Friday, June 8, 2012

காவிரி, டெல்டா பகுதிகள் நூற்றாண்டுகளில் கடலில் மூழ்கும் அபாயம்

புவி வெப்பமயமாவதால், கடல்நீர் மட்டம் உயர்ந்து காவிரி  டெல்டா பகுதிகள், மற்றும் கிழக்கு கடற்கரைப் பகுதி கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக ஐ நா ஆய்வுக்குழு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
       கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்டதை தொடர்ந்து, 120 அமைப்புகளைச் சேர்ந்த, 220 விஞ்ஞானிகள், நாகப்பட்டினம், கொச்சி உள்ளிட்ட தமிழ் நாடு, இநதிய  கடலோரங்களில் ஆய்வு நடத்தி ஐநா வில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

      அதன்படி, 1990 முதல், 2100 ஆண்டுவரை கடலின் நீர்மட்டம் 90 சென்டிமீட்டர் உயரும்  ஆபத்து உள்ளது எனவும், இதனால் கடலோர மாவட்டங்களின் நிலத்தடி நீர் உப்புக் கரிக்கும் எனவும், கடலோர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படும் எனவும் அந்த அறிக்கையில் சமர்ப்பிக்கப் பட்டிருக்கிறது. இதனால் காவிரி டெல்டா பகுதிகள் மட்டுமின்றி, கங்கை, மகாநதி உள்ளிட்ட இநதிய கடலோர மாவட்டங்கள் பாத்கிக்கப் படும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகளின் ஆய்வறிக்கை கூறுகிறது

No comments: