- குறைந்த இடத்தில் குறைந்த முதலீட்டில் குறுகிய காலத்தில் கணிசமான வருவாய் ஈட்டும் தொழிலாக விளங்கி வருகிறது.
- சாதாரண தீவனத்தை உட்கொண்டு அதனை சிறந்த இறைச்சியாக மாற்றும் திறன்
- இறைச்சிக்காகவும், உரோமத்திற்காகவும், தோலுக்காகவும் வளர்க்கலாம்
நிலமற்ற விவசாயிகள், படிக்காத வேலை இல்லாத இளைஞர்கள் மற்றும் பெண்கள் போன்றோருக்கு முயல் வளர்ப்பு ஒரு பகுதி நேர வருமானம் ஈட்டி தரும் தொழிலாகும்.
- முயல் வளர்ப்பின் மூலம் ஒரு குடும்பத்திற்கு தேவையான தரமான இறைச்சியை உற்பத்தி செய்து செலவை குறைக்கலாம்
- முயல்களுக்கு தீவனமாக எளிதில் கிடைக்கும் இலை, தழைகளையும், வீட்டில் வீணாகின்ற காய்கறிகளையும், குறைந்த அளவு தானியங்களையும் கொடுக்கலாம்
- இறைச்சி முயல்களின் வளர்ச்சி மிக அதிகமாக இருக்கும். இறைச்சி முயல்கள் மூன்று மாத வயதில் 2 கிலோ உடல் எடையை அடைகின்றன.
- முயல்களின் குட்டி ஈனும் திறன் மிக அதிகம்
- முயல் இறைச்சியில் மற்ற இறைச்சிகளை விட அதிக அளவு புரதச் சத்தும் (21%) குறைந்த அளவு கொழுப்புச்சத்தும் (8 %) உள்ளது. அதனால் முயல் இறைச்சி குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது
முயல் இனங்கள் மற்றும் கிடைக்குமிடம்
இறைச்சி வகை இனங்கள்
அதிக எடை உள்ள இனங்கள் (4-6 கிலோ எடை)
- வெள்ளை ஜெயண்ட்
- சாம்பல் ஜெயண்ட்
- பிளமிஸ் ஜெயண்ட்
வெள்ளை ஜெயண்ட் - அதிக எடையுள்ள இனம்
நடுத்தர எடை உள்ள இனங்கள் (3-4 கிலோ எடை)
- நியூசிலாந்து வெள்ளை
- நியூசிலாந்து சிவப்பு
- கலிஃபோர்னியா
- சோவியத் சின்சில்லா
- டச்சு வகை
சோவியத் சின்சில்லா - குறைந்த எடையுள்ள இனம்
உயர்தர வெள்ளை ஜெயண்ட் மற்றும் சோவியத் சின்சில்லா இனங்கள் கிடைக்குமிடம்
கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல்
04286 -266491, 266492
முயல் வளர்ப்பு முறைகள்
முயல்களை புறக்கடை வளர்ப்பில் வளர்ப்பதற்கு மிகக் குறைந்த செலவில் கொட்டகை அமைத்தால் போதுமானது. முயல்களை கடுமையான வெய்யில் மற்றும் மழை போன்ற தட்பவெப்ப நிலைகளிலிருந்து பாதுகாக்கவும், மற்ற விலங்குகளிடமிருந்து (பூனை, கீரி மற்றும் நாய்) பாதுகாக்க கொட்டகை அமைப்பது முக்கியம்.
முயல்களை இரண்டு வகை வீடமைப்பில் வளர்க்கலாம்
ஆழ்கூள முறை
இம்முறையில் முயல்கள் வலைகள் தோண்டாதிருக்க கான்கிரீட்டிலான தரை அவசியம். உமி, வைக்கோல் அல்லது மரத்தூள் போன்றவற்றினை ஆழ்கூளமாக 4 முதல் 6 அங்குல உயரத்திற்கு இட வேண்டும். இவ்வகையில் 30 இளம் முயல்களுக்கு மேல் ஒன்றாக வளர்க்ககூடாது. குறைந்த எண்ணிக்கையில் முயல் வளர்க்க விரும்புவோர்களுக்கு ஆழ்கூள முறை வளர்ப்பு ஏற்றது. குறிப்பாக ஆண் முயல்களை தனிமைப்படுத்தி வளர்க்கவேண்டும். இல்லாவிடில் அவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொள்ளும். இம்முறை தீவிர முறை வளர்ப்புக்கு ஏற்றதல்ல. நோய் தாக்கம் அதிகமாக இருக்கும். இளங்குட்டிகள் பராமரிப்பும் கடினம்.
கூண்டு முறை வளர்ப்பு
கூண்டு முறை வளர்ப்பில் அதிக எண்ணிக்கையிலான முயல்களை வளர்க்க இயலும். இம்முறையில் முயல்களை பராமரிப்பதும் எளிது.
இட அளவு
- வளர்ந்த ஆண்முயல் - 4 சதுர அடி
- தாய் முயல் - 5 சதுர அடி
- இளம் முயல் - 1.5 சதுர அடி
பெரிய முயல் கூண்டு
1.5 அடி நீளம், 1.5 அடி அகலம் மற்றும் 1.5 அடி உயரம் உள்ள கூண்டுகள் பெரிய மற்றும் வளரும் முயல்களுக்கு போதுமானது. இந்த அளவுடைய கூண்டுகளில் ஒரு பெரிய முயலினையோ அல்லது இரண்டு வளரும் முயல்களையோ பராமரிக்கலாம்
வளரும் முயல் கூண்டு
- நீளம் - 3 அடி
- அகலம் - 1.5 அடி
- உயரம் - 1.5 அடி
இந்த அளவுள்ள கூண்டுகளில் 4 முதல் 5 முயல்களை மூன்று மாத வயது வரை ஒன்றாக வளர்க்கலாம்
குட்டி ஈனும் முயல்களுக்கான கூண்டு
தாய் முயல்களுக்கான கூண்டுகள் வளரும் முயல்களுக்கான கூண்டின் அளவே இருக்க வேண்டும். இக்கூண்டுன் அடிப்பகுதி மற்றும் பக்கவாட்டுப்பகுதி 1.5 x 1.5 அங்குலம் என்ற அளவிலான (பற்றவைக்கப்பட்ட கம்பியால் ஆனது) வெல்டு மெஸ்ஸால் ஆனதாக இருக்கவேண்டும். இது இளங்குட்டிகள் கூண்டினை விட்டு வெளியே வராமல் தடுக்க உதவும்.
குட்டி ஈனும் பெட்டி
முயல்கள் குட்டி போடும் போது அமைதியான மற்றும் பாதுகாப்பான சூழ்நிலை அமைய குட்டி ஈனும் பெட்டி அவசியம். இப்பெட்டிகளை மரம் அல்லது துருப்பிடிக்காத இரும்புத்தகடு கொண்டு செய்யலாம். குட்டி ஈனும் பெட்டியினை குட்டி போடும் கூண்டினுள் வைக்கக்கூடிய அளவிற்கு செய்யவேண்டும்.
குட்டி ஈனும் பெட்டியின் அளவு
- நீளம் - 22 அங்குலம்
- அகலம் - 12 அங்குலம்
- உயரம் - 12 அங்குலம்
குட்டி ஈனும் பெட்டி
குட்டி ஈனும் பெட்டிகள் மேல் பகுதியில் திறக்கக்கூடியவாறு செய்யப்பட வேண்டும். அடிப்பகுதி முழுவதும் 1.5 x 1.5 அங்குலம் என்ற அளவிலான (பற்றவைக்கப்பட்ட கம்பியாலானதாக) வெல்டு மெஸ்ஸாலானதாக இருக்கவேண்டும். பெட்டியினுடைய நீளவாட்டுப்பகுதியில் பெட்டியினுடைய அடிப்பகுதியிலிருந்து 10 செ.மீ உயரத்தில் 15 செ.மீ விட்டம் உள்ள வட்டவடிவ ஓட்டை அமைக்க வேண்டும். இது குட்டி போட்ட தாய் முயல் உள்ளே போய் வரப்போதுமானது. மேலும் இந்த ஓட்டை பெட்டியினுடைய அடிப்பகுதியிலிருந்து 10 செ.மீ உயரத்தில் இருப்பதால் இளங்குட்டிகள் வெளியே வராமல் தடுக்கிறது.
புறக்கடை முயல் வளர்ப்பு கூண்டுகள்
இக்கூண்டுகள் தரை மட்டத்திலிருந்து 3 அல்லது 4 அடி உயரத்தில் அடிப்பகுதியில் தண்ணீர் உள்ளே போகாதவாறு செய்ய வேண்டும்.
தீவனம் மற்றும் குடிநீருக்கான உபகரணங்கள்
பொதுவாக இவை துருப்பிடிக்காத இரும்பினால் செய்யப்படுகின்றன. தீவன தொட்டிகள் "J" வடிவில் கூண்டின் முன்பகுதியில் வெளிப்புறமாக பொருத்தும் படி அமைக்கப்படவேண்டும். செலவினை குறைக்க சிறிய கிண்ணங்களை தண்ணீர் மற்றும் தீவனம் அளிக்கப் பயன்படுத்தலாம்
"J" வடிவ தீவன தொட்டிகள்
சிறிய தண்ணீர் கிண்ணம்
தீவன மேலாண்மை
முயல்கள் அனைத்து வகையான தானியங்களையும் (சோளம், கம்பு மற்றும் இதர தானியங்கள்) பயறு வகைகளையும் (கொண்டை கடலை) நன்றாக சாப்பிடும். மேலும் இலை, பயறு வகை தாவரங்களான குதிரை மசால், முயல் மசால், வேலி மசால், அகத்தி, தட்டைப்பயறு போன்றவற்றையும் சமையலறை கழிவுகளான காய்கறி கழிவுகள் மற்றும் கேரட், முட்டைகோஸ் போன்ற காய்கள் மற்றும் அவற்றினுடைய இலைகளை விரும்பி உண்ணும்.
முயல்களின் உணவில் இருக்கவேண்டிய சத்துக்கள்
தீவன மேலாண்மையில் கவனிக்க வேண்டியவை
- முயல்களின் பற்கள் வளர்ந்து கொண்டே இருக்கும். எனவே அவற்றை அடர் தீவனம் மட்டும் கொண்டு வளர்க்க முடியாது
- முயல்களுக்கு சரியான நேரத்தில் தீவனம் கொடுக்க வேண்டும். நேரம் தவறினால் முயல்கள் பரபரப்படைந்து உடல் எடை குறையும்
- முயல்கள் பகல் நேரங்களில் அதிக வெப்பநிலை காரணமாக தீவனம் சாப்பிடாமல் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும். மேலும் இரவு நேரங்களில் அவை சுறுசுறுப்பாக இருக்கும். எனவே பசுந்தீவனங்களை இரவு நேரங்களில் தீவனம் அளிப்பது முயல்கள் அவற்றை வீணாக்காமல் சாப்பிடுவதற்கு ஏதுவாகும். முயல்களின் இந்த பழக்கத்தால் அடர் தீவனத்தினை காலை நேரங்களில் அளிக்கலாம்
- அடர் தீவனத்தினை குச்சி தீவனமாக அளிக்கலாம். குச்சி தீவனம் கிடைக்காத இடங்களில் தூள் தீவனத்தினை தண்ணீரில் பிசைந்து சிறிய உருண்டைகளாக கொடுக்கலாம்
- ஒரு கிலோ எடையுள்ள முயலுக்கு நாள் ஒன்றுககு 40 கிராம் அடர் தீவனமும் 40 கிராம் பசுந்தீவனமும் கொடுக்கவேண்டும்
- முயல்களுக்கு பசுந்தழைகளை புதிதாக அளிக்க வேண்டும். வாடிய தழைகளை முயல்கள் விரும்பி உண்ணாது. தரையில் பசுந்தழைகளை போடாமல் பக்க வாட்டில் சொருகி வைப்பது முயல்கள் அவற்றை நன்கு சாப்பிடும்
- சுத்தமான சுகாதாரமான குடிநீர் முயல்களுக்கு 24 மணி நேரமும் கிடைக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்
முயல்களின் இனப்பெருக்க மேலாண்மை
இனப்பெருக்க வயது
- பெண்முயல் - 5-6 மாதங்கள்
- ஆண் முயல்- 5-6 மாதங்கள் (ஆண்முயல்களும் 5-6 மாதங்களில் பருவத்தினை அடைந்தாலும் ஒரு ஆண்டிற்குப் பிறகு இனவிருத்திக்கு பயன்படுத்தினால் அதிகப்படியன தரமான குட்டிகள் கிடைக்கும்source:http://www.indg.in/agriculture/on-and-off-farm-enterprises/ooTM-of7s1
விவசாயிகள் நிலை குறித்து பேசாதோர் யாரும் இல்லை... ஆனால் பேசும் அவர்களே விவசாயிகளை மதிக்கிறார்களா? அதுதான் இல்லை.. ஏன் இந்த நிலை.. ? இந்த நிலைப்பாடு மாற என்ன செய்யலாம்... இங்கே விவசாயிகள் மதிக்கப்படுகிறார்களா எனபது மட்டும் அல்ல பேச்சு... அவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள்.... இதற்கு நம்மால் முடிந்த அளவு செயல் வடிவில் என்ன செய்ய முடியும்,,, சொல்லுங்கள்........
Thursday, February 16, 2012
முயல் வளர்ப்பு
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
muyalai yengu mothama ha virkalam
Post a Comment