Thursday, February 9, 2012

ராமரும் தேரையும்!



ராமர் வனவாசமிருந்தபோது...

ஒரு நாள் காலை நதியில் குளிக்க வேண்டி,அம்பறாத் துணியை கழற்றி மணலில் ஒரு அம்பைச் சொருகி அதன் மீது அம்பறாத் துணி முதலியவைகளைச் சாய்த்து வைத்துவிட்டுச் செல்கிறார்.
...
குளித்து முடித்துவிட்டு வந்து மணலில் சொருகி இருந்த அம்பைப் பிடுங்குகிறார்.

ஓ..!

இதென்னக் கொடூரம்.?

அம்பின் நுனியில், உயிர் ஊசலாட்டத்தில் ஒரு தேரை.

துடித்துப் போகிறார் ராமர்.

"ஓ..! தேரையே!

நீ மணலுக்குள் இருப்பதை அறியாமல், தீயவர்களை மட்டுமே அழிக்கும், என் பாணம், இன்று அப்பாவியான உன்னை பலி வாங்கிவிட்டதே.

தயவு செய்து என்னை மன்னித்து விடு."

"பரவயில்லை ராமா! உன் கையால் சாவதே ஒரு பெரும் பாக்கியம்தான்," என்றது தேரை.

அப்போதும் மனம் ஆறவில்லை ராமருக்கு.

"என் அம்பு உன்னைத் துளைக்கும் போது...
ஒரு வார்த்தை...
ஒரே ஒரு வார்த்தை...
ராமா என்று என்னை அழைத்திருக்கக் கூடாதா?"

தேரை சொன்னதாம்.

"வேறு எவராவது என்னைக் கொல்ல வந்திருந்தால்...,
நான் 'ராமா' என்று உன்னை அழைத்திருப்பேன்!

ஆனால்...

அந்த ராமனே என்னைக் கொல்ல வரும்போது நான் யாரை அழைப்பது...?"
See More

No comments: