிசோதனைதான் அந்த சுலபமான வழி.
HDCTC அல்லது ஹை டெபனிஷன் சிடிசி என்றழைக்கப்படும் இந்த ரத்த பரிசோதனையின் மூலம் புற்றுநோயை கண்காணிப்பது, அதன் வளர்ச்சி மற்றும் பரவுதலை புரிந்துகொள்வது போன்ற பல நன்மைகள் உண்டு என்கிறார் மூத்த ஆய்வாளர் பீட்டர் குன்.
முக்கியமாக, இதுவரை அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே அறிந்துகொள்ளக்கூடிய புற்றுநோயின் பல இயல்புகளை, சுலபமான இந்த ரத்தப்பரிசோதனை அம்பலப் படுத்தி விடுகிறது. ஆமாம், அப்படி என்னதான் செய்கிறது இந்த பிஞிசிஜிசி ரத்த பரிசோதனை?
HDCTC, ஒரு புற்றுநோயாளியின் ரத்தத்தில் கலந்திருக்கும் சுழலும் புற்றணுக்கள் ரத்தத்தின் சிவப்பு மற்றும் வெள்ளை உயிரணுக்களிலிருந்து வேறுபட்டு தெரியும் வண்ணம் முதலில் அடையாளம் செய்யப்படுகின்றன. பின்னர், அடையாளம் கண்டறியப்பட்ட சுழலும் புற்றணுக்கள் ஒரு டிஜிட்டல் மைக்ராஸ்கோப் மூலம் பிரித்தெடுக்கப்படுகின்றன. சுழலும் புற்றணுக்கள் ஆரோக்கியமான உயிரணுக்களைப் போல் அல்லாமல் வடிவம் மற்றும் அளவில் மாறுபட்டிருக்கும். இதன் அடிப்படையிலேயே சுழலும் புற்றணுக்களை டிஜிட்டல் மைக்ராஸ்கோப் பிரித்தெடுக்கிறது.
இந்த புதிய பரிசோதனை முறை சரியானதுதானா என்பதை தீர்மானிக்க ஆய்வாளர் பீட்டர் குன்னுடைய ஆய்வுக்குழு, அமெரிக்காவின் வேறு நான்கு ஆய்வுக்குழு மற்றும் ஒரு நெதர்லாந்து நாட்டு ஆய்வுக்குழு என மொத்தம் ஐந்து ஆய்வுக்
குழுக்களுடன் இணைந்து ஆய்வுகள் மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில்,HDCTC மிகவும் துல்லியமானது மற்றும் பல வகையான புற்றுநோய்களை கண்டறியும் திறனுள்ள ஒரு பரிசோதனை என்பது ஊர்ஜிதமானது.
சுழலும் புற்றணுக்களை கண்டறிய உதவும் இதுவரையிலான பல பரிசோதனை முறைகள் சில வகையான சுழலும் புற்றணுக்களை ஒதுக்கி விடுகின்றன. ஆனால், HDCTCயானது ஒரு சுழலும் புற்றணுவைக்கூட தவற
விடாமல் அனைத்தையும் துல்லியமாக கண்டறிகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிரித்தெடுக்கப்பட்ட சுழலும் புற்றணுக்களை ஹை டெபனிஷன் இமேஜ்களாக பார்க்க முடியும் என்பது இந்த பரிசோதனையின் குறிப்பிடத்தக்க விசேஷம்.
இந்த பரிசோதனையின் மூலம் புராஸ்டேட், நுரையீரல், கணையம் மற்றும் மார்பக புற்றுநோய் போன்ற பல வகையான புற்றுநோய் உள்ள பல நோயாளிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும், பிஞிசிஜிசி பரிசோதனையைக் கொண்டு ஏற்கனவே கண்டறியப்பட்ட புற்றுநோயைப் பற்றிய கூடுதல் தகவல்களை அறிவதோடு மட்டுமல்லாமல், ஒருவருக்கு புற்றுநோய் இருக்கிறதா இல்லையா என்றறியும் தொடக்கநிலை பரிசோதனையையும் செய்துகொள்ளலாம் என்கிறார் ஆய்வாளர் பீட்டர் குன்.

நாயைக் கட்டிவைத்து…..

நான் சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பாக எனது சகோதரியின் வீட்டுக்குப் போயிருந்தேன். அப்போது புதிதாக ஒரு வாடகை வீட்டில் குடியேறியிருந்தார்கள். நல்ல அழகான வீடு. புறக்கடையில் வீட்டுத்தோட்டம். அதன் மத்தியில் அழகான ஒரு கிணறு. தெட்டத் தெளிவான தூயதண்ணீர். ஆனந்தமான குளியல்.

சரியாக இரண்டு வருடம் கழித்து அதேவீட்டுக்கு மீண்டும் ஒருமுறை போயிருந்தேன். அதிர்ந்துதான் போய்விட்டேன்! வீட்டுத்தோட்டம் அழிந்துபோய் பொட்டலாக இருந்தது. கிணற்றை எட்டிப் பார்த்தேன். பேரதிர்ச்சி! ஆம் கோகோ கோலாவை கிணற்றில் நிரப்பிவைத்திருந்த மாதிரி இருந்தது. அருகில் இருந்த காகித ஆலையின் கழிவு நீரைக் கிணற்றுக்கு அருகே செல்லும் ஓடையில் விட்டதன் பலன்!

அடிப்படை வாழ்வியல் ஆதாரங்களான உணவையும் நீரையும் காற்றையும் கூட நஞ்சாக்குமளவு முன்னேறியிருக்கும் நிலையில் நம் மேல்தட்டு மக்கள் காசுக்காக எத்தகைய பஞ்சமா பாதகங்களையும் செய்யக்கூடிய அளவு சமூகப் பொறுப்பு வாய்ந்தவர்கள் ஆகிவிட்டார்கள்.

இந்த நிலையில் நாயைக் கட்டிவைத்து அடிப்பது போல விவசாயி நச்சுப்பொருட்களை நம்பித்தான் விவசாயம் செய்யவேண்டும் என்ற நிலைமையை உருவாக்கிவிட்டு நஞ்சில்லா உணவைக் கேட்டால் எப்படிக் கொடுப்பான்?

விஷத்தைப் பற்றிய மக்கள் பார்வை!

பொதுவாக நமது மக்கள் விஷம் என்றால் என்னவென்று நினைக்கிறார்கள், அதை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதை அவசியம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

நமது மக்கள் பார்வையில் மனிதனைக் கொன்றால்தான் விஷம். இல்லாவிட்டால் அது உண்ணக்கூடியதுதான். அது மனிதனைக் கொல்லாமல் உடம்பினுள் என்னசெய்யும் என்னென்ன பின்விளைவுகளை உண்டாக்கும் என்பதெல்லாம் முக்கியமே அல்ல. அதை ஒட்டித்தான் நம் மக்கள் உடனடியாகக் கொல்லாத மெல்லக் கொல்லும் விஷத்தை உண்டு வாழ்ந்துகொண்டுள்ளார்கள்.

உதாரணத்துக்கு ஒன்று 
இரண்டு வருடங்களுக்கு முன்பு எங்கள் பகுதியில் சுண்டக்கடலை சாகுபடி செய்வதற்காக ஒன்றிய வேளாண்மை அலுவலகத்திலிருந்து விவசாயிகளுக்கு இலவசமாக ஐந்துகிலோ வீதம் கடலை விதை கொடுத்தார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் வாங்கிய ஒரு விவசாயிகூட கடலை சாகுபடி செய்யவில்லை!
அப்புறம் ஏன் விதையை வாங்கினார்கள்? இலவசமாகக் கிடைத்ததால்! வாங்கி என்னசெய்தார்கள்? ஒரு பகுதியினர் கடைக்காரரிடம் அவர் கொடுத்த காசுக்கு விற்றார்கள். (அதுகூட நமது நடைமுறை வாழ்வியல் கோட்பாட்டின்படி தவறு அல்ல. ஏனென்றால் இவர்கள் அப்படிச் செய்யாவிட்டாலும் அதிகாரிகள் அப்படித்தான் செய்யப் போகிறார்கள்) 
ஆனால் பெரும்பாலோர் செய்ததுதான் பயங்கரம்! ஆதாவது விஷம் கலந்தது என்று அச்சிடப்பட்ட பைகளில் வாங்கிப் போன அந்த விதைக் கடலையைத் தின்றே தீர்த்தார்கள்! அந்த விஷம் உடனடியாகக் கொல்லக்கூடியதாக இருந்திருந்தால் ஆயிரக்கணக்கானோர் மடிந்திருப்பார்கள். அப்படியொரு அரிய வாய்ப்புக்காக இப்போதும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்!
அவர்களுடைய அறிவும் வாதமும் என்னவென்றால் அந்தக் கடலையில் கலக்கப்பட்டிருக்கிற கொடிய விஷத்தைச் சுத்தமாகக் கழுவிச்சாப்பட்டால் ஒன்றும் செய்யாது என்பதே. இந்தக் கடலையை வாங்கிச் சென்ற விவசாயிகளில் எத்தனைபேர் சாகுபடி செய்தார்கள் என்று இப்போது கணக்கெடுத்தாலும் எங்கள் பகுதியில் ஒரு நபர்கூட இல்லை என்பது தெரியவரும். அதன்விளைவாக முறைகேடாக விற்ற அதிகாரிகள், அதை முறைகேடாக வாங்கி விற்று லாபம்பார்த்த கடைக்காரர்கள் உயிரைப்பணயம் வைத்து அதைத்தின்று தீர்த்த அத்தனைபேரும் குற்றவாளிகள் ஆகவேண்டிவரும்.
இது ஒரு சாம்பிள்தானே? இதுமாதிரி ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொருமாதிரி நடக்கத்தானே செய்கிறது? மக்காச் சோளம் குறைந்த விலைக்கு வாங்கி இருப்புவைத்து லாபத்துக்கு விற்பவர்கள் கெடாமல் இருக்க அதற்கு நுவாக்ரான் என்ற கொடிய விஷத்தை ஸ்பிரே செய்து பின் மூட்டை கட்டிப்போட்டு விற்பதைக் கண்கூடாகப் பார்த்திருக்pறேன்.
நமது நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உணவுப்பொருட்கள் தரமற்றவை எனக் கப்பல்களில் திருப்பி அனுப்பப்படுவதைப் படித்திருக்கிறோம். ஆனால் நமது நாட்டு மக்களை அனைத்து உணவுப்பொருட்களிலும் கலந்திருக்கிற, கலக்கப்படுகிற விஷத்திலிருந்து யார் காப்பற்றுவது? அத்தகைய பொறுப்பு யாருக்கு இருக்கிறது? குற்றவாளிகளால் ஆளப்படும் நாட்டில் பிறந்த நாம் இதுமாதிரி நிலைமைகளை எத்தனைநாள் சகிக்கப் போகிறோம்?

Tuesday, March 27, 2012

கண்ணில் பூ விழுதல்



நமது கண்ணின் கருவிழியில் வெண்படலம் ஏற்படுவதையே கண்ணில் பூ விழுந்துள்ளது எனக் கூறுவர். பல்வேறு காரணங்களினால் நமது விழித்திரையில் ஒளி ஊடுறும் தன்மை குறைவதே இதற்குக் காரணம். இதைத்தான் ஆங்கிலத்தில் கேட்ராக்ட் (cataract) என்று கூறுவர். நோய், கண்ணில் அடிபடுதல், பரம்பரைக் கூறு மற்றும் வயதின் காரணமாகவும், தொடர்ந்து வெளிச்சத்தையே பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கும் இந்த குறைபாடு உண்டாகும். 

இந்த குறைபாடு பெரும்பாலும் புரதத்தன்மை இழப்பால் ஏற்படுகிறது. கண்ணில் பூ விழுந்தால் தலைவலியோ கண் சிவப்பாக மாறுவதோ இருக்காது. சிலருக்கு அடிக்கடி கண்களில் நீர் வரலாம். பார்வையின் அளவு மிகவும் குறைந்து காணப்படும்.சூரிய ஒளி நேராக கண்களை தாக்குவதும், கண்களுக்கு அதிக வெப்பம் தரக்கூடிய வேலையைச் செய்பவர்களுக்கும் கண்ணில் பூ விழ அதிக வாய்ப்புக்கள் உள்ளன. 

நவீன மருத்துவத்தில் இந்தக் கண்ணில் பூ விழுவதை குணமாக்க மருந்து கிடையாது என்பது தான் உண்மை. நேரடியாக அறுவைச் சிகிச்சையின் மூலம் பாதிக்கப் பட்ட விழித்திரையை நீக்கிவிட்டு அந்த இடத்தில் செயற்கை விழித்திரையை பொறுத்துவதன் மூலம் மீண்டும் பார்வையைப் பெறமுடியும்.

Monday, March 26, 2012

அணு உலை எதிர்ப்பாளி ஞாநி பரப்பி வரும் தவறான கருத்துக்கள்

கல்பாக்கம் இந்திரா காந்தி அணுவியல் ஆய்வுக் கூடம்
பாதுகாப்பான கூடங்குள அணுமின் உலை இயங்க வேண்டும் -2
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
முன்னுரை:  1945 இல் ஜப்பானில் அணுகுண்டுகள் வீழ்ந்து ஹிரோஷிமா, நாகசாக்கி நகரங்கள் தரை மட்டமாகி லட்சக் கணக்கான ஜப்பானியர் கதிரியக்த்தால் பேரளவு பாதிக்கப் பட்ட பிறகும், அமெரிக்காவில் 1979 இல் திரிமைல் தீவு அணுமின் உலை விபத்து நேர்ந்து அணுவியல் எருக்கோல்கள் உருகிய போதினும், 1986 இல் சோவியத் ரஷ்யாவில் செர்நோபில் அணுமின் உலை வெடித்துப் பலர் மரித்து பலர் கதிரியக்கத்தால் நோயுற்ற போதும், 2011 மார்ச்சில் ஜ்ப்பான் நிலநடுக்கச் சுனாமியால் நிறுத்தமான அணுமின் உலைகள் நான்கில் வெப்பத் தணிப்பின்றி சில எருக்கோல்கள் உருகி ஹைடிரஜன் வாயு சேர்ந்து, அணு உலை மேற்கட்டடத்தில் ரசயான வெடிப்புகள் நேர்ந்த போதினும், உல்கநாடுகள் தாம் இயக்கி வரும் 430 மேற்பட்ட அணு உலைகளை நிரந்தரமாய் நிறுத்தம் செய்ய வில்லை.  மாறாகப் புதிய பாடங்களைக் கற்றுக் கொண்டு, தமது அணு உலைகளை மீளாய்வு செய்து, அபாய வெப்பத் தணிப்பு முறைகளை மிகையாக்கிச் செம்மைப் படுத்தித் தொடர்ந்து இயக்கி வருகிறார்.
இந்த நோக்கில் சிந்திக்க வேண்டியது தற்போது ஹிரோஷிமா, நாகசாக்கி நகரங்கள் சுத்தம் செய்யப் பட்டு புத்துயிர் பெற்று எழுந்து முன்னை விடக் கட்டமைப்பு செய்யப்பட்டு முற்போக்கு நகராக மாறி விட்டன.
அதே போக்கில் புகுஷிமாவின் பழுதான நான்கு அணுமின் உலைகளும் சுத்தமாகப் பட்டு உருகிய எருக்கோல்கள் நீக்கப்பட்டு கவசத் தொட்டிகளுக்குள் மூடப்பட்டு புதைக்கப்படத் தயாராகும்.  அணு உலைக் கலங்கள் சீர் செய்யப்பட்டு நீக்கப்படும்.  அந்த இடத்தில் புது டிசைன் அணு உலை கட்டப்படும்.  அதற்கு ஆகும் செலவு மிகையானால் புது அணு உலை அமைப்பு நிராகரிக்கப்படும்.  பழைய அணு உலைகள் நிரந்தரமாய் மூடப்படும்.
இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளாய் அடுத்தடுத்து இயங்கிவரும் 20 அணுமின் உலைக் கதிரடியால், இதுவரை யாரும் புற்று நோயிலோ மற்ற நோயிலோ மரிக்கவில்லை.  அணுமின் உலைச் சூழ்வெளியில் டாக்டர் புகழேந்தி, ஞாநி பயமுறுத்தி வருவதுபோல் யாருக்கும் ஆறாவது முளைத்ததாக நிரூபிக்கப்பட வில்லை.
கல்பாக்க அணுமின் சக்தி பற்றி  ஞாநியின் தவறான கருத்துகள்
எழுத்தாளர் ஞாநி கடந்த எட்டு ஆண்டுகளாக கல்பாக்க அணு உலைகள் மீது தவாக எழுதி வருகிறார்.  அவர் எழுதிய 'கான்சர் கல்பாக்கம்' என்ற 2003 ஏப்ரல் திண்ணைக் கட்டுரையில் கதிர்வீச்சின் கொடிய இன்னல்களைக் குறிப்பிட்டு, நிர்வாகத் துறைகளில் உள்ள ஓட்டைகளை எடுத்துக் காட்டி, மாநில அரசா அல்லது மத்திய அரசா எது அபாயப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் என்று கேட்ட கேள்வி வரவேற்கத் தக்கதே ! ஆனால் அவர் மக்களைப் பயமுறுத்தக் கூறிய சில கடுமையான நோய் விளைவுகள் அணு உலைக் கதிர்வீச்சால் மெய்யாக நிகழ்ந்தவையா என்பது ஐயப்பாட்டுக் குரியன! மற்றும் அவரது சில கதிர்வீச்சுக் கருத்துக்கள் உயிரியல் விஞ்ஞானத்துக்கு முரண்பட்டவை என்பது எனது கருத்து!  இந்திய அணுமின் உலைகளைக் கட்டி இயக்குவதும், கண்காணிப்பதும், பராமரிப்பதும் இந்திய அரசுக்குக் கீழிருக்கும் அணுசக்தித் துறையக /நியூகிளியர் பவர் கார்பொரேசன் (DAE, Dept of Atomic Energy / NPCIL Nuclear Power Corporation of India Ltd) ஆணையகங்கள்தான்.
கல்பாக்கம் அணு உலைப் பணியாளிகளுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் புற்று நோய் உண்டாகும் வாய்ப்புகள் மிக அதிகம் என்ற தவறான கருத்தைப் பரப்பி வருவது, நியாயமான எச்சரிக்கை ஆகாது! கல்பாக்கத்தில் பணிசெய்து குறைந்த அளவுக் கதிரடி பெற்றுப் புற்று நோய் வந்து செத்துப் போனவர், ஊனக் குழந்தை பெற்றவர், பிறப்புறுப்பில் புற்று நோய் பெற்றவர், ரத்தப் புற்று நோய் பெற்றவர், குடல் புற்று நோய் அணு உலைக் கதிர்வீச்சால் உண்டானவை என்று மெய்ப்பிக்காமல் அழுத்தமாகப் பறை சாற்றுவது உயிரியல், மற்றும் கதிரியல் விஞ்ஞானத்துக்கு [Biological & Radiological Science] ஒவ்வாத வாதங்கள்!  ஓரளவு கதிரடியால் புற்றுநோய் வரலாம் என்று உயிரியல் விஞ்ஞானம் கூறினும், கல்பாக்க அணு உலைக் கதிரடியால் ஆங்கு வாழ்வோர் புற்று நோய் வந்து சாகிறார் என்பது இதுவரை நிரூபிக்கப் பட வில்லை.
ஞாநியின் 2003 ஏப்ரல் திண்ணைக் கட்டுரையில் வந்த தவறான சில கருத்துக்கள்
1. ஞாநியின் கருத்து:
கல்பாக்கத்தில் ஒரு விபத்து நேர்ந்தால் போதும்! சென்னை நகரம் அவ்வளவுதான்! செர்நோபில் கதி ஏற்படும்!
எனது விளக்கம்:
செர்நோபிள் வெடி விபத்துக்குக் காரணங்கள்:  சோதனையின் போது அடுத்தடுத்து நிகழ்ந்த பல மனிதத் தவறுகள், மூல டிசைன் கோளாறுகள், எப்போதும் கனலாக இருக்கும் திரள்கரி அடுக்கு [Moderator Graphite Pile] மிதவாக்கியாகப் பயன்பட்டது, கதிரியக்கப் பொழிவுகளை உள்ளடக்கும் கோட்டை அரண் இல்லாதது! அவ்விதக் கோர விபத்து பாரதத்தின் எந்த அணு உலையிலும் நிகழவே நிகழாது! கல்பாக்க அணுமின் உலையில் கனநீர் மிதவாக்கியாகப் பயன்படுகிறது! மேலும் நாலடித் தடிப்பு கொண்டு உறுதி யாக்கப்பட்ட, முன்முறுக்கப் பட்ட இரும்புக் கம்பி கான்கிரீட் கோட்டை அரண் [4 feet thick Pre-stressed Reinforced Concrete Cotainment] உள்ளதால், விபத்து நேர்ந்தாலும் கதிரியக்கப் பொழிவுகள் கோட்டையை விட்டு வெளியே தாண்டவே தாண்டா.
விபத்துக்கள் பலவிதம்! சிறு விபத்து, பெரு விபத்து, பாதுகாப்பு விபத்து, கதிர்வீச்சு விபத்து, வெப்பத் தணிப்புநீர் இழப்பு, அணு உலைக் கட்டுப்பாடு இழப்பு, அபாய கால மின்சாரம் இழப்பு இப்படிப் பல விதங்கள். கல்பாக்க அணுமின் உலையில் பெரு விபத்து நிகழ்ந்தாலும், சென்னை நகரம் அழியாது! மகாபலிபுரமும் அழியாது!  கனநீர் இயல் யுரேனிய அணு உலைகளில் சக்தி அளிப்பவை மித வேக நியூட்ரான்கள்.  அணு குண்டுகளில் வெடிப்புச் சக்தியை உண்டாக்குவது அதிவேக நியூட்ரான்கள்.
2. ஞாநியின் கருத்து:
பயங்கர வாதிகளுக்கு அணு உலைகள் சிட்டிங் டக் [Sitting Duck] என்று சொல்லக் கூடிய எளிமையான இலக்குகள்! அதன் மீது விமானத்திலிருந்து ஒரு குண்டு போட்டால் போதும்! அணுக்கதிர் இயக்கம் சென்னையை அழித்துவிடும்!
எனது விளக்கம்:
நாலடித் தடிப்பு கொண்டு உறுதி யாக்கப்பட்ட, முன்முறுக்கப் பட்ட இரும்புக் கம்பி கான்கிரீட் கோட்டை அரண் [4 feet thick Pre-stressed Reinforced Concrete Cotainment] மீது குண்டு போட்டுத் துளையிடுவது எளிதல்ல.  விமானத்திலிருந்து குண்டு போட்டால், அணு உலை வெடிக்காது! அணு உலைத் தானாக நிறுத்தம் ஆகி, வெப்பத்தைத் தணிப்பு ஏற்பாடு இயங்கும். அது முடங்கி போதிய நீரில்லாது போனால், எரிக்கோல்கள் உருகி, கோட்டை அரணில் சேரும்.  அரணில் ஓட்டை நேர்ந்தால் கதிரியக்கம் காற்றடிக்கும் திசையில் பரவும். சென்னையிலும், மகாபலிபுரத்திலும் கதிரியக்கப் பொழிவுகள் பெய்து, மாந்தர் கதிர்த் தீண்டலில் தாக்கப் படுவர். ஆனால் சென்னை நகரம் கதிர்வீச்சால் அழியவே அழியாது!  கதிர்மானிகளைக் கொண்டு கதிர்கள் தீண்டிய [Radioactive Contaminations] இடங்களைக் கண்டு பிடித்து, அவை நீக்கப் பட வேண்டும்! ஆங்கு வாழும் மாந்தரில் கதிரடி பட்டோரும் இருப்பார்! கதிரடி படாமல் தப்பினோரும் இருப்பார்! ஆனால் சென்னையில் உள்ள கட்டடங்கள், வீடுகள் சேதமடையா!
விமானத்திலிருந்து குண்டுகள் விழுந்தால் அந்த வெடிப்பில் மடிபவர் கதிரியக்கக் கசிவில் காயப் படுபவரை விட அதிகமாய் இருக்கும்.

3. ஞாநியின் கருத்து:
கல்பாக்கத்தில் விபத்து நடந்தாலே போதும்! விபத்து எதுவும் நடக்காது என்று எந்த உத்தரவாதமும் கிடையாது! அப்படி நடந்தால் அதற்கு யார் பொறுப்பு ? கல்பாக்கத்தில் கதிரியக்கத்தால் சுற்று வட்டாரங் களில் புற்று நோய் அதிகரித்தால், அதற்கு யார் பொறுப்பு ?
எனது விளக்கம்:
அணுமின் நிலையத்தில் விபத்து நேர்ந்தாலும் சரி, சுற்று வட்டாரத்தில் புற்று நோய் அதிகரித்தாலும் சரி, அவற்றை நேரடியாகக் கவனிப்பது, மத்திய அரசைச் சேர்ந்த அணுசக்திக் கார்பொரேஷன் [Nuclear Power Corporation of India Ltd (NPCIL)] ஒன்றுதான். NPCIL அதை முறையாகக் கையாள மேற்பார்வை செய்வது, தனித்தியங்கும் 'அணுசக்திக் கட்டுப்பாடு வாரியம் '[Atomic Energy Regulatory Board (AERB)]. ஆராயப் பட்ட தவறுகள் முற்றிலும் திருத்தப்படும் வரை, அணுமின் உலை இயக்க அனுமதி லைசென்ஸை முறிக்க AERB வாரியத்துக்கு முழு அதிகாரமும் உள்ளது.
4. ஞாநியின் கருத்து:
கல்பாக்கம், கூடங்குளம் திட்டங்கள் எல்லாமே பஸ்மாசுரனுக்கு வரம் கொடுக்கும் திட்டங்கள்தான் என்பதை நிரூபிக்க அறிவியல் ஆதாரங்கள் உண்டு!
எனது விளக்கம்:
அறிவியல் ஆதாரங்களை ஞாநி ஏனோ தர வில்லை! ஞாநி அவற்றையும் காட்டி யிருக்கலாம்!  அணுசக்தி விஞ்ஞானம் பஸ்மாசுரன் காலத்தில் முளைக்க வில்லை! படிக்காததால், அவனும் புதிய அணு உலை களை முடுக்கத் தெரியாமல் திருதிருவென்று விழிப்பான்! அவனுக்கும் முதலில் பயிற்சி தேவை! கல்பாக்க அழுத்தக் கனநீர் இரட்டை அணு உலைகள் சிறந்த பாதுகாப்புத் தன்மைகளைக் கொண்டவை. கல்பாக்க வேகப் பெருக்கி சோதனை அணு உலை, பாதுகாப்பு ஏற்பாடுகள் போதாததால், ஆற்றல் குறைக்கப் பட்டு 25% [10 MWt] ஆற்றலில்தான் இப்போது இயங்கி வருகிறது!
மீண்டும் 'கல்பாக்கம் ஞாநி ' [செப் 18, 2003] திண்ணைக் கட்டுரையில் அணுமின் நிலையங்கள் மீது புகார் செய்திருக்கிறார்.  'இந்தியாவில் அணுசக்தித் துறை என்பதே மின்சாரத்துக்கானது அல்ல. அணுமின்சாரம் இதுவரை எந்த மூலையிலும் மின்சாரப் பற்றாக் குறையைத் தீர்க்கவில்லை' என்று தவறான கருத்தைப் பரப்பி வருகிறார். பெரும்பான்மையான இந்திய அணுமின் நிலையங்கள் எவ்விதம் சீரும் சிறப்பாக இயங்கி மின்சக்தி பரிமாறி வருகின்றன என்று மெய்யான செய்திகளை முழுமையாக அறியாது, கண்களை மூடிக் கொண்டு புளுகுத் தகவலைத் தமிழ் நாட்டிலும், அகிலவலை மூலம் தமிழ் உலகிலும் ஒரு பத்திரிகை ஆசிரியர் பரப்பி வருவது வியப்பாக இருக்கிறது!
1.  http://en.wikipedia.org/wiki/Nuclear_Power_Corporation_of_India
2.  http://www.npcil.nic.in/
செப் 18, 2003 திண்ணைக் கட்டுரையில் நான்கு தனிப்பட்ட தகவல்களைக் குறிப்பிட் டுள்ளார். அவற்றில் சில பிழையானவை.
1.  ஞாநியின் கருத்து
மின்சார உற்பத்திக்கு அணுசக்தி சரியான வழியல்ல. இந்தியாவில் அணுசக்தித் துறை என்பதே மின்சாரத்துக்கானது அல்ல. அணுமின்சாரம் இதுவரை எந்த மூலையிலும் மின்சாரப் பற்றாக் குறையைத் தீர்க்கவில்லை.. பல தலைமுறைகளுக்கு ஆபத்தான கழிவுகளைத்தான் உற்பத்தி செய்யும்.
எனது விளக்கம்
http://www.npcil.nic.in/ இந்திய அணுமின் உலைகளின் இயக்கம் பற்றி இந்த வலைப்பகுதியில் உள்ளது
2.  ஞாநியின் கருத்து
வல்லரசு வேடங்கட்டி ஆடுவதற்காக அணு ஆயுதத்துக்கான புளுடோனியத்தை எடுத்து, அணுகுண்டு தயாரிப்பவர்கள்தான் உண்மையான பயங்கரவாதிகள்.
எனது விளக்கம்.
இந்தியப் பாதுகாப்புக்குத் தேவையானால் பயன்படுத்த ஓர் எச்சரிக்கை ஆயுதமாக அரசாங்கம் அணு ஆயுதங்களைக் கொலுப் பெட்டியில் வைத்துள்ளது.
3.  ஞாநியின் கருத்து
கல்பாக்கம் அணு உலைகள் நிரந்தர ஆபத்தாக இருந்து அங்குள்ள ஊழியர்களுக்கு உடல்நல விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
எனது விளக்கம்
இது தவறானது. அவர் குறிப்பிடும் விபத்து எரிக்கோல் மீள்சுத்திகரிப்புத் தொழிற்கூடத்தில் நிகழ்ந்தது.  அதனஐ யாரும் பாதிக்கப் படவில்லை.  கல்பாக்க அணு உலைகளில் நிரந்தர ஆபத்துக்கள் இல்லை.  நேர்ந்த கனநீர்க் கசிவு விபத்துக்களில் நோயுற்றோர் யாருமில்லை.
4.  ஞாநியின் கருத்து
கல்பாக்கம் அணு உலகளைக் கட்டி முடிக்கவே 15 ஆண்டுகள் ஆகின. இயங்கத் தொடங்கிய முதல் ஐந்து ஆண்டுகளில் 200 முறை பிரச்சினைகளினால் நிறுத்தப் பட்டன. [அதாவது ஆண்டுக்கு 40 தடவை நிறுத்தம், மாதம் ஒன்றுக்கு 3-4 நிறுத்தம்].
எனது விளக்கம்.
கல்பாக்கம் அணுமின் உலைகள் பல இந்தியச் சாதனங்கள் புதியதாக உற்பத்தி செய்து இந்தியர் கட்டி இயங்குவது.  முன்னோடிச் சோதனை அணுமின் உலைகளில் இத்தனை நிறுத்தங்கள் ஆரம்பத்தில் நேர்வது ஒன்றும் பெரிதல்ல !
இந்தியச் சாதனங்கள் 70%, அன்னியச் சாதனங்கள் 30% கொண்டு கல்பாக்கத்தில் தயாரியான முன்னோடி அணு உலைகள் இவை. இந்தியா தன்காலில் நின்று முதன் முதலில் அணுமின் நிலையச் சாதனங்களைத் தயாரித்துச் சுயதேவைப் பூர்த்திக்குக் கட்டி இயக்கும் போது, 15 ஆண்டுகள் நீடித்ததில் ஒன்றும் தவறில்லை. ஆரம்ப காலத்தில் விஞ்ஞானிகளும், எஞ்சியர்களும் புது அணு உலையை இயக்கும் போது மாதம் ஒன்றில் 3-4 நிறுத்தம் ஏற்பட்டதும் ஏற்றுக் கொள்ள வேண்டியதே.
இந்திய அணுமின் நிலையங்களின் மகத்தான சாதனைகள்
இந்திய அணுசக்திக் கார்பொரேஷன் [Nuclear Power Corporation of India Ltd (NPCIL)] தனது அகிலவைப் பின்னலில் [www.npcil.org] 1995 முதல் 2002 ஆண்டுவரை அணுசக்தி பரிமாறி வந்த மொத்த யூனிட்களையும் [Generation Units], நிலையங்கள் இயங்கிய திறத்தகுதிகளையும் [Capacity Factors] விளக்கமாகத் தந்துள்ளது. அவை யாவும் மெய்யான எண்ணிக்கைகள்! புளுகு எண்ணிக்கைகள் அல்ல! அதே எண்ணிக்கைகளை அணுசக்தி கார்பொரேஷன் வியன்னாவில் உள்ள அகிலநாட்டு அணுசக்திப் பேரவைக்கும் [International Atomic Energy Agency (IAEA)] இதுவரை அனுப்பி வந்துள்ளது.
அணுசக்தித் துறையின் புதிய 2003 ஆம் ஆண்டு அறிக்கையில் (ஏப்ரல் 2002-மார்ச் 2003) தற்போதைய நிதியாண்டில் பரிமாறிய மின்சாரம் 19200 மில்லியன் யூனிட் [1 Unit=1 KWh (Kilo Watt Hour)] என்றும், பெற்ற இலாபம் ரூ.1438 கோடி என்றும் அறியப்படுகிறது. அடுத்து ஏப்ரல்-ஜுன் 2003 மூன்று மாதத்தில் மட்டும் அடைந்த இலாபம் ரூ 545 கோடி! ஏழாண்டுகளில் (1995-2002) இந்திய அணுமின் நிலையங்கள் சராசரி 13590 மில்லியன் யூனிட் மின்சாரத்தை, சராசரி 74% திறமைத்தகுதியில் [Capacity Factor: 74%] பரிமாறி வந்துள்ளன.
கல்பாக்கம் முன்னோடி அணுமின் உலைகள் கடந்த நான்கு வருடங்கள் [1998-2002] சராசரி 82% திறமைத் தகுதியில் சராசரி 1183 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரித்துள்ளன. அதே சமயம் வட இந்தியாவில் ஓடும் புதிய அணுமின் நிலையங்கள் 2002 ஆம் ஆண்டில் புரிந்த மகத்தான மின்சார உற்பத்திகள் பாராட்டுக் குரியவை.
கக்ரபார் அணுமின் நிலையம்: திறமைத்தகுதி: 92% ... பரிமாற்றம்: 1735 மில்லியன் KWh
கெய்கா அணுமின் நிலையம்: திறமைத்தகுதி: 78% ... பரிமாற்றம்: 1500 மில்லியன் KWh
நரோரா அணுமின் நிலையங்கள்: திறமைத்தகுதி: 88% ... பரிமாற்றம்: 1664 மில்லியன் KWh
ராஜஸ்தான் அணுமின் நிலையம்: திறமைத்தகுதி: 80% ... பரிமாற்றம்: 1525 மில்லியன் KWh
கல்பாக்கம் அணுமின் நிலையம்: திறமைத்தகுதி: 78% ... பரிமாற்றம்: 1122 மில்லியன் KWh
அணு உலைகளில் ஏற்படும் அபாய நிகழ்ச்சிகள், விபத்துகள்.
உலக நாடுகளில் இயங்கும் அணுமின் நிலையங்களில் விபத்துகள் நிகழ்ந்ததுபோல், இந்திய அணு உலைகளிலும், அணுஎருச் சுத்தீகரிப்புத் தொழிற் கூடங்களிலும் சில அபாயங்கள் நேர்ந்துள்ளன! மனிதர் கவனமின்மை, மனிதத் தவறுகள், பாதுகாப்புப் பணிநெறிகளைப் பின்பற்றாமை, சீரான மேற்பார்வை இன்மை, கண்காணிப்பு இன்மை ஆகிய ஒழுங்கீனங்களால் தொழிற்சாலைகளில் விபத்துகள் உண்டாகும். அவற்றைத் தவிர்ப்பது, தடுப்பது அல்லது குறைப்பது இயக்குநரின் முக்கிய கடமையாக இருத்தல் அவசியம். அணு உலைகளில் பெரும்பான்மையான விபத்துகள் மனிதத் தவறுகளால் ஏற்படுகின்றன. மனிதத் தவறுகள், கண்காணிப்பட்டு குறைக்கப்பட வேண்டும். குறைந்து குறைந்து மனிதத் தவறுகள் பூஜியமாக்கப்பட வேண்டும். விபத்துகளின் மூல காரணங்கள் ஆழ்ந்து உளவப்பட்டு, மீண்டும் அவை ஏற்படாதிருக்க தடுப்பு முறைகள், பாதுகாப்பு நெறிகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அணு உலைகளின் பிரச்சனைகளைக் கண்டு மிரளாமல், அவற்றைத் தீர்க்க வழிகள் வகுக்கப்பட வேண்டும். அணு உலைகளே நாட்டின் மின்சாரப் பற்றாக்குறையை நீக்கும் என்று ஆணித்தரமாக நம்பி, மக்கள் அறியும்படி அவர்களுக்குக் கல்விப் பயிற்சிகள் அளித்து, அணுத்துறைக் கண்காட்சி சாலைகள் அமைக்கப்பட வேண்டும்.
தற்போதைய தொழில்யுகம் [Industrial Age] தோற்றுவித்த யந்திர, இராசயனத் தொழிற்சாலைகள், போக்கு வரத்துகள் [இரயில் தொடர், கார், கப்பல், ஜெட் விமானம், ராக்கெட் விண்கப்பல்], மின்சார நிலையங்கள், ஆய்வுக்கூடங்கள் அனைத்திலும் அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் ஒளிந்துள்ளன! எப்போதாவது விமானம் ஒன்று விழுந்து நூற்றுக் கணக்கான பேர் மடிகிறார்!  ஆனால் விமானப் பயணங்கள் உடனே நிறுத்தப் படுகின்றனவா ? இல்லை. இரயில் வண்டி தடம் பெயர்ந்து உருண்டு அநேக நபர் உயிரிழக்கிறார்; பலர் காயமடைகிறார்! ஆனால் இரயில் பயணங்கள் நிறுத்தப் படுகின்றனவா ? இல்லை.  காரணம் பாதிக்கப் பட்டாலும் மக்கள், அவற்றின் அபாயங்களை எதிர்பார்த்து அவ்விபத்துகள் ஏற்பட்டால் பாடம் கற்றுச் செம்மைப் படுத்திய விமானங்களில் பயணம் செய்ய முன்வருகிறார்.
ஆனால் கடந்த 50 ஆண்டு அனுபவத்தில் இந்தியாவின் 20 அணு உலைகளில் இதுவரை யாரும் கதிரடியால் மரணம் அடைய வில்லை! பாதுகாப்புக்கு மீறிய அளவுக் கதிரடிச் சிலர் வாங்கி யிருந்தாலும் மருத்துவச் சிகிட்சையில் அவர்களைக் குணப்படுத்த முடியும்!  அணுமின் உலைக் கதிரடியால், இதுவரை யாரும் புற்று நோயிலோ மற்ற நோயிலோ மரிக்கவில்லை.  அணுமின் உலைச் சூழ்வெளியில் டாக்டர் புகழேந்தி, ஞாநி பயமுறுத்தி வருவதுபோல் கல்பாக்கத்தில் யாருக்கும் ஆறாவது முளைத்த தாக எவரும் நிரூபிக்க வில்லை.
(தொடரும்)
++++++++++++++
தகவல்:
1.  http://www.npcil.nic.in/index.asp  [Nuclear Power Corporation of India Ltd Website for Nuclear Power Updates]
2. http://pib.nic.in/release/release.asp?relid=20878  [President Dr. Abdul Kalam Speech on Kudungulam (Sep 22, 2006)]
3. http://www.stratmag.com/issue2Nov-15/page03.htm
[Russia Breaches Nuclear Blockade against India By: C. Raja Mohan (Nov 16, 2001)]
4.  World Nuclear Association – WNA
Radiological Protection Working Group – RPWG (Official List – July 20, 2006)
http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm
5. World Nuclear Association – WNA
Waste Management and Decommissioning Working Group – WM&DWG (Official List – July 25, 2006)    http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm
6. http://www.candu.org/npcil.html  [Indian Heavywater Nuclear Power Plants]
7. Safety of Nuclear Power Reactors, [www.uic.com.au/nip14.htm] (July 2007)
8. Nuclear Power Plants & Earthquakes [www.uic.com.au/nip20.htm] (Aug 2007)
9. http://www.thinnai.com/?module=displaystory&story_id=80708091&format=html  Letter By R. Bala (August 9, 2007)
10. http://www.wano.org.uk/WANO_Documents/What_is_Wano.asp  [World Association of Nuclear Operation Website]
11 IAEA Incident Reporting System Using Operational Experience to Improve Safety (IAEA Instruction)
12.  கேன்சர் கல்பாக்கம்: (திண்ணையில் ஞாநியின் கட்டுரை) (4/19/03)
இந்திய அணுசக்தித் துறைகளின் தகவல்கள்:
1. Atomic Power Plants Performance Reports www.npcil.org [Updated Sep 22, 2003]
2. Kalpakkam Nuclear Site www.igcar.ernet.in [Updated Sep 1, 2003]
3. Bhabha Atomic Research Centre, Bombay www.barc.ernet.in [Updated Sep 19, 2003]
4. Atomic Energy Regulatory Board [AERB] Regulations www.aerb.gov.in [Updated Sep 17, 2003]
4. R. Chidambaram, Former Indian Atomic Energy Commission Report [Sep 20, 2000] http://pib.nic.in/feature/feyr98/fe0798/PIBF2207982.html
5. Dr. Anil Kakodkar, Present Chairman Indian Atomic Energy Commission, IAEA Repot [Sep 17, 2003] http://www.dae.gov.in/gc/gc2003.htm
6. Indian Radiation Safety Division Reports http://www.aerb.gov.in/T/Divisions/RSD/RSD.html
7. Atomic Energy Regulatory Board, Bombay Annual Report [2001-2002] http://www.aerb.gov.in/T/annrpt/annr2k2/annrpt.pdf
12. http://www.world-nuclear.org/info/inf53.html  (World Nuclear Association Report on Indian Nuclear Power)  (February 2012)
13. http://jayabarathan.wordpress.com/kudankulam-vver-reactor/
14. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40303233&format=html
[கூடங்குளம் அணுமின் உலைப் பாதுகாப்பு ஆய்வுகள்]
15. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40607071&format=html
[செர்நோபிள் விபத்துபோல் கூடங்குளத்து அணுமின் உலையில் நிகழுமா ?]
16. http://en.wikipedia.org/wiki/Nuclear_Power_Corporation_of_India  (Nuclear Power Corporation of India) (March 12, 2012)
17. http://www.npcil.nic.in/  (Nuclear Power Corporation of India)
******************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] March 24, 2012

Sunday, March 25, 2012

நாவல் பழம்

நாவல் பழம்
-------------------
*நாவல் மரத்திற்கு ஆருகதம், நேரேடு, சுரபிபத்தினர் என்றும் பெயர்கள் இருக்கின்றன
*ஆங்கிலத்தில் நாவல் மரத்தினை (eugenia jambos)ஜம்பலம், பிளாக் பிளம் என்று பெயர்கள் உண்டு.
*இதன் பழங்கள் இனிப்பு கலந்த துவர்ப்பாக இருக்கும்.
*இந்தியாவில் வறண்ட பகுதிகள் தவிர நாவல் மரம் அனைத்து இடங்களிலும் வளரும்.
*இதன் இலைகள் கரும்பச்சையாக பளபளப்புடன் இருக்கும். ஜனவரி பிப்ரவரி மாதங்களில் இலைகளை உதிர்க்கும் தன்மை கொண்டது இந்த மரம்.
*நாவல் பழங்கள் ஜுலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் மரத்தில் பழுத்து கிடைக்கின்றன
*ஒரு மரத்திலிருந்து ஆண்டொன்றுக்கு 50 முதல் 80 கிலோ பழங்கள் கிடைக்கும்.
*பெரும்பாலும் ஒட்டுச் செடிகள் மூலமும், விதைகள் மூலமும் செடிகள் உண்டாக்கப்படுகின்றன

#பழத்தின் மருத்துவபண்புகள்
-----------------------------------------
*நாவல் பழத்தை சாப்பிட மூளை பலமாகும்.
*நல்ல சீரண சக்தி கிடைக்கும்.
*பழத்தை கசாயம் போல் தயாரித்து சாப்பிடும் போது வாயுத்தொல்லை நீங்கும்.
*மண்ணீரல் வீக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தொடர்ந்து பல காலங்களாக கழிச்சல் நோய் உள்ளவர்கள் நாவல் பழத்தை சாப்பிட்டு வர குணமடையலாம்.
*பழச்சாறுடன் தேன் கலந்து குடிக்கும் போது வெயிலால் உடம்பில் ஏற்படும் அனல் குறையும்.
*பழம் உடலுக்கும், கண்ணுக்கும் குளிர்ச்சியை தரும்.
*இரத்தத்தை சுத்தி செய்யும். இரத்தம் விருத்தி ஆகும்.
*சிறுநீர்க்கழிவினைத் தூண்டுவதுடன், சிறுநீர்ச்சுருக்கை போக்கும்.
*பழத்தை அதிகமாக உண்டால் சளி, காய்ச்சல் உண்டாக வாய்ப்புண்டு. குறிப்பாக சிறுவர்களுக்கு இந்த பழங்களை அளவுடன் உண்ண தர வேண்டும்.
*சிலருக்கு இந்த பழங்களை உண்ணும் போது தொண்டைக்கட்டும் ஏற்படலாம். நாவல் பழத்தை உப்பில் போட்டு சாப்பிடுவதால் தொண்டைக்கட்டு உண்டாகாது.
*பழுக்காத நாவல் காய்களை நன்றாக உலர்த்தி பொடி செய்து ஒரு தேக்கரண்டி எடுத்து மோரில் கலந்து சாப்பிட்டால் வயிற்று போக்கு குணமாகும்.

#விதையின் குணங்கள்:
-------------------------------
நாவல் பழத்தை சப்பித்தின்ற பிறகு மிஞ்சும் கொட்டையை நன்றாக நிழலில் உலர்த்தி பொடி செய்து கொள்ள வேண்டும். இந்த பொடியை தினமும் 2 முதல் 4கிராம் வீதம் மூன்று வேளை தண்ணீரில் கலந்து அருந்தினால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும் என நம்பிக்கை உள்ளது. விதையை பொடித்து மாம்பருப்பு தூளுடன் சேர்த்து தர சிறுநீரை பெருக்கும். இந்த கொட்டை தூளை அதிக அளவில் உண்ண கூடாது. அது நஞ்சாகும்.

#இலையின் குணம்:
-----------------------------
நாவல் கொழுந்து சாறு, மாவிலைச்சாறு ஆகிய இரண்டையும் கலந்து கடுக்காய் பொடியுடன் சேர்த்து ஆட்டுப்பாலில் கலக்கி குடித்தால், சீதக்கழிச்சல் என்ற வெப்பக்கழிச்சல் குணமடையும். நாவல் கொழுந்து, மாவிலைக் கொழுந்து ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து மை போல் அரைத்து மோரில் அல்லது தயிரில் கலக்கி சாப்பிட வயிற்று போக்கு, இரத்தத்துடன் காணப்படும் பேதி ஆகியவை குணமாகும்.

#மரப்பட்டையின் குணம்:
-----------------------------------
நாவல் மரம்பட்டையை சுவைத்தால் குரல் இனிமையாகும் என்று கூறுகிறார்கள். இது ஆஸ்துமா, தாகம், களைப்பு, குருதி பேதி, கீச்கீச் என்ற ஈளை இருமல் ஆகியவற்றை குணப்படுத்த நல்லது. நாக்கு, வாய், தொண்டைப்புண்களுக்கு இந்த மரத்தின் பட்டையை கொதிக்க வைத்து வாய் கொப்புளித்தால் குணம் காணலாம். மரப்பட்டையை இடித்து சலித்து எருமைத்தயிரில் கலந்து குடிக்க பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்த போக்கு கட்டுப்படும். குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம், ரத்தகழிச்சல் ஆகியவற்றுக்கு வெள்ளாட்டுபாலுடன் சேர்த்து நன்கு காய்ச்சி சங்கு அளவில் மூன்று முறை தரலாம். இந்த மரப்பட்டையின் கசாயத்தை கொண்டு புண்களை கழுவலாம். கிருமிநாசினி போல் செயல்படும்.

#வேரின் குணம்:
---------------------
மரத்தின் வேரை ஒரு பாத்திரத்தில் ஊற வைத்து அந்த நீரை குடித்தால் சர்க்கரை வியாதிக்கு நல்லது. உடலுக்கு குளிர்ச்சியையும், ஆண்மையையும் த்ரும்.

#நாவல் பழத்தில் உள்ள சத்துக்கள்:
----------------------------------------------
புரதம் 0.7 கிராம்
கொழுப்பு 0.3 கிராம்
மாவுப்பொருள் 0.9 கிராம்
கீழ்வருபவை எல்லாம் (மில்லி கிராம் அளவில்)
கால்சியம் 14.0
பாஸ்பரஸ் 15
இரும்பு 1.2
தயமின் 0.03
நியாசின் 0.2
வைட்டமின் சி 18
மெக்னீசியம் 35
சோடியம் 26.2
பொட்டாசியம் 55
தாமிரம் 0.23
கந்தகம் 13
குளோரின் 8
ஆக்சாலிக் அமிலம் 89
பைட்டின் பாஸ்பரஸ் 2
கோலின் 7
கரோட்டின் 48

நம்மாழ்வார் உரை – உழவுக்கும் உண்டு வரலாறு




சித்திரகாலி, வாலான் நெல், சிறைமீட்டான், மணல் வாரி, செஞ்சம்பா, கருஞ்சூரை, சீரகச்சம்பா, முத்துச்சம்பா, விளங்கி நெல், மலைமுண்டன், பொற்பாளை, நெடுமூக்கன், அரிகிராவிக் மூங்கிற்சம்பா, கத்தூரிச்சம்பா, வாணன்நெல், காடைக்கழுத்தன், இரங்கல் மீட்டான், கல்லுண்டை, பூம்பாளை, கடுக்கன் சம்பா, வெள்ளைச்சம்பா, புத்த நெல், கருங்குறுவை, புனுகுச்சம்பா – நெல்ரகங்கள்
குடைக்கொம்பன், செம்மறையன், குத்துக்குளம்பன், மேழை, குடைச்செவியன், குற்றாலன், கூடுகொம்பன், கருப்பன், மஞ்சள் வாலன், படைப்புப்புடுங்கி, கொட்டைப்பாக்கன், கருமறையன் பசுக்காத்தான், அணிற்காலன், படலைக்கொம்பன், விடத்தலைப்பூ நிறத்தான், வெள்ளைக்காளை – மாடுவகைகள்
முக்கூடற்பள்ளு
முக்கூடற்பள்ளுவில் காணப்படும் நெல் ரகங்கள், மாடு வகைகள் எல்லாம் நாம் அறியாத அளவுக்கு பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி போன்ற திட்டங்கள் நம் மரபுவழி இயற்கை வேளாண்மையைச் சீரழித்து விட்டது. நம் மரபு வழி வேளாண்மை குறித்து மதுரைப்புத்தகத்திருவிழாவில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஆற்றிய உரைதான் கீழே உள்ளது.
“உள்ளத்தில் மாசு படியும்போது அதை அகற்றும் கருவியாக புத்தகங்கள் செயல்படுகிறது. திருவள்ளுவர் ‘தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு’ என்கிறார். நமக்குள் இருக்கும் அறிவை வெளிக்கொணரும் கருவியாக புத்தகங்கள் உள்ளன.
மரம், மாடு, கன்று தனியாக இருந்தால் அதை யாராவது சேர்த்து கொள்கிறார்கள். ஆனால், மனிதனில் மட்டும் அநாதைகள் இருக்கிறார்கள். 2000 ஆண்டுகளுக்கு முன்பே மாடுகட்டிப் போரடித்தால் நேரம் ஆகுமென்று யானை கட்டிப் போரடித்த மாமதுரை. உலகில் தோன்றிய முதன்மையான சமுதாயம் தமிழ்ச் சமுதாயம். ஐம்பது வருடமாக நிலத்தில் விஷத்தைப் போட்டுப் பயிரிடத் தொடங்கிவிட்டோம். முன்பு அவ்வைப் பாட்டி சொன்னாள் நெல்லுக்கு இரைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்குப் போகும்; அதைப் பசுமாடு உண்ணும். அந்தப் பாலைக் குடித்து வளர்ந்த குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தன. ஆனால், இப்பொழுது பிறக்கும் குழந்தைகளில் 50% கண்பார்வை குறைவுடனும், 75% இரத்தசோகையுடனும் 5% குறைந்த எடையுடனும் பிறக்கின்றன. இதற்கு காரணம் இயற்கை விவசாயம் அழிந்தது தான். உலகில் பாதிப்பேருக்கு உணவு பத்தவில்லை. 85 கோடி பேர் பசியோடு உணவு இன்றித் தவிக்கிறார்கள். ஐந்தில் ஒரு இந்தியன் பசியோடு இருக்கிறான். இதைப் பற்றிய எந்த கவலையும் இல்லாமல்தான் இந்த சுகபோக வாழ்வை அனுபவித்து வருகிறோம்.
நமது பண்பாட்டை மறந்து நாகரீகம் என்று நாய் போல அலைகிறோம். 1905இல் இந்தியா வந்த ஆல்பர்ட் ஒவார்ட் என்ற ஆங்கிலேயர் இந்திய விவசாயத்தைப் பார்த்து வியந்து இனி இவர்கள்தான் என் ஆசிரியர்கள் என்றார். அவர் 1941இல் இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழக புத்தகத்தில் நம் விவசாய முறையே சிறந்தது என்கிறார். ஆனால், நாம் அதைப் படிக்கவில்லை. வெளிநாடுகளில் இருந்து வாங்கிப் பொழைக்கும் பிச்சைக்காரர்களாகவே நம் வாழ்க்கை மாறி வருகிறது. உலகின் மிக முக்கிய பிரச்சனை – பூமி சூடாகிறது. இரண்டாவது உணவுப் பற்றாக்குறை.
முதலில் நமக்கு டீசலைக் கொடுத்தான். எதுக்குன்னா “டிராக்டர்ல ஊத்து; மோட்டார் போட்டு தண்ணி எடு; தானியம் பெருகும்”னு சொன்னான். இப்ப தானியத்தைக் கொடுன்னு நம்மட்ட கேட்கிறான். எதுக்குன்னா டீசல் தயார் பண்ணவாம். இதுக்கா உழைக்கிறோம்? வெளிநாட்டுப் பொருளை நம்பி மேலும் அந்த கருவிகளை கொண்டு நிலத்தையே கெட்டியாக்கிட்டோம். சோளம், கம்பு, தினை போன்ற தானியங்களை பயிர் செய்து சாப்பிட்டு நன்றாக இருந்தோம். ஆனால், இன்று விளையும் மக்காச்சோளம் பாதி கோழிக்கும், பன்னிக்கும், மாட்டுக்கும் தீவனமா போகுது. நாம கோழியத் தின்னா சத்துன்னு நினைக்கிறோம். எதை எதையோ நாம ஆசைப்பட ஆரம்பிச்சுட்டோம். அமெரிக்கா போக ஆசை, நிலாவுக்கு போக ஆசைன்னு தேவையில்லாத ஆசை அதிகமாயிடுச்சு.
ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். நாம என்ன செஞ்சோம்? நல்லா வேடிக்கை பார்க்கிறோம். அரிசி, வெண்டிக்கா, கத்திரிக்கா எல்லாமே விஷமா மாறிட்டு வருது. திராட்சை எல்லாம் உரப்பொடி கலவைல பதினைந்து தடவையாவது ஸ்பிரே பண்றாங்க. நாம அரை கிலோ பத்து ரூபான்னு வாங்கி திங்கிறோம். பேருந்து நிலையத்துல இறங்குனா ஒரு சாப்பாட்டுக் கடை, மருந்துக் கடை, வட்டிக்கடை(பேங்க்) இருக்கும். எல்லாத்தையும் அனுபவிக்கிறோம். தண்ணி முன்னூறு அடிக்கு கீழ போயிருச்சு. அதையும் விஷமாக்கிட்டோம். முன்னால அரசர், அரசி, மக்கள் இடுப்புல இருந்து முழங்கால் வரை உடை போட்டார்கள். மேலே நகைகள் அல்லது மாலைகள் அணிந்து இருந்தார்கள். ரோமாபுரி யவனர்கள் உடம்பு முழுவதும் மூடி உடை அணிந்து இருப்பார்கள். இவர்கள் இங்கு காவல் புரிந்து வந்தனர். இப்ப எல்லாமே தலைகீழ். காவல்காரன் போட்டத நாம போட்டது மட்டுமில்லாம சாயம் போட்டு போட்டு கழிவு நீரெல்லாம் ஓடி காவிரி, பவானி, நொய்யல் எல்லாம் சாக்கடையா ஓடுது. வைகையில எல்லாம் கைய வைக்க முடியாது. அப்படி நீர்நிலையையெல்லாம் சாக்கடையா ஆக்கிட்டோம்.
சூழல் அறிவு இல்லை. உயிர் சூழலியல் (ECOLOGY). இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நல்ல சூழல் இருந்தது. திணைகளை உண்ண பறவைகளும், பறவைகளை பத்த காவலும் என இயற்கையாய் இருந்தது. இன்று உணவுக்குக் கையேந்த வேண்டி வந்துவிட்டது. பருத்தி 5-10% வரை போடுறோம். நூல் போக கொட்டைகளை மாட்டுக்கு போடுறோம். உரத்த போடாம பூச்சிக்கொல்லின்னு இங்கிலீஸ் விஷமா போட்டு ஏரி, புல் என எல்லாம் விஷமா மாறிடுது. கடைசில தாய்ப்பாலும் விஷமாயிடுச்சு. தரங்கெட்ட, ஈனமான இனமாக தமிழினம் மாறி வருகிறது.
முன்னாடி தட்டான் கொசுவைத் தின்று விடும். சிலந்தி அந்தைத் தின்றுவிடும். நாம போட்ட விஷத்தால எதிரிகள் சாவதற்கு பதிலா நண்பர்கள் செத்துப் போறாங்க. நாம உடம்பு சீக்காகி டாக்டர்ட்ட போய் அவர் குடும்ப டாக்டராகிவிடுகிறார். மருந்துகடைக்காரங்க சொந்தமாகிவிடுறாங்க. ஐ.நா சபைல உணவுப்பஞ்சத்தப் போக்க வழிகேட்டா நாலு ஆண்டு ஆராய்ச்சி பண்ணி தவளை மரபணுவ தக்காளில வைக்கிறானாம். உடையாதாம். இப்படி பல வித்தைகளை சொல்றாங்க. முக்கூடற்பள்ளுல பல விதை ரகங்கள சொல்றாங்க. இதுல சாப்பிட்ட நீராகாரம் நம்மவர்களின் உடலை வலு செய்தது. இப்ப ஐ.ஆர்.8,20,60 என நம்பர் போடுறான். மூணு வருசங்கூட தாக்குப்புடிக்க முடியல அந்த விதையால. மூன்றாம் உலகப்போர் 1960லயே வந்துருச்சு. அதுக்குப் பேரு பசுமைப் புரட்சி. ஆறு அறிவு இருக்க நாம உலகத்த அழிக்கிறோம். ஒரு அறிவு உள்ள மரம் தன் பழங்களை பறவைகள் உண்ணத் தருகிறது. அதன் எச்சம் மூலம் தன் இனத்தை வளர்க்கிறது. நாம இயற்கையை விட்டு விலகி எவ்வளவோ தூரம் வந்துட்டோம். இனியாவது இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்வோம். வீட்டுக்கு அருகில் மரங்களை பாருங்கள். பறவைகளைப் பாருங்கள். நல்ல புத்தகங்களைத் தேடி படியுங்கள்.”
புத்தகத்திருவிழாவில் நம்மாழ்வார் அய்யாவின் உரையை கேட்டு அவர் எழுதிய ‘உழவுக்கும் உண்டு வரலாறு’ என்னும் புத்தகம் வாங்கினேன். பசுமை விகடனில் நம்மாழ்வார் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து நல்லதொரு நூலாக விகடன் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. 45 ரூபாய்.
ஜப்பானில் உதித்த விவசாய சூரியன் மசானோபு ஃபுகோக்கா போன்ற விவசாய ஆராய்ச்சியாளர்களிலிருந்து ராச்சேல் கார்சன், பில்மொல்லிசன், பாஸ்கர்சாவோ, கிளாடு பூரிங்கன், தபோல்கார், அமெரிக்கர் ரொடேல், கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோ என நாம் அறியாமல் இருக்கும் பல இயற்கை விவசாய ஆராய்ச்சியாளர்கள், தலைவர்கள் குறித்து இந்நூலில் கூறுகிறார். ‘எந்தப் பலனையும் எதிர்பராது குஞ்சுக்கு உணவூட்டும் பறவை போன்று தாயன்புடன் செயல்படும் தொண்டர்களே’ என்று கூறி வழிகாட்டியாய் வாழ்ந்த ஜே.சி.குமரப்பா, ஈரோட்டில் ஒற்றை நாற்றுச் சாகுபடியை முப்பது ஆயிரம் ஏக்கர் அளவில் ஊக்குவித்துள்ள மாவட்ட ஆட்சியர் உதயசந்திரன் போன்றவர்களோடு வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களே வியந்து போற்றிய நம் உழவர்களைக் குறித்து எழுதியிருக்கிறார். நரம்புத்தளர்ச்சி, மூச்சுத்திணறல், சிறுநீரகத்தில் கல்அடைப்பு, புற்றுநோய் போன்ற வியாதிகளுக்கும் பூச்சிக்கொல்லிகளில் உள்ள நஞ்சிற்கும் பங்குண்டு என்பதையும் கூறுகிறார். இயற்கை விவசாயத்திற்கு மண்புழுக்களிலிருந்து கால்நடைகள் வரை எப்படி உதவுகின்றது என்பதையும் அதனால் நமக்குக் கிடைக்கும் பயன்களையும் பட்டியலிட்டிருக்கிறார். உலகமயமாக்கலுக்கும், உலகவெப்பமயமாவதற்கும் உள்ள தொடர்பை விவரிக்கிறார்.
மக்களால் மக்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் தலைவர்கள் மக்களின் நலனுக்காக உலகையே இரட்சிக்க பிறந்த அமெரிக்காவிலிருந்து விவசாயம் குறித்த சிந்தனைகளையும், இயந்திரங்களையும், இரசாயனங்களையும் கடனாய்ப் பெற்று மக்களின் பசிப்பணி போக்க பசுமைப்புரட்சி திட்டங்களை தீட்டி நம் மண்ணை மலடாக்கி, உணவை நஞ்சாக்கி மேலும், விவசாயிகளை கடனாளிக்கிய கதையைத்தான் இந்நூல் சுட்டிக்காட்டி நம் சொரணையைக் கொஞ்சம் உறைக்க வைக்கிறது. நெல் நட்ட இடங்களில் எல்லாம் கல் நட்டு விளை நிலங்களை எல்லாம் விலை நிலங்களாக்கி இனி உணவுக்காக வருங்காலத்தில் மற்ற நாடுகளை நோக்கி நாம் பிச்சையெடுக்கப் போவதைத்தான் சுட்டிக்காட்டுகிறது. லட்சக்கணக்கில் விவசாயிகள் கொத்துக்கொத்தாய் மடிந்தபோதும் மானாட மயிலாட, கிரிக்கெட்டு பார்த்து தறிகெட்டு கிடக்கும் நம் மனிதத்தை கேள்விக்குட்படுத்துகிறது. மேலும், புரட்சியெல்லாம் மக்கள் செய்ய வேண்டும் அரசு செய்தால் புரட்டாசி மாசம் சுண்டல் வாங்கக்கூடப் பயன்படாது என்பதை நம்மை உணரச்செய்யும் புத்தகம்.
நமக்கு நம்பிக்கை தரும் விசயம் என்னவென்றால் ‘உன்னால் முடியும் தம்பி’ கமல்ஹாசன் போல நிறைய பேர் தனியாக தீவிரமாக இயற்கை விவசாயம், மரம்வளர்ப்பு போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருவதுதான் நம்மை சுதந்திரமாக மூச்சு விடச்செய்கிறது.
இந்நூலை வாசிப்பதோடு நின்றுவிடாமல் நாமும் சில காரியங்களை செய்யலாம். குளிரூட்டபட்ட கடைகளில் கிடைக்கும் காய்கறிகள், ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பழங்கள்தான் தரமானவை என்ற மூட நம்பிக்கைகளை மூட்டை கட்டிவைத்துவிட்டு வீதியில் கூவி விற்றுவருபவர்களிடம் வாங்கலாம். நமக்கு தேவையான காய்கறிகளை நம் வீட்டிலேயே வளர்க்கலாம். மண்புழு வளர்ப்பு போன்ற பயிற்சிகளை கிராமத்தில் கொடுக்க ஏற்பாடு செய்யலாம். பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அடுத்த தலைமுறையாவது இயற்கையோடு வாழ வழிவகை செய்யலாம். மேலும், இயற்கை விவசாயம் குறித்து அறிய பசுமை விகடன் போன்ற பத்திரிக்கைகள், புத்தகங்கள் வாசியுங்கள்.
கீழே உள்ள இணைப்புகளிலிருந்து விவசாயம் குறித்த தளங்களுக்கு செல்லுங்கள்.
முக்கூடற்பள்ளு குறித்து தனிப்பதிவில் பார்ப்போம். படங்களை தந்துதவிய கோயில்பாப்பாகுடி நண்பர்களுக்கு நன்றி!

எஸ்.ராமகிருஷ்ணன் தளத்தில் நம்மாழ்வார் உரை குறித்த ‘உயிர்க்கொல்லி’ பதிவை வாசியுங்க. http://www.sramakrishnan.com/?p=2471
‘செய் அல்ல செய்வோம்’ என இயற்கை விவசாயம் செய்யும் ஆர்கானிக் ஆனந்தின் தளம் http://organicananth.blogspot.com/
வேளாண்மை.காம் http://beta.velaanmai.com/
மருதம் http://marutam.blogspot.com/
விவசாயப் புரட்சி http://vellamai.blogspot.com/
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ‘கண்திறந்தது’ படத்திற்காக 1959ல் எழுதிய கீழ்க்கண்ட வரிகளோடு முடிக்கலாமென நினைக்கிறேன்.
எழுதிப் படிக்க அறியாதவன்தான்
உழுது ஒழச்சு சோறு போடுறான்…
எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி
நல்லா நாட்டைக் கூறு போடுகிறான் –
இவன் சோறு போடுறான் –
அவன் கூறு போடுறான்.

Saturday, March 24, 2012

நலம்தரும் நத்தைச்சூரி…



இயற்கையின் கொடையான புல் பூண்டு, செடி, கொடி, மரம், அனைத்தும் மனித இனத்திற்கு ஏதோ ஒரு வகையில் பயன்படுகிறது.  இவற்றில் பல நோய் தீர்க்கும் குணம் கொண்டவை.  சித்தர்கள் இவற்றை மூலிகைகளாகக் கொண்டு பல விதமான நோய்களை குணப்படுத்தி வந்துள்ளனர்.  மேலும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும், வலுவையும் கொடுக்கக்கூடிய கற்ப மூலிகைகளைப் பற்றிக் கூறியுள்ளனர்.  கற்பம் என்றால் உடலை நோயின்றி ஆரோக்கியமாக வைக்கும் முறை.  இந்த வகையில் கற்ப மூலிகைகள் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம்.  இந்த இதழில் நத்தைச் சூரி என்னும் மூலிகை பற்றி அறிந்துகொள்வோம்.
இவை இந்தியா முழுவதும் காணப்படும் மூலிகையாகும்.  குறிப்பாக தமிழகத்தில் மணற்பாங்கான இடங்களில் அதிகம் வளர்கின்றது.  இது பூண்டு வகையைச் சார்ந்தது.
நான்கு பட்டையான தண்டுகளையும் எதிரடுக்கில் அமைந்த காம்பற்ற இலைகளையும், மிகச் சிறிய பூக்களையும் கொண்டதுதான் நத்தைச்சூரி.
இதனை குழி மீட்டான், தாருணி, கடுகம், நத்தைச்சுண்டி, தொலியாகரம்பை என பல பெயர்களில் அழைக்கின்றனர்.
கூச்ட்டிடூ    - Natthai Choori
Tamil    - Natthai Choori
English    - Shaggy button weed
Malayalam    - Thartuvel
Telugu    - Madana Ghettu
Sanskrit    - Madanghanta
Botanical Name - Spermacoce hispida
இதன் வேர் மற்றும் விதை மருத்துவப் பயன் கொண்டவை.
வேர் நோய் நீக்கும் தன்மை கொண்டது
விதை, உடல் சூட்டைப் போக்கி உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்.  சீதபேதி, பெருங் கழிச்சலைப் போக்கும்.
உடல் தேற
நோயின் பாதிப்பிலிருந்து விடுபட்டு உடல் தேற நத்தைச்சூரியின் விதையைப் பொடித்து தினமும் 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வரவேண்டும்.  இதனால் நோயின் தாக்கம் குறைவதுடன் உடலும் வலுப்பெறும்.
நத்தைச்சூரியின் விதையை லேசாக வறுத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு 1 ஸ்பூன் அளவு எடுத்து பாலில் கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் உடல் சூடு தணிவதுடன் உடலில் உள்ள தேவையற்ற இரசாயன வேதிப் பொருட்கள் வெளியேற்றி, சிறுநீரகக் கல்லலைப்பு ஏற்படாமல் தடுக்கும்.  மேலும் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் உண்டாகும் அதிக உதிரப் போக்கைத் தடுக்கும்.  வெள்ளைப் படுதலைக் குணமாக்கும்.
நத்தைச் சூரியின் விதையைப்பொடியாக்கி சம அளவு கற்கண்டுப்பொடி கலந்து காலையும், மாலையும் 1ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் வெப்பத்தினால் உண்டான வயிற்றுக்கடுப்பு, கழிச்சல் நீங்கும்.
10 கிராம் நத்தைச் சூரி வேரை காயவைத்து பொடியாக்கி பசும்பாலில் கலந்து கொதிக்க வைத்து அருந்தி வந்தால் தாய்ப்பால் பெருகும்.
நத்தைச்சூரி வேரை இடித்து 200 மி.லி. தண்ணீரில் கொதிக்க வைத்து 2 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி தினமும் 50 மி.லியாக  நாள் ஒன்றுக்கு மூன்று வேளை குடித்து வர காய்ச்சல் மற்றும் நோயின் தாக்கம் குறையும்.
நத்தச்சூரி தைலம்
நத்தைச்சூரி வேர், நாயுருவி வேர், வன்னிவேர், உத்தாமணி வேர், தூதுவளை வேர், விளாவேர், பாகல் வேர், வேப்பம்பட்டை, கடுக்காய், மிளகு, வெள்ளுள்ளி, வசம்பு, திப்பிலி, குப்பைமேனி, துத்திவேர் இவற்றை சம அளவு எடுத்து இடித்து 1 லிட்டர் நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு அடிக்கடி உடலில் தேய்த்து வந்தால் சரும பாதிப்பு நீங்குவதுடன் உடல் சூடு தணியும்.  தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது குறையும்.
நன்றி- ஹெல்த் சாய்ஸ்
vayal | மார்ச் 14, 2012 at 10:56 மு.பகல் | Categories: உடல்நலம் | URL: http://wp.me/pewfk-3TK
Comment    See all comments

புற்றணுக்களை தேடிக் கொல்லும் `டி.என்.ஏ’ நானோ ரோபோ!

புற்று நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டிருக்கும் அதேவேளையில் இந்த நோய்க்கான நவீன சிகிச்சைகளும் வளர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
ஆனால், புற்றுநோய்க்கு எதிரான இந்த மருத்துவ முயற்சிகளுக்கு எல்லாம் சிம்ம சொப்பனமாய் இருப்பது ஒரேயொரு பிரச்சினைதான். அது, புற்றுநோய் உயிரணுக்கள் அழிக்கப்படும்போது பாதிப்புக்குள்ளாகி இறந்துபோகும் ஆரோக்கியமான உயிரணுக்களால் ஏற்படும் மோசமான பின்விளைவுகள்!
புற்றுநோய் சிகிச்சையில் உள்ள இந்த தலையாய பிரச்சினைக்கு ஒரு தீர்வை சொல்ல வந்திருக்கிறது புற்றணுக்களை தேடிக் கொல்லும் திறனுள்ள டி.என்.ஏ. நானோ ரோபோ! `டி.என்.ஏ. ஓரிகேமி' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த நானோ ரோபோவை உருவாக்கியிருப்பவர் அமெரிக்காவிலுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் ஷான் டக்ளஸ்.
ரோபோ தெரியும், அதென்ன டி.என்.ஏ. நானோ ரோபோ?
மனித மரபணுக்கள் டி.என்.ஏ. எனும் மூலக்கூறுகளால் ஆனவை. டி.என்.ஏ.வால் ஆன, நானோ அளவுடைய ரோபோ டி.என்.ஏ. நானோ ரோபோ எனப்படுகிறது. டி.என்.ஏ.வை பல வடிவங்களில் உருவாக்கும் திறனுள்ள தொழில்நுட்பம்தான் டி.என்.ஏ. ஓரிகேமி! டி.என்.ஏ.வின் வேதியியல் கட்டமைப்பினை புரிந்துகொள்ளும் டி.என்.ஏ. மாடலிங் சாப்ட்வேரில், நமக்கு தேவையான ஒரு வடிவத்தை `க்ளிக்' செய்தால்,
டி.என்.ஏ.வைக் கொண்டு அந்த வடிவத்தை அது உருவாக்கிவிடும்.
இந்த டி.என்.ஏ. ஓரிகேமி சாப்ட்வேரை பயன்படுத்தி சிப்பி வடிவத்தில் உள்ள ஒரு டி.என்.ஏ. நானோ ரோபோவை உருவாக்கினார் ஆய்வாளர் ஷான் டக்ளஸ். இதற்குள் புற்றுநோய் மருந்தை வைத்து, அதை நோயாளியின் உடலுக்குள் செலுத்தி புற்றணுக்களை அழிப்பதே டக்ளஸின் திட்டம்.
இந்த சிப்பி நானோ ரோபோக்கள், புற்றணுக்களை எதிர்கொள்ளும்போது மட்டும் தன்னுள் இருக்கும் மருந்தை வெளியேற்றி அவற்றைக் கொல்ல வேண்டும். அதற்காக சிப்பி நானோ ரோபோவுக்கு இரண்டு பூட்டுகள் வடிவமைக்கப்பட்டன. ஜிப் போல திறந்து மூடிக்கொள்ளும் தன்மையுடைய இந்த பூட்டுகள் ஒவ்வொன்றும் `ஆப்டாமர்' எனப்படும் டி.என்.ஏ. இழைகளாலானவை. இவை குறிப்பிட்ட ஒரு மூலக்கூற்றை எதிர்கொள்ளும்போது மட்டும் திறந்துகொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பட்டவை.
இந்த நானோ ரோபோக்களின் சிகிச்சை திறனை பரிசோதிக்க, ரத்த புற்றணுக்களான லியூக்கீமியா உயிரணுக்களின் மேற்புறத்தில் இருக்கும் மூலக்கூறுகளை எதிர்கொள்ளும்போது திறந்துகொண்டு மருந்தை வெளியேற்றும் வண்ணம் ஒரு சிப்பி நானோ ரோபோ வடிவமைக்கப்பட்டது. பின்னர் அந்த சிப்பிக்குள், உயிரணுக்களின் வளர்ச்சியை தடை செய்து அவற்றை கொல்லும் திறனுடைய ஒரு மருந்து வைக்கப்பட்டது.
இறுதியாக, மருந்து தாங்கிய சிப்பி நானோ ரோபோக்கள் ஆரோக்கியமான ரத்த அணுக்கள் மற்றும் ரத்த புற்றணுக்கள் கலந்த ஒரு உயிரணு கலவைக்குள் செலுத்தப்பட்டன. மூன்று நாட்கள் கழித்து, ரத்த புற்றணுக்களுள் பாதி அழிக்கப்பட்டன. ஆனால் ஆரோக்கியமான ரத்த உயிரணுக்களில் ஒன்றுகூட பாதிக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது.
இந்த சிப்பி நானோ ரோபோவுக்குள், புற்றணுக்களின் செயல்பாடுகளை தடை செய்யும் திறனுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகளை புகுத்தி உடலுக்குள் செலுத்தினால், லியூக்கீமியா உயிரணுக்களை ஒன்று விடாமல் மொத்தமாக அழித்துவிடலாமாம். இதன் மூலம் லியூக்கீமியா வகை ரத்த புற்றுநோய்க்கு முழுமையான சிகிச்சையளிக்க முடியும் என்கிறார் டக்ளஸ்.
முக்கியமாக, சிப்பி நானோ ரோபோக் களின் ஆப்டாமர் பூட்டுகளை மாற்றுவதன் மூலம், உடலின் எந்த வகையான உயிரணுவையும் தாக்கி அழிக்க முடியும் என்கிறார் டக்ளஸ். இதுதான் மருத்துவ உலகின் தற்போதைய பரபரப்பான செய்தி.
எந்தவித பாகுபாடுமின்றி வேகமாக வளரும் திறனுள்ள எல்லா உயிரணுக்களையும் கொன்றுவிடும் தன்மையுள்ளது கீமோதெரபி சிகிச்சை. கீமோதெரபியில் இருக்கும் இந்த முக்கியமான சிக்கலை, இரண்டு பூட்டுகளைக் கொண்ட சிப்பி நானோ ரோபோக்கள் தீர்த்து வைக்கும் என்றும் நம்பிக்கை அளிக்கிறார் டக்ளஸ்.
அதாவது, சிப்பி நானோ ரோபோவுக்குள் இருக்கும் மருந்தை வெளியேற்ற அதன் இரண்டு பூட்டுகளை திறந்தாக வேண்டும். இந்த பூட்டுகளை திறக்க, சிப்பி நானோ ரோபோக்கள் சந்திக்கும் உயிரணுக்களின் மேற்புறத்தில் குறிப்பிட்ட சில மூலக்கூறுகள் இருக்க வேண்டியது அவசியம். இந்த மூலக்கூறுகள், புற்றணுக்களில் மட்டும்தான் இருக்கும். ஆக, சிப்பி நானோ ரோபோ சிகிச்சையில் புற்றணுக்கள் மட்டுமே கொல்லப்படும். எந்தவித பின்விளைவுகளும் இருக்காது!
ஆமாம் என்று ஆமோதிக்கிறார் டென்மார்க்கிலுள்ள ஆர்ஹஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் யூர்கன் ஜெம்ஸ். மேலும், டி.என்.ஏ. ஓரிகேமி தொழில்நுட்பத்தின் மூலம் புத்திசாலியான மருந்துகளை கண்டுபிடிக்க முடியும் என்பது உண்மைதான். இதை டக்ளஸின் ஆய்வுக்குழு ஆதாரப்பூர்வமாக நிரூபித்திருப்பது பாராட்டத்தக்கது என்கிறார் ஜெம்ஸ்.
டி.என்.ஏ. ஓரிகேமி கொடுத்திருக்கும் இந்த டி.என்.ஏ. நானோ ரோபோ, புற்றுநோய் மருத்துவத்துக்கு கிடைத்த ஒரு மகத்தான பரிசு என்பது மறுக்க முடியாத உண்மைதான் என்கிறார்கள் பால் ராத்மண்ட் உள்ளிட்ட உலகின் பிற புற்றுநோய் ஆய்வாளர்கள்.