Saturday, June 30, 2012

முதுகுவலியை தவிர்க்க 10 சிறந்த வழிகள்

முதுகுவலியை தவிர்க்க 10 சிறந்த வழிகள்

முதுகுவலி வராமல் தடுக்க டிப்ஸ்

1. எப்போதும் சுறுசுறுப்போடு இருப்பது, பொதுவான உடற்பயிற்சிகள் செய்வது. (உதாரணமாக) நடப்பது, நீச்சல் அடிப்பது, சைக்கிள் ஓட்டுவது.

2. தாழ்ந்த நாற்காலியில் அதிக நேரம் அமர வேண்டாம்.

3. உறங்கும் போது கடினமான மெத்தையை உபயோகிக்கவும் (அல்லது) தரையில் உறங்கவும்.

4. நான்கு சக்கர வாகனம் ஓட்டும்போது இருக்கையை உங்கள் உயரத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளவும், அதிக தூரம் பயணிக்கும் போது பிரேக் மெதுவாக அடிக்கவும்.

5. கணினியில் அதிக நேரம் வேலை பார்ப்பவர்கள் தங்கள் இருக்கையை சரிசெய்து, தனது முழு முதுகும் இருக்கையில் (நிமிர்ந்தவாறு) இருக்கும்படி செய்யவும்.

6. அதிக எடையை தூக்கும் போது உங்கள் மார்போடு அணைத்தபடி தூக்கவும்.

7. அதிக நேரம் முதுகு திரும்பியவாறு வேலை செய்ய வேண்டாம்.

8. அதிக நேரம் நின்று கொண்டே பயணிக்க வேண்டாம்.

9. முதுகுவலி எடுத்தால், நீண்ட நேரம் அமருவதை தவிர்க்கவும், 30 நிமிடங்களுக்கு ஒருமுறை எழுந்து நில பொதுவான பயிற்சிகள் செய்யவும்.

கீழ்க்கண்ட ஏதேனும் அறிகுறிகள் இருப்பின் உடனடியாக (பிசியோதெரபிஸ்டை) அணுகவும்

1. தொடர்ந்து 5 நாட்களுக்கு மேல் முதுகு வலி இருந்தால்.

2. வலி கால்களுக்கு பரவுதல், கால்களுக்கு பரவுதல், கால்களில் உணர்ச்சியின்மை (அல்லது) எரிச்சல்.

3. குனிந்தால் பளிச்சென்று வலி பரவுதல்.

4. நீண்ட நேரம், நின்றால், அமர்ந்தால் (அல்லது) நெடுந்தூரம் பயனித்தல் முதுகுவலி வருவது.

கடலுக்குள் இருந்த இமயமலை!

கடலுக்குள் இருந்த இமயமலை!

சில உண்மைகளை நம்மால் எளிதில் நம்ப முடியாது. கற்பனையோ, கட்டுக்கதையோ என்று யோசிக்கத் தோன்றும்.
உதாரணமாக, இன்று உலகத்திலேயே உயர்ந்த மலையாக விளங்கும் இமயமலை ஒரு காலத்தில் ஆழ்கடலுக்குள் இருந்தது என்றால் யாராவது நம்புவார்களா? ஆனால் அதுதான் உண்மை.
நமது உலகம் தோன்றும்போது அது இப்போது நாம் காணும் தோற்றத்தில் இல்லை. இப்போது கடல்கள் சூழ்ந்து காணப்படும் ஐந்து கண்டங்களும் அப்போதே இருந்தன. ஆனால் ஒரு வித்தியாசம். அவை இப்போது இருப்பதைப் போல் ஐந்து கண்டங்களாக இல்லை. உலகத்தின் சிறுபகுதி வெறும் நிலத்திட்டாகவும், பெரும்பகுதி நீரால் சூழப்பட்டதாகவும் இருந்தது.
ஆனால் அந்த நிலத்திட்டு நிலையாக இருக்கவில்லை. எப்போதும் நகர்ந்துகொண்டே இருந்தது. அதை கண்டங்களின் நகர்வு என்கிறார்கள். அதற்குக் காரணம், பூமி ஒரே திடப்பொருளாக இல்லாததுதான்.
பூமி முக்கியமாக நான்கு அடுக்குகளாகக் காணப்படுகிறது. பூமியின் மையத்தில் கனமான திடப் பொருளால் ஆன மையப் பகுதி உள்ளது. அதைச் சுற்றி திரவ நிலையில் உள்ள புறமையம் இருக்கிறது. அந்தப் புறமையத்தைச் சுற்றி ரப்பர் போன்ற `மேன்டில்' பகுதி உள்ளது. அந்த மேன்டில் மீள்தன்மை உடையது. கிட்டத்தட்ட `பாகு' நிலையில் இருக்கிறது. இந்த மேன்டிலின் மீதுதான் நாம் இருக்கும் நிலப்பகுதி மிதந்து கொண்டிருக்கிறது.
நம்முடைய நிலப்பகுதி ஒரே துண்டாக இல்லாமல் பல துண்டுகளாக இருப்பதால் அவை மேன்டிலின் மீது நகர்ந்துகொண்டே இருக்கின்றன. இதனால் ஒரு காலத்தில் நிலமாக இருந்தபகுதி இப்போது கடலாகவும், கடலாக இருந்த பகுதி இப்போது நிலமாகவும் இருக்கின்றன. அதாவது பூமியின் முகத்தோற்றம் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகிறது.
நமது தமிழ்நாட்டுக்குத் தெற்கே லெமூரியாக் கண்டம் என்ற ஒரு நிலப்பரப்பு இருந்தது என்றும், பின்னர் அதை கடல்கொண்டுவிட்டது என்றும் படித்திருக்கிறோம். அதற்கு இலக்கியங்களில் பல சான்றுகள் உள்ளன.
இதேபோல் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் ஈரானும், சீனாவும் ஒரே கடலால் இணைக்கப்பட்டிருந்தன. ஈரான், சால்ட் ரேஞ்ச், ஸ்பிடி, காஷ்மீர், இந்தோ- சீனா, சீனா ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் இநëதப் பகுதிகள் அனைத்தும் ஒரே கடலால் இணைக்கப்பட்டிருந்தன என்பதை நிரூபித்திருக்கின்றன. லடாக், நேபாளம் ஆகிய பகுதிகள் கூட கடலாகத்தான் இருந்திருக்கின்றன.
இந்தப் பகுதிகள் எல்லாம் கடலாக இருந்தன என்று எதை வைத்துக் கூறுகிறார்கள்? பூமியின் வரலாற்றைப் பல்வேறு காலகட்டங்களாகப் பிரித்திருக்கிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் எந்தெந்தப் பகுதியில் என்னென்ன விலங்குகள் வாழ்ந்தன என்பதையும் கண்டறிந்துள்ளனர்.
பழங்காலத்தில் வாழ்ந்த விலங்குகளில் சில பூமிக்கடியில், பாறைகளில் புதைபடிவங்களாகப் பாதுகாக்கப்பட்டன. பூமியைத் தோண்டி ஆராய்ச்சிகளை மேற்கொண்டால், அங்கு இயற்கையால் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் விலங்குகளின் புதைபடிவங்களைக் காண முடியும். இந்தப் புதைபடிவங்கள் பூமியின் வரலாற்றையும், உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றியும் தெரிந்துகொள்வதற்கு மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன.
இவ்வாறு இமயமலைப் பகுதியைத் தோண்டி ஆராய்ச்சிகள் நடத்தியபோது அங்கு கடல்வாழ் விலங்குகளின் புதைபடிவங்கள் காணப்பட்டன. அந்தப் புதைபடிவங்களில் காணப்படும் கடல்வாழ் விலங்குகள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் கடலில் வாழ்ந்தவை. எனவே பல கோடி ஆண்டுகளுக்கு முன் இந்தப் பகுதி கடலாக இருந்திருக்கும் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்தனர். இந்த முடிவை வேறு பல சான்றுகளும் உறுதிப்படுத்துகின்றன.

விண்வெளியில் நிகழப் போகும் `மெகா’ மோதல்!


விண்வெளியில் நிகழப் போகும் `மெகா’ மோதல்!

நமது பூமி உள்ளிட்ட கிரகங்கள் அடங்கிய பால்வீதி மண்டலம், தனது அண்டை வீடான `ஆண்ட்ரமீடா கேலக்சி'யுடன் மோதப் போகிறது. இதனால் சூரியன் உள்பட நட்சத்திரங்கள் எல்லாம் அங்குமிங்கும் வீசியெறியப்படப் போகின்றன. பயப்படாதீர்கள், இதெல்லாம் நடப்பதற்கு 400 கோடி ஆண்டுகள் ஆகும்!
அமெரிக்காவின் பால்டிமோரில் உள்ள ஸ்பேஸ் டெலஸ்கோப் சயன்ஸ் இன்ஸ்டிட்யூட் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறும் தகவல் இது.
மேற்கண்ட இரு பிரபஞ்ச மண்டலங்களும் நேருக்கு நேராக மோதிக் கொண்டாலும், பூமியும், சூரியக் குடும்பமும் சேதம் அடையாது. மாறாக தற்போது இவை இருக்கும் இடங்களில் இருந்து இடப்பெயர்ச்சி அடையலாம். சூரியன் ஏதோ ஒரு மூலைக்கும், நட்சத்திரங்கள் வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைக்கும் தூக்கியெறியப்பட அதிக வாய்ப்பில்லை என்றும் விண்வெளி விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
``பல நூறு கோடி ஆண்டுகளுக்குப் பின் விண்வெளியில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்று ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஊகமாகப் பேசப்பட்டு வந்தது. தற்போதுதான் நாம் ஒரு தெளிவான முடிவுக்கு வந்திருக்கிறோம்'' என்கிறார், மேற்கண்ட விண்வெளி ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த சாங்மோ டோனி சோன்.
ஆண்ட்ரமீடா கேலக்சி, பால்வீதி மண்டலத்துடன் கடைசியில் மோதியபிறகு, மேலும் இருநூறு கோடி ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு மண்டலங்களும் இணைந்து ஒரே மண்டலமாகும் என்றும் சோன் கூறுகிறார்.
பால்வீதி மண்டலம், ஆண்ட்ரமீடா கேலக்சி இடையிலான நேருக்கு நேரான மோதல் எப்படியிருக்கும் என்பது குறித்த படங்களை `நாசா' வெளியிட்டிருக்கிறது.
இந்த விண்வெளித் தீபாவளியைக் காண நாம் இருக்கப் போவதில்லை என்பதுதான் வருத்தமாயிருக் கிறது!

27 நட்சத்திரங்களும், மரங்களும்;

27 நட்சத்திரங்களும், மரங்களும்;
---------------------------------------------------
ஒருவர் பிறந்த நாள் தேதி, நேரம், விநாடி அடிப்படையிலும், பஞ்சாங்க அடிப்படையிலும் ஜாதகம் உருவாக்கப்படுகிறது. 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் அதற்குரிய எண், நிறம், கல், அதிதேவதை, பரிகார மரம் என அனைத்தும் உண்டு அதுபோல் மரங்களும் உண்டு

27நட்சத்திரத்திற்குரிய மரங்கள்அஸ்வதி - எட்டிமரம், பரணி-நெல்லி, கார்த்திகை - அத்தி, ரோகிணி - நவ்வல், மிருகசீர்ஷம் - கருங்காலி, திருவாதிரை - செங்கருங்காலி, புனர்பூசம் - மூங்கில், பூசம் - அரசு, ஆயில்யம் - புன்னை, மகம் - ஆல், பூரம்- பலாசம், உத்திரம் - அலரி, ஹஸ்தம் - அத்தி, சித்திரை - வில்வம், ஸ்வாதி - மருது, விசாகம் - விளா, அனுஷம் - மகிழ், கேட்டை - பிராய், மூலம் - மரா, பூராடம் - வஞ்சி, உத்திராடம் - பிலா, திருவோணம் - எருக்கு, அவிட்டம் - வன்னி, சத்யம் - கடம்பு, பூரட்டாதி - தேவா, உத்திரட்டாதி - வேம்பு, ரேவதி- இலுப்பை என 27 நட்சத்திரங்களுக்குரிய மரங்களாகும்.

அந்தந்த நட்சத்திரகாரர்கள்,அவர்களுக்குடைய மரங்களை நட்டால்,அவர்களுக்குடைய கர்மவினைகள் தீரும்.ஜாதகத்தில் தோசங்கள் இருந்தால் குறையும்.

பொதுவாகவே மனிதர்களுக்கு சிலரை பிடிக்கும்,பலரை பிடிக்காமல் போகும்.அவர்கள் செய்யும் செயல்களோ,சேவைகளோ பெரும்பாலும் சுயநலத்தின் வெளிப்பாடு இருக்கும்.ஆனால் மரமோ நல்லவர்கள்,தீயவர்கள் அனைவருக்கும் காற்றையும்,நிழலையும் தருகிறது.பறவைகளுக்கு புகலிடமாக இருக்கிறது.எத்தனையோ மனங்களை குளிரவைக்கிறது.ஆதலால் அந்தந்த நட்சத்திரகார்கள் நடும் மரம் மேலும்,மேலும் புண்ணியத்தை கொடுக்கும்.

Slug caterpillar தாக்குதலை தென்னையில் கட்டுபடுத்துவது எப்படி

Slug caterpillar தாக்குதலை தென்னையில் கட்டுபடுத்துவது எப்படி
=================================================

தமிழ் நாட்டில் கரூர் மாவட்டத்தில் Slug Caterpillar பூச்சியின் தாக்குதல் தென்னையில் அதிகம் ஆக இருக்கிறது

இந்த பூச்சி பச்சை பிரவுன் கலரில் இருக்கும். முன்னால் அகலமாகவும்பின்னால் மெலிதாகவும் இருக்கும்

உடல் முழுவதும் சிறிய மயிர்கள் இருக்கும். முதிர்ந்த லார்வாக்கள் இலைகளை தின்னும்.

லார்வாக்கள் ஒரு வெள்ளை கலர் கூட்டை (cocoon) இலைகளுடன் அமைக்கும்

கூட்டில் இருந்து இரண்டு வாரம் பின்பு பிரவுன் கலர் பூச்சிகள் வெளி வரும்.

உயரமான தென்னை மரங்களையே இந்த பூச்சி தாக்கிறது.

தாக்கப்பட்ட இலைகள் எரிந்தது போன்ற அமைப்பு இருக்கும்


தடுக்கும் முறைகள்:
----------------------------
தாக்கப்பட்ட இலைகளை பிரித்து எடுத்து அழிதல்

Monocrotophos (10ml + 10ml) மருந்தை வேரில் கொடுத்தல்

தென்னை பறிப்பதற்கு 45 நாட்கள் முன் மருந்து அடிக்க வேண்டும்

மேலும் விவரங்களுக்கு: திரவியம், கரூர், மொபைல்: 09488967675

நன்றி: ஹிந்து

எலுமிச்சை சாகுபடி.....!

எலுமிச்சை சாகுபடி.....!
=====================n

தமிழகத்தில் பயிராகும் பழ மரங்களில் எலுமிச்சை மிகவும் முக்கியமானது. இது பெரும்பாலான மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படுகிறது.

மா, வாழை ஆகியவற்றிற்கு அடுத்தாற்போல் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுவது எலுமிச்சை தான்.

எலுமிச்சை பலவிதமான வெப்பநிலைகளில் பயிர் செய்யப்படுகிறது.

இந்தியாவில் வெப்பம் மிகுந்த தென் மாநிலங்களில் எலுமிச்சை நன்றாக வளர்ந்து நல்ல பலனைத்தருகிறது.

எலுமிச்சையை கடல் மட்டதிலிருந்து ஆயிரம் மீட்டர் உயரம் வரை சாகுபடி செய்யலாம்.பணி உறையும் பகுதிகளில் இதனை சாகுபடி செய்ய இயலாது.

வடிகால் வசதி:
===========

பலவகையான குணங்களை கொண்ட மண்ணில் எலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது.

களிமண் நிலங்களிலும் தண்ணீர் எளிதில் வடியாத நிலங்களிலும் இதனை சாகுபடி செய்ய முடியாது.

மேல் மண் ஆழமில்லாமலும் அடியில் பாறையுடன் இருந்தால் மரம் சில ஆண்டுகளில் நலிந்து இறந்து விடும்.

எலுமிச்சை சாகுபடி செய்யும் தோட்டத்தில் தகுந்த வடிகால் வசதி அமைத்தல் அவசியம்.

எலுமிச்சை செடி வளர்ச்சிக்கு மண்ணில் கார அமிலத்தன்மை இருத்தல் சிறந்தது.

நல்ல வடிகால் வசதியுள்ள இரு மண் பாங்கான குறுமண் நிலம் ஏற்றது.
பெரும்பாலும் விதையில் இருந்து வரும் கன்றுகளை நடுவதற்கு பயன்படுத்த வேண்டும்.

இலை மொட்டு ஒட்டுதல், பதியன்கள் செய்தல் ஆகிய முறைகளிலும் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

மொட்டுக்கட்டுதலினால் உண்டாகும் செடிகள் விரைவிலேயே பலன் தரும். பழங்களும் ஒரே சீரான அளவுடன் தரமுள்ளதாக இருக்கும்.

ஓராண்டு வயதுடைய கன்றுகள் நடவுக்கு சிறந்ததாகும்.

ரகங்கள்:
=======
பி.கே.எம் -1, சாய்சர்பதி, தெனாலி, விக்ரம், ப்ரமாலினி போன்றவை எலுமிச்சையில் உள்ள உயர் விளைச்சல் ரகங்களாகும்.

இவற்றில் பி.கே.எம்-1, விக்ரம் ஆகிய ரகங்கள் தமிழகத்திற்கு உகந்தவையாகும்.

எனவே விவசாயிகள் நல்ல மகசூல் தரக்கூடிய எலுமிச்சை ரகங்களை தேர்ந்தெடுத்து, சாகுபடி செய்து அதிக அளவு மகசூலினை பெறலாம்.

தகவல்: தோட்டக்கலைத்துறை, தஞ்சாவூர்.

நன்றி: M.S சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்

ஈரோட்டில் தென்னையில் மர்மநோய்..?

ஈரோட்டில் தென்னையில் மர்மநோய்..?
==============================
ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தென்னை மரங்களில் மர்மநோய் தாக்கி வருவதால், விவசாயிகள் பீதியடைந்துள்ளனர். மர்ம நோயை ஏற்படுத்தும் கிருமியை அழிக்க, புழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை, சித்தோடு, கவுந்தப்பாடி, பவானி உட்பட பல பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தென்னை மரங்களை வளர்த்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக மர்ம நோய் தாக்குதலால், தென்னை மரங்கள் காய்க்காமல் போய்விடுகின்றன. மேலும் தென்னங்கீற்றுக்கள் வெள்ளையாகி, எதற்கும் பயனில்லாமல் போய் விடுகிறது. இதனால் தென்னை விவசாயிகள் பலர் பாதிப்படைந்துள்ளனர்.

இதுகுறித்து பவானி விவசாயி செந்தில் கூறியதாவது:

எங்கள் நிலத்தில் உள்ள 200க்கும் மேற்பட்டதென்னை மரங்களில் மர்ம நோய் தாக்கியுள்ளது.

இந்நோய் தாக்குதலால், தென்னங்கீற்றுகள் முற்றிலும் வெள்ளை போன்ற ஒரு நிறத்தில், எதற்கும் பயனில்லாமல் போனது.
தென்னங்காய்கள் சிறியதாகி, இளநீர் பிடிக்காமல் உள்ளது.
சங்ககிரி, சென்னிமலை, பள்ளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும், வளர்க்கப்படும் தென்னையில் மர்மநோய் தாக்கி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து வேளாண் அதிகாரிகளிடம் கேட்டபோது, தென்னையின் மர்ம நோயை ஒழித்து கட்ட, புழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக கூறினார்.

எங்கள் நிலத்தில் உள்ள பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் மீது, ஏழு பாக்கெட் புழுக்கள் தெளிக்கப்பட்டுள்ளது. விரைவில் மர்ம நோயின் தாக்கம் குறையும் என்று வேளாண் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நன்றி: தினமலர்

தென்னையில் குரும்பை உதிர்வை தடுக்க வழிகள்.....!

தென்னையில் குரும்பை உதிர்வை தடுக்க வழிகள்.....!
==========================================
தென்னையில் குரும்பைகள் மற்றும் பல்வேறு அளவுள்ள இளங்காய்கள் உதிர்வது விவசாயிகளுக்கு மகசூல் இழப்பைத் தரும் முக்கிய பிரச்னையாகும்.

காய்க்க ஆரம்பிக்கும் இளம் மரங்களில் குரும்பை உதிர்வது தவிர்க்க முடியாத பண்பாகும். எனினும், நல்ல காய்ப்பிற்கு வந்த தென்னையில் ஆகஸ்ட், செப்டம்பர், நவம்பர் மாதங்களில் அதிகமாக பெண் பூக்கள் உதிருகின்றன.

காரணங்கள்:
----------------
குரும்பைகள் மற்றும் இளங்காய்கள் உதிர்வதற்கு பல காரணங்கள் உள்ளன.
அவற்றில் தாவர உடற் செயலியல் குறைபாடு, மண்ணின் குணம் (உவர், களர் தன்மை), மண்ணில் ஊட்டச் சத்து பற்றாக்குறை, நீர் நிர்வாகக் குறைபாடு, மகரந்தச் சோóக்கை குறைபாடு, பயிர் வினை ஊக்கிகளின் குறை மற்றும் தேவை, பூச்சி மற்றும் நோய் தாக்குதல், போரான் குறைபாடு போன்ற காரணங்களைக் குறிப்பிடலாம்.

மண்ணின் குணம்:
-------------------------
மண்ணின் கார, அமிலத் தன்மை 5 சதத்துக்கு குறைவாகவோ அல்லது 8 சதத்துக்கு அதிகமாகவோ இருக்கும் போது, குரும்பைகள் கொட்டுவது இயல்பாகும்.

ஆகையால், அமிலத் தன்மை அதிகமிருக்கும் மண்ணில் மரத்திற்கு சுண்ணாம்புச்சத்து இட்டும், காரத் தன்மை அதிகமிருக்கும் மண்ணில் ஜிப்சம் இட்டும் உவர், களர் தன்மையைச் சரிசெய்யலாம்.

கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்:
-----------------------------------------------------
யூரியா 1.3 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ மற்றும் மூரியேட் ஆப் பொட்டாஷ் 2 கிலோ ஆகியவற்றை 50 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து, ஒவ்வொரு மரத்திற்கும் இட வேண்டும்.

மேலும், தென்னை டானிக் 40 மில்லியை 160 மில்லி தண்ணீருடன் கலந்து, ஆறு மாதத்திற்கு ஒரு முறை வேர் மூலம் உட் செலுத்துவதன் மூலம் குரும்பை பிடிப்பதை அதிகரிக்கச் செய்யலாம்.

தென்னை நுண்ணூட்டக் கலவையை மரத்திற்கு ஒரு கிலோ வீதம் இட வேண்டும். இந்த நுண்ணூட்டக் கலவையில் தென்னைக்கு தேவையான அனைத்து நுண் சத்துகளும் உள்ளன.

நீர் நிர்வாகக் குறைபாடு:
---------------------------------
மார்ச் – ஏப்ரல் மாதங்களில் அதிகமாகக் குரும்பை உதிர்வு ஏற்படுகிறது.கடுமையான வறட்சி, மழை பெய்த பின்பும் அல்லது நீண்ட காலமாக நீர் பாய்ச்சாமல் பராமரிப்பின்றி இருக்கும் தென்னந் தோப்புகளில் குரும்பை பிடிப்பு அதிகம் இல்லாமலும், மட்டைகள்
துவண்டு தொங்குவதும் காணப்படும்.

தென்னை வேர்களுக்கு காற்றோட்டம் கிடைப்பதற்கு போதுமான வடிகால் வசதி செய்தல் அவசியமாகிறது.இல்லாவிடில், இளம் கன்றுகள் வளர்ச்சி குறைந்து, இலைகள் மஞ்சள் நிறமாகின்றன.

மேலும், வளர்ந்த மரங்களில் குரும்பைகளும், இளங்காய்களும் உதிர்வதற்கான வாய்ப்பு உருவாகிறது.

நவம்பர் மாதத்திலிருந்து மே மாதம் வரை தொடர் நீர்ப் பாசனம் மற்றும் நல்ல வடிகால் வசதியும் செய்தால், 8 முதல் 9 ஆண்டுகள் வரை நல்ல நிலையான மகசூல் கிடைக்கும்.

மகரந்த சேர்க்கை குறைபாடு:
----------------------------------------
தென்னையில் அயல் மகரந்தச் சோóக்கையில் கருவுறுதல் ஏற்பட்டு, குரும்பைகள் காய்களாக வளர்ச்சி பெறுகின்றன.

காற்றினாலும், தேனீக்கள் போன்ற பூச்சிகளாலும் தென்னையில் அயல் மகரந்தச் சோóக்கை நிகழ்கிறது.

அதிக மழை பொழிவால் மகரந்தச் சேர்க்கையின்மை மற்றும் மகரந்தச் சேர்க்கை ஏற்படுத்தும் காரணியின்மையாலும் குரும்பைகள் உதிர்கின்றன.

பயிர்வினை ஊக்கிகளின் குறை மற்றும் தேவை:
--------------------------------------------------------------------
குரும்பைகள் வளர்ச்சிக்கு பயிர் வினை ஊக்கிகள் தேவைப்படுகின்றன.
இவற்றின் உற்பத்தி தேவையான அளவுக்கு இல்லாத போது குரும்பைகள் உதிர்வதுண்டு. பயிர் வளர்ச்சி ஊக்கியான நாப்தலின் அசிட்டிக் அமிலத்தை (பிளானோபிக்ஸ்) பாளைகள் வெடித்து ஒரு மாதம் கழித்து அரை மில்லி அளவை ஒரு லிட்டர் சுத்தமான நீரில் கலந்து பாளைகளில் தெளிப்பதன் மூலம் தடுக்கலாம்.

பூச்சிகள் மற்றும் நோய்கள்:
--------------------------------------
பாளைகள் வெடித்து குரும்பைகள் கருவுறும் போது, சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் பூசணத்தினால் தாக்குதல் அதிகமாக இருக்கும்.
பொதுவாக, கொலிடோடிரைகம் பூசணத்தினால் குரும்பைகளின் திசுக்களில் பசை வடிதல் ஏற்பட்டு உதிர்கிறது.

மேலும், அஸ்பொஜில்லஸ், பெனிசிலியம், பைட்டோப்தோரா, ப்யுúஸôரியம், பெஸ்டலோசியா போன்ற பூசணங்களினாலும் குரும்பைகள் உதிர்வு ஏற்படுகிறது.

இதைத்தவிர, வண்டுகள், எறும்புகள் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சி வகைகளாலும் குரும்பை உதிர்வு ஏற்படுகிறது.

இந்தக் காரணங்களைக் கண்டறிந்து தேவையான மருந்துகளை அளவுடன் உபயோகிப்பதன் மூலம் குரும்பைகள் உதிர்வதைத் தடுக்கலாம்.

போரான் குறைபாடு:
------------------------------
போரான் என்ற நுண்ணூட்ட சத்து பற்றாக்குறையினால் தென்னை இலைகள் சிறுத்து, விரிவடையாமல் காணப்படும்.

இது கொண்டை வளைதல் அல்லது இலை பிரியாமை என்று அழைக்கப்படுகிறது. சுமார் மூன்று ஆண்டுகள் வயதுடைய மரங்களில் இலைகள் சாதாரண முறையில் விரிவடையாமல் ஒன்றுக்கு ஒன்று பின்னிக் கொண்டு வெளி வர இயலாத நிலையில் காணப்படும்.

மேலும், வளர்ந்த மரங்களில் இலைகளின் வளர்ச்சி மிகவும் குறைந்து, மட்டைகள் குருத்து பாகத்திலிருந்து வளைந்து காணப்படும்.

குறைபாடு முற்றிய நிலையில் குரும்பைகளும், இளங்காய்களும் கொட்டுவதற்கு வாய்ப்பு உருவாகிறது.

இதைத் தவிர்க்க, மண்ணில் 250 கிராம் போராக்ஸ் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தனியே வைத்து (மற்ற உரங்களுடன் கலக்காமல்) இரண்டு வருடங்களுக்கு தொடர்ச்சியாக இட வேண்டும் (அல்லது) வேர் மூலம் 25 மில்லி அளவு போரான் கரைசலைச் செலுத்துவதால் மரம் போரான் குறைபாட்டிலிருந்து விடுவிக்கப்படுகிறது.

விவசாயி கடன் அட்டைத் திட்டம்

விவசாயி கடன் அட்டைத் திட்டம்

பயிர் உற்பத்தி மற்றும் இடுபொருள் வாங்குதல் போன்ற சிறு அளவிலான பண தேவைகளை அதிக சிரமமின்றி உடனுக்குடன் வங்கி அமைப்புகளிலிருந்து பெற்றுத்தருவதே கிஸான் கடன் அட்டைத் திட்டத்தின் குறிக்கோளாகும்.

கிஸான் கடன் அட்டைத் திட்டத்தின் பலன் என்ன?

பணப் பட்டுவாடாநடைமுறைகளை எளிமைப்படுத்துகிறது
பணம் மற்றும்பொருள் வாங்குதல் தொடர்பான பிரச்சனைகளை நீக்குகிறது
ஓவ்வொரு பயிருக்கும்தனித்தனியாகக் கடனுக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை
எந்த நேரத்திலும்உறுதியாகக் கிடைக்கக்கூடியதால் விவசாயிகளுக்கு வட்டிச்சுமையை வெகுவாக குறைக்கக்கூடியது
விதைகளையும்உரங்களையும் விவசாயிகள் தங்கள் வசதி மற்றும் தேர்வுக் கேற்றவகையில் வாங்கிக்கொள்ளலாம்
வாங்கும்போதேமுகவர்களிடமிருந்து தள்ளுபடி பெற்றுக்கொள்ளலாம்
மூன்றுவருடங்களுக்கான கடன் வசதி உண்டு. பருவகால மதிப்பீடுகள் தேவையில்லை
விவசாய வருமானம்அடிப்படையில் அதிகபட்ச கடன் வரம்பு உண்டு
கடன் வரம்பைபொறுத்து எந்தத் தொகையையும் பெற்றுக்கொள்ளலாம்
பணம் திரும்பச்செலுத்துதல் அறுவடைக்குப் பிறகு மட்டுமே
விவசாய கடனுக்குவழங்கப்படும் அதே வட்டி விகிதம்
விவசாய கடனுக்குவழங்கப்படும் அதே கடன் உத்திரவாதம், பாதுகாப்பு, குறிப்பிட்ட வரம்பு மற்றும் ஆவணநிபந்தனைகள்

கிஸான் கடன் அட்டையைப் பெறுவது எப்படி?

உங்கள் அருகாமையிலுள்ள பொதுத்துறை வங்கிகளை அணுகி தகவல்களைப் பெறுங்கள்
தகுதியுடைய விவசாயிகள் கிஸான் கடன் அட்டையையும், வங்கி பாஸ் புத்தகத்தையும் பெறுவார்கள். இது உடையவரின் பெயர், முகவரி, வைத்திருக்கும் நிலம் பற்றிய விபரம், பணம்பெறும் வரம்பு, செல்லுபடியாகும் காலம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்று ஆகியவற்றைக் கொண்டிருக்கும். மேலும் இது, அடையாள அட்டையாகவும் தொடர் செயல்பாடு அடிப்படையிலான நடவடிக்கைகளின் பதிவை வசதிசெய்யும் வகையிலும் பயன்படும்.
பணம் பெறுவர் அட்டையும் பாஸ் புத்தகத்தையும், அந்தக் கணக்கை செயல்படுத்திக்கொள்ளும்போது சமர்ப்பிக்க கோரப்படுகிறார்.

முன்னணி வங்கிகளின் கிஸான் கடன் அட்டைகள்

அலகாபாத் வங்கி - கிஸான் கடன் அட்டை
ஆந்திரா வங்கி - ஏ பி கிஸான் பச்சை அட்டை
பரோடா வங்கி - பி கே சி சி
இந்திய வங்கி - கிஸான் சமாதன் அட்டை
கனரா வங்கி - கிஸான் கடன் அட்டை
கார்ப்பரேஷன் வங்கி - கிஸான் கடன் அட்டை
தேனா வங்கி - கிஸான் தங்க கடன் அட்டை
ஓரியண்ட் காமர்ஸ் வங்கி - ஓரியண்டல் பச்சை அட்டை
பஞ்சாப் தேசிய வங்கி - பிஎன்பி கிருஷி அட்டை
ஹைதராபாத் ஸ்டேட் வங்கி- கிஸான் கடன் அட்டை
இந்திய ஸ்டேட் வங்கி - கிஸான் கடன் அட்டை
சிண்டிகேட் வங்கி - எஸ் கே சி சி
விஜயா வங்கி - விஜய கிஸான் அட்டை

விவசாய கடன் அட்டைதாரர்களுக்கான தனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டம்

விவசாயக் கடன் அட்டைதாரர்களுக்கென தனி நபர் விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது

திட்டத்தின் சிறப்பம்சங்கள்:

நோக்கம்: விபத்துக்களால் உண்டாகும் (உள்நாட்டிற்க்குள்) இறப்பு (அல்லது) நிரந்தர ஊனங்களுக்கான இழப்பீடுகளை அனைத்து விவசாய கடன் அட்டைதாரர்களுக்கும் வழங்குவது
பயனாளிகள்: 70 வயது வரையிலான அனைத்து விவசாய கடன் அட்டைதாரர்களும்
இத்திட்டத்தின் மூலம் கீழ்கண்ட அளவு இழப்பீட்டு பயன்கள் பெறலாம்
விபத்து மற்றும் வன்முறை காரணமான மரணம் எனில் ரூ.50,000/-.
நிரந்தரமான ஒட்டுமொத்த ஊனம் எனில் ரூ.50,000/- .
இரண்டு கைகள் அல்லது கால்கள் இழப்பு, இரண்டு கண்கள் இழப்பு, அல்லது ஒரு கண் மற்றும் ஒரு கை அல்லது கால் இழப்பு எனில். ரூ.50,000/-
ஏதேனும் ஒரு கை அல்லது கால், அல்லது ஒரு கண் இழப்பு எனில் ரூ.25,000/-.

மாஸ்டர் பாலிஸியின் காலம் : 3 ஆண்டு காலத்திற்கு செல்லக் கூடியது.
காப்பீட்டுக் காலம்: ஆண்டு சந்தா செலுத்தும் வங்கிகளில் இருந்து பிரீமியம் பெற்ற நாளில் இருந்து ஓராண்டு வரை காப்பீடு நடப்பில் இருக்கும். மூன்றாண்டுத் திட்டமெனில், பிரீமியம் பெறப்பட்ட நாள் முதல் மூன்றாண்டிற்கு காப்பீடு செல்லும்

பிரீமியம்: விவசாய கடன் அட்டைதாரரின் ஆண்டு சந்தா ரூ. 15/- ல், ரூ. 10/- த்தை நேரடியாகவும், ரூ. 5/- கடன் அட்டைதாரரிடமிருந்து வசூலித்தும், வங்கி செலுத்த வேண்டும்

செயல்படும் வழிமுறை: இந்தச் சேவையை செயல்படுத்த நான்கு காப்பீட்டுக் கழகங்கள் சரக வாரியான அடிப்படையில் பொறுப்பேற்று உள்ளன. ஆந்திரா, கர்நாடகா, கேரளா, அந்தமான் – நிக்கோபார், பாண்டிச்சேரி, தமிழ்நாடு, லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளுக்கான சேவையை யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி (லி) நிறுவனம் வழங்குகிறது .

விவசாய கடன் அட்டைவழங்கும் வங்கிக்கிளைகள், அட்டைகள் வழங்கப்படுவதேற்ப, மாதா மாதம் விவசாயிகளின் பெயர் பட்டியலுடன், பிரீமியத் தொகையை இணைத்து அனுப்ப வேண்டும்.

இழப்பீட்டு தொகை பெறும் முறை: இறப்பு, குறைபாடுகள், நீரில் மூழ்கி மரணம் ஆகியவற்றுக்கு, இன்சூரன்ஸ் கம்பெனிகளால் அதற்காக உள்ள அலுவலகங்களில் நிர்வாக முறைகள் செயல்படுத்தப்படும்.

Wednesday, June 27, 2012

ஜுன் 24

ஜுன் 24
1314 - ஸ்கொட்லாந்துப் படைகள் இரண்டாம் எட்வேர்ட் தலைமையிலான இங்கிலாந்துப் படையினரைத் தோற்கடித்தனர். ஸ்கொட்லாந்து தனது விடுதலையை மீண்டும் பெற்றது.
1340 - நூறாண்டுகள் போர்: மூன்றாம் எட்வேர்ட் தலைமையின் கீழ் இங்கிலாந்து கடற்படையினர் பிரெஞ்சுக் படைகளை முற்றாகத் தோற்கடித்தனர்.
1509 - எட்டாம் ஹென்றி இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.
1571 - மணிலா நகரம் அமைக்கப்பட்டது.
1597 - டச்சு கிழக்கிந்தியக் கம்பனியின் முதலாவது தொகுதியினர் ஜாவாவின் பாண்டாம் நகரை அடைந்தனர்.
1662 - மக்காவு நாட்டைக் கைப்பற்றும் முயற்சியில் டச்சு நாட்டவர் தோல்வி கண்டனர்.
1664 - நியூ ஜேர்சியில் குடியேற்றம் ஆரம்பமானது.
1812 - ரஷ்யாவினுள் ஊடுரும் முயற்சியில் நெப்போலியன் பொனபார்ட்டின் படைகள் நேமன் ஆற்றைக் கடந்தனர்.
1849 - அமெரிக்கப் பெண்மணியான எலிசபெத் பிளாக்வெல் என்பவரே அமெரிக்காவில் முதன் முதலாக மருத்தவப் பட்டம் பெற்ற பெண்மணியாவார்.
1859 - சார்டீனிய இராச்சியம் மற்றும் பிரான்சின் மூன்றாம் நெப்போலியனின் படைகள் வடக்கு இத்தாலியில் ஆஸ்திரியப் படைகளைத் தோற்கடித்தன.
1860 - புளோரன்ஸ் நைட்டிங்கேலின் எண்ணக்கருக்களுக்கமைய முதலாவது தாதிகள் பயிற்சி நிலையம் இங்கிலாந்தில் அமைக்கப்பட்டது.
1894 - பிரெஞ்சு அரசுத் தலைவர் மரீ பிரான்சுவா சாடி கார்னோ படுகொலை செய்யப்பட்டார்.
1991 - ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அமைச்சரவை தமிழ் நாட்டில் பதவியேற்றது.
1932 - சியாமில் (தாய்லாந்து) இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து மன்னரின் அதிகாரங்கள் வெகுவாகக் குறைந்தன.
1938 - 450 மெட்ரிக் தொன் எடையுள்ள விண்கல் பென்சில்வேனியாவின் சிக்கோராவில் வீழ்ந்தது.
1940 - பிரான்சும் இத்தாலியும் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.
1945 - இரண்டாம் உலகப் போர்: நாசி ஜெர்மனியரை வெற்றி கொண்ட சோவியத் படைகளின் வெற்றி அணிவகுப்பு மொஸ்கோவில் இடம்பெற்றது.
1948 - சோவியத் ஒன்றியம் ஜெர்மனியின் தமது கட்டுப்பாட்டிலுள்ள பெர்லினின் மேற்குப் பகுதியுடன் அமெரிக்க, பிரித்தானிய, பிரெஞ்சுக்கள் வசம் இருந்த பகுதிகளுடனான தரைவழித் தொடர்புகளைத் துண்டித்தது.
1956 - சே குவேரா, ஃபிடல் காஸ்ட்ரோ உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டனர்.
1963 - சான்சிபாருக்கு உள்ளக சுயாட்சி வழங்கப்பட்டது.
1976 - வட வியட்நாமும் தென் வியட்நாமும் ஒன்றாக இணைந்தன.
1981 - 17 ஆண்டுகளாக உலகின் மிக நீளமான தொங்கு பாலமாக இருந்த ஹம்பர் பாலம் இங்கிலாந்தில் அமைக்கப்பட்டது.
1983 - அமெரிக்காவின் முதலாவது விண்வெளி வீராங்கனை சாலி ரைட் தனது முதலாவது பயணத்தை முடித்துக் கொண்டு பூமி திரும்பினார்.
1997 - ஈழப்போர்: பன்றிகெய்தகுளம், பனிக்கநீராவிப் பகுதியில் ஜெயசிக்குறு படையெடுப்பின்போது இடம்பெற்ற தாக்குதலில் 200 இராணுவத்தினரும் 90 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டனர்.
2004 - நியூயோர்க்கில் மரண தண்டனை சட்டபூர்வமற்றதாக்கப்படட்து.

குகை வீடுகளில் வசிக்கும் மக்கள்!

குகை வீடுகளில் வசிக்கும் மக்கள்!

சீனா, பழமையும், புதுமையும் கலந்த ஒரு இரும்புத் திரை நாடு. கிராமப்புறங்களிலும், சிறு நகரங்களிலும் மட்டுமல்லாமல், பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பெரு நகரங்களில் கூட, புராதன காலத்து வீடுகள் அதிகம் இருந்தன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டி, பீஜிங் நகரத்தின் அடையாளத்தையே அடியோடு மாற்றி விட்டது.
"ஒலிம்பிக் போட்டிக்காக, <உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர், பீஜிங்கிற்கு வரும்போது, அங்குள்ள பழமையான வீடுகளை பார்த்து, நம் நாட்டை குறைவாக மதிப்பிட்டு விடுவர்...' என, சீன அரசு கருதியது. இதன் காரணமாக, பழமையை பறைசாற்றிக் கொண்டிருந்த, லட்சக்கணக்கான வீடுகள், இடித்து தரை மட்டமாக்கப்பட்டன. பீஜிங் உள்ளிட்ட சீனாவின் பெரு நகரங்களிலும், நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளிலும் இருந்த பழமையான வீடுகள், இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன.
ஆனாலும், இங்குள்ள ஷான்சி மாகாணத்தில், மிகப் பழமையான குகை வீடுகள் அதிக அளவில் உள்ளன என்பதும், இந்த வீடுகளில் மூன்று கோடிக்கும் அதிகமான மக்கள் இன்னும் வசிக்கின்றனர் என்பது தான் ஆச்சரியமான விஷயம். இந்த வீடுகள், மலைகளை குடைந்து உருவாக்கப்பட்டவை.
இந்த பகுதியில் உள்ள மலைகள், மண் துகள்களால் ஆனவை. பல ஆண்டுகளுக்கு முன், இங்கு வசித்தவர்கள், இந்த குகை வீடுகளை அமைத்துள்ளனர். அரை வட்ட வடிவமான நுழைவாயில், தரை விரிப்புகளாலான கதவுகள், உயர்ந்த மேற்கூரை, சூரிய வெளிச்சம் உள்ளே வரும் வகையில் அமைக்கப்பட்ட ஜன்னல்கள் என, இயற்கையான அம்சங்களுடன் இந்த குகை வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
சற்று வசதியுள்ளவர்களின் குகை வீடுகளில், மின்சாரம், தொலைபேசி, குடிநீர் குழாய் ஆகிய வசதிகளும் உள்ளன. இந்த வீடுகளை கட்டுவதற்கு, சிமென்ட், செங்கல், தண்ணீர் உள்ளிட்ட எந்த பொருட்களும் தேவையில்லை என்பதால், செலவும் மிகவும் குறைவு. தற்போது இந்த குகை வீடுகளில், வயதானோர் மட்டுமே அதிக அளவில் வசிக்கின்றனர்.
சீனாவில் வேகமாக பெருகி வரும் மக்கள் தொகை காரணமாக, நகர்ப்புறங்களில் வசிப்பதற்கு, போதிய வீடுகள் கிடைப்பது இல்லை. இதனால், சமீபகாலமாக, பழமையான குகை வீடுகளுக்கு, கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஆனாலும், இங்கு வசிப்பவர்கள், வீடுகளை விற்பதற்கு முன்வருவது இல்லை. "இந்த வீடுகள், எங்கள் வேர்களின் அடையாளமாக விளங்குகின்றன. எங்களின் முன்னோர், இங்கு தான் பிறந்து வளர்ந்தனர். இந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அவர்களின் நினைவுகளுடன் வசிப்பது போல் உணர்கிறோம். எவ்வளவு ரூபாய் கொடுத்தாலும், வீட்டை விற்க மாட்டோம்...' என, உறுதியாக கூறுகின்றனர், இங்கு வசிக்கும் சீனர்கள்.
கிராமங்களில் முன்னோர்கள் வசித்த பழமையான வீடுகளை, "தொலையட்டும்' என, குறைந்த விலைக்கு விற்றுவிட்டு, நகர்ப்புறங்களில் போலியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும், "நம்மவர்'களுக்கு, இந்த சீன மக்களின் அசாத்தியமான மன உறுதி, நல்ல பாடம்.

பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா?

சும்மா இருக்கற அப்போ படிங்க ரொம்ப பெருசா இருக்கு ...

பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா?

சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோலாக பார்க்கப்படும் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.

எனவேதான், இத்தகைய பரிமாற்றங்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மன்னராட்சி காலத்தில் இருந்தே சொத்து பரிமாற்றங்களை ஆவணபடுத்துவது தொடர்பான பணிகள் நடைபெற்றுள்ளன.
கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள், ஓலைச் சுவடிகள், காகிதங்கள் என, இதற்கு பயன்படுத்தப்பட்ட பொருள்களை போலவே இதற்கான மொழி வழக்குகளும் காலந்தோறும் மாறிவந்துள்ளன. தொடர்ந்து மாறியும் வருகின்றன.இதற்கான சட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 1864ம் ஆண்டு பதிவுத்துறை ஏற்படுத்தப்பட்டது. 1899ம் ஆண்டு இந்திய ஸ்டாம்ப் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பதிவு சட்டம் 1908ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதில் உள்ள குறைபடுகளை சரி செய்யும் வகையில், அடுத்தடுத்து பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு பத்திரப்பதிவு தொடர்பான பணிகள் முறைபடுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள 574 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 1.5 கோடி பேர் வந்து செல்கின்றனர். இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 30 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யபடுகின்றன.இவ்வாறு பதிவு செய்வதற்கு, ஆவணங்களை எழுதுவது என்பதே ஒரு முக்கிய கட்டமாக உள்ளது. 30 ஆண்டுகள் முன்பு அனைத்து பிரிவு மக்களும் குறிப்பிட்ட சில பிரிவினரையே சார்ந்திருந்தனர். அரசு அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் வரவை அடுத்து, இதில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால், ஆவணங்கள் எழுதும் முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
பொதுவாக வீடு, மனை, வாங்கும் பலரும், அது தொடர்பான ஆவணங்களை பிறரிடம் அளித்தே சரி பார்க்கின்றனர். ஆனால் இந்த ஆவணங்களை வாங்குபவரும் விற்பவரும் முழுமையாக படிக்க வேண்டும் என்பதே வல்லுனர்களின் ஆலோசனையாக உள்ளது.இத்தகைய ஆவணங்களை எழுதுவோர் வழக்கமாக பயன்படுத்தி வரும் வாசகங்களில்
இடம்பெறும் குறிப்பிட்ட சில வார்த்தைகள் இன்னமும் புரியாதவையாகவே உள்ளன.
இதில், ஆவணங்கள் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின்

விளக்கங்கள் விவரம்:
பட்டா: ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.

சிட்டா: குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

அடங்கல்: நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

கிராம நத்தம்: ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.

கிராம தானம்: கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.
தேவதானம்: கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.

இனாம்தார்: பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.

விஸ்தீரணம்: நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.

ஷரத்து: பிரிவு.

இலாகா: துறை.

கிரயம்: நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.

வில்லங்க சான்று: ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.

புல எண்: நில அளவை எண்.

இறங்குரிமை: வாரிசுரிமை.

தாய்பத்திரம்: ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.

ஏற்றது ஆற்றுதல்: குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.

அனுபவ பாத்தியதை: நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.

சுவாதீனம் ஒப்படைப்பு: நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.
ஜமாபந்தி: வருவாய் தீர்வாயம்.

நன்செய்நிலம்: அதிக பாசன வசதி கொண்டநிலம்.

புன்செய்நிலம்: பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.

குத்தகை: ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.

இந்த வார்த்தைகளின் பயன்பாடு சமீபகாலமாக படிப்படியாக குறைந்து வருகிறது என பதிவுதுரையினர் தெரிவித்தனர்.23 வகை மாதிரி ஆவணங்கள்ஒருவர் தன்னிடம் உள்ள சொத்தை, வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது தொடர்பான ஆவணங்களை எழுத மூன்றாவது நபர் ஒருவரை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதை ஏற்ற, சொத்து விற்பனை, அடமானம், ஒப்பந்தம், பொது அதிகார ஆவணம், ரத்து செய்யும் ஆவணம், உள்ளிட்ட 23 வகையான ஆவணங்களின், ஆங்கிலம் மற்றும் தமிழ் மாதிரி படிவங்களை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.

பாட்டி வைத்தியம்:

பாட்டி வைத்தியம்:
===============


செருப்புக் கடி:
------------------
· பச்சை மூங்கில் குச்சியை துண்டாக வெட்டி எடுத்து நீர் விட்டு மைய அரைத்து செருப்புக்கடியின் மீது தடவிவர குணமாகும்.
· தென்னைமரக் குருத்தோலையை நெருப்பில் இட்டு கருக்கி எடுத்து அதனை தூள் செய்து அதன் பின் தேங்காய் எண்ணை குழப்பி செருப்புக் கடிபட்ட இடத்தில் தடவிட குணமாகும்.
தேள் கடி
· தேள் கடிவாயில் வெங்காயத்தை இரண்டாக அரிந்து அதில் ஒரு பகுதியை கடிவாயில் வைத்து அழுத்தித் தேய்க்க வேண்டும். வலி நிற்க வில்லை என்றால் அடுத்த பகுதியையும் தேய்க்க வேண்டும்.
· எலுமிச்சம்பழ விதையுடன் சிறிது உப்பையும் வைத்து அரைத்து தண்ணீரில் கலந்து குடிக்க தேலின் விஷம் இறங்கும்.
· நவச்சாரத்தில் சிறிது சுண்ணாம்பை சேர்த்தால் அது நீராகக் கரைந்து விடும். அந்த நீரை தேள் கொட்டிய இடத்தில் வைத்தால் விஷம் இறங்கி விடும். கடுப்பும் குறையும்.

ஆண்மைக் குறைவு:
----------------------------
· மகிழம்பூவை சுத்தம் செய்து நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை 1-டம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உணர்வு உண்டாகும்.
· தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர தாது விருத்தியாகும்.
· அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலில் கலந்து குடிக்கவும்.
· அமுக்கராங் கிழங்கு பொடியுடன் தேனும் நெய்யும் கலந்து சாப்பிட்டு வரவும்.
· படுக்கைக்கு செல்ல 3-மணி நேரத்திற்கு முன்பே 1-முழு மாதுளம்பழம் சாப்பிடவும்.

தாது விருந்தி:
--------------------
· முருங்கைப்பூவை நீர் விட்டுக் காய்ச்சி எடுத்து 1-அவுன்ஸ் பசும்பாலுடன் கலந்து குடித்து வரவும்.
· நெய், மிளகு,உப்பு, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலை கீரை, நறுந்தாலி, நலமுருங்கை இவைகளை சேர்த்து துவையலாக்கி சாப்பிடவும்.
· கருவேலமரத்தின் பிசினை எடுத்து சுத்தம் செய்து காயவைத்து லேசாக வறுத்து தூளாக்கி சாப்பிட்டு வர பழைய நிலைமைக்கு வரலாம்.
· அரசம்பழத்தை இடித்து தூளாக்கி தினமும் 1-ஸ்பூன் சாப்பிட உடன் 1-டம்ளர் பசும்பால் சாப்பிட தாது பலம் பெறும்.
· வால் முளகு, வாதுமைப்பருப்பு, கற்கண்டு, கசகசா இவற்றை சம அளவு எடுத்து அரைத்து நெய்யையும் சேர்த்து அடுப்பில் வைத்து பதமாக வேகவைத்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வர தாது வலிமை பெறும்.

உடல் மெலிய:
--------------------
· 100-கிராம் கொள்ளை சுத்தம் செய்து ரசம் வைத்து அதனுடன் இந்துப்பு கலந்து குடித்துவர சொல்லிக்கொள்ளும்படி உடல் மெலியும். உடல் பலமும் கிடைக்கும்.
· இலந்தை இலைகளை எடுத்து சுத்தம் செய்து மைபோல அரைத்து, அரிசி களைந்த நீரில் கலந்து கஞ்சி போல காய்ச்சி உள்ளுக்கு அருந்தி வரவும்.
· கல்யாண முருங்கை இலைச் சாறு இரண்டு டீஸ்பூன் காலை மாலை சாப்பிட உடல் எடை குறையும்.
· 25-கிராம் சோம்பு, 5-கிராம் கடுக்காய் தூள் சேர்த்து மண் சட்டியில் கால் லிட்டர் தண்ணீர் விட்டு 50-மில்லியாகும் வரை காய்ச்சி வடிகட்டி 50-மில்லி சுத்தமான தேன் கலந்து காலை மாலை குடித்துவர ஊளைச் சதை குறையும்.
· நில ஆவரை இலையை நிழலில் உலர்த்தி இடித்துத் தூளாக்கி துணியில் சலித்து ஒரு ஜாடியில் போட்டு வைத்துக்கொண்டு தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் எடை குறையும்.
கை நடுக்கம்
· காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு தேனும் அதே அளவு இஞ்சிச்சாறும் கலந்து சாப்பிட்டு வரவும்.
· வெள்ளைத்தாமரை இதழ்களை மட்டும் எடுத்து கசாயம் வைத்து வடிகட்டி பாலுடன் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும்.

கருத்தரித்த பெண்களுக்கு:
------------------------------------
· கருவுற்றிருக்கும் தாய்மார்கள் மாம்பழம் சாப்பிட்டு வர பிறக்கும் குழந்தை ஊட்டச் சத்துடன் இருக்கும். உடல் பலவீனம், கைகால் நடுக்கம், மயக்கம் முதலிய தொல்லைகள் வராது.
· குழந்தைக்கு சத்தாக பேரிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும். அதனால் குழந்தை நல்ல வளர்ச்சி பெறும்.
· நெல்லிக்காய் முருங்கைக்காய், முள்ளங்கி இவைகளை உணவில் சேர்த்து வந்தால்
· கைகால் வீக்கம் வராமலிருக்கும்.
· அமுக்கராங் கிழங்கை இடித்து 200-மில்லி நல்ல தண்ணீரில் கொதிக்கவைத்து 100-மில்லியாக சுண்டியதும் எடுத்து ஆறவைத்து பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொண்டு காலை மாலை 2-வேளையும் தேன் கலந்து சாப்பிட்டு வர தேக பலம் கிடைக்கும்.

மாதவிடாய் வலி தீர:
-----------------------------
· மாதவிடாய் நாளில் எலுமிச்சம் பழச்சாறு சாப்பிட்டு வர வலி நீங்கும்.
· மலைவேம்பு இலையை இடித்து சாறு பிழிந்து சாப்பிட்டு வர வலி தீரும்.

கருப்பை கோளாறுகள் நீங்க:
-------------------------------------
· நெல்லிக்கனியை தினசரி சேர்த்து வர கருப்பை நோய் குணமாவதோடு தாய்க்கும் குழந்தைக்கும் சிறந்த டானிக்காக பயன்படுகிறது.
· அருகம்புல்லை அரைத்து உட்கொண்டால் பெண்களுக்கு மாதவிடாய் தடை ஏற்படாது.
· முருங்கைக்காயை சமைத்து சாப்பிட்டு வர கருப்பையின் பலவீனம் மறைந்து பலம் பெறும்.
· அரசமரத்தின் இலையை மைய அரைத்து காலையில் வெறும் வயிற்றில் 1-உருண்டை சாப்பிட்டு வர குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

குழந்தை பாக்கியம் பெற:
-------------------------------
· வாரத்தில் 3-நாட்கள் அகத்திக்கீரை சாப்பிட்டு வருவதுடன் தினசரி செவ்வாழைப் பழம் 1-வீதம் ஒரு மாதம் சாப்பிட்டு வர விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

தாய்ப்பால் சுத்தமாக:
-----------------------------
· தேன் 15-பங்கும், அமுக்கராங்கிழங்கின் ரசம் 10-பங்கும், மிளகுரசம் 15-பங்கும்,மணத்தக்காளி ரசம் 25-பங்கும் கலந்து சாப்பிட்டு வர தாய்ப்பால் தூய்மையடையும்.

நன்றாக ஜீரணமாக:
---------------------------
· வெள்ளரிப்பிஞ்சு, சிறிது எலுமிச்சம்பழம், சிறிது உப்பு சேர்த்து சாலட் போல் செய்து சாப்பிடவும்.
· எலுமிச்சம்பழ ரசத்தில் சிறிது இஞ்சியும், சீரகமும் சேர்த்து தினமும் 2-வேளை சாப்பிடவும்.
· தினமும் 4-பேரிட்சம்பழம் சாப்பிடவும்.
· எலுமிச்சம்பழத் தோலை சாப்பிடவும் அல்லது ஊறுகாய் சாப்பிடவும்.
· ஓம வள்ளி இலையை இடித்துச் சாறெடுத்துச் சாப்பிடவும்.

ஜுன் 25

ஜுன் 25
மொசாம்பிக் - விடுதலை நாள் (1975)
1678 - Elina Lukirecia Carnaro Piscapio எனும் பெண் Padua பல்கலைக் கழகத்திலிருந்து Doctor of Philosophy எனும் பட்டம் வாங்கினார். உலகின் முதல் பெண் பட்டதாரி.
1940 - பிரான்ஸ் அதிகாரப்பூர்வமாக ஜெர்மனியிடம் சரணடைந்தது.
1944 - இரண்டாம் உலகப் போர்: நோர்டிக் நாடுகளின் மிகப் பெரும் சமர் சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக பின்லாந்தில் ஆரம்பமானது.
1967 - உலகின் முதலாவது செய்மதித் தொலைக்காட்சி நிகழ்ச்சி நம் உலகம் (Our World) 30 நாடுகளில் காண்பிக்கப்பட்டது.
1975 - இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்து தேர்தல்கள், மற்றும் மனித உரிமைப் போராட்டங்களைத் தடை செய்தார்.
1975 - போர்த்துக்கல்லிடமிருந்து மொசாம்பிக் விடுதலை அடைந்தது.
1983 - லண்டனில் நடந்த உலகக் கிண்ணத் துடுப்பாட்டப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மேற்கிந்தியத் தீவுகளை 43 ஓட்டங்களால் வென்றது.
1991 - குரொவேசியா, சிலவேனியா விடுதலையை அறிவித்தன.
1993 - கனடாவின் முதல் பெண் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் கிம் காம்பெல்
1997 - புரோகிரஸ் ஆளில்லா விண்கலம் ரஷ்ய விண்வெளி ஆய்வுக்கூடம் மீருடன் மோதியது.
1998 - கணினி இயக்க மென்பொருளான WinDows 98 உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது

Nongu Vandi (நுங்கு வண்டி)

Nongu Vandi (நுங்கு வண்டி)

அனேகமாக ..நம்மில் பலரது ..சொந்த வாகன கனவை ..நிறைவேற்றி தந்தது இந்த வாகனமே ..

பெண் பனையில் ..உருவாகும் பாளை ..நாளடைவில் .பணம்காயாக உருவாகிறது ..இளம் பனம்காய் நொங்கு எடுக்க உகந்தது ..சரியான பருவம் முக்கியம் ..இல்லை எனில் ..கடுக்காய் எனப்படும் ..முதிர்ந்த நிலைக்கு சென்று விடும் ..அது சுவைக்காது ..

உயரமான மரமெனில் ..குலையோடு ..கயிற்றில் கட்டி கவனமாக இறக்க வேண்டும் .இல்லையெனில் காய் சிதறி விடும் ..இறக்கப்பட்ட நுங்கை ..மேல்பகுதியை ..கூரிய அரிவாளால் ...சீவ வேண்டும் ..சீயவிய பின் கையோடு வரும் சிறு பகுதியிலும் ..கொஞ்சம் நுங்கு இருக்கும் ..இதை வீணாக்காமல் நக்கி சாப்பிடுவது ..நம் பண்பாடு ..

இப்போது ..சீவப்பட்ட பகுதி உங்கள் ..கையில் இருக்கும் ..ஒரு கத்தியை கொண்டு ..நுங்கின் கண் பகுதியை ..சுற்றி தோசை திருப்பி போடுவதுபோல் ..எல்லா பக்கம்களிலும் ..வாகாக இளக்க வேண்டும் ..பின்னர் ..நான்கு புறமும் ..மாற்றி மாற்றி நெம்ப வேண்டும்..இப்படி செய்தால் ..நுங்கு சேதமில்லாமல் ..இளகி வரும் ..இதுதான் நோண்டி நொங்கு எடுத்தல் எனப்படும் ..நோகாமல் ..நொங்கு தின்பது ..என்ற சொலவடை இப்போது ..உங்களுக்கு புரிந்து இருக்கும் ..நொங்கு சேதாரமின்றி எடுத்தல் அவசியம் ..அப்போதுதான் ..நுங்கின் உள்ளே இருக்கும் ..சில துளி இனிமையான திரவம் ..பருக கிடைக்கும் ..

அனைத்து கண்களையும் எடுக்கப்பட்ட ஒரே அளவிலான இரு நுங்கு காய்களை எடுத்து ..இருபறமும் முனை சீவப்பட்டு கூர்மையான கம்புதுண்டை ..இருமுனைகளிலும் இரண்டு நுங்கு காய்களை ..நடுபகுதியில் சொருக வேண்டும் ..இபோது இரு சக்கர நுங்கு வண்டி தயார் ..இனி வண்டியை செலுத்த தயாராக ஒரு நீண்ட V முனை கொண்ட கம்பை இணைத்து ..வண்டியை ஓட்ட ஆரம்பிக்கலாம் ...

சிலர் மூன்று காய்களை வைத்து மூன்று சக்கர வண்டியும் செய்வார்கள் ..

இப்படித்தான்..எனது ..சொந்த வாகன கனவு நிறைவேறியது ...

Thanks: http://prabhudhas blogspot com/

ஜுன் 26

ஜுன் 26
சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள்
போதை ஒழிப்பு நாள்
மடகஸ்கார் - விடுதலை நாள்
ருமேனியா: கொடி நாள்
சோமாலிலாந்து - விடுதலை நாள்
1483 - மூன்றாம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.
1541 - இன்கா பேரரசை முடிவுக்குக் கொண்டு வந்த பிரான்சிஸ்கோ பிசாரோ கொல்லப்பட்டான்.
1690 - தென்மேற்கு இங்கிலாந்தின் நகரான டெயின்மவுத் நகரை பிரான்ஸ் முற்றுகையிட்டது.
1723 - அசர்பைஜான் தலைநகர் பாக்கூ ரஷ்யாவிடம் வீழ்ந்தது.
1843 - பிரிட்டனின் ஒரு காலனியாக அறிவிக்கப்பட்டது Hong Kong
1884 - உலகம் முழுவதும் பின்பற்றப்படும் GMT நேர முறை நடைமுறைக்கு வந்தது.
1924 - அமெரிக்க ஆக்கிரமிப்புப் படை டொமினிக்கன் குடியரசை விட்டு விலகியது.
1948 - முதலாவது இருதுருவ திரிதடையத்துக்கான காப்புரிமத்தை வில்லியம் ஷோக்லி பெற்ற்றார்.
1960 - சோமாலிலாந்து பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1975 - இந்திரா காந்தி இந்தியாவில் அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்தார்.
1976 - உலகின் மிக உயரமான கட்டிடமான கனடாவின் சி.என் கோபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
2000 - மூன்று பில்லியன் உயிர் ரசாயன எழுத்துக்களைக் கொண்ட மனிதனின் மரபணுக்கூறு வரையப்பட்டது.

Tuesday, June 19, 2012

பொது அறிவு

# பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்குத் தங்கும் விடுதிகளை 1900 ஆம் ஆண்டில் முதல் முதலாக அறிமுகப்படுத்திய நாடு ஜெர்மனி. அதன் பிறகே மற்ற நாடுகளில் ஹாஸ்டல் முறை வந்தது.

மானாவாரி நிலத்திலும் நல்ல மகசூலுக்கு டிப்ஸ்

மானாவாரி நிலத்திலும் நல்ல மகசூலுக்கு டிப்ஸ்

மழையை மட்டுமே நம்பி சாகுபடி செய்யப்படும் மானாவாரி விவசாயத்தில், சில நவீன யுக்திகளை கையாண்டு, நல்ல மகசூல் எடுக்கலாம் என, வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோபி வேளாண் உதவி இயக்குனர் பொறுப்பு ஆசைத்தம்பி கூறியதாவது:
  • தமிழகத்தில், 52 விழுக்காடு நிலம் மானாவாரியாக உள்ளது. மானாவாரியில் நிலக்கடலை, எள், சூரியகாந்தி, ஆமணக்கு, சோளம், கம்பு, ராகி, பருத்தி மற்றும் பயறு வகைகளான உளுந்து, துவரை, பாசிப்பயறு, தட்டை போன்றவை பெரும்பாலும் சாகுபடியாகிறது.
  • சிறு விவசாயிகளின் நிலங்கள் பெரும்பாலும் மானாவாரி சாகுபடியில் தான் உள்ளது. உரிய காலத்தில் மழை பெய்யாததாலும், தேவையான அளவு மழை கிடைக்காததாலும் மானாவாரி பயிர்களில் மகசூல் பெரிதும் பாதிப்படைகிறது.
  • சில நவீன தொழில்நுட்பங்களை கடைபிடித்தால் நல்ல மகசூல் பெற முடியும்.
  • மானாவாரி நிலங்களில் சராசரி மழையளவு ஆண்டுக்கு, 600 மி.மீ., முதல், 800 மி.மீ., வரை உள்ளது.
  • 35 முதல் 40 நாட்களில் மழை பெய்து முடிந்து விடுகிறது. சில ஆண்டுகளில் மழை பொய்த்து விடுகிறது.
  • சில உழவியல் முறைகள் மூலம் பெய்யும் மழையை மண்ணில் தங்க வைத்து பயிருக்கு பயன்படுத்த இயலும்.
  • வயல் அமைந்துள்ள சரிவுக்கு குறுக்கே உழவு செய்வதால் மழை நீர் சால்களில் தேங்கி நின்று, மண்ணின் அடிப்பகுதிக்கு சென்றடையும்.
  • நிலப்பரப்பில் விழும் மழை நீர் வேகமாக வழிந்து விடாமல் நிதானமாக செல்வதால் மண்ணில் அதிக நீர் ஈர்க்கப்படும்.
  • மானாவாரி நிலங்களில் மண் ஈரத்தை சேமித்து வைக்க கோடை உழவு மிகவும் அவசியம்.
  • அறுவடைக்கு பின் சட்டிக்கலப்பையால் நிலத்தை ஆழமாக உழவேண்டும்.
  • நீர்ப்பிடிப்பு தன்மை அதிகமாகும். களை கட்டுப்படும். மண் அரிமானம் தடுக்கப்படும்.
  • மானாவாரி நிலங்களில் அங்கக உரங்களான தொழு உரம், கம்போஸ்ட் தென்னை நார்கழிவு உரம் ஊட்டமேற்றிய தொழு உரம் ஆகியவை இடுவதால் மண் ஈரம் காக்கப்பட்டு மண் வளம் மேம்படும்.
  • விதைகளை கடினப்படுத்துவதால், அவை வறட்சியை தாங்கி முளைத்து, நல்ல பயிர் எண்ணிக்கையை கொடுத்து, அதிக மகசூல் கிடைக்கும்.
  • ஒரு கிலோ விதைக்கு, 500 கிராம் சாம்பல், மூன்று சதம் கோந்து என்ற விகிதத்தில் கலந்து, ஐந்து மணி நேரம் நிழலில் காய வைத்து, விதைக்க வேண்டும்.
  • மழைக் காலத்தை சராசரியாக கருத்தில் கொண்டு, மழை பெய்வதற்கு இரண்டு வாரம் முன்பாகவே புழுதி விதைப்பு செய்ய வேண்டும்.
இந்த  வழிமுறைகளை கடைபிடித்து மானாவாரியில் மகசூல்  அதிகரிக்கலாம்

இஞ்சிப் பயிரின் அங்கக சாகுபடி


இஞ்சிப் பயிரின் அங்கக சாகுபடி



இந்தியாவில் பல மாநிலங்களில் இஞ்சி சாகுபடி செய்யப்படுகிறது.மத்திய கிழக்கு சந்தைகளில் உலர்ந்த இஞ்சிக்கு அதிகத் தேவை இருக்கிறது. உலர் இஞ்சியை இந்தியா தான் அதிகளவு ஏற்றுமதி செய்கிறது.
இஞ்சி ஒரு வெப்பமண்டலப் பயிராகும்.இந்த பயிர் நன்கு நீர் வடியும் பொறைத் தன்மையுடைய மண்களில் நன்றாக வளரும்.இஞ்சி அதிகளவு ஊட்டச்சத்துக்களை மண்ணிலிருந்து எடுப்பதால் தொடர்ந்து வருடாவருடம் பயிரிடக்கூடாது.அதனால், பயிர் சுழற்சி முறையை மேற்கொள்ள வேண்டும். நீர் தேங்கி நிற்கும் நிலையில் வளராது. நன்கு நீர் வடியும் மண்ணே சாகுபடி செய்ய ஏற்றது. அங்கக சாகுபடி செய்யம் வயல் பழைய முறைப்படி சாகுபடி செய்யும் பண்ணையிலிருந்து 25 மீ. அகலத்துக்கு இடைவெளி விட்டு தனித்து இருக்க வேண்டும. ஒராண்டு பயிராக இருப்பதால், 2 வருடங்களுக்கு ஒரு முறை மாற்றம் இருக்க வேண்டும். இஞ்சி ஊடுபயிர் (அ) கலப்பு பயிராகவோ சாகுபடி செய்யலாம். பயிறு வகைப் பயிர்களுடன் பயிர் சுழற்சி செய்யலாம். இஞ்சி-வாழை-பயிறு வகை (அ) இஞ்சி-காய்கறிப் பயிர் -பயிறு வகைப் பயிர் சுழற்சி முறையை மேற்கொள்ளலாம்.

