Tuesday, February 14, 2012

மண் பானைகள் மூலம் சொட்டு நீர் பாசனம்



தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் மலை கிராமங்கள் அதிகம் உள்ளன. இவற்றில் வட்டுவனஅள்ளி உள்ளிட்ட மலைகிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மா, கொய்யா உள்ளிட்ட மரக்கன்றுகளை பயிரிட்டுள்ளனர். சமவெளியாக இல்லாமல் கரடு, முரடாக, மேடு பள்ளமாக உள்ள இடத்தில் மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.





பானையில் தண்ணீர் குறைந்தவுடன் மீண்டும் குடத்தில் நீர் கொண்டு சென்று ஊற்றி விடுகின்றனர். இதனால் மரக்கன்று நடப்பட்ட இடம் எப்போதும் ஈரமாகி செடி வளர உதவுகிறது.

சொட்டு நீர் பாசனம் போல் செயல்படும் இதற்கு குறைந்த அளவே பணம் செலவு ஆவதுடன் மின்சாரம் வசதி தேவையில்லாததால் மலைகிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்த முறையை தற்பொழுது ஆர்வத்துடன் பின்பற்றி வருகின்றனர். இதன் மூலம் செடிகள் நன்கு வளர்ந்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும் அப்பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறியது: வட்டவனஅள்ளி ஊராட்சி மேடான பகுதியாகும். இதில் செடிகளுக்கு சாதாரணமாக தண்ணீர் பாய்ச்சும் போது நிலத்தில் தேங்கும் நீர் தாழ்வான பகுதிகளுக்கு வடிந்து சென்று விடும்.

இதனால் தண்ணீரை சேமிக்க முடிவு செய் தோம். மண் பானை சொட்டுநீர் பாசனம் குறி த்து தெரிந்து பயன்படுத்தி வருகிறோம். இதனால் மரகன்றுகளுக்கு தேவையான நீர்சத்து கிடைத்து மரங்கள் நன்கு வளர்ந்து வருகிறது என்றார்.

இதனால் மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாது. நட்டு வைக்கும் மரக்கன்றுகள் நன்றாக வளர மலைவாழ் மக்கள் நூதன முறையை கடைபிடித்து வருகின்றனர்.

இவர்கள் வளர்க்கும் ஒவ்வொறு கன்றுகளுக்கு அருகில் ஒரு மண் பானையை வைத்து நீரை நிரப்புகின்றனர். பானையின் கீழ் பகுதியில் சிறு துவாரம் போட்டு விடுகின்றனர். இதன் மூலம் தண்ணீர் சொட்டு சொட்டாக மரக்கன்றுகளுக்கு செல்கிறது.

No comments: