கொங்கு மண்டலத்தை வளப்படுத்திய பெருமை முழுக்க முழுக்க மேற்குத் தொடர்ச்சி மலைக்கு உரித்தானது. குறிப்பாக, அதன் அடர்த்தியான சோலைக் காடுகள்! ''சோலைக் காடுகளுக்கு என்று ஒரு முக்கியத்துவம் உண்டு. தென்னிந்திய நதிகளை உற்பத்தி செய்வதே சோலைக் காடுகள்தான்!'' என்று நதிமூலத்துடன் ஆரம்பிக்கிறார் கோவை சுற்றுச்சூழல் அமைப்பான 'ஓசை’யின் தலைவர் காளிதாசன்.
''கோவை மண்டலத்தில் ஓடும் காவிரியின் துணை நதிகளான சிறுவாணி, பவானி, அமராவதி, நொய்யல் ஆகியவையே கொங்கு மண் வளத்துக்குக் காரணம். கிணறு, ஏரிப் பாசனம் குறைந்து, இன்று நமது வயல்கள் ஆற்றையே முழுக்க நம்பி இருக்கின்றன. வட இந்தியாவில், சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா, யமுனை போன்ற நதிகளின் தண்ணீர் வரத்துக்கு இமயத்தின் பனியும் முக்கியக் காரணம். ஆனால், தென்னிந்தியாவில் எந்தப் பனி மலை இருக்கிறது? அப்படியானால் இங்கு பாயும் நதிகள் எங்கு இருந்து உற்பத்தி ஆகின்றன? நதிமூலம் பார்க்கக் கூடாது என்பார்கள். ஆனால், காலத்தின் தேவை கருதி நதிமூலம் பார்க்கத்தான் வேண்டும்.
தென் இந்திய நதிகளுக்கு மூலமே மேற்குத் தொடர்ச்சி மலைதான். 1,500 மீட்டர் உயரத்துக்கு மேல் உள்ள இந்த மலைக் குன்றுகளின் பல பகுதிகள், இன்னும் மனித வாடை படாதவை. அந்தக் குன்றுகளின் உச்சியில் படர்ந்து பரவி இருக்கிறது பசும் புல்வெளி. பொதுவாகத் தண்ணீரின் இயல்பு மேட்டில் இருந்து பள்ளத்தை நோக்கிப் பாய்வதுதான். ஆனால், இக் குன்றின் உச்சியில் இருக்கும் புல்வெளி மீது நாள் கணக்கில் அடைமழை பெய்தாலும் தண்ணீர் முழுக்க ஓடி வடிந்துவிடாது. பெய்யும் மழைநீரை பஞ்சுபோல புல்வெளி தனக்குள் தேக்கி வைத்துக்கொள்ளும்.
அடித்து ஊற்றும் மழை நீரை குறைந்தது ஒரு மாதத்துக்கேனும் அந்தப் புல்வெளி தக்கவைத்துக் கொள்ளும். இந்தப் புல்வெளிகளை ஒட்டி ஆங்காங்கே ஏக்கர் கணக்கில் சோலைக் காடுகள் இருக்கும். இவற்றை திருவள்ளுவர் தனது குறளில் 'அணி நிழல் காடுகள்’ என்பார். இந்தக் காட்டின் மரங்கள் தனித்தன்மை படைத்தவை. உயர்ந்து வளராமல் அடர்ந்து வளரும் தாவரப் போர்வை இது. சூரிய ஒளி உள்ளே புகாது. இக் காட்டின் மண்ணும் தனித்தன்மை வாய்ந்தது. மரங்களின் இலை, தழை விழுந்து பறவை, விலங்குகளின் எச்சங்கள் சேர்ந்து, நுண்ணுயிர்களால் உருவாக்கப்பட்ட மண் இது. இந்த அளவுக்கு வளமிக்க மண், அரை இஞ்ச் அளவுக்கு உருவாக 1,000-ம் ஆண்டுகளாகும். பல அடுக்குகளாக இங்கு அந்த மண் படிந்துள்ளது. இவை பல லட்சம் ஆண்டுகளின் சேகரிப்பு!
புல்வெளிகளில் இருந்து திவலைத் திவலையாகக் கசிகிற தண்ணீர் மற்றும் இந்தக் காடுகளில் பெய்யும் மழை நீர் ஆகியவற்றை இந்த மண் வெளியே விடாமல், வெள்ளப் பெருக்கு ஏற்படுத்தாமல் அப்படியே உறிஞ்சிக்கொள்ளும். இந்த மரங்களும் தாவரங்களும் தங்களுக்காக 5 சதவிகித தண்ணீரை மட்டுமே எடுத்துக்கொள்கின்றன. மண்ணில் தேங்கிய தண்ணீர் கீழே இருக்கும் மலைப் பாறை இடுக்குகளுக்கு வருகிறது.
அங்கிருந்து ஊற்றுகளாகக் கசிகிறது. சிற்றோடைகள் உருவாகி, அவை ஒன்றுசேர்ந்து ஆறுகளாகின்றன. சோலைக் காடுகள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ அங்கெல்லாம் வற்றாத ஆறுகள் ஓடுகின்றன. தமிழகத்தின் மழை நாட்கள் 35 முதல் 50 நாட்கள் மட்டுமே. மழை பெய்யும்போது மட்டுமே ஓடினால் அதற்கு பெயர் ஆறு அல்ல... வடி கால்வாய்! ஆண்டு முழுவதும் ஓடினால்தான், அது ஆறு. அப்படி, சிறுவாணி, பவானி, அமராவதி, நொய்யல் ஆகிய ஆறுகளை உற்பத்தி செய்பவை இந்த சோலைக் காடுகள். அந்த ஆறுகளை நம்பித்தான், கொங்கு மண்டலத்தின் வயல் வெளிகள் காத்திருக்கின்றன. அதனால்தான் சொல்கிறேன், சோலைக் காடுகளுக்குப் பின்னால் இருக்கிறது நம் சோற்றின் வாசம்!''

No comments:
Post a Comment