பருவம் மற்றும் இரகங்கள்....
வருடம் முழுவதும் காளான் வளர்க்கலாம்
காளான் வளர்ப்பை வீட்டிலேயே செய்யலாம் அல்லது காளான் குடில் அமைத்து செய்யலாம்.
வெள்ளைச்சிப்பி (கோ-1), சாம்பல்சிப்பி (எம்.டி.யு-2), ஏ.பி.கே.-1 (சிப்பி) ஏ.பி.கே.-2 (பால் காளான்), ஊட்டி-1 மற்றும் ஊட்டி-2 (மொட்டுக்காளான்)ஆகிய காளான் தமிழ்நாட்டிற்கு ஏற்றவை
காளான் குடில்
· 16 சதுர மீட்டர் பரப்பு கொண்ட கூரை மேயப்பட்ட குடில் போதுமானதாகும். குடிலை, வித்துப் பரவும் அறையாகவும், காளான் வளர்ப்பு அறையாகவும் பிரிக்கவும்.
· வித்து பரவும் அறை :25-300சி வெப்பநிலை, நல்ல காற்றோட்டம், இருட்டு இல்லாமல் இருக்க வேண்டும்.
· வளர்ப்பு அறை :23-250சி வெப்பம், 75-80% ஈரப்பதம், மிதமான வெளிச்சம்,நல்ல காற்றோட்டம் தேவை.
(தெர்மாமீட்டர், ஈரப்பத மீட்டர் போன்றவை எலக்ட்ரிக் கடைகளில் விற்பனைக்கு கிடைக்கும்).
காளான் வித்து
· ஏற்ற தானியங்கள் :சோளம் / மக்காச்சோளம் / கோதுமை
· வித்து தயார் செய்தல் : தானியங்களை அரை வேக்காடு வேகவைத்து,காற்றில் உலர்த்தி, 2% சுண்ணாம்புடன் கலந்து, காலியான குளுக்கோஸ் பாட்டில்களில் இடவேண்டும். பின்பு தண்ணீர் உறிஞ்சாப் பஞ்சினால் அடைத்து நுண்கிருமிகளை அழிக்க குக்கரில் அடுக்கி 2 மணிநேரம்வேகவைக்க வேண்டும்.
· வேளாண் பல்கலைக் கழகமோ, வேளாண் துறையோ உற்பத்தி செய்த தூய்மையான தாய் காளான் வித்தை தானியம் நிரப்பப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில் கலந்து, சாதாரண வெப்ப நிலையில் 15 நாட்கள் தனியாக வைக்க வேண்டும். பிறகு 15-18 நாட்கள் வயதுடைய காளான் வித்தை காளான் தயாரிப்புக்கு பயன்படுத்த வேண்டும்.
காளான் படுக்கை அமைத்தல்
· ஏற்ற பொருட்கள்: வைக்கோல்/ கரும்புச்சக்கை, உமி நீக்கிய மக்காச்சோளக் கருது
· மூலப்பொருள் தயாரித்தல் : முழு வைக்கோலை 5 செ.மீ நீளமுள்ள சிறு துண்டுகளாக வெட்டி, 5 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து 1 மணி நேரம் வேக வைத்து, தண்ணீரை வடிகட்டி, 65% ஈரப்பதம் வரை காற்றில் உலர்த்திய (கைகளால் வைக்கோலைப் பிழிந்தால் தண்ணீர் சொட்டாமல் இருக்கும் வரை) வைக்கோலை பயன்படுத்த வேண்டும்.
காளான் பைகள் / படுக்கைகள் தயார் செய்தல்
· காளான் படுக்கைகள் தயார் செய்ய 60 X 30 செ.மீ பாலீத்தின் பைகளைஉபயோகிக்க வேண்டும் (உபயோகபபடுத்தும் பைகள் இரு பக்கமும் திறந்திருக்க வேண்டும்).
· பாலித்தீன் பையை ஒரு பக்கத்தில் கட்ட வேண்டும். 1 செ.மீ அளவிற்கு நடுவில் 2 ஓட்டை போடவும்.
· வைக்கோலை ஒரு பக்கம் கட்டப்பட்ட வட்ட வடிவப் பைக்குள் 5 செ.மீ உயரத்திற்கு நன்கு அழுத்தவும். பின்பு 25 கிராம் காளான் வித்தைத் தூவ வேண்டும்.
· இதே போல் 25 செ.மீ வைக்கோல் தளத்தை அமைக்கவும். காளான் வித்து தளத்தையும் வைக்கோல் தளத்தையும் 4 அல்லது 5 அடுக்குள் மாறி மாறி நிரப்ப வேண்டும். வாயிலை நன்றாகக் கட்டி, குடிலினுள் உள்ள பரண் போன்ற இருப்பில் வைக்க வேண்டும்.
· விதைத்த 15-20 நாட்களில் காளான் படுக்கை முழுவதும் வெண்மையான காளான் இழைகள் படர்ந்திருக்கும். பின்னர் சுத்தமான கத்தியைக் கொண்டு பாலித்தீன் பையைக் கிழிக்க வேண்டும்.
· காளான் படுக்கை காயாமல் இருக்க தினமும் தண்ணீரைக் கைதெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
அறுவடை
· பைகளை கிழித்த 3 ஆம் நாளில் காளானின் மொட்டுகள் சிறு திறள் போன்று காணப்படும். 3 நாட்களில் முழுவளர்ச்சி அடையும்.
· தண்ணீர் தெளிக்கும் முன் காளான் அறுவடை செய்ய வேண்டும். அறுவடையை தினமுமோ அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாளோ செய்யலாம்.
· முதல் அறுவடைக்குப் பின் காளான் படுக்கையை ஒரு தகடு கொண்டு லேசாகச் சுரண்டி விட்டு, பின்பு தண்ணீர் தெளித்து வந்தால் இரண்டாம்,மூன்றாம் அறுவடை செய்யலாம்.
மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் அலுவலகங்களையோ அல்லது வேளாண்மை பல்கலைக்கழகத்தின் விரிவாக்கமையங்களையோ அணுகவும்.
குறிச்சொற்கள்: சிப்பிக் காளான் வளர்ப்பு...
Watch Mr. Chandrashekar share his ideas on mushrooms in this edition of Malarum Boomi. www.istream.com
No comments:
Post a Comment