Monday, June 11, 2012

கிவி பழத்தின் சிறப்பு!

`கிவி’ பழத்தின் சிறப்பு!


வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் `கிவி' பழம், தற்போது நம்மூரிலும் பெரிய குளிர்பதன காய்கறிக் கடைகளில் கிடைக்கிறது. `சீனத்து நெல்லிக்கனி' என்று அழைக்கப்படும் `கிவி', மருத்துவக் குணம் நிறைந்தது என்று ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
`கிவி'யின் மருத்துவக் குணங்கள் பற்றிப் பார்ப்போம்...
`கிவி' பழத்தில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவான அளவில் உள்ளது. எனவே, உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் இக்கனியைப் பயமின்றி உண்ணலாம்.
`கிவி'யில் `வைட்டமின் சி' அதிக அளவில் உள்ளது. நோயைத் தடுக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது.
நம் உடம்பில் கட்டுப்பாடில்லாமல் திரியும் `ராடிக்கிள்கள்'தான் பல்வகையான சிதைவு நோய்களுக்கும், செல்களின் சிதைவுக்கும் காரணமாக அமைகின்றன. இத்தகைய `ராடிக்கிள்களின்' கடும்தன்மையை அழித்து, நோயின்றி நம்மைக் காக்கும் ஆற்றல் கிவி கனிக்கு இயற்கையாக உள்ளது.
முதுமையின் காரணமாக ஏற்படும் சிதைவு நோய்களான கண் புரை, விழித்திரைச் சிதைவு நோயைத் தடுக்கிறது.
இதயத் துடிப்பில் சீரற்ற நிலையைத் தடுக்கத் துணைபுரிகிறது. இதயத்தின் துடிப்பைக் கட்டுப்படுத்துகிறது. உடலில் பொட்டாசியச் சத்து குறைந்தால் இதயத் துடிப்பில் சீரற்ற நிலை ஏற்படக்கூடும். கிவி பழத்தில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், இதயத் துடிப்பைச் சீராக வைக்கிறது. மாரடைப்பையும் தடுக்கிறது.

No comments: