மனித ரத்தத்திலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்து சாதனை

அமெரிக்காவைச் சேர்ந்த மைக் தாம்ப்சன் என்பவர் சற்று வித்தியாசமாக மனித ரத்தத்தில் எரியும் விளக்கை வடிவமைத்துள்ளார்.
அந்த விளக்கினுள் ரசாயனங்களை வைத்துள்ளார். அந்த கண்ணாடி விளக்கை எரிய
வைக்க அதன் வாய்ப் பகுதியை உடைத்து அந்த துண்டைக் கொண்டு கையைக் கீறி
ரத்தத்தை அந்த ரசாயனங்களில் விட வேண்டும்.
ரத்தம் ரசாயனங்களுடன் கலந்த பிறகு விளக்கு நீல நிறத்தில் பிரகாசிக்கிறது.
இந்த விளக்கை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். மக்கள் மின்சாரத்தின்
அருமை தெரியாமல் கண்டபடி வீணடிப்பதை உணர்த்தவே இந்த விளக்கை
வடிவமைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மனித உடலில் இருந்து ரத்தம் அதிகளவில் வெளியேறினால் அது எப்படி உயிருக்கு
ஆபத்தோ, அதே போன்று தான் மின் சக்தியை அதிகம் பயன்படுத்துவது
சுற்றுச்சூழலுக்கு ஆபத்து என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இது குறித்து அவர் தனது இணையதளத்தில் மேலும் கூறுகையில், ஒரு முறை மட்டுமே
பயன்படுத்தும் வகையில் இந்த விளக்கு இருப்பது, விளக்கு எப்பொழுது தேவையோ
அப்பொழுது மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று மக்களை சிந்திக்க வைக்கும்.
அவர்கள் எப்படி அக்கறையின்றி மின்சக்தியை வீணடிக்கிறார்கள் என்பதும்
புரியும். சுவிட்சை போட்டால் லைட், பேன் உள்ளிட்ட மின்சாதனங்கள் வேலை
செய்வதால் மின்சக்தி எங்கிருந்து வருகிறது என்பதைப் பற்றி மக்கள்
சிந்திப்பதே இல்லை என்று கூறியுள்ளார்.



No comments:
Post a Comment