1509 - போர்த்துக்கலுக்கும் துருக்கிக்கும் இடையில் இந்தியாவின் தியூ என்ற இடத்தில் கடற்சமர் மூண்டது.
1690 - அமெரிக்காவில் முதன்முதலாக பணநோட்டுக்கள் மசாசூசெட்ஸில் புழக்கத்தில் விடப்பட்டன.
1783 - ஐக்கிய அமெரிக்காவின் விடுதலையை ஸ்பெயின் அங்கீகரித்தது.
1919 - சோவியத் படையினர் உக்ரேனைப் பிடித்தன.
... 1930 - வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது.
1945 - ஐக்கிய அமெரிக்காவின் 1,000 விமானங்கள் பெர்லின் மீது குண்டுகளை வீசின.
1966 - சோவியத் விண்கலம் லூனா 9 சந்திரனில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் என்ற பெருமையைப் பெற்றது.
1969 - பாலஸ்தீன தேசிய காங்கிரஸ் யாசர் அராஃபத்தை பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவராக நியமித்தது.
1984 - சாலஞ்சர் விண்ணோடத்தில் சென்ற விண்வெளி வீரர்கள் புரூஸ் மக்காண்ட்லெஸ், ராபர்ட் ஸ்டுவேர்ட் ஆகியோர் முதன் முதலாக விண்வெளியில் சுயாதீனமான நிலையில் நடந்து சாதனை படைத்தார்கள்.
1989 - பராகுவேயில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து 1954 இலிருந்து ஆட்சியிலிருந்த சர்வாதிகாரி அல்பிரெடோ ஸ்ட்ரோயெஸ்னர் பதவியிழந்தார்.
2006 - அல் சலாம் 98 என்ற எகிப்திய பயணிகள் கப்பலொன்று செங்கடலில் 1,721 பேருடன் மூழ்கியதில் 435 பேர் மட்டும் மீட்கப்பட்டனர்.
No comments:
Post a Comment