Monday, February 27, 2012

மாட்டு வண்டியே... மகத்தான வண்டி...!

மாட்டு வண்டியே...
மகத்தான வண்டி...!

இன்றைய சமுதாயம் சக்தியை பல வழிகளில் இருந்தும் பெறுகிறது. நிலத்துக்கடியில் இருந்து எடுக்கப்படும் பெட்ரோல், டீசல் முதலான எரிசக்திகள் உலகப் பொருளாதாரத்தை தீர்மானிக்கிறன. இவைகளுக்காக நம் நாடு வெளி நாடுகளைச் சார்ந்துள்ளது. ஆதலால் உலகச் சந்தையில் பெட்ரோல், டீசல் விலை உயரும்போது எல்லாம் நமது அன்றாட வாழ்வில் பயன்படும் பண்டங்களின் விலை வாசியும் கட்டுப்படுத்த முடியாத அளவ...ிற்கு உயர்கிறது. ஆதலால் இன்று புதுப்பிக்கப்படக் கூடிய சூரிய, காற்று, தாவர எரிசக்தி குறித்து தீவிரமாக அனைவரும் சிந்திக்கிறார்கள்.

காளைமாடுகளும் புதுப்பிக்கப்படக்கூடிய ஆற்றல் வடிவமாகும். மாடுகள் தனது உணவுக்காக மனிதர்களுடன் போட்டியிடுவதில்லை. மனிதன் வேண்டாம் என்று கழித்ததையே உட்கொண்டு உணவும், உழைப்பும், எருவும், எரிபொருளும் தருகின்றன. பச்சை புரட்சி வேளாண்மை மாடுகளுக்கு மாற்றமாக இரசாயனங்களையும் எந்திரங்களையும் முன்வைத்தன. இதன் விளைவாக கிராமப்புறங்க்கலில் வறுமை அதிகரித்தது. மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்பட்டன.

அமெரிக்காவிற்கு பக்கத்தில் உள்ள கியூபா நாட்டு மக்கள் மாடுகளை ஏரில் பூட்டுகிறார்கள். பூமி சூடாவதை தவிர்ப்பதற்கு
பெட்ரோல், டீசல் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டி இருக்கிறது. இப்படி ஒரு சூழலில் நமது மக்கள் மாடுபூட்டி ஓட்டக்கூடிய ஒரு
உல்லாச வண்டியை உருவாக்கி இருப்பது நம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது.

கோ.நம்மாழ்வார்,
இயற்கை வேளாண் விஞ்ஞானி
See More

No comments: