Monday, February 27, 2012

ரேடியம்


மேரி கியூரி அதிக ஒளி வீசும் பொருட்களைப் பற்றி பிரெஞ்சு நாட்டு அறிவியல் மேதையான ஹென்றி பெக்வார்ல் பல காலமாக ஆராய்ச்சி செய்து பல உண்மைகளைக் கண்டறிந்தார்.
அவர் அறிந்திருந்த பொருட்களில் யுரேனியம் என்பதும் ஒன்று. அது ஓர் உலோகப் பொருள். அது இருளிலும் ஒளி வீசும் இயல்புடையதாக இருந்தது.
ஆனால் யுரேனியத்தின் அந்தப் பண்பு குறித்து அறிந்துகொண்டது தவிர அதை ஏதாவது ஒரு விதத்தில் பயன்படுத்துவது குறித்து அவரால் ஏதும் தெரிந்துகொள்ள முடியவில்லை.
எனினும் யுரேனியம் தொடர்பாக பெக்வார்ல் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தார். அந்தச் சந்தர்ப்பத்தில்தான் அறிஞர் ராண்ட்ஜென், எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்துப் புகழ் பெற்றிருந்தார்.
எக்ஸ் கதிர் போன்று யுரேனியத்தில் இருந்தும் கதிர்கள் வெளிவருவதால்தான் யுரேனியம் இருளிலும் பிரகாசிக்கிறது என்று நினைத்தார்.
அந்தக் கண்ணோட்டத்தில் அவர் ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
ஒருநாள், இருள் நிறைந்த ஒரு பெட்டியில் கறுப்பு நிறக் காகிதத்தினால் நன்கு மூடப்பட்ட புகைப்படம் எடுக்கும் தாளின் மேல் யுரேனியம் உப்பை வைத்து மூடினார்.
பல நாட்களுக்குப் பிறகு அந்தப் பெட்டியில் இருந்த புகைப்படக் காகிதத்தை வெளியே எடுத்துத் தற்செயலாகக் கருவியில் பார்த்தார்.
அந்தக் காகிதத்தின் மீது யுரேனிய உப்பு இருந்த இடத்தில் ஒரு கறைபடிந்திருப்பதைக் கண்டார்.
வெவ்வேறு யுரேனிய உப்புகளைக் கொண்டு அவர் இவ்வாறு மூடப்பட்ட புகைப்படத் தாளில் கறை படுகிறதா என்று பரிசோதனை செய்து பார்த்தார்.
எல்லா யுரேனிய உப்புகளாலும் புகைப்படத் தாளில் கறைபடிவதை அவர் கண்டார்.
பெர்க்வால் 1896-ல் யுரேனிய உப்பு போன்றவற்றில் இருந்தும் ஒருவகைக் கதிர்கள் வீசுகின்றன என்றும், அக்கதிர்கள் சில தன்மைகளில் எக்ஸ் கதிர்களை ஒத்திருக்கின்றன என்றும் கூறினார்.
பின்னர் பெர்க்வால், யுரேனிய தாதுப் பொருளான `பிச்சு பிளெண்ட்' என்பதை ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டார்.
ஒளிரும் ரேடியம் அந்தத் தாதுவில் இருந்து வெளிப்பட்ட கதிர்வீச்சு, யுரேனியம் அல்லது யுரேனிய உப்புகளின் கதிர்வீச்சின் அளவை விடப் பல மடங்கு அதிகரிப்பதைக் கண்டார்.
யுரேனியத்தை விட அதிகக் கதிர்வீச்சுத் திறன் கொண்ட ஏதோ ஒரு பொருள் அந்தத் தாதுவில் இருக்க வேண்டும் என்று பெர்க்வால் கருதினார்.
ஆனால் அது தொடர்பான முழு உண்மையையும் கண்டுபிடிப்பதற்குள் பெர்க்வால் ஆயுள் முடிவடைந்துவிட்டது.
பெர்க்வால் யூகித்த அந்தப் பொருள்தான் ரேடியம். ஆனால் அதைச் சரியாகக் கண்டுபிடித்தவர்கள் மேரி கியூரி- பியரி கியூரி தம்பதியினர் ஆவார்கள்.
யுரேனியம் அல்லது யுரேனிய உப்புகளிலிருந்து வெளிப்படும் கதிர்கள் எவ்வித இயற்கைச் சக்திகளாலும் பாதிக்கப்படுவதில்லை என்பதை மேரி கியூரி அறிந்தார்.
இதே மாதிரியான இயல்புடைய மற்றொரு பொருள் தோரியம் என்ற உண்மையும் அவருக்கு விளங்கியது.
யுரேனியத்தில் பொதிந்துள்ள அந்த அதிகக் கதிரியக்கச் சக்தியுள்ள பொருளைக் கண்டறிய கியூரி அம்மையாரும், அவரது கணவரும் பெருமுயற்சி செய்து உழைத்தனர்.
கடுமையான ஆராய்ச்சிக்குப் பிறகு அந்தத் தாதுவில் அதிகமான கதிரியக்கச் சக்தி வாய்ந்த இரண்டு தனிமங்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
அந்த இரண்டு தனிமங்களில் ஒன்றின் சக்தி யுரேனியத்தின் கதிரியக்கச் சக்தியை விட 100 மடங்கு அதிகம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தத் தனிமத்தை 1896-ம் ஆண்டு மேரி கியூரி தனியாகப் பிரித்தெடுத்தார்.
அதற்கு `பொலோனியம்' என்று மேரி கியூரி பெயர் கொடுத்தார். அத்தனிமத்தை விட பல மடங்கு கதிரியக்கச் சக்தி கொண்ட மற்றொரு தனிமத்தை 1902-ம் ஆண்டு பிரித்தெடுத்த மேரி கியூரி, அதற்கு `ரேடியம்' என்று பெயர் சூட்டினார்.

No comments: