Wednesday, February 29, 2012

உயர் ரத்த அழுத்தம்

உயர் ரத்த அழுத்தம்

Post image for உயர் ரத்த அழுத்தம்
உயர் ரத்த அழுத்தம் – சமாளிப்பது எப்படி?
உயர் ரத்த அழுத்தம் தற்போது சர்வசாதாரணமாக ஆகிவிட்டது. அதுவும் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இல்லையென்றால் அது ஒரு அதிசயம் தான்! இரத்த அழுத்தத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுமுன், நாம் இதயத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதயம்
இதயம் ஓய்வின்றி உழைக்கும் அவயம். கூம்பு வடிவத்தில் 275 லிருந்து 400 கிராம் எடையுடன், கை முட்டி அளவில் அமைந்திருக்கிறது. இதன் முக்கியமான பணிகள் நமது வீட்டு தோட்டத்தில் உள்ள பம்ப் போல் இதயம் எல்லா அவயங்களுக்கும் ரத்தத்தை கொண்டு செல்கிறது. இரத்தம் 91% நீரினாலும், 9% இதர பொருட்களால் ஆனது. ரத்த குழாய்கள் வழியே இரத்தம் உடலின் எல்லா பாகங்களுக்கும் பிராண வாயுவையும் உயிர்ச்சத்துக்களையும் எடுத்து செல்கிறது. ரத்தம் கொண்டு செல்லும் ஆக்சிஜனை (பிராண வாயு) எல்லா உறுப்புகளும் பெற்றுக் கொண்டு, பதிலுக்கு கரியமில வாயுவை தருகின்றன. இதயத்திற்கு அதிக அளவில் ரத்தம் தேவை. இதன் நாளங்களான கரோனரி தமனி எனப்படும் மகாதமனி மூலம், இதயம் உயிர்ச்சத்துக்களையும், பிராண வாயுவையும் பெறுகிறது.
இதயம், உடலில் ரத்த ஒட்டத்தை இயக்க, இரு வித அழுத்தங்களை உண்டாக்குகிறது.
விரிந்து அழுத்தத்தை உண்டாக்குவது. விரிவதால், உடலின் எல்லா பாகங்களிலிருந்து வரும் அசுத்த ரத்தத்தை வாங்கிக் கொள்கிறது. இதை ‘டையஸ்டோல்’ அழுத்தம் என்பார்கள்.
சுருங்கி அழுத்தத்தை உண்டாக்குவது உள்வாங்கியதை பம்பில் செய்யும் இந்த அழுத்தம் சிஸ்டாலிக் எனப்படுகிறது.
இதயம் 1 நிமிடத்திற்கு சராசரியாக 72 முறை சுருங்கி விரிகிறது. சுருங்குவதற்கு 0.3 வினாடியும் விரிவதற்கு 0.5 வினாடிகளும் எடுத்துக் கொள்கிறது. இதயம் ஒரு முறை துடிப்பதற்கு (சுருங்கி விரிவதற்கு) 0.8 வினாடிகள் ஆகின்றன. ஒரு நிமிடத்தில் இதயம் 5 லிட்டர், ஒரு நாளுக்கு 7200 லிட்டர் என்ற அளவில் உடலில் ரத்தத்தை பம்ப் செய்கிறது. நமது உடலில் உள்ள மொத்த ரத்தம் 5 லிட்டர் ஆகும். இதுவே திரும்ப, திரும்ப பம்ப் செய்யப்படுகிறது. உடலில், ஒரு நிமிடத்தில் 60000 மைல் தூரத்திற்கு இதயம் ரத்தத்தை பம்ப் செய்யும்.
ரத்த அழுத்த அளவுகள்
உடலின் எல்லா பாகங்களும் இதயம் ரத்தத்தை பம்ப் செய்யும் போது ரத்த அழுத்தம் உண்டாகிறது. ரத்த அழுத்தம் எப்போதும் ஒரே நிலையில் இருப்பதில்லை. காலையில் குறைவாகவும் மாலையில் அதிகமாகவும் இருக்கும். உறங்கும் போது குறைவாக இருக்கும். உடற்பயிற்சி செய்யும் போதும் கோபதாபங்களின் போதும் ரத்த அழுத்தம் தற்காலிகமாக அதிகரிக்கும்.
ரத்த அழுத்தத்தை அளக்கும் முன் மேற்கொள்ள வேண்டிய முறைகள்
ஒரு சில முன்னெச்சரிக்கைகளை அனுசரித்தால் உங்கள் இரத்த அழுத்த அளவு சரியாக அமையும்.
நீங்கள் சிகிச்சை பெறும் இடத்திற்கு அவசரமாகச் சென்றால், உங்கள் சுவாசம் சாதாரண நிலையை அடையும் வரை காத்திருந்து, பிறகு, உங்கள் இரத்த அழுத்தத்தை அளவிடுங்கள்.
உணவு உட்கொண்டவுடன், உங்கள் இரத்த அழுத்தத்தை அளக்காதீர்கள்.
சிறுநீர் கழித்தவுடன், உங்கள் இரத்த அழுத்தத்தை அளக்காதீர்கள்.
நீங்கள் பதட்டமாக இருக்கும் போது, உங்கள் இரத்த அழுத்தத்தை அளக்காதீர்கள்.
மருத்துவரின் சிகிச்சை நிலையத்தில், நீங்கள் ஒரு உயரம் குறைந்த நாற்காலியிலோ, மேஜையிலோ அமர்ந்திருந்தால், உங்கள் இரத்த அழுத்தத்தை அளக்கும் போது, முன்பக்கமாகக் குனியாதீர்கள்.
உங்கள் இரத்த அழுத்தத்தை அளக்கும் போது, கால் மேல் கால் போட்டுக் கொண்டு உட்காராதீர்கள்.
உயர் ரத்த அழுத்தம்
ஒரு நபருக்குத் தொடர்ந்து ஒரே நிலையில், 120/80 எம்.எம்.எச்.ஜிக்கு அதிகமாக இரத்த அழுத்தம் இருந்தால் அவர் உயர் இரத்த அழுத்தத்தால் அவதிப்படுகிறார் எனக் கூறலாம். மருத்துவர்கள் இதனை இரத்தக்கொதிப்பு என்று கூறுவார்கள்.
உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதின் அவசியம்
உயர் ரத்த அழுத்தம் குறைக்கப்படாவிட்டால் ஏற்படும் விளைவுகள்
மாரடைப்பு
இதயம் பெரிதாகி, பழுதாகிவிடும்
இரத்தக்குழாய்கள் சிறுத்துப் போதல்
சிறுநீரகம் பழுதாகும்
கண்கள் பாதிக்கப்படும்
ஆயுள் குறையும்
காரணங்கள்
பாரம்பரியம்
மனஅழுத்தம், டென்ஷன்
புகைப்பது, குடிப்பழக்கம்
அதிக உடல் எடை
பொட்டாசியம், கால்சியம் குறைபாடுகள்
உணவில் உப்பை அதிக அளவில் சேர்த்துக் கொள்வது
சிறுநீரக பாதிப்புகள்
ஹார்மோன் கோளாறு
ஸ்டீராய்ட் கருத்தடை மாத்திரைகள்
ஹார்மோன் கோளாறுகள்
உடற்பயிற்சி இல்லாமை
அறிகுறிகள்
தலைவலி, தலைசுற்றல், வேகமான இதயத்துடிப்பு, தூக்கமின்மை, உடலுழைப்பின் பின்னர் மூச்சுத்திணறல், களைப்பு போன்றவை.
அபாய அறிவிப்பு
கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒரு காரணம் உங்களுக்கு இருந்தால் 6 மாதத்திற்கு ஓரு முறை இரத்த அழுத்தத்தை பரிசோதித்துக் கொள்ளவும்.
நீங்கள் 30 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால்
உங்கள் குடும்ப சரித்திரத்தில் இதய நோய்கள் இருந்தால்
நீங்கள் அதிக எடையுள்ள நபராக இருந்தால்
நீங்கள் புகை பிடிப்பவராக இருந்தால்
நீங்கள் வழக்கமாக மதுபானம் அருந்துபவராக இருந்தால்
நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுபவராக இருந்தால்
இருதய நோய், நீரிழிவு அல்லது சிறுநீரக பாதிப்பு போன்ற ஏதாவது பெரிய நோய்கள் உங்களுக்கு இருந்தால்.
உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த
இரத்த கொதிப்பை குணப்படுத்த முடியாது. ஆனால் மருந்துகள், வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவு முறை, உடற்பயிற்சி, யோகா போன்றவற்றால் அதை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். இதற்கான டிப்ஸ்
ஒழுங்காக மருந்தை உட்கொள்ளுங்கள்
பரிசோதனைக்காக ஒழுங்காக உங்கள் மருத்துவரிடம் செல்லுங்கள்
உங்கள் உணவு முறைகளை மாற்றிக் கொள்ளுங்கள்
உடல் எடையைக் குறையுங்கள்
ஒழுங்காக உடற்பயிற்சி செய்யுங்கள்
உப்பு உட்கொள்வதைக் குறையுங்கள்
ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த உணவை உட்கொள்ளுங்கள்
உங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளுங்கள்
மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்
புகை பிடிப்பதை நிறுத்துங்கள்
மது அருந்துவதைக் குறைத்துக் கொள்ளுங்கள்
அதிக உடல் பருமன் அளவுக்கு அதிக உடல் எடை உள்ளவர்களுக்கு இரத்தக் கொதிப்பு வரும் சாத்திய கூறுகள் 2 முதல் 6 மடங்கு அதிகமாகிறது. எடையை குறைக்க சில டிப்ஸ்
வறுத்த பொருட்கள், வெண்ணெய் போன்ற கொழுப்புப் பதார்த்தங்களைத் தவிருங்கள்.
நார்ச்சத்து மிகுந்த உணவுப் பொருட்களை உட்கொள்ளுங்கள்.
ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்சு, உருளைக்கிழங்கு, காரட், தக்காளி, முட்டைக்கோஸ், பீன்ஸ் முதலானவை நிறைந்த நார்ச்சத்துள்ள பொருட்களாகும்.
பசுமை இலையுள்ள காய்கறிகள், பழங்கள் முதலியவற்றை உண்ணுங்கள்.
சாப்பிடாமல் பட்டினியுடன் இருக்காதீர்கள்.
குறித்த நேரத்தில் உணவு உட்கொண்டு, உணவு முறைகளில் ஒரு ஒழுக்கத்தைக் கடைப்பிடியுங்கள்.
விரைவாக உண்பதைத் தவிருங்கள்.
ஒழுங்காக உடற்பயிற்சி செய்யுங்கள்.
சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள்
கோதுமை, அரிசி, ராகி (கேழ்வரகு), சோளம் போன்ற தானியங்கள், முளைவிட்ட பருப்புகள், மீன், பசுமை இலையுள்ள காய்கறிகள் மற்றும் பழ வகைகள், சூரிய காந்திப் பூ, விதை எண்ணெய், சோயா விதை எண்ணெய் போன்ற தாவர வகை எண்ணெய்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
எண்ணெய் பதார்த்தங்கள், பாலாடைக் கட்டி, வெண்ணெய், நெய், டால்டா, பாமாயில், வறுத்த உணவு வகைகள், வறுவல்கள், கோழி, மாமிச உணவுகள், ஊறுகாய், அப்பளம் மற்றும் சாஸ் வகைகள் மேலும் சாக்லேட் போன்ற இனிப்பு வகைகள், ஐஸ்கிரீம், கேக், குளிர்பானங்கள் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.
உடற்பயிற்சி மற்றும் யோகாவின் நன்மைகள்
ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு, உடற்பயிற்சி உங்களுக்குப் பலவழிகளிலும் உதவி செய்யும்.
உங்களது அதிகரித்த இரத்த அழுத்தத்தை இது குறைக்க உதவுகிறது.
இது உங்கள் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
இது உங்கள் மன அழுத்தத்தைக் குறைத்து உங்களை ஒய்வாக உணரச் செய்கிறது
மாரடைப்பு, செயலிழப்பு போன்ற பெரிய சிக்கல்களிலிருந்து உங்களைக் காப்பாற்றுகிறது.
உங்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவது போன்ற அபாயத்தைக் குறைக்கிறது.
யோகாசனங்களும், (கை கால்கள்) விரித்துச் செய்யும் உடற்பயிற்சிகளும், தசைகளைத் தளர்த்துவதற்கு உதவி செய்கின்றன. ஒரு ஆசிரியரின் முன்னிலையில் இவ்வகை உடற்பயிற்சிகளைச் செய்தல் எப்பொழுதும் நல்லது. நடப்பது சிறந்த பயிற்சி. தினம் 1/2 மணியாவது நடக்க வேண்டும்.
உடற்பயிற்சி, யோகா செய்யும் முன்பு உங்கள் டாக்டரை கலந்தாலோசிப்பது நல்லது.
உணவு முறை
முன்பே சொன்னபடி, உணவில் உப்பை குறைப்பது அவசியம். சோடியம் உப்புக்கு பதிலாக பொட்டாசியம் செறிந்த ஆரஞ்சு, வாழைப்பழம், உருளைக்கிழங்கு, பட்டாணி இவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஆன்டி ஆக்சிடன்ட் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.
ஆன்டி ஆக்சிடன்ட் என்றால் என்ன?
ஆன்டி ஆக்சிடன்ட் என்பது உங்கள் உடலை ஃப்ரீரேடிகல்ஸ் என்பதிலிருந்து காப்பாற்றும் ஒரு பொருளாகும். இவை உங்கள் உணவில் உள்ளன. ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்துள்ள உணவை உண்பதால், ஃப்ரிரேடிகல்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து உங்களைப் பாதுகாக்கலாம்.
ஃப்ரீரேடிகல்ஸ் என்பவை என்ன?
ஃப்ரீரேடிகல்ஸ் என்பது, நாம் சாதாரணமாக வேலை செய்யும் போது, நமது உடலில் உற்பத்தியாகும் பொருட்களாகும். இவை, விலை மதிப்பான சாமான்களை எதிர்நோக்கியிருக்கும் கொள்ளைக்காரர்கள் போன்றவை. கொள்ளையர்கள் எப்பொழுதும் பிறரைத் தாக்கி அவர்களிடமிருக்கும் பொருட்களைப் பறித்துச் சென்று தமதாக்கிக் கொள்வார்கள். அது போலவே ஃப்ரீரேடிகல்கள் நமது உடலுக்குள், உயிரணுக்களைத் தாக்கி அவற்றிற்குக் கெடுதி விளைவிக்கின்றன. உயிர்சத்துக்கள் (வைட்டமின்கள்) மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட் உபயோகிப்பதன் மூலம், இவற்றை நாம் எதிர் கொள்ளலாம்.
ஆன்டி ஆக்சிடன்ட் உள்ள உணவுகளின் பட்டியல்
ஆன்டி ஆக்சிடன்ட்கள்
வைட்டமின் இ
வைட்டமின் சி
துத்தநாகம் (ஸிங்க்)
செலினியம்
ஃபோலிக் ஆஸிட்
வைட்டமின் பி12
வைட்டமின் பி6
உணவு வகைகள்
சோயாபீன்ஸ், சூரியகாந்தி மற்றும் தானிய எண்ணெய்கள், கடலைகள், கோதுமை முளை.
புளிப்புப் பழங்கள் (எலுமிச்சை வகைகள்), பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, தக்காளி.
கடல் உணவுகள், குறிப்பாக கிளிஞ்சல்கள், சிப்பிகள்.
தானியங்கள், சூரியகாந்தி விதைகள், மாமிசம், கடலுணவுகள், நாய்க்குடைகள்.
ஆரஞ்சு, தானிய வகைகள், கீரைகள், பசுமையான இலையுள்ள காய்கறிகள்.
உருளைக்கிழங்கு, வாழைப்பழம், தானியங்கள், மாமிசம்.
தானியங்கள்.
பூண்டு இரத்தக் கொதிப்பை குறைக்கும். பூண்டை சிறிதாக நறுக்கி ஒரு கப் பாலில் காய்ச்சி இரவில் சாப்பிடவும்.

ஆயுர்வேதத்தின் தோற்றம்

ஆயுர்வேதத்தின் தோற்றம்

Post image for ஆயுர்வேதத்தின் தோற்றம்
நமது இந்திய தேசத்தின் வரலாறு தொன்மையானது. உலகின் பெரும் பகுதி நாகரிகமே அடையாமல் இருளடைந்து இருந்த போது நமது தேசம் கலாச்சாரத்தில் முன்னேறி ஆன்மீகத்திலும் வாழ்க்கை கல்வி முறைகளிலும் சிறந்திருந்தது. நமது முனிவர்கள் நமக்கு வைத்த செல்வங்கள் தான் நான் மறைகள் (நான்கு வேதங்கள்). இவை யாராலும் எழுதப்படாமல் முனிவர்கள் வெளிப்படுத்திய வாழ்க்கை நெறியின் உண்மைகள் வியாச முனிவரால் பிற்காலத்தில் நான்காக தொகுப்பட்டன. அவை ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள். இதில் மிகப் பழமையானது ரிக்வேதம்.
ஆயுர்வேதம் அதர்வண வேதத்தின் சுயேச்சையான உபவேதம் என்று கருதப்பட்டாலும் மற்ற மூன்று வேதங்களிலும் அது சொல்லப்பட்டிருக்கிறது. ஆயுர்வேதத்தின் தத்துவங்களை பஞ்ச பூதங்கள், (பூமி, நீர், நெருப்பு, காற்று, வெளி) மூன்று வகை நாடிகள் (வாதம், பித்தம், கபம்) இம்மூன்று வேதங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற ஒரு உபவேதமான தனுர் வேதத்திலும் (போர் முறைகளை பற்றியது) உடலின் ‘மர்மஸ் தானங்கள்’ முதலியவை விளக்கப்பட்டுள்ளன.
ரிக் வேதத்தில் காலிழந்த ஒருவருக்கு, தேவலோக வைத்தியர்களான அஸ்வினி குமாரர்கள் செயற்கையாக இரும்புக்காலை பொறுத்தினார்கள் என்றும், கண்ணிழந்தவர்க்கு, பார்வை வரச் செய்தார்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது.
ஆயுர்வேதம் தனிமையாக, ஏட்டு வடிவில் வந்தது அதர்வண வேதத்தின் தோற்றத்துடன் தான், அதாவது, 3000 லிருந்து 2000 கி.மு. ஆண்டுகளில் இதில் 8 பிரிவுகள் சொல்லப்பட்டன.
ஆயுர்வேதம் கிட்டத்தட்ட 1500 கி.மு. வருடங்களில் ஆத்ரேயம் (வைத்தியர்கள்) தன்வந்திரி (அறுவை சிகிச்சை நிபுணர்கள்) என்று இரண்டாக பிரிந்தது. இந்த இரண்டு பிரிவுகளை பற்றிய நூல்கள் தான் சரகசம்ஹிதையும், சுஸ்ருதசம்ஹிதையும். மூன்றாவதான ‘அஷ்டாங்க ஹிருதயம்’ 500 கி.பி.யின் வாகபட்டாவால் உருவாக்கப்பட்டது. இது முதல் இரண்டு வகை பிரிவுகளின் தொகுப்பு.
கி.மு. 7ம் நூற்றாண்டில் ‘தக்சீலா’ பல்கலைக்கழகத்தில் ஆயுர்வேதம் கற்றுத்தரப்பட்டது. பாடலிபுத்ராவில் மருத்துவராக இருந்த ஜீவகர், இந்த பல்கலைக்கழக மாணவர். ஜீவகர், பகவான் கௌதம புத்தரின் மருத்துவர் என்று கூறப்படுகிறார்.
ஆயுர்வேதத்தின் மருத்துவர்கள் செய்ய வேண்டிய முதல் மூன்று வழிகள் நோயாளிக்கு வியாதி வந்திருக்கும் வியாதியின் காரணம், வியாதிகளின் அறிகுறிகள், குணப்படுத்தும் மருந்துகளும், மூலிகைகளும், இவற்றை உணர்ந்து செயல்படுவது.
ஆயுர்வேதத்தின் தனித்துவமே அதில் எல்லா வகை சிகிச்சை முறைகளும் கையாளப்படுவது. அன்றாட வாழ்க்கை நெறிமுறைகள் யோகா, அரோமா, (வாசனை), தியானம், வைர, ரத்ன கற்களால் ஆன வைத்தியங்கள், மூலிகைகள், உணவு கட்டுப்பாடு, ஜோதிடம், அறுவை சிகிச்சைகள் இவை அனைத்தும் கையாளப்படுகின்றன.
தலை சிறந்த ஆயுர்வேத வைத்தியர்கள் சரகர், ஆத்ரேயர், சுஸ்ருதர், ச்யவன முனிவர், வாகபட்டர், மாதவர், சாரங்கநாதர், ஜீவகர் பாவமிஸ்ரர் போன்றவர்களும் பிரபல சித்த வைத்தியர்கள் நந்திதேவர், காளாங்கி நாதர், திருமூலர், அகஸ்தியர், கேரக்கர், போகர் ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள்.
ஆயுர்வேதத்தின் சிறப்பே அதன் அணுகு முறை. அலோபதி (ஆங்கில) மருத்துவ முறையில் வியாதிகளை உண்டாக்கும்.
பேக்டீரியா (அ) வைரஸ் கிருமிகள் நேரடியாக தாக்கப்படும். நோயின் தன்மை தீவிரமானால் கிஸீtவீ – ஙிவீஷீtவீநீs கொடுக்கப்படும். இவை பக்க விளைவுகளை உண்டாக்கும். ஆனால் ஆயுர்வேதமோ உடலின் நோய் தடுக்கும் சக்தியை ஊக்கப்படுத்துகிறது. உடலின் இயற்கையாக உள்ள இரண்டு சக்திகள்
1. நோய் தடுப்பு சக்தி
2. புதுப்பிக்கும் சக்தி
ஆயுர்வேதம் இந்த இரண்டு சக்திகளையும் ஊக்கப்படுத்துகிறது. இதனால் பக்க விளைவுகள் இல்லை. தவிர ஒவ்வொரு நோயாளியின் தனித்துவமும் கவனிக்கப்படுகிறது. நோயாளிகளின் அடிப்படை குணாதிசயங்கள் (பிரக்ருதி) நாடிகள் மாறுபட்டால் ஏற்பட்ட நோயாளியின் கோளாறுகள் விக்ருதி கணிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்படுகிறது.
இந்த சிகிச்சை முறைகள்
1. நாடிகளை சமன்படுத்துவது.
2. ஜீரண சக்தியை ஊக்குவிப்பது.
3. நோய் தடுப்பு சக்தியை அதிகரிப்பது.
4. உடல் கழிவுகள் நீக்கப்படுவது.
இதற்கான செயல்பாடுகள்
1. சீரான உணவு முறை.
2. உடல் எடையை குறைப்பது.
3. உடல் மெலிந்த நோயாளிகளின் சக்தியையும், எடையையும் அதிகரிப்பது.
4. உடல்பயிற்சி.
5. தியானம்.
6. மூலிகை லேகியங்கள், ஒத்தட முறைகள்.
7. மசாஜ்.
8. மூலிகை மருந்துகள்.
இதைத் தவிர ஆன்மீக ரீதியாகவும் நோயாளியின் மனநிலையும்
கவனிக்கப்படுகிறது. ஆயுர்வேத முறைகளை கடைப்பிடிப்பதால் வியாதிகள் மறைவது திண்ணம்.

நோய் கண்டறியும் முறை

நோய் கண்டறியும் முறை

Post image for நோய் கண்டறியும் முறை
“திடமான, குழப்பமடையாத மனநிலை, புரிந்துக் கொள்ளும் திறமை இவை உள்ள மருத்துவர், அறிகுறிகளை கவனித்து, சரியான வியாதிகளை கண்டறிய வேண்டும். – சரக சம்ஹிதை”
ஆயுர்வேதம், ஆங்கில வைத்யம், யுனானி, ஹோமியோபதி போன்ற மருத்துவ முறைகள் எதுவானாலும் சரி, நல்ல மருத்துவரை இனங்காட்டும் அறிகுறி அவரது நோய் கண்டறியும் திறமை. இதை நாம் டாக்டரின் ‘கை ராசி’ என்கிறோம். ஒரு மருத்துவரின் நோயறியும் திறமை, நோய் உண்டான காரணங்கள், சரியான சிகிச்சை முறைகள், நோயாளியின் உடலுக்கேற்ற மருந்துகள் இவைகளை உணர்ந்து செயல்படும் ஆற்றல் படைத்த மருத்துவர்கள் தான் சிறந்த மருத்துவர்கள்.
ஆயுர்வேதம் வாழ்க்கையின் விஞ்ஞானம். ‘ஆயுர்’ என்றால் வாழ்க்கை; வேதம் என்றால் அறிவு, ஞானம். ‘சாங்கிய’ வேதாந்தத்தை தழுவியவை ஆயுர்வேத கோட்பாடுகள். வியக்தி (வெளிக்காட்டு) வெளிப்பாடில்லாத ‘அவியக்தி’யிலிருந்து உருவானது. மனிதனும் பிரபஞ்சமும், பிறப்பு, வளர்ப்பு, இறப்பு என்ற கால சக்கரத்திற்கு உட்பட்டவை. ஆரோக்கியம் என்பது உடல், புலனேந்திரியங்கள், மனம், ஆத்மா இவை ஒரே ஒழுங்கில் சீராக அமைவது. உள்ளும், புறமும், உடலும் வெளி எண்ணங்களும் ஒன்றுபட்டு, ஒன்றை ஒன்று சீராக சார்ந்திருப்பது ஆரோக்கியம்.
ஆயுர்வேத சிகிச்சையின் அடிப்டை கொள்கைகள்
• உடல் சிகிச்சை – உணவு, பத்தியம், மூலிகை மருந்துகள், உடற்பயிற்சி இவை தேவை.
• மன சிகிச்சை – மனத்தை சமநிலையில் நிறுத்த, உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தேவையான வழிமுறைகள் பரிந்துரைக்கப்படும்.
• உடலுள் உறையும் “ஆத்மா”விற்கு – ஆன்மிக பயிற்சி பரிந்துரைக்கப்படும்.
• ஆயுர்வேதம் இயற்கையின் நடப்புகளை சூரிய உதயம், சூரியன் மறைதல், பருவ காலங்கள், சீதோஷ்ண நிலை, பிறப்பு, இறப்பு இவற்றோடு இணைந்ததாக மருந்துகள், உணவு மாற்றங்கள், வழிமுறைகள் இவற்றை எல்லாமே சிகிச்சை முறையில் கையாளுகிறது.
• நோயாளியின் குறிப்பிட்ட வியாதிக்கு குறிப்பிட்ட மூலிகை கலவை மருந்துகள் மற்றும் பஞ்சகர்மா சிகிச்சைகள் மட்டுமில்லாது, நோயாளியின் நோய் தடுப்பு சக்தி மற்றும் பொதுவான ஆரோக்கியம் மேம்பட சிகிச்சைகள் தரப்படும்.
• ஆயுர்வேத தத்துவங்கள் – ஆயுர்வேதம் சார்ந்திருக்கும் அடிப்படை வேதாந்தம் – எல்லா உயிர்களும், பொருட்களும் “பிரக்ருதி” (உடல் அமைப்பு) யிலிருந்து, நுட்பமான “புருஷ” (ஆத்மா) கலப்பினால் உருவானவை. அதாவது உடலும், உள் உறையும் ஆத்மாவும் நுட்பமாக இணைந்தவை.
• மனிதனும் பிரபஞ்சமும் ஒரே மாதிரியான பஞ்ச மூலங்களால் உருவானவை – பூமி அல்லது திடப்பொருள், நீர் அல்லது திரவப்பொருள், நெருப்பு (உடல், அக்னி, ஜாடராக்கினி), வாயு (காற்று) மற்றும் ஆகாசம் (உடல் ரீதியாக சொன்னால் உடலின் துவாரங்கள், வெற்றிடங்கள்).
ஆயுர்வேதம் மட்டுமின்றி, இந்திய வேதாந்தமே, உலகம் ஐந்து மூலப் பொருட்களால் ஆனது என்ற கருத்தை கொண்டது. இவை பஞ்ச பூதங்கள் (அ) பஞ்சமகா பூதங்கள் எனப்பட்டன. இவை பூமி (ப்ருத்வி), நீர் (அப்பு), அக்னி (தேஜா), காற்று (வாயு) மற்றும் ஆகாயம் (ஈதர்). பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் இந்த பஞ்ச பூதங்களிலிருந்து உருவானவை. பிரபஞ்சத்திற்கும், மனிதருக்கும் உள்ள ஒற்றுமை, அணுக்களின் அமைப்பில் தெரியும். சூரியமண்டல கிரகங்கள் போல, அணுவில் ஒரு நீயுகிலியசை (கரு – ழிuநீறீமீus), சுற்றி வரும் கிரகங்கள் போல, ப்ரோட்டான், எலக்ட்ரான் போன்றவை சுற்றி வலம் வந்து கொண்டேயிருக்கின்றன. “அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்தில் உள்ளது” என்கிறார் திருமூலர். இந்த பஞ்ச பூதங்கள் உடலில் 3 தோஷங்களாகவும், 7 தாதுக்களாகவும், 3 மலங்களாக வெளிப்படுகின்றன.
ஆயுர்வேத குரு, சரகர் இந்த தத்துவத்தை “ஏட்டுச் சுரைக்காய்” அல்ல. நிதர்சனமானவை என்கிறார். உடல் முழுவதும் வியாபித்திருந்தாலும், தோஷங்களுக்கென்று தனி உறைவிடம் உடலில் உண்டு. ஒவ்வொரு தோஷத்திற்கும் தனித்தனி குணங்கள் உண்டு. தோஷங்கள் தனியாகவோ, மூன்றும் சேர்ந்தோ, 62 வழிகளில் வியாதிகளை உண்டாக்கும் குணம் படைத்தவை. இந்த தோஷ ஏறு – மாறுகளை ஆயுர்வேத வைத்தியர் சரியாக கண்டுபிடிக்க வேண்டும். வியாதியை கண்டுபிடிப்பதை விட, தோஷ மாறுதல்களை கவனிப்பதே முதல் செயல்.
ஒரு மனிதனின் குணத்தை ரஜாஸ், தாமஸ் சத்வம் என்பவை நிர்ணயிக்கும். இந்த முக்குணங்களை தவிர, மூன்று தோஷங்களும் கூட மனநிலையை பாதிக்கும். எனவேதான். ஆயுர்வேதம் உடல் சிகிச்சை அளிக்கும் போது மனசிகிச்சையையும் சேர்த்து செய்கிறது. இந்த 3 தோஷங்களை விரிவாக பார்ப்போம்.
வாதம்
பொது:- மூன்று தோஷங்களின் தலைவர் வாதம் – அதாவது வாயு. வாயு என்றால் அசைவது. உடலின் இயக்கத்தை நடத்துவது வாயுதான். கபத்தையும், பித்தத்தையும் “கன்ட்ரோல்” செய்வதும் வாயுதான்.
வாயுதோஷம்
வியாதிகள்: காக்காய்வலிப்பு, மனவியாதிகள், சரும நோய்கள், ஜுரம், அதீத உடல் பருமன், சோகை, நீரிழிவு, மலச்சிக்கல், பேதி, தைராய்ட், அட்ரீனலின் சுரப்பிகளின் நோய்கள்.
வாயுவின் வகை
1. பிராண – மூச்சுவிடுதல், உணவை உட்கொள்ளுதல், இதயம், உணர்வு இந்திரங்கள், ரத்தஓட்டம் இவற்றை பாதுகாப்பது. மணம், நரம்புகள், அறிவு – இவற்றை சீராக வைத்தல் உயிர் வாழ தேவை.
2. உதான – பேச்சுக்கு தேவை. உடல் வலிமை, மனவலிமை, ஞாபகசக்தி இவற்றை பராமரிப்பது.
3. சமான – உணவு ஜீரணிக்க, ஜீரணசாறுகள் சுரக்க. உணவை வாங்கி, ஊட்டச்சத்தையும், கழிவையும் பிரித்து. கழிவை வெளியேற்றுவது.
4. வியான – ஊட்டச்சத்தை உடலெங்கும் பரப்புவது. வியர்வை ஏற்படுத்துவது. கண்ணிமை திறந்து, மூட, உடல் நாளங்களை சுத்தம் செய்வது. விந்துவின் செயல்பாட்டுக்கு உதவுவது.
5. அபான – கழிவுப் பொருட்களை வெளியேற்ற உதவுவது.
வாயுவின் வகைகளைப் பற்றி மேலும் பிராணாயாமத்தில் தரப்பட்டுள்ளது.
பித்ததோஷம்
பொது: பித்தம் என்றால் ‘உஷ்ணம்’ ஜீரண அக்னியால் உணவை செரிக்க உதவும். பித்தம் ‘தேஜஸ்’ – அக்னியின் பிரதிபலிப்பு. நாளமில்லா சுரப்பிகளை நடத்தும்.
பித்ததோஷ குறைபாட்டால் வரும் நோய்கள்: வயிறு சங்கடம், அதிகஅமிலசுரப்பு, ஜுரம், வாந்தி, காமாலை, சோகை, ஆஸ்த்துமா, சர்ம நோய்கள், கிருமி தொற்று நோய்கள்.
பித்தவகை
1. பாசக் – ஜீரணத்திற்கு பொறுப்பானது. மற்ற பித்தங்கள் இயங்க உதவுவது.
2. ரஞ்சக – ரத்தத்திற்கு நிறம் சேர்க்கும். ரத்த உற்பத்தியில் உதவும்.
3. சாதக – ஞாபகசக்தி, அறிவு செயல்பட உதவும். நரம்பு திசு வளர்சிதை மாற்றத்திற்கு உதவும்.
4. ஆலோசகா – பார்வைக்கு உதவும்
5. ப்ராஜக – சர்ம நிறத்திற்கு பொறுப்பு, உடல் உஷ்ணநிலையை பராமரிக்கும்.
கபதோஷம்
பொது: நிலமும் நீரும் சேர்ந்தது கபம். உடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்தும். உடலுக்கு ஊட்டச்சத்து சேர உதவும்
கபக்கோளாறினால் வரும் வியாதிகள்: ஜலதோஷம், நுரையீரல் நோய்கள், காமாலை, எக்ஸிமா, பருக்கள், ஆர்த்தரைடீஸ், மூளைக்காய்ச்சல், சிறு நீரக பாதிப்பு.
கபத்தின் வகை
1. அவலம்பகா – இதயத்தை, நுரையீரலை காக்கிறது. சுவாசத்திற்கு உதவும்.
2. கிலேடகா – வயிற்றில் உணவு “ஈரமாக” உதவும். அடி, மேல் வயிற்றை அமிலத்திலிருந்து பாதுகாக்கும். அதிக சூடு, குளிர் உணவுகளை உட்கொள்ளும் போது, வயிற்றை காக்கும்.
3. தர்பாகா – மூளைக்கு தேவையான சக்தியை பெற உதவும். உஷ்ண மாறுதல்கள். நச்சுப்பொருட்கள் இவற்றிலிருந்து மூளையை பாதுகாக்கும். முதுகுத் தண்டை பாதுகாக்கும்.
4. போதகா – வாயை ஈரப்பசையுடன் வைப்பது, ருசியை அறிய உதவும்.
5. ஸ்லேசகா – மூட்டுக்கள் விறைப்பாகமல், எண்ணெய்பசையால் பாதுகாக்கும்.
ஆயுர்வேத சாஸ்திரங்கள் தோஷங்கள் அதிகமானாலோ குறைந்தலோ ஏற்படும் பாதிப்புகளை விஸ்தாரமாக விவரித்துள்ளன. எந்ததோஷம் கெட்டிருக்கிறது. என்பதை கண்டுபிடித்து விட்டால், பிறகு சிகிச்சை முறை சுலபமாகிவிடும். குணமும் தெரியும்.
நோய் கண்டறியும் முறைகள் விவரமாக, தெளிவாக ஆயுர்வேதத்தில்
குறிப்பிடப்பட்டிருக்கின்றன. முதலில் நோயாளியின் மருத்துவ ‘சரித்திரம்’ கவனித்து தெரிந்துக் கொள்ளப்படும். நோயாளியின் தாய், தந்தையர்களின் நோய்கள், இவைகளும் கேட்டு தெரிந்து கொள்ளப்படும். ஏனெனில் பல நோய்கள் பரம்பரையாக வரும். நோயாளியின் உடல்வாகு, வயது, வயிற்றின் கொள் திறன் இவை கணிக்கப்படும். பிறகு தலையிலிருந்து கால்வரை, பரிசோதிக்கப்படும். கை நகங்கள், கண், கண்ணிமைகள், நாசி, நாசித்துவாரங்கள், பற்கள், கை, கால் இவை அனைத்தும் பார்க்கப்படும். உடல் முழுவதும் கோளாறுக்களுக்காக கவனிக்கப்படும்.
எட்டு முக்கிய விஷயங்கள் – நாடித் துடிப்பு, சிறுநீர், மலம், நாக்கு, குரல், தொடும் உணர்ச்சி, பார்வை, உடல்தோற்றம் இவை பார்க்கப்படும். மருத்துவர் எந்த அவயம் அல்லது உடலின் எந்தபாகம் சூடாகவோ, குளிர்ந்தோ இருக்கிறது என்று கவனிப்பார். தவிர உடலின் எந்த பாகம், ஈரமாகவோ, உலர்ந்தோ, பருமனாகவோ, மெல்லியதாகவோ, மென்மையாகவோ, கடினமாகவோ, உணர்ச்சியுடனோ, இல்லை உணர்ச்சிகள் தெரியாமலோ இருக்கிறது என்று பரிசோதிப்பார்.
தோல் கரடுமுரடகவோ அல்லது மென்மையாக உள்ளதா என்பதும் கவனிப்படும்.
உடலின் வாசனையும், நாற்றமும் பிரத்யேகமாக கவனிக்கப்படும். சிறுநீர் கழித்த இடத்தில் எறும்புகள் மொய்க்கின்றனவா என்று பார்க்கப்படும். ஏதாவது அடிவண்டல்கள் (ஷிமீபீவீனீமீஸீts) சிறுநீரில் தங்கியுள்ளதா என்பதும் பார்க்கப்படும். சிறுநீரின் அடர்த்தியை கண்டுபிடிக்க அதில் சிறிது எண்ணை விடப்படும். மலத்தின் நிறம், தோற்றம், நாற்றம், அடர்த்தி, பூச்சிகள் தென்படுவது இவை அனைத்தும் ஆயுர்வேத மருத்துவர் கவனிப்பார். ஜீரணசக்தியை அறிய, மலத்தை ஒரு தண்ணீர் நிறைந்த மண்பாண்டத்தில் கழிக்க வைத்து, மலம் தண்ணீரில் மூழ்குகிறதா இல்லையா என்று பார்க்கப்படும்.
இவை தவிர, நோயாளியின் ரத்தஒட்டம், தசை, கொழுப்பு, எலும்பு, வந்து இவை கண்காணிக்கப்படும். மூன்று வகை தோஷங்களில் மாறுபாடுகள், எங்கெங்கே இந்த மாறுபாடுகள் தாக்கியுள்ளன இவை கவனிக்கப்படும். நோயாளியின் உடல்பலம், அப்போதுள்ள சீதோஷ்ண நிலை, ஜீரண சக்தி, குணாதிசயங்கள், கோபதாபங்கள், வயது, உண்ணும்உணவு வகைகள், உண்ணும் நேரம், முறைகள், செய்யும் வேலை, உடற்பயிற்சி முறைகள் (நோயாளி செய்துகொண்டிருந்தால்) இவை அனைத்தும் தெரிந்து கொள்ளப்படும்.
ஒரு நல்ல மருத்துவர், நாடியை பிடித்தே வியாதியை சொல்லி விடுவார். இரண்டு கை மணிக்கட்டுகளிலும், நாடி பார்க்கப்படும். கட்டைவிரல் கீழே உள்ள ரத்தக்குழாயை மருத்துவர் தன் மூன்று விரல்களால் அழுத்தி, நோயாளியை தாக்கியிருக்கும்.
வியாதியின் தன்மை, மூன்று தோஷங்களின் மாறுபாட்டை உணரலாம். ஆயுர்வேத புத்தகங்கள் நாடிபிடித்து நோயை அறியும் முறைகளைப்பற்றி விரிவாக விளக்கியுள்ளன.
நோயாளியின் நாக்கை பரிசோதித்தால் ஒரளவு நோயை தெரிந்துக் கொள்ளலாம். உதாரணமாக, மங்கலான, நிறம் மங்கிய, வெளிறிய நாக்கு-சோகை.
மஞ்சள் நிறமுள்ள நாக்கு – கல்லீரல் கோளாறுகள்
வெள்ளை நிற நாக்கு – கபம் மாறுபடுதல்
நீல வண்ண நாக்கு – இதய நோய்கள்
சிகப்பு (அ) பச்சை – மஞ்சள் நிற நாக்கு – பித்த மாறுபாடு
கறுப்பு அல்லது பழுப்பு நிறநாக்கு – வாத மாறுபாடு.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும். நோயாளியின் முகத்தின் சுருக்கங்கள் கோடுகள், கவலை ரேகைகள் இவையும் கவனிக்கப்படும். சிறுநீரின் அளவும் நோயாளியின் வியாதியை காட்டும்.
கடைசியாக நோயாளியின் மனநிலை ஆராயப்படும். மன ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்தை காக்கும். மனநிலை கோளாறுகளால், வலிப்பு, ஹிஸ்டீரியா, தூக்கமின்மை, பேதி, சித்தப்பிரமை, ஜுரம் இவைகள் உண்டாகலாம். வாததோஷங்கள் பாதிப்பால் மனச்சோர்வு, பயம் சோகம் இவை ஏற்படும்.
பித்ததோஷம் இருந்தால் பேராசை, பயம் போன்ற உணர்வுகளால் பித்தநீர் அதிகம் சுரக்கும். கபகுறைபாட்டால், பேராசையும், சோம்பேறித்தனமும் பெருகும்.
மேற்கொண்ட முறைகளால் வியாதியை தெரிந்துக் கொண்ட பின்னர்தான் ஆயுர்வேத மருத்துவர் சிகிச்சையை தொடங்குவார். அந்த சிகிச்சை உடலுக்கு மட்டுமில்லாமல், மனதிற்கும் கொடுக்கப்படும். நோயாளிக்கு ஏற்ற வைத்தியம் செய்யப்படும். அவர் வசிக்கும் இடத்தில் சூழ்நிலை, அவர் குடும்ப சூழ்நிலை இவற்றையும் மருத்துவர் கேட்டு அறிவார்.
தற்போது ஆஸ்பத்திரிகளில் உபயோகிக்கும் நவீனமுறை இயந்திரங்களும் சாதனங்களும் நோயை கண்டறிய உதவும்போது, பழங்கால ஆயுர்வேத முறைபாடுகள் எதற்கு என்று நீங்கள் கேட்கலாம். இந்த நவீன முறைகள் மனித உலகின் இயற்கையான வளர்ச்சியால் தோன்றியவை.
பல நூற்றாண்டுகள் நாம் அடிமைகளாக இருந்ததால் இம்முறைகளின் வளர்ச்சி ஆயுர்வேதத்தில் பயன்படுத்த முடியாமல் போனது. ஆயுர்வேதத்தின் தடைப்பட்ட வளர்ச்சி தற்போது மீண்டும் ஆரம்பித்துவிட்டது. இதனால் இந்த புதிய நோயை கண்டறியும் சாதனங்களும், முறைகளும் ஆயுர்வேதத்திலும் கடைப்பிடிக்கும் காலம் வந்துவிட்டது.

ஆயுர்வேத மருந்துகள்

ஆயுர்வேத மருந்துகள்

Post image for ஆயுர்வேத மருந்துகள்
ஆயுர்வேதம் மிக பழமையானது. வேதங்களுக்கு இணையாக மதிக்கப்பட்டு வரும் ஆயுர்வேதம், நோய் நொடி இன்றி ஆரோக்கியத்துடன் நீண்ட கால வாழ வழிகாட்டும் ஒரு அருமையான சிகிச்சை முறை.
ஒவ்வொரு மருத்துவ முறைகளிலும் உள்ள தனித்துவம், அந்தந்த முறைகளில் பயன்படுத்தப்படும் மருந்துகளாகும். அலோபதி முறையில் உள்ள மாத்திரைகள், கேப்ஸ§ல்கள், இன்ஜெக்ஷன், சிரப் போலவே ஆயுர்வேதத்திலும் பல வகைகளாக மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றை இங்கு பார்ப்போம்
1. அர்க்கங்கள் – திரவப் பொருட்களுடன் மருந்து சரக்குகள் கொதிக்கும் போது எழும் நீராவி பல மருத்துவ குணங்கள் உடையது. மூலப்பொருட்களில் உள்ள சில குறைகள் (துர்வாசனை போன்ற) இந்த முறையில் நீக்கப்படுகிறது. நீராவியை குளிர வைத்து நீராக்குவதால் மருந்துகள் உட்கொள்வது சுலபமாகிறது. சாதாரணமாக கொதிக்க வைக்கும் போது நஷ்டமாகும் சில சத்துக்களை, அர்க்க முறையால் நஷ்டமாகாமல் தடுக்கலாம். தவிர பல மருந்து சரக்குகளை திரவ ரூபத்தில் வடித்து பல நாட்கள் சேமித்து வைக்கவும் இந்த முறை உதவுகிறது.
2. ஆஸவங்கள் – இந்த முறையில் சீதோஷ்ணத்தாலும், காலபோக்கினாலும் கெட்டு விடும் மருந்து சரக்குகளின் சக்தியை, எப்பொழுதும் கிடைக்குமாறு பாதுகாக்கப்படுகிறது. மருந்து சரக்குகளுடன் வெல்லம், சர்க்கரை, தேன் போன்ற இனிப்புப் பொருட்களையும் சேர்த்து, மண் பாண்டங்களில் வைத்து “சீல்” செய்யப்படுகின்றன. இந்த மண் பாண்டங்களை குறிப்பிட்ட காலம் வரை அப்படியே வைக்கப்படும். வெளிநாடுகளில் ‘ஒயின்’ (கீவீஸீமீ) தயாரிப்பது போல், இந்த மண்பாண்டங்களை சுரங்கங்களில், பூமியின் அடியிலோ வைக்கப்படும். இதனால் மருந்துப்பொருட்கள் புளித்து, நுரைத்து பொங்கும் காடியாகும். ஆங்கிலத்தில் ‘திமீக்ஷீனீமீஸீtணீtவீஷீஸீ’ என்று சொல்லப்படும் முறை தான் இது. முடிந்தவுடன் மண் கலங்கள் திறக்கப்பட்டு, அவற்றில் மேலே நிற்கும் திரவம் எடுக்கப்பட்டு வடிகட்டி வைக்கப்படும். அடியில் தேங்கிய வண்டல் தவிர்க்கப்படுகிறது. வடிகட்டி வைக்கப்பட்ட திரவம் தெளிந்தவுடன், அதை பாட்டில்களில் அடைத்து வைக்கப்படுகின்றன. பெரிய அளவில் தயாரிக்கும் போது பீப்பாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. தேக்கு மர பீப்பாய்களே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.
அரிஷ்டம் – அரிஷ்டங்கள் பெரும்பாலும் கஷாயங்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது. மருந்து சரக்குகளை அப்படியே அல்லது ஒன்றிரண்டாக பொடித்து கஷாயமாக காய்ச்சி உபயோகிப்பது தான் இம் முறைக்கும் ஆஸ்வ முறைக்குமுள்ள வித்தியாசம். அரிஷ்டங்கள் தயாரிக்கு முன், அதற்கு தேவையான பாத்திரங்களை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இவைகள் தயாரிக்கப்படும் இடங்கள் பூச்சி, கொசு, ஈரம், குப்பை கூளங்கள் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும்.
கஷாயச் சரக்குகளை, பொடித்து அவற்றை இரண்டு பங்கு, கொதிக்க வைத்த நீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில், கலவையை கசக்கி, வடிகட்டிய தண்ணீரை எடுத்து பத்திரப்படுத்த வேண்டும். வடிகட்டப்பட்ட மருந்து சரக்குகளுடன் மீண்டும் தண்ணீரை, இரண்டு பங்காக, சேர்த்து கொதிக்க வைத்து, ஒரு பங்காக வற்றியவுடன் வடிகட்டி, இந்த நீரை எடுத்து முன்பு சேகரித்த, பத்திரப்படுத்திய நீருடன் கலக்கவும். கஷாயத்தில் சேர்க்கப்படும் மருந்துப் பொருட்களின் தன்மைக்கேற்ப, தண்ணீரை குறைத்தோ அதிகரித்தோ, வேண்டிய அளவு வற்றச் செய்தும் தயாரிக்கலாம். தெளிந்த பின், மேல் நிற்கும் தெளிவை எடுத்து, சர்க்கரை முதலியவற்றை கலக்க வேண்டும். இவ்வாறு வண்டலை நீக்கி கஷாயத்தை சேகரித்து அதில் தேவையான அளவு சர்க்கரை அல்லது சுத்தீகரிக்கப்பட்ட வெல்லம் சேர்த்து கரைத்து வைக்கவும். பிறகு, அதே மருந்தின் வண்டலை சேர்த்து கலங்களில் இட்டு துணியில் கட்டி வைக்கவும். அதே மருந்தின் வண்டல் கிடைக்காவிட்டால் திராக்ஷ£ரிஷ்டத்தில் அடி வண்டலை எல்லா மருந்துகளுக்கும் பயன்படுத்தலாம்.
3. சூரணங்கள் – மருந்து சரக்குகளை நன்றாக இடித்து, பொடியாக்கி, சலித்த நிலையில் தயார் செய்யும் மருந்து சூரணம் எனப்படுகிறது. சூரணங்கள் இரு வகைப்படும் – நன்றாக பொடித்து பெரும்பாலும் அப்படியே பயன்படுத்தப்படும் சூரணம் முதல் வகை. இதை பொதுவாக சூரணம் என்றே குறிப்பிடப்படுகிறது. இரண்டாவது வகை சூரணம் “க்வாத சூரணம்” என்று அழைக்கப்படுகிறது.
சூரணங்கள் தயாரிப்பில் முதலில் தேவையான மருந்து சரக்குகள் நன்றாக சுத்தம் செய்யப்பட்டு வெய்யிலில் உலர்த்தப்படுகின்றன. நன்கு உலர்ந்ததும் இயந்திரங்கள் மூலம் பொடிக்கப்படுகின்றன. பழங்காலத்தில் உரல்களில் பொடி செய்யப்பட்டது. பிறகு சலிக்கப்படுகிறது. சில பொருட்களை தனியாக பொடித்துக் கொள்வது அவசியம். உதாரணமாக சர்க்கரை, கல்கண்டு, கற்பூரம், திராட்சை, பெருங்காயம், படிகாரம் போன்றவை தனியாக பொடிக்கப்பட்டு பிறகு சேர்க்கப்படுகின்றது. சிலவற்றை வறுத்து பொடிக்க வேண்டும்.
க்வாத சூரண வகையில் சில வற்றை கஷாயமாக செய்து உட்கொள்ள வேண்டியிருக்கும். வாய்கொப்பளித்தல், புண்களை கழுவுதல், குளித்தல் போன்ற வெளி உபயோகங்களுக்கு க்வாத சூரணம் பயன்படும். கஷாயமாக செய்யப்படும் போது, பெரும்பாலும் ஒரு பங்கு க்வாத சூரணத்திற்கு 16 பங்கு தண்ணீர் சேர்த்து காய்ச்சி, எட்டில் ஒன்றாக குறுக்கி வடிகட்டி கஷாயம் தயாரிக்கப்படுகிறது. நீராவிக் கலங்களை உபயோகித்தும் கஷாயம் தயாரிக்கப்படுகிறது.
4. மாத்திரைகள் – மருந்துகளை மாத்திரைகளாக எடுத்துக் கொள்வது சுலபமானது. இதற்கு மருந்துப் பொருட்களை ஒன்றிரண்டாக (ரவை போல்) உடைத்துக் கொள்ள வேண்டும். மிகவும் “நைசாக” பொடித்தால் மாத்திரைகள் சரியாக உருவாகாது. துகள்கள் ஒட்டிக் கொள்ள பெரும்பாலும் வேலம் பிசின் உபயோகிக்கப்படுகிறது. இயந்திரங்கள் மூலம் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன.
5. பானகம் – இது கலவையின் நீர்ப்பகுதியை குறுக்கி “பாகு” போல் தடிக்கச் செய்து தயாரிப்பது என்ற செய்முறை. லேஹியங்கள், வடகங்கள், இவற்றுக்கு பொதுவானது. கற்கண்டு, சர்க்கரை, வெல்லம், பனைவெல்லம் போன்றவற்றுடன் தண்ணீர் அல்லது கஷாயம் கலந்து, நன்கு கரைத்து, வடிகட்டி, கொதிக்க வைத்து, குறிப்பிட்ட அளவு கலவை கெட்டியானவுடன் அதில் நெய், பொடித்து சலித்த பொடிகளை சேர்த்து கலந்து, ஆறியவுடன் தேன் சேர்த்து லேஹியங்கள் தயாரிக்கப்படுகின்றன.
6. லேஹியங்கள் – ஆயுர்வேத மருந்துகளில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் மருந்து “லேஹியம்”. லேஹியங்கள் நோய்களை குணப்படுத்துவது மட்டுமின்றி, நோயாளியின் உடல் தேறவும், பழைய பலத்தை அடையவும் உதவுகின்றன. லேஹிய தயாரிப்புக்கு ஆதாரமாக இருப்பது மேலே சொன்ன பானக பாகுபதமாகும். பாகுடன் நெய், பால், தேன், மருந்து சரக்குகள், இவற்றை சேர்த்து சேர்த்து பக்குவப்படுத்தி லேஹியமாக்குவார்கள். மருந்து, இதர பொருட்களை கலப்பதற்கு, பாகு சரியான பதத்தில் இருக்க வேண்டும். சரியான பக்குவ நிலைக்கு பாகு வந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி நெய், மருந்து சூரணங்களை கலந்து, ஆற விட வேண்டும். ஆறிய பின் கஸ்தூரி, குங்குமப்பூ, பச்சை கற்பூரம், தேன் போன்றவற்றை சேர்த்து நன்கு கிளறிக் கொள்ள வேண்டும். தயாரிக்கப்பட்ட லேஹியங்களை கண்ணாடி அல்லது பீங்கான் ஜாடிகளில் பத்திரப்படுத்தி வைக்கவும்.
7. க்ருதம் (நெய்) மற்றும் தைலம் (எண்ணை) – நெய்யும் தைலமும் இதர மருந்துப் பொருட்களுடன் சேர்ந்து வியாதிகளை கண்டிக்க பக்குவப்டுத்தப்படுகின்றன. இந்த விதமாக இவற்றை பக்குவப்படுத்த கல்கம், திரவம், ஸ்நேஹம் என்ற மூன்றும் அத்தியாவசியமாகின்றன.
கல்கம் – தேவையான மருந்துகள் நன்கு விழுதாக அரைக்கப்பட்டு
எண்ணையுடன் கலக்கப்படுகின்றன. இந்த பசை போன்ற பொருளே, ‘கல்கம்’ எனப்படும்.
திரவம் – கல்கத்துடன் கஷாயம், சாறு, தண்ணீர், பால் தயிர், மாமிச ரஸம்,
முதலியன கலக்கப்படுகின்றன. இந்த கலவைக்கு திரவம் என்று பெயர்.
ஸ்நேஹம் – நெய், எண்ணை, கொழுப்பு, எலும்பில் உள்ள ஜவ்வு போன்ற
மஜ்ஜை ஆகியவை ஸ்நேஹம் என்று கூறப்படுகின்றன.
கல்கம், திரவம், ஸ்நேஹம் ஒன்று சேர்த்து காய்ச்சி, நீர்வற்றியவுடன்
இறக்கி, வடிகட்டி “க்ருதம்” “தைலம்” முதலியன தயாரிக்கப்படுகின்றன.
மேற்சொன்னவை தவிர இன்னும் பல முறைகளில் ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

பிப்ரவரி 29

வரலாற்றில் இன்று : பிப்ரவரி 29
முன்னாள் இந்திய பிரதமர் மொரார்ஜி தேசாய் பிறந்த தினம்(1896)
பின்லாந்து, குளிர்காலப் போரை முடிவுக்கு கொண்டு வர அமைதி முயற்சிகளில் இறங்கியது(1940)
செயின்ட் பீட்டஸ்பர்க், புளோரிடா ஆகியன இணைக்கப்பட்டன(1892)
ஹிலிகோலாந்து தீவு மீண்டும் ஜெர்மனின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது(1952)

சத்தான உணவு செய்முறை

சத்தான உணவு செய்முறை

பருப்பு அடை
தேவை
பச்சைப்பயறு    -1கப்
துவரம் பருப்பு-1கப்
உளுத்தம் பருப்பு-1கப்
பெருங்காயம்-சிறிது
தேங்காய் எண்ணெய்-1கப்
பச்சை மிளகாய்-4
கொத்துமல்லி இலை-1/2கொத்து
உப்பு-ருசிக்குத் தக்க அளவு
செய்முறை
பருப்பு வகைகளை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீர் விட்டு இவற்றை அரைத்தெடுக்கவும். கொத்துமல்லி இலை, மிளகாய் இவற்றைச் சிறு துண்டங்களாக நறுக்கி, உப்பும் சேர்த்து அரைத்த மாவில் கலக்கவும். கலந்த மாவானது இட்லி மாவைப் போன்று இருக்கும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும், சிறிது எண்ணெய் விட்டு, ஒரு தேக்கரண்டி மாவை விடவும். ஒருபுறம் வெந்தவுடன் மறுபுறம் திருப்பி எடுக்கவும். இதை சட்னி இல்லாமலேயே சாப்பிடலாம்.
ராகி ரொட்டி
தேவை
ராகி மாவு-4கப்
உப்பு-11/2தேக்கரண்டி
எண்ணெய்- 1மேஜைக்கரண்டி
செய்முறை
உப்பு, எண்ணெய், வெந்நீர் ஆகியவற்றை ராகி மாவில் விட்டுப் பிசையவும், இதில் ஒரு பகுதியை எடுத்து, வாழை இலையில் சிறிது எண்ணெய் தடவி, மாவை அதில் பரவலாகத் தட்டவும். தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, பரவலாகத் தட்டிய ரொட்டியை அதில் இட்டு வேக வைக்கவும். ஒரு புறம் வெந்தவுடன் மறுபுறமும் திருப்பி வேகவைத்து எடுக்கவும்.
ராகி கஞ்சி

தேவை
ராகி மாவு-1மேஜைக்கரண்டி
பால்-2கோப்பை
சர்க்கரை-4தேக்கரண்டி
தண்ணீர்-2கப்
செய்முறை
தண்ணீரையும் பாலையும் சிறிது நேரம் கொதிக்க வைக்கவும். ராகி மாவைத் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். அதை கொதிக்கும் நீரில் சேர்க்கவும். நன்றாக வேகவைத்து, பிறகு ருசிக்குத் தகுந்த சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
பிஸி பேளே பாத்
தேவை
அரிசி-2கப்
துவரம் பருப்பு-1/2கப்
பச்சை கடலை பருப்பு-21/2தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு-1தேக்கரண்டி
வெந்தயம்-1/4தேக்கரண்டி
பட்டை-1துண்டு
கிராம்பு-2-3
கொத்துமல்லி விதை    -2தேக்கரண்டி
காய்ந்த மிளகாய்-6-8
எண்ணெய்-2தேக்கரண்டி
பெருங்காயம்-    1துண்டு
தேங்காய் துருவல்-3/4தேக்கரண்டி
புளி-ஒருஎலுமிச்சைஅளவு
கடுகு-3/4தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு-1/4தேக்கரண்டி
பீன்ஸ்-1/2கிலோ
உருளைக்கிழங்கு-2
உப்பு-3தேக்கரண்டி
மசாலாப் பொடி
பச்சைக் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், பட்டை, கிராம்பு, கொத்துமல்லி விதை, மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை எண்ணெயில் வறுத்தெடுக்கவும். தேங்காய்த் துருவலுடன் இவற்றையும் சேர்த்து அரைத்தெடுக்கவும்.
செய்முறை
துவரம் பருப்பை, வேண்டிய அளவு நீர் சேர்த்து வேக வைக்கவும். பாதி வெந்தவுடன் காய்கறிகளையும், பாதியளவு மசாலாவும், உப்பு, கரைத்த புளிநீர் ஆகியவற்றைச் சேர்க்கவும். காய்கள் பாதி வெந்தவுடன் அரிசியையும் சேர்த்து, வேக வைக்கவும். மீதியுள்ள மசாலாவையும் சேர்த்து, நன்றாகக் கலக்கவும். சிறிது நேரம் ஆனவுடன் கடுகு சேர்த்துத் தாளித்தெடுக்கவும்.
வெல்லத் தோசை
தேவை
அரிசி மாவு-1கப்
கோதுமை மாவு-1மேஜைக்கரண்டி
வெல்லம்-3அவுன்ஸ்
தண்ணீர்-1/2கப்
ஏலக்காய்-2
கிராம்பு-2
தேங்காய் துருவல்-2மேஜைக்கரண்டி
எண்ணெய்-11/2மேஜைக்கரண்டி
செய்முறை
வெல்லத்தை தண்ணீரில் கரைக்கவும். இதில் அரிசி மாவு, கோதுமை மாவு, தேங்காய் துருவல், பொடி செய்த ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றையும் சேர்த்து கலக்கவும். இதனை தோசை வார்க்க ஏற்றவாறு மாவாக்கிக் கொள்ள வேண்டும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் தடவிக் கொள்ளவும். ஒரு கரண்டி நிறைய மாவை எடுத்து அதனை தோசைக் கல்லில் வார்க்கவும். ஒரு புறம் வெந்தவுடன் மறுபுறமும் திருப்பி எண்ணெய் விட்டு வேக வைக்கவும்.
காய்கறி, சோள பராத்தா
தேவை
சோள மாவு-    21/4கப்
பசலைக்கீரை    -1சிறியது
காலிபிளவர்-1சிறியது
எண்ணெய்-2மேஜைக்கரண்டி
உப்பு-1தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி-1தேக்கரண்டி
செய்முறை
காலி பிளவர், பசலைக்கீரை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சிறிது தண்ணீர் விட்டு இவற்றை வேக வைக்கவும். உப்பு, மிளகாய் பொடி, எண்ணெய் இவற்றுடன் வெந்த காய்கறியை மசித்து சோள மாவுடன் சேர்க்கவும். நன்றாகக் கலக்கி தண்ணீர் விட்டு நல்ல மாவாக பிசைந்தெடுக்கவும். இந்த மாவில் பராத்தாக்களைச் செய்யவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெய் சேர்த்து பராத்தாக்களை வெந்தெடுக்கவும்.
கோதுமை உப்புமா
தேவை
கோதுமை சூஜி (ரவை)-1கப்
மஞ்சள் பொடி-ஒரு துளி
எண்ணெய்-4தேக்கரண்டி
உப்பு-1தேக்கரண்டி
பச்சை கடலைப்பருப்பு-1தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு-1தேக்கரண்டி
பச்சை மிளகாய்-3-4
இஞ்சி-ஒரு துண்டு
கடுகு-11/4தேக்கரண்டி
வெங்காயம்-1சிறியது
பெருங்காயம்-    ஒருதுண்டு
கறிவேப்பிலை-சிறிய அளவு
செய்முறை
எண்ணெயை ஒரு பாத்திரத்தில் விட்டு சூடாக்கவும். இதில் கடுகு, பச்சை கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் பொடி, பெருங்காயம் இவற்றை போட்டு வறுத்தெடுக்கவும் இதில் 11/2 கப் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் சூஜியை அதில் சேர்க்கவும் கட்டிகள் ஏற்படாவண்ணம் நன்றாகக் கலக்கிக் கொண்டேயிருக்கவும். கறிவேப்பிலையையும் சேர்த்து சிறிது நேரம் வேகவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
பல சத்துணவுப் பாயசம்
தேவை
உலர்ந்த பால் பவுடர்    -30கிராம்
பல சத்துணவு பொடி-30கிராம்
வெல்லம்-38கிராம்
செய்முறை
பால்பவுடரையும், சத்துணவுப் பொடியையும் கலந்து தண்ணீரை சிறிது சிறிதாக விட்டுப் பிசையவும். வேண்டிய அளவு தண்ணீர்விட்டுக் கலக்கிக் கொள்ளவும். வெல்லத்தையும் கலந்து, 5 நிமிஷங்கள் கொதிக்க வைக்கவும்.
சூடான வெண் பொங்கல்
தேவை
பச்சரிசி-6அவுன்ஸ்
கடலைப்பருப்பு-2அவுன்ஸ்
பல சத்துணவு-2அவுன்ஸ்
தாவர எண்ணெய்-2மேஜைக்கரண்டி
மிளகுப்பொடி-1மேஜைக்கரண்டி
உப்பு-1மேஜைக்கரண்டி
இஞ்சி-1துண்டு
முந்திரி பருப்பு-1அவுன்ஸ்
நெய்-1மேஜைக்கரண்டி
அரிசிக்குப் பதிலாக கோதுமை, ராகி, சோளம் ஆகியவற்றையும் உபயோகிக்கலாம்.
செய்முறை
சிறிதளவு தாவர எண்ணெய்யோடு சுத்தம் செய்த அரிசியைப் போட்டு லேசாக வறுக்கவும். தண்ணீரைக் கொதிக்க வைத்து வறுத்த அரிசியை அதனுடன் சேர்க்கவும். அரிசி பதமாகும் வரை சமைக்கவும். பின்னர் பல சத்துணவு, உப்பு, மிளகு, நறுக்கிய இஞ்சி முதலியவற்றைச் சேர்க்கவும். 10, 15 நிமிஷங்கள் நன்றாகக் கலக்கவும். வறுத்த முந்திரிப்பருப்பையும், நெய்யையும் சேர்க்கவும்.

மனிதனால் 1838 ல் எடுக்கப்பட்ட மிகப்பழைய புகைப்படம்

மனிதனால் 1838 ல் எடுக்கப்பட்ட மிகப்பழைய புகைப்படம் இது. பாரிஸ் நகரத்தின் முக்கியமான வீதி. அப்போது இந்தப் படத்தை எடுக்கப் பதினைது நிமிடங்கள் பிடிக்குமாம்.

அதற்காக அங்கே ஷூ பாலிஷ் செய்யும் ஒரு பெண்ணும் பாலிஷ் செய்துகொள்ளும் ஒரு ஆணும் அவ்வளவுநேரமும் காத்திருக்கிறார்கள்......

இரவு வானம்



இரவு வானில் விண்மீன்களையும் கோள்களையும் ராசிகளையும் கண்டு கழிக்க விரும்பும் நண்பர்களே!

இரவு வானின் வரைபடத்தை வைத்து எப்படி அடையாளம் காண்பது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் உள்ளபடியே கற்றுக்கொள்ளமுடியும்.
...
இரவில் வெளிச்சமோ தூசோ உயரமான மரங்களோ குன்றுகளோ இல்லாத தூய்மையான தனியான இடந்தான் அதற்குச் சரியான இடம்.

இல்லாவிட்டால் சிலவற்றைத் தவிர பெரும்பாலானவற்றைக் காண முடியாது.

அத்தகைய ஒரு இடத்தில் (மொட்டை மாடியாக இருந்தாலும் சரி, வயல்வெளியாக இருந்தாலும் சரி கட்டிலில் அல்லது தரையில் வடக்குநோக்கித் தலையை வைத்துப் படுதுக்கொள்ளவேண்டும்.மேப்பை நமது முகத்துக்கு நேராக வைத்துக்கொண்டு டார்ச் விளக்கின் உதவியால் பார்த்து அதே வடிவத்தில் விண்ணில் தெரியும் காட்சியைச் சரியாகக் கண்டுபிடிக்கப் பழகவேண்டும். அது மிக எளிமையானதுதான்.

நின்றுகொண்டே பார்க்க விரும்பினால் தெற்குமுகமாக நின்றுகொண்டு வானை அண்ணாந்து பார்க்கவேண்டும் .

பழகிவிட்டால் அதன் பின் மேப்பைப் பார்த்தாலே வானில் இப்படித்தான் இருக்கும் என்று எளிதில் புரிந்து விடும்.
See More

India sends top expert to fight coconut pest

India sends top expert to fight coconut pest

The Government’s trip to India in January has begun to reap rewards for the agriculture sector in T&T. On Friday, Food Production Minister Vasant Bharath at a luncheon at Carlton Savannah in Port-of-Spain welcomed Dr Avvaru Sujatha, principal scientist and head of the Mango Research Unit from the Nuzvid Krishna district of India to the country.

For the next year, Sujatha will assist in the control of the Red Palm Mite pest affecting the dying coconut industry in T&T at no costs to the T&T Government. Highly recommended by the Indian Council for Agricultural Research, Sujatha who has spent 25 years of her life doing research on coconut pests was saluted by Indian High Commissioner Malay Mishra, the ministry’s permanent secretary Edwina Leacock and officials from agricultural agencies.

A blushing Sujatha promised not to let down the Government in combating the disease. “I do will do my best,” she assured. The disease, which invaded T&T in 2006, has had devastating effects, with miles of coconut estates in areas such as Cedros, Icacos and Manzanilla being wiped out in the last five years.

80 per cent coconut industry wiped out

It is estimated that between 75 to 80 per cent of coconut estates in T&T were destroyed. Following the luncheon, Bharath told the Sunday Guardian that the Government has reaped some measure of success with its mission to India with Sujatha’s visit to T&T. “Her services, expertise and experience are all free to the Government.”

The ministry will provide housing accommodation for Sujatha, Bharath said. Bharath said he was told by disease control agencies across the world that it may take as much as three to four years to fight the Red Palm Mite. Sujatha, Bharath said, will undertake the task in one year.

Developing a biological agent from scratch

Bharath said T&T could not supply a biological agent to counteract the disease, stating that one had to be developed from scratch. Bharath said importing a biological agent that may have worked elsewhere was risky since it could impact on our existing environment. By March 2013, Bharath said his ministry expects:
• A management strategy on Red Palm Mite and an action plan.
• Information package on Red Palm Mite natural enemies.
• Use of biological control agents to eradicate the disease.

Once this has been accomplished, Bharath said he will get the ball rolling to revitalise the coconut sector by inviting the private sector to invest. “What we are looking to do is get people from the private sector to invest where there are profitable opportunities. We are saying we want entrepreneurs who may not be involved in agriculture right now to look at the agriculture sector as any other business opportunity.”

Agriculture URP programme on board

Bharath said to get the industry up and running, part of Caroni 1975 Ltd lands, comprising 40,000 acres can be used. Idle and barren lands in the countryside can also be sourced, Bharath said. Bharath said the coconut industry can become viable with the right people supporting it.

He drew reference to international soft drink manufacturer Pepsi Cola which has been buying up large coconut estates in Brazil and South America. “We can use this as an engine of diversification. We can now bottle and package coconut water in Trinidad and Tobago to export, earning triple times what the coconut is worth simply because it’s a natural drink. All we need to do is find a way to preserve it. Clearly Pepsi Cola has found a way to do it... otherwise they would not have invested so heavily.”

Stating that he was extremely optimistic about the initiative, Bharath said there are so many downstream industries than can be derived from the sector. During his trip to some of the rural areas in India, Bharath said he observed that every household was using coconut to make something to sell. Things such as mats, hats, slippers and hairbrushes were made from the coconut’s fibre. The dried and freshly cut leaves were used for a variety of handicrafts.

“Somebody who lives in rural Trinidad who wants to earn a living can sit down at home and make a few dollars.” Bharath said while the industry was highly labour intensive, his ministry was now looking at the agriculture URP programme to get on board to assist. “It is not just the jobs than can be derived... it is the income that can be generated by the people who can be self employed. We expect that it will generate thousands of jobs. But we have to start somewhere and this is the start.”

About the Red Palm Mite

The Red Palm Mite is a pest of the coconut and other palms in India and many other Asian countries. The first Western Hemisphere report of Red Palm Mite was from Martinique in 2004 and it quickly spread to many other Caribbean countries, including T&T in 2006. Initial symptoms are discoloration of the leaves, while advanced symptoms include yield loss.

கைக்குத்தல் அரிசி

பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் கைக்குத்தல் அரிசியையே உணவிற்காக பயன்படுத்திவந்தனர். கைக்குத்தல் அரிசி எனப்படும் பாலீஸ் செய்யப்படாத அரிசியில் நார்ச்சத்தும் எண்ணற்ற வைட்டமின் சத்துக்களும், புரதச்சத்தும் அடங்கியுள்ளன. ஆனால் இன்றைக்கு அரிசியை பலமுறை பாலீஸ் செய்து எந்த சத்தும் இல்லாத வெறும் மாவுப்பொருளை மட்டுமே கொண்ட அரிசியை பயன்படுத்துகின்றனர். இதனால் உடலானது நோய்களின் கூடாரமாகிறது. பாலீஸ் செய்யப்படாத அரிசியை உணவாக உட்கொண்டால் நீரிழிவு, இதயநோய் உள்ளிட்ட நோய்களை தவிர்க்கலாம் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.
வைட்டமின் சத்துக்கள்
உலகில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் அரிசியையே உணவாகக் கொண்டுள்ளனர். இந்தியாவில் குறிப்பாக தென்னிந்திய மாநில மக்களின் மிக முக்கிய உணவுப்பொருள் அரிசி. இது ஒரு மாவுப் பொருளாகும். பாலீஸ் செய்யப்படாத அரிசியில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி12, வைட்டமின் கே, வைட்டமின் இ, மாவுச்சத்து, புரதச் சத்துக்கள் நிரம்பியுள்ளன.
முற்காலத்தில் உரலில் நெல்லை போட்டு உலக்கையால் அந்த நெல்லினை இடித்து அதன் உமியைப் பிரித்து சுத்தம் செய்து அந்த அரிசியை சமைத்து சாப்பிட்டனர். இந்த வகையில் எடுக்கப்படும் அரிசியில் தவிடு நீக்கப்படுவது இல்லை. இவ்வாறு அரிசியை தவிட்டுடன் சேர்த்து சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும். அதுபோல் அரிசியில் அடங்கியுள்ள மாவுப் பொருளை எளிதில் ஜீரணிக்கச் செய்யும்.
நீரிழிவு வராது

தவிடு நீக்காத அரிசியை சாப்பிடுவதால் அதன் பலன்கள் அனைத்தும் சரிசமமாக உடலுக்கு சேர்கிறது. இந்த அரிசியை உண்பதால் உணவு எளிதில் சீரணமடையும். மலச்சிக்கலைப் போக்கும், சிறுநீரை நன்கு பிரிக்கும். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் நீரிழிவு நோயின் தாக்கம் இருக்காது. இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். பித்த அதிகரிப்பை குறைக்கும். உடலில் தேங்கியுள்ள கொழுப்பை நீக்கும். சருமத்தைப் பாதுகாக்கும். வாத பித்த, கபத்தை அதனதன் நிலையில் வைத்திருக்கும்
இந்த தவிடு நீக்காத அரிசி இந்தியாவில் கேரளாவிலும், இலங்கையிலும் மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். தமிழ்நாட்டில் இந்த அரிசியை பயன்படுத்துவது தற்போது வெகுவாக குறைந்துவிட்டது.
சத்து நீக்கப்பட்ட அரிசி
தமிழ்நாட்டில் அனைவருமே கண்ணைப் பறிக்கும் வெண்மையான அரிசியையே விரும்புகிறோம். இரண்டு மூன்று முறை பாலீஷ் செய்யப்பட்ட இவ்வகையான அரிசியில் உள்ள எல்லா வைட்டமின் சத்துக்களும் வெளியேற்றப்பட்டு விடுகிறது. இதில் நாவிற்கு சுவை மட்டுமே உண்டு. ஆனால் மாவுச்சத்தைத் தவிர வேறெந்த சத்துக்களும் கிடைப்பதில்லை.
நோய்கள் அதிகரிப்பு
இந்த அரிசியை சமைத்து உண்பதால் மாவுச் சத்து அதிகம் உடலில் சேருகிறது. ஆரம்பத்தில் அந்த மாவுச்சத்தைக் கட்டுப்படுத்த உடலில் இன்சுலின் சுரப்பு அதிகமாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இன்சுலின் சுரப்பு குறைவதால் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதனால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.
கைக்குத்தல் அரிசி தற்போது அதிகம் கிடைப்பதில்லை. உமி நீக்கி பாலீஷ் செய்யாத அரிசியை வாங்கி சமைத்து சாப்பிடுங்கள். நாவிற்கு ருசி, தொண்டைவரை, ஆனால் பலன் ஒன்றுமில்லை. ஆரோக்கிய உடலுக்கு கைக்குத்தல் அரிசி சிறந்தது. பாலீஷ் செய்த வெள்ளை அரிசி சத்தற்றது. எனவே அவற்றை சாப்பிடுவதை குறைத்து தவிடு நீக்காத அரிசியை வாங்கி உண்பதே ஆரோக்கியத்திற்கு ஏற்றது என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்

தாராளமாக தண்ணீர் குடிக்காவிட்டால் கல் தான்!

உடலில் உள்ள பாகங்களில், மூளை, இதயம் போன்ற உறுப்புகளுக்கு நிகரான முக்கியத்துவம் பெற்றது, சிறுநீரகம். ரத்தத்தை சுத்திகரித்து, கழிவுகளை வெளியேற்றும் இந்த உறுப்பின் பணி, அளவிடற்கரியது. பொதுவான காரணங்களால், உள்ளுறுப்புகள் பாதிக்கப்படுவது போல, சிறுநீரகமும் பாதிக்கப்படுகிறது. புகை பிடித்தல், உடற்பயிற்சி இன்மை, மதுப் பழக்கம், உடல் எடை, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என, பல காரணங்களை அடுக்கலாம்.
சிறுநீரக கல்: சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்னையில் முக்கியமானது, கல் உருவாகுதல். சிறுநீரில் உள்ள உப்புகள் ஒன்று திரண்டு, கற்களாக உருவெடுக்கின்றன. கால்சியம், மெக்னீசியம் ஆகியவற்றின் ஆக்சலேட், பாஸ்பேட் உப்புகளால், இவை உண்டாகின்றன. இது, மிகச் சிறு துகள் அளவில் துவங்கி, பிறந்த குழந்தையின் தலை அளவிற்குக் கூட வளரக் கூடும். பெரிய கற்கள் கூட, அறிகுறியை வெளிப்படுத்தாமல் இருக்கும். கற்களின் வெளிப்பரப்பு, முட்களைப் போல இருந்தால், அவை சிறுநீர் பாதையில் உராய்ந்து, சிறுநீரில் ரத்தம் வெளியாகலாம். இவை பரம்பரை காரணமாக, போதிய நீர் குடிக்காததால் உருவாகலாம். அசைவ உணவை தவிர்ப்பது, போதிய நீர் குடிப்பது, சிறுநீர் பாதை நோய் தொற்று மற்றும் அடைப்புக்கு தாமதமில்லாத சிகிச்சையால், கல் உருவாவதை தவிர்க்கலாம்.
அறிகுறிகள்: இதன் முக்கிய அறிகுறி, வயிற்று வலி. சிறுநீர் பாதையில் வலது, இடது பக்க கீழ் முதுகு பகுதியில் வலி வந்து, விரைகள் வரை பரவலாம். வாந்தி, நீர்க்கடுப்பு, சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல், சிறுநீரின் வேகம் தடைபடுதல், காய்ச்சல் ஏற்படலாம். பெண்களை விட ஆண்களுக்கு, சிறுநீரக கல் உருவாகும் வாய்ப்பு, மூன்று மடங்கு அதிகம். இந்நோயாளிகள் தக்காளி, நெல்லி, முந்திரி பருப்பு, வெள்ளரி, கறுப்பு திராட்சையை தவிர்க்கலாம். பால், 250 மி.லி.,க்கு மிகாமல் எடுக்கலாம். எலுமிச்சை ஜூஸ், இளநீர் நிறைய குடிக்கலாம். முள்ளங்கி, வாழைத்தண்டு, சிறுநீர் பெருக்கியாக செயல்படுவதால், பெரும் பயன் உள்ளதாகக் கருத முடியாது. பார்லி, கொள்ளு, பாகற்காய், காரட் சேர்த்துக் கொள்ளலாம். ஒருவரின் சராசரி சிறுநீர் அளவு, ஒன்று முதல் ஒன்றரை லிட்டர் வரை இருக்கலாம். கல் உருவாகும் பிரிவினர், 2 லிட்டர் சிறுநீர் வெளியேறும் அளவு, 3 முதல் 4 லிட்டர், தண்ணீர் குடிக்க வேண்டும். 4 மி.மீ.,க்கு கீழ் உள்ள கற்கள், பெரும்பாலும் தானாகவே வெளியேறி விடுகின்றன. 6 மி.மீ.,யை விட பெரியவை, தானாக வெளியேறுவதில்லை. இதற்கு தாராளமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
சிறுநீர் சிக்கல்: புராஸ்டேட் சுரப்பி, ஆண்களுக்கே உரியது; இனப் பெருக்கத்துடன் தொடர்புடையது. இது, சிறுநீர் பாதையின் அடியில், சிறுநீர்த் தாரையின் முதற்பகுதியை சூழ்ந்துள்ளது. வயது முதிர்ந்தவர்களுக்கு மிகவும் வளர்ச்சி அடைந்த நிலையில், சிறுநீர்த் தாரையை அமுக்குகிறது. இதனால், சிறுநீர் பாதை அடைபட்டு, சிறுநீர் கழிக்க முடியாமல் தேங்கும். அந்நிலையில், உடனடியாக அடைப்பை நீக்க வேண்டும்.
வயதானவர்களுக்கு சிறுநீர் சிக்கல் ஏற்படும்போது, ஆசன வாய்க்குள் விரல் விட்டு பார்த்தால், புராஸ்டேட் சுரப்பியின் இருபக்க மடல்கள் துருத்திக் கொண்டிருப்பதை உணரலாம். அடிக்கடி சிறுநீர் கழித்தல், முயற்சிக்கும்போது உடனடியாக சிறுநீர் வெளி வராதது, சிறுநீர் வெளி வருவதை கட்டுப்படுத்த முடியாதது, சிறுநீர் நின்று நின்று வருவது, நாட்கள் செல்லச் செல்ல, கிருமி தாக்கம் ஏற்பட்டு, சிறுநீர் தொற்றின் அறிகுறிகளாக, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், காய்ச்சல், அடிவயிற்றில் வலி தோன்றுவது என, பாதிப்பை ஏற்படுத்தும். புராஸ்டேட் எந்தளவு வளர்ந்துள்ளது, மலக்குடலின் சீதச்சவ்வை பாதித்துள்ளதா, புற்றுநோய் வளர்ச்சியா என அறிவது அவசியம். 50 வயதானவர்கள், ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டும். அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு, "எண்டோஸ்கோபி' சிகிச்சை செய்யப்படுகிறது. முன்னதாக, வழக்கமான ரத்தம், சிறுநீர் பரிசோதனைகளுடன், ரத்தத்தில் யூரியா, கிரியாட்டினின், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் தேவைப்படும். மேலும், சிஸ்டோஸ்கோபி, பை உள்நோக்கல் சோதனையும் செய்யப்படும். இதன் மூலம், பாதிப்புக்கான வேறு காரணங்களையும் அறியலாம்.
டாக்டர் டி.ஆர்.முரளி,
சிறுநீரியல் துறை நிபுணர்,
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை.

ஞாபக சக்தியை அதிகப்படுத்த…

சும்மா ஒரு ஸ்டைலுக்காக, வேலைப்பளு, மன உளைச்சல் மற்றும் காதல் தோல்வியை மறக்க போன்ற பல்வேறு காரணங்களினால் விளையாட்டாக புகைப்பழக்கம் தொடங்குகிறது. விளையாட்டு வினை ஆனது என்பது போல விளையாட்டாக தொடங்கும் இந்த புகைப்பழக்கம் ஒருவரது புத்திக்கூர்மையை குறைத்துவிடுகிறது, ரத்த அழுத்தத்தினை அதிகரிக்கிறது மற்றும் கண்புரை நோயை ஏற்படுத்துகிறது என்று குண்டைத் தூக்கிப்போடுகின்றன புகைப் பழக்கம் குறித்த ஆய்வுகள்.
புகைப்பழக்கத்தின் பாதிப்புகள் குறித்து இங்கிலாந்தின் நார்த்தம்பிரியா பல்கலைக்கழகத்தில் ஞாபக சக்தி குறித்த ஒரு செயல்முறை தேர்வு நடத்தப்பட்டது. இதில், சராசரியாக 2 1/2 வருடங்களுக்கு முன்பு புகைப்பழக்கத்தை கைவிட்டவர்கள், புகைப்பவர்களைவிட 25 சதவிகிதம் நன்றாகவும், புகைப்பழக்கமே இல்லாதவர்கள் 37 சதவிகிதம் நன்றாகவும் செயல்பட்டது தெரியவந்தது.
புகைப்பழக்கத்தை கைவிடுவது உடல் நலனுக்கு பல நன்மைகளை உண்டாக்கும் என்பது நாமனைவரும் அறிந்த செய்தி. ஆனால், புகைப்பழக்கத்தை கைவிடுவதால் அறிவு சார்ந்த செயல்திறனும் அதிகரிக்கிறது என்பது இந்த புதிய ஆய்வின் மூலம் நிரூபணமாகியுள்ளது என்கிறார் இந்த ஆய்வின் தலைமை ஆய்வாளர், முனைவர் டாம் ஹெபர்னான்!
இதற்கு முந்தைய ஆய்வுகளில் புகைப்பழக்கத்தை கைவிடுவதால் `பின்னோக்கிய ஞாபக சக்தி' (அதாவது, ஒரு விஷயத்தை படித்து பின்னர் தேவைப்படும்போது அதை நினைவுகூரும் திறன்) மேம்படுகிறது என்பது தெரியவந்தது. ஆனால், இந்த புதிய ஆய்வின் நோக்கம் ஆய்வில் கலந்துகொண்டவர்களின் `தொலைநோக்கு ஞாபக சக்தி'யை (அதாவது, ஒரு குறிப்பிட்ட செயலை ஞாபகம் வைத்துக்கொண்டு எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதை செயல்படுத்தும் திறன்) கணக்கிடுவதே! உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட மாத்திரையை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எடுத்துக்கொள்ள தொலைநோக்கு ஞாபக சக்தி அவசியம்.
அதெல்லாம் சரிதான், புகைப்பழக்கம் எப்படி ஞாபக சக்தியை பாதிக்கிறது என்பது குறித்து எதுவும் தெரியவந்துள்ளதா?
புகைப்பழக்கம் எப்படி ஞாபக சக்தியை பாதிக்கிறது என்பது குறித்து திட்டவட்டமாக எதுவும் தற்போது தெரியவில்லையென்றாலும், நீண்டகால புகைப்பழக்கத்துக்கும் மூளையின் சில திசுக்கள் சிதைந்துபோவது அல்லது மூளையின் சில பாகங்களில் திசுத்திறன் இழப்பு ஏற்படுவதற்கும் தொடர்பு இருப்பதாக முந்தைய ஆய்வுகளில் கண்டறியப்பட்டது. மேலும், ஆய்வாளர் களின் யூகப்படி, புகைப்பழக்கமானது மூளையின் ப்ரீப்ரான்டல் கார்டெக்ஸ், ஹிப்போகேம்ப்பஸ் அல்லது தலாமஸ் ஆகிய பல பகுதிகளை சேதப்படுத்தக்கூடும் என்று தெரிகிறது. இவை அனைத்தும் `தொலை நோக்கு ஞாபக சக்தி'யுடன் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது!
சிறிய அளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு முடிவுகளை, பல்லாயிரக்கணக்கான புகைப்பவர்களை நீண்டகாலம் சோதனை செய்வதன்மூலம் கிடைக்கும் முடிவுகளைக்கொண்டு மீண்டும் ஊர்ஜிதம் செய்ய வேண்டியது அவசியம் என்கிறார் மூத்த ஆய்வாளர் டாம் ஹெபர்னான்.
இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது? புகைப்பதால் கிக்கு மட்டும் ஏறவில்லை, நமக்குத் தெரியாமலேயே நமது தொலைநோக்கு ஞாபக சக்தியும் கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது என்று தெரிகிறது. ஆக, இனி பொதுநல நோக்குள்ளவர்கள் `புகைக்காதே புகைக்காதே... உன் தொலைநோக்கு ஞாபக சக்தியை குறைக்காதே குறைக்காதே' என்று கோஷம் போட்டுக்கொண்டு ஊர்வலம் போனால்கூட தப்பில்லை என்றே தோன்றுகிறது!

Tuesday, February 28, 2012

வேலிப்பருத்தி.



வேலிப்பருத்தி.

1) மூலிகையின் பெயர் -: வேலிப்பருத்தி.

2) தாவரப்பெயர் -: DAEMIA EXTENSA.

3) தாவரக்குடும்பம் -: ASCLEPIADACEAE

4) வேறு பெயர்கள்-: உத்தம கன்னிகை மற்றும் உத்தாமணி.

5) பயன் தரும் பாகம் -: இலை,வேர் முதலியன.

6) வளரியல்பு -: தமிழகமெங்கும் வேலிகளில் தானே படர்ந்து வளர்கிறது. இதயவடிவ இலைகளை மாற்றடுக்கில் கொண்டு பசுமை நிற வெகுட்டல் மணமுடைய பூங்கொத்துக் களையும் மென்மையான முட்களைக்கொண்ட இரட்டைக் காய்களையும், பாலுள்ள பிசுபிசுப்பான ஏறுகொடி. முட்டைவடிவ விதைகளில் பட்டுப் போன்ற பஞ்சுகள்காணப்படும். இதனை உந்தாமணி என்றும்குறிப்பிடுவதுண்டு.காய்கள் காய்ந்து வெடித்துப் பஞ்சுகளுடன் விதையும் சேர்த்துப் பறந்து சென்று வேறு இடங்களில் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.

7) மருத்துவப்பயன்கள் -: இது நெஞ்சிலே இருக்கின்ற கோழையை அகற்றி வாந்தியை உண்டாக்குவதோடு புழுக்களைக் கொல்லும் தன்மையுடையது.
இதன் இலையை இடித்துப் பிழிந்த சாற்றை ஒரு தேக்கரண்டி வீதம் அருந்தி வர ஆஸ்த்துமாவுக்கும் பாம்புக் கடிகளுக்கும் குணம் ஏற்படும்.
நாள்பட்ட புண்களுக்கு இதன் இலையை அரைத்துக் கட்டி வந்தால் புண்கள் எளிதில் ஆறும்.
பெண்களுக்கு மாதவிலக்கின் போது உண்டாகும் வயிற்று வலிக்கு வேலிப் பருத்தி இலைச்சாற்றைத் தேனுடன் கலந்து அருந்தி வர குணம் தரும்.
குழந்தைகளுக்கு வயிற்றில் புழுத் தொந்தரவு அதிகமாக இருந்தால் இதன் இலையைக் குடிநீரிட்டு ஒரு பாலாடை அளவு கொடுத்து வர புழுக்கள் வெளியாகும்.
கால் வீக்கங்களுக்கும், உடம்பில் அடிபட்ட வீக்கங்களுக்கும், இதன் இலைச் சாற்றையும், சுண்ணாம்பையும் கலந்து பூசி வர அவை குணமாகும்.
இதன் இலைச்சாற்றுடன் தேன் கலந்து அருந்தி வர இருமல் தணியும்.
இதன் இலையை நன்கு அரைத்து எடுத்த விழுதை நகச்சுற்று, கண்ட மாலை இவைகளுக்குப் பற்றிட்டுவர நல்ல குணம் தரும்.
காணாக்கடி, அரிப்பு, தடிப்புக்கு இதன் இலைச்சாறு தடவலாம்.
இலையை வதக்கித் துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கக் கீல் வாதம், முடக்கு வாதம், வாதக் கடைச்சல், இடுப்புவலி மிதலியன குணமாகும்.
இலைச்சாற்றுடன் சுக்கு, பெருங்காயம்,பொடித்துக் காயச்சி இளஞ்சீட்டில் பற்றிட வாத வலி, வீக்கம் குணமாகும், யானைக்கால் நோய்தொடக்க நிலையில் இருந்தால் 40,50 நாள்களில் குணமாக்கலாம்.
இதன் வேரை உலர்த்தித் தூள் செய்து 2 முதல் 4 சிட்டிகை வரை பாலில் கொடுக்க குழந்தைகளின் வாயுத் தொல்லைகள் நீங்கிப் பேதியாகும், பூச்சி, கிருமிகள் சாகும்.
இதன் இலைச்சாற்றில் 7முறை மிளகை ஊறவைத்து வெய்யிலில் உலர்த்தித் தூள் செய்து 2 முதல் 4 அரிசி எடை பால் அல்லது தேனில் கொடுக்கக் குழந்தைகளின் செரியாமை, வாந்தி, மந்தம், மாந்த இழப்பு, கை,கால் சில்லிட்டுப் போதல், சுரம் முதலிய சகல குழந்தை வியாதிகளுக்கும் கொடுக்கலாம்.
5 கிராம் வேரைப் பாலில் அரைத்துக் கலக்கி வடிகட்டிக் காலை மட்டும் 3 நாள் கொடுக்க நஞ்சுக் கடி, கரப்பான், கிரந்தி, சூலை, பிடிப்பு, வாயு முதலியவை போகும்.
உந்தாமணி, பொடுதலை, நுணா,நொச்சி ஆகியவற்றின் இலைகளைவகைக்கு 1 பிடி வதக்கிப் பிழிந்த சாறு 10 மி.லி. கொடுக்கச் சளியோடு கூடிய மாந்தம் தீரும்.
தக்க வயதடைந்தும் பெண் ருதுவாகாவிட்டால் வேலிப்பருத்தி இலைகள் ஆறு எண்ணம் எடுத்துச் சுத்தப்படுத்தி மூன்று மிளகு சேர்த்து அம்மியில் மைபோல் அரைத்து கழற்சிக்காய் அளவு பத்து தினங்கள் தொடர்ந்து உடகொண்டு வர ருதுவாகாத பெண்கள் ருது ஆவார்கள்.

'ஆலித் தெழுந்தநோ யத்தனையும் தீருமேவேலிப் பருத்தியதன் மெல்லிலையால்-வேலொத்துக்கண்டிக்கும் வாதஞ்சன்னி தோஷ மும்போமுண்டிக்கும் வாசனையா மோது'

'உத்தா மணியிலையா லும்வயிற்றுக் குன்மமொடுகுத்தாம் வலியும் குளிரும்போம்-பற்றிதுதியதன்று சொறிசிரங்குந் தொல்லுலகில் நாளும்புதியன் மூலின் புகல்.'

இரணகள்ளி.

இரணகள்ளி.




இரணகள்ளி.


இரணகள்ளி.

மூலிகையின் பெயர் –: இரணகள்ளி.

தாவாரப்பெயர் –: EUPHORBIA.

தாவரக்குடும்பம் :– EUPHORBIACEAE.

பயன்தரும் பாகங்கள் –: பால் மற்றும் இலை.

வளரியல்பு –: கள்ளி இனங்ளில் 2008 வகைகள் உள்ளன.. கால்நடைகள் சாதாரணமாக இதைக் கடித்துச் சாப்பிடுவதில்லை. கள்ளிகள் பலவிதமான தோற்றங்கள், சிறு செடிமுதல் மரம் வரை வளரக்கூடியவை. பல வண்ண மலர்களுடன் காணப்படும். அழகுக்காக எல்லா நாடுகளிலும் வளர்க்கப்படுகிறது. இதன் தோற்றம் சங்க காலத்திலும், ஜீலிசீசர் காலத்திலும் இருந்துள்ளது. அதனால் காலம் நிர்ணியிக்க முடியவில்லை.

கள்ளி இனங்களில் இந்த இரணகள்ளி செடியாக வளரும் இனம். இதன் இலைகள் ஆலமரத்து இலை போன்று, ஆனால் சற்று தடிப்பாக இருக்கும். இலையைக் கிள்ளி ஈரமான இடத்தில் போட்டால் அங்கும் செடி உண்டாகும். இது வரண்ட சமவெளிகளிலும் மலைகளிலும் தன்னிச்சையாக வளரக்கூடியது. தண்ணீரோ மழையோ தேவையில்லை.. காற்றிலுள்ள நீரைக் குடித்தே இது செழிப்பாக வளரும். இதன் இலை உடம்பில் பட்டால் சிவந்து தடித்து விடும். இரணகள்ளி இலை மூலமும், விதை மூலமும் இன விருத்தி செய்யப்படும்.

மருத்துவப்பயன்கள் –: இரணகள்ளி- பொதுவாக நீர் மலம் போக்கும், வாந்தி உண்டாக்கும், தடிப்புணாட்டாக்கும் செய்கையுடையது. கள்ளி இனங்களான கொம்புக்கள்ளி, கொடிக்கள்ளி, சதுரக்கள்ளி, திருகுக் கள்ளி என்ற கள்ளியின்னங்களுக்கு என்ன செய்கை உண்டோ, அதே செய்கை இதற்கும் உண்டு. ஆனால் இந்த ரணக்கள்ளி செடியில் பால் இராது.

இரணக் கள்ளி இலையை இடித்துச் சாறு பிழிந்து அந்த சாற்றில் இரு துளி வென்னீரில் கலந்து உள்ளுக்குக் கொடுத்த பின்னர், தேள் கொட்டின கடிவாயில் மேல்படி இலையை அரைத்து வைத்துக் கட்டி விட தேள்கடி நஞ்சு இறங்கப் போகும்.

இரணக்கள்ளி இலைக்கு இரணத்தை ஆற்றும் சக்தியுண்டு. இந்த இலையை மை போல் அரைத்து, அறாத இரணத்தின் மேல் வைத்து அதன் மேல் ஒரு வெற்றிலையை வைத்துக் கட்டி வந்தால், நாளவட்டத்தில் படிப்படியாக இரணம் ஆறும்.

இரணகள்ளிச் சாற்றை மரு, பாலுண்ணி, கால் ஆணி, சொற சொறப்பான மருக்கள் பேரில்  இரவில் தடவி வைத்துக் காலையில் கழுவி விடவேண்டும். இந்த விதமாக தினசரி, பாலுண்ணி, மரு மறையும் வரைத் தடவி வர வேண்டும்.

மூன்று இரணகள்ளி இலையை அம்மியில் வைத்து அரைத்து, ஒரு புதிய சட்டியில் போட்டு தேக்கரண்டியளவு மிளகு, அரைத் தேக்கரண்டியளவு சீரகம் இவைகளையும் அரைத்துப் போட்டு இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்து ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி,  காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் கபவாத சம்பந்தமான நோய்கள் சன்னி ரோகம், நரம்புச் சிலந்தி, நளிர் வாத நோய்கள் ஆகியவை குணமாகும்.

இரணக் கள்ளி செடியைக் கொண்டு வந்து வீட்டில் உயரத்தில் கட்டி வைக்க கொசுக்கள் இதன் வாடையால் வீட்டில் தங்காமல் ஓடிவிடும்.
 
இரணக் கள்ளி இலையை இடித்துச் சாறு பிழிந்து அரைக் கிலோ பசு வெண்ணையுடன் 500 மில்லி சாறு சேர்த்து நெய் காய்ச்சி எடுதுக்கொண்டு, அந்த நெய்யை பிரண்டைத் துவையல் சோற்றுடன் கலந்து அதில் மேல்படி நெய்யை உருக்கி ஊற்றிப் பிசைந்து பகல் உணவில் மட்டும் சாப்பிட்டுவர குன்ம நோய், அசீரணம், வயிற்றில் ரணம், வாயுத்தொல்லை, மற்றும் சிறுகுடல், இரைப்பை, பெருங்குடல் ஆகியவைகளில் காணும் எல்லாவித புண், ரணம், அழிற்சி யாவும் ஆறிப்போகும். அறுவை சிகிச்சை செய்து தான் தீரவேண்டும் என்ற நோய்களும் மேல் கண்ட முறையால் அறுவை சிகிச்சையின்றி குணமாக்கிக் கொள்ளலாம். பத்தியம்; சுட்ட புளி, வறுத்த உப்பு சேர்த்துக் கொண்டு இதர பொருட்களை நீக்கி இச்சா பத்தியமாக இருப்பது அவசியம்.

இரணக் கள்ளி செடியின் சமூலத்தை எடுத்து இடித்து சாறு 500 மில்லி, தேங்காய் எண்ணை 400 மில்லி, அதனுடன் கஸ்தூரி மஞ்சள் 10 கிராம், நீரடிமுத்து 20 கிராம், கார்போக அரிசி 30 கிராம், கப்பு மஞ்சள் 40 கிராம், கசகசா 5 கிராம், சேர்த்து இடித்து யாவும் ஒன்றாக கலந்து அடுப்பில் சிறு தீயாக கொதிக்க வைத்து சாறு சுண்டிய பின்னர் வடிகட்டி வைத்துக் கொண்டு, காலையில் எழுந்து சர்மநோய் உடையவர் தலை முதல் கால் வரை மேலுக்குப் பூசி அரைமணி நேரம் ஊரவைத்துப் பின்னர் இளஞ்சூடான நீரில் சீயக்காய்த் தூள் போட்டுக் குளித்துவர குட்டம், மேகநீர், ஊரல் படை, கருமேகநீர், சம்பந்தமான சர்ம நோய், செம்மேகப்படை, கிரந்தி நோய்கள் யாவும் போகும்.


கால்நடைகளுக்கான முதலுதவிகள்

கால்நடைகளுக்கான முதலுதவிகள்

உழவுத் தொழிலில் உற்ற தோழனாகவும், விவசாய்களின் ஏடிஎம் ஆகவும் விளங்குபவை கால்நடைகள். இவைகளுக்கு பல வேளைகளில் எதிர்பாராமல் ஏற்படுகிற விபத்துகள், நோய்கள் முலம் அவற்றின் உயிருக்கோ, உடல் நலத்திற்கோ தீங்கு ஏற்படலாம். தக்க மருத்துவம் செய்யும் முன் நம்மிடம் உள்ள மருந்துகளைக் கொண்டு பாதிப்பினை அதிகரிக்காமல் இருக்கச் செய்யும் உதவியே முதலுதவி ஆகும்.

கால்நடைகளுக்கான முதலுதவிகள்

1. காயங்கள்கால்நடைகளுக்கு காயம் ஏற்பட்டால் முதலில் காயத்தை சுத்தமான நீரில் நோய்க்கிருமி எதிரியான டெட்டால் அல்லது சாவ்லான் கலந்து கழுவ வேன்டும். சுத்தமான துணியால் ஒற்றி எடுத்து டிங்ச்சர் அயோடின் அல்லது சல்பர் துளை போடவும். பின் கால்நடை மருத்துவரை அணுகவும்.

உடலில் புண் இருந்தால் ஈ முலம் புழுக்கள் உண்டாகி காயத்தை ஆழமாக்கி விடும்। இதற்கு கற்பூரத்தை பொடி செய்து வைக்கலாம். அல்லது வேப்ப எண்ணெயை புண்ணின் மீது தடவலாம்.

2 எலும்பு முறிவு

எதிற்பாராத விபத்தினால் எலும்பு முறிவு ஏற்ப்பட்டால் முறிந்த நிலையிலேயே அதிக அசைவு ஏற்ப்படத வகையில் மூங்கில், துணி கொண்டு கட்டுப்போட வோண்டும்। பின்னங்கால் தொடை எலும்பு முறிவு ஆகியவற்றிற்கு மருத்துவம் செய்வது கடினம். எலும்பு முறிவு மற்றும் காயங்கள் ஒருசேர இருப்பின் அந்த காயங்களுக்கு கட்டுப்போட கூடாது. உடனே மருத்துவரை அணுகவும்.

3. கொம்பு முறிதல்

மாடுகள் ஒன்றோடு ஒன்று முட்டிக் கொள்வதாலோ அல்லது வெளியில் மேயும்போதோ கொம்பு முறிய வாய்ப்புண்டு. நுனிக் கொம்பு முறிதல் பொட்டாசியம் பர்மாங்கனேட் கலந்த தண்ணீர் கொண்டு கழுவியபின் களிம்பு தடவலாம்.

இரத்தப் போக்கு அதிகமாக இருப்பின் அதன் மேல் துணியைச் சுற்றி டிங்சர் பென்சாயின் ஊற்றவும். கொம்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் ஈரம் மற்றும் அழுக்கு படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காயம் பட்ட இடத்தில் துற்நாற்றம் ஏதேனும் வருகிறதா என கவனமாக கவனிக்க வேண்டும். அவ்வாறு இருப்பின் உடனே மருத்துவரை அணுகவும்.

4 இரத்த கசிவு

கைகளை சுத்தமான நீர் அல்லது சோப்பால் கழுவி விட்டு இரத்தம் வரும் இடத்தில் விரல்களை வைத்து அழுத்தி பிடிக்க வேண்டும்। இரத்த கசிவு அதிகமாக இருந்தால் சுத்தமான துணி கொண்டு கட்டுப் போடலாம்.

5. தீக்காயம்

கால்நடை கொட்டகைகள் தீப்பிட்டிப்பதால் உடம்பில் தீக்காயம் ஏற்படலாம். கால்நடைகளின் உடம்பில் தீப்பிடித்து எரிந்தால் அடர்த்தியான போர்வை அல்லது சாக்கு பை கொண்டு போர்த்த வேண்டும். பின்பு சுத்தமான தண்ணீர் ஊற்றவும். கால்நடைகளை நல்ல காற்றோட்டமான இடத்திற்கு கொண்டு செல்லவும்.

6. இரசாயன திரவங்களால் ஏற்படும் காயங்கள்

இரசாயன திரவங்கள் உடம்பில் பட்டால் தோல், தசை முதலியன வெந்துவிடும். அமில வகைத் திரவங்கள் உடம்பில் பட்டால் சோப்புத் தண்ணீர் அல்லது சோடா உப்பு கலந்த தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும்.
காரவகை திரவங்கள் உடம்பில் பட்டால் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும்। எந்தவகை இரசாயனம் எனத் தெரியாவிட்டால் நிறைய சுத்தமான தண்ணீர் கழுவ வேண்டும்।

7 மின்சார அதிர்ச்சி

கால்நடைகளின் உடம்பில் மின்சாரம் பாய்ந்தால் நினைவு இழத்தல் மற்றும் இறப்பு ஏற்பட வாய்ப்புண்டு। சில வேளை காயங்கள் ஏற்படாலாம். கால்நடைகளுக்கு மின் தாக்குதல் ஏற்பட்டால் உடனடிக மின் இணைப்பை துண்டிக்க வேண்டும். பின்பே அருகில் செல்ல வேண்டும். கால்நடை கொட்டகையில் மின் கசிவு ஏதும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் மின் கம்பங்களிலோ அல்லது அதன் அருகிலோ கட்டுவதை கண்டிப்பாக தவிர்க வேண்டும்.

8. அதிக உடல் வெப்பத்தால் ஏற்படும் அதிர்ச்சி

வெயில் காலங்களில் அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் மற்றும் போதுமான காற்றோட்டம் இல்லாத காரணங்களினால் கால்நடைகளுக்கு மூச்சுத்திணறல் மற்றும் வெப்ப அதிர்ச்சி ஏற்படும். எனவே கால்நடைகளை கால்நடைகளை நல்ல காற்றோட்டமான இடத்தில் நிழலில் கட்டிவைக்க வேண்டும்.

கோடைகாலத்தில் காலை அல்லது மாலை வேளைகளில் மேய்சலுக்கும் பிற வேலைகளுக்கும் அனுப்பலாம். வெப்ப அதிர்ச்சியால் பாதிக்கப் பட்ட கால்நடைகளின் மீது ஈரத்துணி மற்றும் பனி(ஐஸ்) கட்டிகளை வைத்து உடல் வெப்பநிலையைக் குறைக்கலாம்.

9. வயிறு உப்புசம்

தீவனத்தை திடீரென மாற்றுவதாலோ அல்லது பயறுவகை தீவனத்தை அதிகமாக உட்கொண்டதாலோ வயிறு உப்புசம் ஏற்படலாம். இதற்க்கு கடலெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் 250 மி.லி வாய் வழியெ ஊற்ற வேண்டும்.
எண்ணெயுடன் சோப்புத்தண்ணீர் 60 மி.லி வாய் வழியாக கொடுக்கலாம். மருந்து ஊற்றும் போது புறை ஏற்படாமல் கவனமாக ஊற்ற வேண்டும்.
வயிறு உப்புசம் அதிகமாயின் கால்நடைகள் மூச்சுவிட சிரம்ப்படும். எனவே உடனே மருத்துவரை கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும்.
இவைமட்டும் அல்லாமல் உள்வயிறு சுழன்று கொள்வது, புளித்த உணவை அதிகமாக உட்கொள்வது, உண்ட பின் அதிகம் தண்ணீர் குடிப்பது ஆகியவற்றாலும் வயிறு உப்புசம் ஏற்படலாம்।

10 அமில நச்சு

மரவள்ளி இலை, தோல், கிழங்குப்பட்டை, இளம் சோளப்பயிர் ஆகியவற்றை அதிகமாக உண்பதால் இந்நச்சு பாதித்து கால்நடைகள் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே உயிர்சேதமடைந்துவிடும். எனவே உடனே மருத்துவரை கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும். இதனைத் தடுக்க மேற்கூறிய தீவனங்களை நன்கு வெயிலில் உலர்த்தி காயவைத்து கொடுக்க வேண்டும்.

மீந்து போன அரிசி – சாதம், அழுகிய வாழைப்பழம், தானியங்களை அதிகமாக உட்கொள்வதால் வயிறு உப்புசம் ஏற்படலாம். இதனால் கால்நடைகள் மூச்சுவிட சிரம்ப்படும். இதற்கு 100 கிராம் சமையல் சோடாவை 500 மி.லி தண்ணீரில் கரைத்து 2 அல்லது 3 முறை கொடுக்கவும். உடனே கால்நடை மருத்துவரை கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும். தேவைப்பட்டால் வயிற்றுப் போக்கு மருந்து கொடுக்க வேண்டும்.

11 யூரியா நச்சு

தவறுதலாக யூரியாவை மாடுகள் தண்ணீர் குடிக்கும் தொட்டியில் கலப்பதாலோ, அல்லது யூரியா உரமிட்ட வயலில் தண்ணீர் குடிப்பதாலோ யூரியா நச்சு ஏற்படலாம்। வாயிலிருந்து எச்சில் மற்றும் நுரைவடிதல், மூச்சுவிட சிரம்ப்படுதல், வலிப்பு ஏற்படுதல் ஆகியன முக்கிய அறிகுறிகள்। முதலுதவியாக கறவை மாடுகள் மற்றும் எருதுகளுக்கு வினிகர்( 2 முதல் 4 லிட்டர் வரை பிரித்து) கொடுக்க வேண்டும். ஆடுகளுக்கு அரை லிட்டர் கொடுக்கலாம்

12.நஞ்சுத் தன்மை

கால்நடைகள் நஞ்சுத் தன்மையுடைய செடிகளையோ, பூச்சி மருந்துகளை எதிரபாரமல் உட்கொள்வதாள்லோ, பூச்சி கொல்லி மருந்து டப்பாகளை நாக்கினால் நக்குவதாலும் மற்றும் பூச்சி மருந்து தெளித்த பயிரை உட்கொள்வதாள்லோ உடம்பில் நஞ்சுத் தன்மை ஏற்படலாம்। அச்சமயம் வயிறு உப்புசம், வாயிலிருந்து எச்சில் மற்றும் நுரைவடிதல், மூச்சுவிட சிரம்ப்படுதல், வலிப்பு, நினைவிழப்பு ஏற்பட்டு இறப்பு நீகழ வாய்ப்புண்டு.
முதலில் நல்ல காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும். நஞ்சு வயிற்றில் தங்காமல் இருக்க சோப்புக் கரைசல் அல்லது உப்புக் கரைசலை வாயின் வழியாக கொடுக்கலாம். அடுப்புக் கரியை பொடி செய்து தண்ணீரில் கலந்து வாயில் ஊற்றலாம்.

13.வெறிநாய் கடி

எல்லா வெப்ப ரத்த விலங்குகளுக்கும் இந்நோய் வரும். இவ்வியாதியுள்ள ஒரு விலங்கின் உமிழ் நீரில் கருமி வெளியேறுகிறது. வியாதியுள்ள விலங்கு கடித்தாலோ அல்லது ஒன்றாய் உள்ள விலங்கின் உடம்பில் ஏதேனும் புண்ணிருந்து அதை நக்கினாலோ இக்கிருமி உடம்புக்குள் புகுந்துவிடும். அந்த சதைபகுதியிலேயே இனப்பெருக்கம் செய்து நரம்பு வழியாக தண்டுவடம் மற்றும் மூளையை அடைகிறது. 10 நாள் முதல் 7 மாதத்திற்குள் நரம்பு நோய் வந்து மரணம் அடையும்.
இதன் அறிகுறிகள் கண்டவரை எல்லாம் கடிக்க வரும், கண்ணில் பட்டதையெல்லாம் தின்ன முற்படும், கீழ்தாடை தொங்கும்। உமிழ் நீர் நூலாய் வழியும். சில நாட்கள் கழித்து உறுப்புகள் செயலிழந்து அமைதியாகிவிடும். இவ்வியாதியுள்ள விலங்கினை தனியே அடைத்துவிடவும். கையுரை அணியாமல் விலங்கினை தொடக்குடாது. கடிபட்ட இடத்தை சுத்தமான நீர் மற்றும் சோப்பால் கழுவி விட்டு உடனே மருத்துவரை அணுகவும். வெறிநாய்க் கடிக்கான தடுப்பூசி அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் போடப்படும்.

14. பாம்பு கடி

பாம்பு கடி என்றால் ரத்தப் போக்கை கொஞ்ச நேரம் தடுக்காமல் விட்டுவிடலாம். காயத்தை சுத்தப்படுத்தி கட்டுப்போட வோண்டும். பாம்பு கடி என்பதன் அறிகுறிகள் நிற்க முடியாமல் கீழே விழுதல், எழவும் முடியாது. வாந்தி, . உமிழ் நீர் வழியும், மூச்சுவிட சிரம்ப்படும். சிறுநீரில் இரத்தம், காயத்திலிருந்து தொடர்ச்சியாக இரத்தம் வெளியேறிக் கொண்டே இருக்கும். உடனே மருத்துவரை அணுகவும்.

15.தொண்டை அடைப்பு

மாடு அல்லது ஆட்டின் தொண்டையில் ஏதாவது அடைத்துவிட்டால் கையை அல்லது விரலை விட்டு எடுத்துவிடலாம். அவசியப்பட்டால் கைக்குட்டையால் நாக்கை கிழே அழுத்திக் கொண்டு வாயிக்குள் இடுக்கி கொண்டு அடைப்பை எடுத்துவிடலாம். உணவுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால் வயிறு உப்புசம் ஏற்படலாம். கவனிக்காவிட்டால் மாடுகள் 4 அல்லது 5 மணி நேரத்தில் இறந்துவிடும்.

16.கருப்பை வெளித்தள்ளுதல்.

சில மாடுகளுக்கு சினைப் பருவத்தின் கடைசி மாதத்திலோ அல்லது கன்று ஈன்ற பின்போ கருப்பை வெளியே வாய்ப்புண்டு। இதனைத் தடுக்க ஒரே சமயத்தில் அதிக தீவனம் அல்லது தண்ணீர் கொடுக்க கூடாது. மாடுகள் படுத்திருக்கும் பொழுது பின் புறம் சற்று உயரமாகவும், முன் புறம் சற்று பள்ளமாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். கருப்பை வெளியே தள்ளப்பட்டால் மண் மற்றும் தூசுகள் படாமல் இருக்கவும், உலர்ந்துவிடாமல் இருக்கவும் சுத்தமான ஈரத்துணியை போர்த்தி வைக்கலாம். உடனே மருத்துவரை அணுகவும்.

முதலுதவி பெட்டி

விபத்துகள், நோய்கள் என்பவை முன் அறிவிப்பின்றி வருவது। எனவே அவசர உதவிக்காக முதலுதவி பெட்டி ஒவ்வொரு கால்நடை பராமரிபாளர் வீட்டிலும் இருக்க வேண்டும். அதில் இருக்க வேண்டிய மருந்துகள் பின்வருமாறு,

· கட்டுத் துணி, கயிறு, பஞ்சு, ஒட்டுப் பட்டை(பிளஸ்திரி)
· டெட்டால் அல்லது சாவ்லான், கத்தரி கோல்
· டிங்க்சர் அயோடின், பீட்டாடுன் கலவை, டிங்க்சர் பென்சாயின்
· கையுறை, வெள்ளை துணி,
· பாராசிட்டாமால், அவில், பெரிநார்ம், அனால்ஜீன் மாத்திரைகள் அல்லது ஊசிகள்.
· திசு காகிதம், வெப்ப மானி, டார்ச் லைட், பேனா, வெள்ளை தாள், சங்கிலி போன்றவை
முதலுதவி மட்டும் செய்து முழுசிகிச்சை செய்யாவிட்டால் கால்நடைகள் இறக்க நேரிடலாம். எனவே அருகாமையில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை அளிப்பது அவசியம்.