Friday, June 1, 2012

இயற்கை முறையில் கறிவேப்பிலை சாறு தயாரித்தல்

முத்தான கீரை வகைகளில் முக்கியமான கீரையாக கருதப்படுவது கறிவேப்பிலை.
 
 கீரைகளின் தாய் என கறிவேப்பிலையை கருதலாம். இக்கீரை நறுமணமும் மருத்துவ குணங்களும் நிறைந்தது. இக்கீரை எல்லாக் காலங்களிலும் எளிதில் கிடைக்கக்கூடியது. சமையலில் சேர்த்து சாப்பிடும்போது நாம் மிகவும் உதாசீனமாக தூக்கி எறிந்துவிடுகிறோம். கறிவேப்பிலையை சமையலில் சிதைக்காமல் அப்படியே சாப்பிட பித்தக் கோளாறு, வயிற்றுவலி, ஜீரணசக்தி கொடுத்து, ரத்தம் சுத்தமாக உதவுகிறது. கறிவேப்பிலைøயில் புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களைக் கொண்டது.
சிறு வயதில் ஏற்படும் இளநரையை மாற்ற கறிவேப்பிலையை சமைக்காமல் சாப்பிடலாம். பார்வைக் கோளாறுகள் நீக்கி கண்கள் பிரகாசமாகும். முக வசீகரம் தரக்கூடிய தலைமுடியை கருமையாகவும், அடர்த்தியாகவும் வைக்கக்கூடியது. முடி உதிர்வை தடுக்கும் தன்மை கொண்டது. தொடர்ந்து 21 நாட்கள் காலை மாலை இருவேளை சாப்பிட நீரிழிவு குறையும். மூல நோய், வெண்குஷ்டம், தோல் வியாதிகள் நீங்க கறிவேப்பிலை ஒரு முத்தான சஞ்சீவிக் கீரையாகும். உயர் ரத்த அழுத்தம் மற்றும் மூட்டு வலியைப் போக்கும் உன்னதமான
கீரையாகும்.
தயாரிக்கும் முறை: ஒரு கைப்பிடியளவு கறிவேப்பிலையை எடுத்து சுத்தமாக கழுவி, மிக்சி அல்லது அம்மியில் அரைத்து ஒரு டம்ளர் நீர் சேர்த்து வடிகட்டி, தேன், பனங்கற்கண்டு அல்லது பேரீட்சை ஏதேனும் ஒன்றுடன் சேர்த்து கலந்து சாப்பிடலாம். தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். காபி, டீக்கு பதிலாக அருந்த மிகவும் ஏற்ற பானம்.
சர்க்கரையை நாம் சேர்த்துக் கொள்வதால் நமது உடலிலுள்ள வைட்டமின் சத்துக்களை அது உறிஞ்சிவிடுகிறது. அதனை ஈடுசெய்ய மேற்கூறிய கறிவேப்பிலை நீர் சாப்பிடலாம். நமது அழகான முடியையும் கண்களையும் பேணிக்காக்கும் அற்புதமான கீரை கறிவேப்பிலையே.

2 comments:

Anonymous said...

all of the articles are very useful
please continue the same...
thanks
babu
contactbabu@yahoo.com

please can i get your e-mail?

Anonymous said...

very good information.