Tuesday, February 14, 2012

தென்னைக்கு சொட்டுநீர்ப் பாசனம்

 
தென்னைக்கு சொட்டுநீர்ப் பாசனம்: அதிக இடைவெளி கொண்ட தென்னை போன்ற நீண்டகால பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் ஒரு சிறந்த பாசன முறையாகும். தென்னை பொதுவாக 7.5 மீட்டர் ஙீ 7.5 மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய பரிந்துரை செய்யப்படுகிறது.
இவ்வாறு நடவு செய்யப்படும் தென்னைக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க பக்கவாட்டு குழாய்களை 7.5 மீட்டர் இடைவெளியில் அடைத்து மரம் ஒன்றுக்கு மணிக்கு 8 லிட்டர் பாசன நீர் வெளியேறக்கூடிய சொட்டுவான்கள் நான்கைப் பொருத்தினால் சிறப்பான முறையில் சொட்டுநீர்ப் பாசனம் மேற்கொள்ளமுடியும்.
4 சொட்டுவான்களில் 2ஐ மரத்தின் அருகாமையில் குறிப்பிட்ட இடைவெளியில் பக்கவாட்டுக் குழாய்களில் இணைக்க வேண்டும். மற்ற 2 சொட்டுவான்களையும் பக்கவாட்டுக் குழாயுடன் இணைக்கப் பட்ட நுண்குழாயில் பொருத்தி ஏற்கனவே உள்ள சொட்டுவான்களுக்கு இணையாக சீரான இடைவெளியில் இருக்குமாறு அமைக்கலாம்.
இவ்வாறு 4 சொட்டுவான்களும் மரத்தைச் சுற்றி சரியான இடைவெளியில் இருக்குமாறு அமைப்பதால் பாசன நீர் சீராக எல்லா மரத்திற்கும் கிடைக்க ஏதுவாகும். சொட்டுநீர் பாசனத்தில் தென்னையின் நீர்த்தேவை, தட்பவெப்ப நிலை மற்றும் பருவநிலையைப் பொறுத்து இடத்திற்கு இடம் வேறுபடும்

நீர்வளம் நிறைந்த பகுதிகளில் சொட்டு நீர் பாசனம் மூலம் அதிகபட்ச மகசூல் பெற பரிந்துரை செய்யப்படும் அளவாகும். ஒவ்வொரு பருவத்திற்கும் பாசன நேரத்தை நிர்ணயிப்பதன் மூலம் தேவைப்படும் சரியான அளவு நீரை மரத்திற்கு அளிக்கலாம். உதாரணமாக மணிக்கு 8 லிட்டர் நீர் வெளியேற்றும் 4 சொட்டுவான்கள் மூலம் மரம் ஒன்றுக்கு தினமும் 65 லிட்டர் பாசனம் செய்ய தேவைப்படும் பாசன நேரம் 2 மணி நேரமாகும். இவ்வாறு ஒவ்வொரு பாசன அளவிற்கும் பாசன நேரத்தைக் கணக்கிட்டு அதன்படி சரியான அளவு நீரை மரத்திற்கு அளிக்கலாம். மேற்பரப்பு பாசன முறையுடன் ஒப்பிடும் போது சொட்டு நீர்ப்பாசனத்தில் 70 சதம் பாசன நீர் சேமிப்பு கிடைக்கும்.

No comments: