1509 - போர்த்துக்கலுக்கும் துருக்கிக்கும் இடையில் இந்தியாவின் தியூ என்ற இடத்தில் கடற்சமர் மூண்டது.
1790 - வீரபாண்டிய கட்டபொம்மன் 47 வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
1848 - கலிபோர்னியாவில் தங்கம் தேடுவதற்காக சீனர்கள் கப்பலில் சான் பிரான்சிஸ்கோ வந்திறங்கினார்கள்.
1880 - முதலாவது மின்சார வீதி விளக்குகள் இந்தியானாவில் நிறுவப்பட்டன.
... 1897 - பென்சில்வேனியாவின் தலைநகர் ஹரிஸ்பேர்க் தீயினால் அழிந்தது.
1901 - விக்டோரியா மகாராணியின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன.
1908 - 60 ஆண்டுகளுக்கு ஒரு தடவை இடம்பெறும் இந்துக்களின் சிறப்பு நாளான அருத்தோதயம் நிகழ்வு.
1933 - ஜெர்மனியின் நாடாளுமன்றத்தை ஹிட்லர் கலைத்தார்.
1946 - ஹங்கேரியக் குடியரசு அமைக்கப்பட்டது. 1959 - அகில இந்திய காங்கிரசின் தலைவரானார் இந்திரா காந்தி.
1971 - உகாண்டாவில் புரட்சி ஏற்படுத்திய சர்வாதிகாரி இடிஅமின் தனது கொடுங்கோல் ஆட்சியைத் தொடங்கினார்.
1989 - ஒன்பது ஆண்டு கால முற்றுகையின் பின்னர் கடைசி ரஷ்யத் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறின.
1989 - செய்மதித் தொலைக்காட்சிச் சேவை ஸ்கை தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1998 - அமெரிக்க வரலாற்றில் முப்பது ஆண்டுகளில் முதல் முறையாக சம நிலையான வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்தார் அதிபர் கிளிண்டன்.
No comments:
Post a Comment