பயிரிடத் தேவையான மூலங்கள்

நோய் மற்றும் பூச்சியற்ற கிழங்குகளை பயிரிட ஏற்றது.அதிக மகசூல் தரக்கூடிய உள்ளூர் இரகங்களையும் அங்கக சாகுபடிக்கு பயன்படுத்தலாம். விதைக் கிழங்குகளை எந்த இராசயதனத்துடனும் விதை நேர்த்தி செய்யக் கூடாது.

நிலத்தை தயார் செய்தல் மற்றும் பயிரிடுதல்

குறைந்தபட்ச உழவு முறைகளை பயன்படுத்தலாம். விதைப்படுக்கைகள் 15 செ.மீ. உயரத்துடன், 1மீ அகலம், தேவைப்படும் நீளத்திற்கு 50 செ.மீ. இடைவெளி விட்டு தயார் செய்ய வேண்டும்.விதைப் படுக்கைகளை வெப்பமூட்டுவதால் பூச்சி மற்றும் நோய்க் கிருமிகளை அழிக்கலாம்.பாலித்தீன் சீட்கள் மண் வெப்பமூட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.விதைக்கும் போது, 25 கி வேப்பத்தூள் மண்ணுடன் கலந்து ஒவ்வொரு குழிக்கும் இடவேண்டும்.20-25 செ.மீ. வரிசைகளுக்கு இடைவெளி விட வேண்டும்.விதை கிழங்குகளை ஆழம் குறைந்த குழிகளில் நட்டு, நன்கு சிதைந்த மாட்டு எரு (அ) கம்போஸ்ட் உடன் டிரைக்கோடெர்மாவை 10 கிராம் கம்போஸ்ட் உடன் டிரைக்கோடெர்மாவை கலக்க வேண்டும், சேர்த்து இட வேண்டும்.

உழவியல் முறைகள்

பச்சை இலைகளைக் கொண்டு விதைப்படுக்கைகளை மூடாக்கு செய்ய வேண்டும். இதனால் விதை முளைப்புத் திறன் அதிகமாவதுடன், மண் அரிப்பும் தடுக்கப்படுகிறது.மேலும், அங்ககப் பொருளின் அளவு கூடுகிறது, ஈரப்பதற்கு மண்ணில் அதிகரிக்கச் செய்கிறது.பசுந்தழைகளை கொண்டு முதல் மூடாக்கில் 10-12 டன் எக்டர் என்ற அளவில் விதைக்கும் காலத்தில் செய்ய வேண்டும். இதையே ஒரு எக்டரக்கு 5 டன் என்ற அளவில் பசுந்தழைகளை  பயிரிட்ட 40 மற்றும் 90 வது நாறில் செய்ய வேண்டும்.லேன்டனா காமரா மற்றும் லிட்டக்ஸ் நெகுண்டோவை பயன்படுத்துவதால் தண்டு துளைப்பானின் தாக்கத்தைக் குறைக்கலாம்.மாட்டு சாணி (அ) திரவ உரத்தை, விதைப் படுக்கைகளின் மீது ஒவ்வொரு மூடாக்கலுக்குப் பிறகு தெளிக்க வேண்டும். களை வளர்ச்சியைப் பொறுத்து களையெடுக்க வேண்டும். சரியான தகுந்த வடிகால் வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.

உரமிடுதல்

நன்கு சிதைந்த மாட்டு சாணி (அ) கம்போஸ்ட் ஒரு எக்டருக்கு 5-6 டன் என்ற அளவில் குழிகளில் கிழங்குகளை நடும் போது இட வேண்டும். ஊட்டமேற்றிய கம்போஸ்ட்டையும் பயன்படுத்தலாம்.மேலும், வேப்பங்கட்டியை ஒரு எக்டருக்கு 2 டன் என்றஅளவில் அளிக்கலாம்.

பயிர் பாதுகாப்பு

நோய்கள்

மென் அழுகல் (அ) கிழங்கு அழுகல் பித்தியம் அஃபேனிடெர்மேட்டம் என்ற நோய்க் காரணியால் ஏற்படும். இந்த நோயகை் கட்டுப்படுத்த இஞ்சி சாகுபடி செய்ய வயலைத் தேர்வு செய்யும் போதே நல்ல வடிகால் வசதியுடைய நிலத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.விதைப் படுக்கைகளின் மீது வெப்பமூட்டுவதாலும் பூஞ்சாண் வித்துக்களை அழிக்கலாம். இருந்தாலும்,நோய் தோன்றியிருந்தால் நோயுற்ற குத்துக்களை கவனமாக சேதம் ஏற்படாமல் அகற்ற வேண்டும்.விதைக்கும் போது டிரைக்கோடெர்மாவை இடலாம்.போர்டாக்ஸ் கலவையை (1%) நோயைக் கட்டுப்படுத்த அளவாகப் பயன்படுத்த வேண்டும்.

சூடோமோனஸ் சொலானேஸ்சியேரம் என்ற நோய் காரணியால் ஏற்படும் பாக்டீரியா வாடல் நோயைக் கட்டுப்படுத்த விதைக் கிழங்குகளை 200 ஸ்ட்ரப்டோசைக்ளி 30 நிமிடங்கள் நேர்த்தி செய்து, நிழலில் உலர்த்தி பின் விதைக்க வேண்டும்.வயலில் நோய் தோன்றியவுடன்,போர்டாக்ஸ் கலவையை (1%) விதைப்படுக்கைகளின் மீது ஒரே மாதிரி நனையும் படி தெளிக்க வேண்டும்.

சீரான வயல் ஆய்வு மற்றும் கட்டுபடுத்தும் முறைகளை மேற்கொள்வதால் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.கோனோகீத்தஸ் பங்டிபெராலிஸ் என்ற தண்டு துளைப்பான் ஜீலை அக்டோபர் மாதத்தில் தோன்றும்.இதைக் கட்டுபடுத்த பூச்சிதாக்கிய செடிகளை அகற்ற வேண்டும்.தண்டுப்பகுதியை வெட்டி, புழுக்களை வெளியே எடுத்து,அழிக்க வேண்டும்.வேப்ப எண்ணெய் (0.5%) 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கலாம்.விளக்குப் பொறியை வயலில் வைப்பதால் தாய் அந்துப்பூச்சிகளை அழிக்கலாம்.

அறுவடை மற்றும் அறுவடைபின் சார் முறைகள்

எட்டு முதல் பத்து மாதங்களில் இந்தப் பயிர் அறுவடைக்கு தயாராகி விடும். முதிர்ந்த இலைகள் மஞ்சள் நிறமாக, மெது மெதுவாக காய ஆரம்பிக்கும்.அப்பொழுது குத்துக்களை கவனமாக, சேதம் ஏதும் ஏற்படாமல் கிழங்குகளை தோண்டி  எடுக்க வேண்டும்.பின் காய்ந்த இலைகள்,வேர்கள், கிழங்கைச் சுற்றியிருக்கும் மண்ணை அகற்ற வேண்டும், ஒரு எக்டருக்கு 15 முதல் 20 டன் அளவு மகசூல் இருக்கும்.காய்கறி இஞ்சிக்கும், 6மாதத்திலிருந்தே அறுவடை செய்யலாம். அறுவடை செய்த இஞ்சிகளை நன்றாக நீரில் 2-3 முறை கழுவி, சூரிய ஒளியில் உலர்த்த வேண்டும்.

காய்ந்த இஞ்சி தயாரிப்பதற்கு, அறுவடை செய்த இஞ்சிகளை ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்து, கிழங்குகளை நன்றாக உரைக்க வேண்டும்.சுத்தம் செய்த பிறகு, நீரிலிருந்து வெளியே எடுத்து,வெளித் தோலை கத்தி (அ) குச்சி கொண்டோ கரண்டி எடுக்க வேண்டும்.காய்ந்த இஞ்சிகளை ஒன்றோடொன்று உராய்ப்பதால் கடைசித் தோல் வரை உரிந்து வரும்.பின் கிழங்குகளை 11% ஈரப்பதம் இருக்கும் அளவு உலர்த்தி, சேமிக்க வேண்டும்.உலர் இஞ்சியை அதிக காலத்திற்கு சேமிக்க முயாது. உலர் இஞ்சியின் மகசூல் 16-25% புத்தம் புது இஞ்சியை விட அதிகமாக இருக்கும். பதப்படுத்த கந்தகத்தை எரிக்கக் கூடாது.

விதைக் கிழங்குகளைப் பாதுகாத்தல்

விதைக்காகப் பயன்படுத்தும் கிழங்குகளை கவனமாக பாதுகாக்க வேண்டும். உள்ளூர் முறைகளான கிளைகோமைஸ் (மலையாளத்தில் ‘பனால்’ என்று அழைப்பர்) பென்டாபில்லா என்ற செடியின் இலைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்க வைக்க வேண்டும். குழிகளில் நிழலின் அடியில் வைத்து பாதுகாக்க வேண்டும். விதைப் பயன்பாட்டிற்காக, அறுவடை செய்தவுடனேயே பூச்சி நோயுற்ற விதைக் கிழங்குகளை தேர்ந்தெடுக்க வேண்டும். விதைக்கிழங்குகளை குழிகளில் வைத்து வெயில், மழை படாதவாறு பாதுகாக்க வேண்டும். குழிகளின் பக்கச் சுவர்களின் சாணத்தை பூச வேண்டும். விதைக் கிழங்குகளை குழிகளில் வைக்கும் போது உலர் மணல் (அ) மரத்தூள் கொண்டு அடக்கடுக்காக அமைக்க வேண்டும். குழிகளின் மீது காற்றோட்டத்திற்காக போதுமான இடைவெளி விட வேண்டும். குழிகளை மரக்கட்டை கொண்டு மூட வேண்டும். 20 நாட்களுக்கு ஒரு முறை குழிகளை ஆய்வு செய்ய வேண்டும். மணல் (அ) நெல் உமி, காய்ந்த இலைகள் கொண்டோ கிழங்குகளை மூடலாம்.

Friday, June 15, 2012

வரலாற்றில் இன்று TODAY IN HISTORY ஜுன் 15

வரலாற்றில் இன்று TODAY IN HISTORY ஜுன் 15

நிகழ்வுகள்

கிமு 763 - மெசொப்பொத்தேமியாவின் வரலாற்றுக் காலக்கோட்டைக் கண்டறிய உதவிய சூரிய கிரகணம் ஒன்றை அசீரியர்கள் பதிந்தார்கள்.
... 923 - பிரான்சின் முதலாம் ரொபேர்ட் மன்னன் கொல்லப்பட்டான்.
1184 - நோர்வேயின் ஐந்தாம் மாக்னஸ் மன்னன் ஃபிம்ரெயிட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்டான்.
1246 - இரண்டாம் பிரெடெரிக்கின் இறப்புடன் ஆஸ்திரியாவின் பாபன்பேர்க் அரச வம்சம் அழிந்தது.
1389 - கொசோவோவில் இடம்பெற்ற சமரில் ஒட்டோமான் படைகள் செர்பியர்களையும், பொஸ்னியர்களையும் தோற்கடித்தனர்.
1667 - சான் பாப்டிஸ்ட் டெனிஸ் என்ற பிரெஞ்ச் மருத்துவர் முதன் முதலில் மனித இரத்த மாற்றீட்டை செயற்படுத்தினார்.
1752 - மின்னல் ஒரு மின்சாரம் என்பதை பெஞ்சமின் பிராங்கிளின் நிறுவினார்.
1775: அமெரிக்கப் புரட்சிப் போர்: ஜோர்ஜ் வாஷிங்டன் அமெரிக்கத் தரைப்படைத் தளபதியாக நியமனம் பெற்றார்.
1808 - ஜோசப் பொனபார்ட் ஸ்பெயின் மன்னனாக முடி சூடினான்.
1836 - ஆர்கன்சா ஐக்கிய அமெரிக்காவின் 25வது மாநிலமானது.
1844 - இறப்பர் பதப்படுத்தும் முறை (vulcanization) சார்ல்ஸ் குடியர் என்பவரால் காப்புரிமம் பெறப்பட்டது.
1846 - இலங்கையின் ரோயல் ஏசியாட்டிக் சபை என்ற அமைப்பு தனது முதலாவது இதழை வெளியிட்டது.
1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜீனியாவின் பீட்டர்ஸ்பேர்க் நகர் அமெரிக்கப் படைகளின் முற்றுகைக்குள்ளானது.
1904 - நியூ யோர்க்கில் ஜெனரல் ஸ்லோகம் என்ற கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தில் 1021 பேர் கொல்லப்பட்டனர்.
1911 - ஐபிஎம் நிறுவனம் அமைக்கப்பட்டது.
1938 - பிரித்தானியாவில் லாஸ்லோ பைரோ குமிழ் முனைப் பேனாக்களைக் கண்டுபிடித்தார்.
1944 - இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் சாய்ப்பான் தீவை கைப்பற்றினர்.
1954 - ஐரோப்பிய உதைப்பந்தாட்டக் கூட்டமைப்பு யூஏஃபா சுவிட்சர்லாந்தில் அமைக்கப்பட்டது.
1984 - யாழ்ப்பாணம் காரைநகரில் இலங்கையின் கடல் விமானம் ஒன்று விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
1996 - ஐக்கிய இராச்சியம், மான்செஸ்டரில் இடம்பெற்ற தீவிரவாதிகளின் குண்டுத்தாக்குதலில் 200 பேர் காயமடைந்தனர். நகரின் மத்திய பகுதி பெரும் சேதத்துக்குள்ளானது.
2007 - உலகின் மிகவும் நீளமான 34 கிமீ நீள தொடருந்து சுரங்கப் பாதை சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலைக்குக் கீழாக அமைக்கப்பட்டது.
2009 - ரிச்மண்ட் ஹில் முருகன் கோவில் கொடியேற்றம்.
2009 - ஸ்காபோரோ பெரிய சிவன் கோவில் தீர்த்தம்.

பிறப்புகள்

1914 - யூரி அந்திரோப்பொவ், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் (இ. 1984)
1950 - லக்ஸ்மி மிட்டால், லண்டனைச் சேர்ந்த உலகச் செல்வந்தர்களில் ஒருவர்.
1953 - உமர் தம்பி, தமிழ்க் கணிமைக்கு சிறந்த பங்களிப்புக்களை வழங்கியவர் (இ. 2006)

இறப்புகள்

1838 - ரோணியஸ், ஜெர்மனியத் தமிழறிஞர் (பி. 1790)
1849 - ஜேம்ஸ் போக், ஐக்கிய அமெரிக்காவின் 11வது அதிபர் (பி. 1795)
1948 - ராஜா சர் அண்ணாமலை செட்டியார், (பி. 1881)
1971 - வெண்டல் ஸ்டான்லி, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1904)
2008 - தங்கம்மா அப்பாக்குட்டி, ஈழத்தின் ஆன்மிகவாதி (பி. 1925)

சிறப்பு நாள்

டென்மார்க் - கொடி நாள்

Thursday, June 14, 2012

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா?


ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா? முடியும் என்கிறது நம் தமிழ் செய்யுள். "கணக்கதிகாரம்" கொறுக்கையூரைச் சேர்ந்த காரி நாயனார் என்பவர் எழுதிய ஒரு தமிழ்க் கணித நூல்

"கீற்றெண்ணி முத்தித்துத் கீழாறினால் மாறி
... வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
...
பூசணிக்காய் தோறும் புகல்"

ஒரு பூசணிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று, ஆறு, ஐந்து இவற்றால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கையாகும்.

ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை "அ" என்க.
பாடலின் படி அதை 3,6,5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது "90அ" ஆகும் அதை பாதியாக்கினால் கிடைப்பது "45அ" ஆகும். அதை மீண்டும் மூன்றால் பெருக்க கிடைப்பது "135அ" ஆகும்.

ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிகையை அ=6 ஆறு எனக்கொண்டால் (135 * 6 = 810) 135 ஐ ஆறால் பெருக்க கிடைப்பது 810 ஆகும். எனவே பூசணியில் உள்ள விதைகளின் எண்ணிக்கை 810 ஆகும்.

வரலாற்றில் இன்று TODAY IN HISTORY ஜுன் 14

வரலாற்றில் இன்று TODAY IN HISTORY ஜுன் 14

நிகழ்வுகள்

1789 - பவுண்டி என்ற பிரித்தானியக் கப்பலின் மாலுமிகளின் கிளர்ச்சியை அடுத்து கப்பலின் தலைவனுடன் சேர்ந்து சிறிய படகொன்றில் தப்பிய 19 பேர் 7,400 கிமீ தூரம் பயணித்து திமோரை அடைந்தனர்.
... 1800 - நெப்போலியனின் பிரெஞ்சு இராணுவத்தினர் வடக்கு இத்தாலியில் ஆஸ்திரியர்களுடன் போரிட்டு வெற்றி பெற்று இத்தாலியை மீளவும் கைப்பற்றியது.
1807 - நெப்போலியனின் பிரெஞ்சு இராணுவத்தினர் போலந்தின் பிரீட்லாந்து என்ற இடத்தில் ரஷ்யப் படைகளுடன் மோதி வெற்றி பெற்றனர்.
1821 - வடக்கு சூடானின் சென்னார் பேரரசன் மன்னன் ஏழாம் பாடி என்பவன் ஒட்டோமான் பேரரசின் தளபதி இஸ்மயில் பாஷாவிடம் சரணடைந்ததன் மூலம் சென்னார் பேரரசு முடிவுக்கு வந்தது.
1846 - கலிபோர்னியாவின் சொனோமா என்ற இடத்தில் குடியேறிய ஆங்கிலேயர்கள் மெக்சிக்கோ மீது போரை ஆரம்பித்து கலிபோர்னியாவைக் குடியரசாக அறிவித்தனர்.
1872 - கனடாவில் தொழிற் சங்கங்கள் அதிகாரபூர்வமாக்கப்பட்டன.
1900 - ஹவாய் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.
1931 - பிரான்சில் சென் ஃபிலிபேர்ட் என்ற படகு மூழ்கியதில் 500 பேர் இறந்தனர்.
1940 - இரண்டாம் உலகப் போர்: பாரிசை ஜெர்மனி கைப்பற்றியது.
1940 - போலந்தின் 728 போர்க் கைதிகள் நாசிகளின் அவுஷ்விட்ஸ் வதை முகாமின் முதலாவது சிறைக்கைதிகளாக சேர்க்கப்பட்டனர்.
1941 - அனைத்து ஜெர்மனிய மற்றும் இத்தாலிய சொத்துக்களையும் ஐக்கிய அமெரிக்கா முடக்கியது.
1941 - எஸ்தோனியர்கள், லாத்வியர்கள் மற்றும் லித்துவேனிய மக்கள் பலரை சோவியத் ஒன்றியம் நாட்டை விட்டு அவர்கள் பகுதிகளை விட்டு வெளியேற்றி வதைமுகாம்களுக்கு அனுப்பியது.
1962 - ஐரோப்பிய வான் ஆராய்ச்சி மையம் பாரிசில் அமைக்கப்பட்டது.
1967 - சீனா தனது முதலாவது ஐதரசன் குண்டைச் சோதித்தது.
1967 - மரைனர் 5 விண்கலம் வீனஸ் கோளை நோக்கி ஏவப்பட்டது.
1982 - போக்லாந்து தீவுகளின் தலைநகர் ஸ்டான்லியில் நிலைகொண்டிருந்த ஆர்ஜெண்டீனப் படைகள் பிரித்தானியப் படைகளிடம் சரணடைந்ததை அடுத்து போக்லாந்து போர் முடிவுக்கு வந்தது.
1985 - TWA 847 விமானம் கிறீசில் இருந்து ரோம் செல்லுகையில் ஹெஸ்புல்லா இயக்கத்தினரால் கடத்தப்பட்டது.
1999 - தென்னாபிரிக்காவின் அதிபராக தாபோ உம்பெக்கி பதவியேற்றார்.
2002 - கராச்சியில் அமெரிக்க தூதராலயத்துக்கு முன்னர் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 12பேர் கொல்லப்பட்டு 50 பேர் காயமடைந்தனர்.
2003 - விடுதலைப் புலிகளின் வணிகக் கப்பல் ஒன்று இலங்கைக் கடற்படையினரால் தாக்கி அழிக்கப்பட்டதில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
2007] - காசாப் பகுதி தமது முழுக்கட்டுப்பாட்டில் வந்திருப்பதாக ஹமாஸ் இயக்கம் அறிவித்தது.

பிறப்புகள்

1899 - யசுனாரி கவபட்டா, நோபல் பரிசு பெற்ற யப்பானிய எழுத்தாளர் (இ. 1972)
1929 - சே குவேரா, சோசலிசப் புரட்சியாளர் (இ. 1967)
1969 - ஸ்ரெஃபி கிராஃப், ஜெர்மனிய டென்னிஸ் வீராங்கனை

இறப்புகள்

1965 - கந்தமுருகேசனார், ஈழத்துப்பெரியார், மூதறிஞர் (பி. 1902)
1968 - சல்வடோரே குவாசிமோடோ, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய எழுத்தாளர் (பி. 1901)

சிறப்பு நாள்

போக்லாந்துத் தீவுகள் - விடுதலை நாள்
ஐக்கிய அமெரிக்கா - கொடி நாள்
ஆப்கானிஸ்தான் - அன்னையர் நாள்
உலக இரத்த வழங்கல் நாள்
உலக வலைப்பதிவர் நாள்

மருத்துவ குணம் நிறைந்த மாதுளம் பழம்

மருத்துவ குணம் நிறைந்த மாதுளம் பழம்

மாதுளம் பழத்திற்கு `மாதுளங்கம்' என்ற பெயரும் உண்டு. மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன.
மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்திஅதிகமாகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது.
இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது, இருமலை நிறுத்துகிறது.
புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. ரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. குடற்புண்களை (அல்சர்) குணமாக்குகிறது.
மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் நீர்த்துப் போன சுக்கிலம் கெட்டிப்படுகிறது. மேக நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மாதுளை விதைகளைச் சாப்பிட்டால் பிரமேகம் பாதிப்பிலிருந்து நிவர்த்தியாகும்.
இதய நோய்கள், இதய பலகீனம், நிவர்த்தியாகும்.இரத்த விருத்தி ஏற்படும். சீதபேதிக்கு மாதுளை சிறந்த நிவாரணம் அளிக்கிறது. தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும்.
தொண்டை, மார்பகங்கள் நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.
ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம் பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.
மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். அடிக்கடி மயக்கம் உள்ளவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் நன்மை கிடைக்கும்.
மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும். மாதுளம் பழச்சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்துச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். பற்களும், எலும்புகளும் உறுதிப்படும். மாதுளம்பழத்தின் அனைத்து நன்மையையும் பெறலாம்.
மாதுளம்பழத்தின் மேல்புறம் ஒரு துவாரத்தைச் செய்து அதில் உள்ளுக்குச் சாப்பிடும் பாதாம் எண்ணெய் 15 மில்லிக்குக் குறையாமல் செலுத்தி எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் எண்ணெய் பூராவும் பழத்தில் கலந்துவிடும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டால் கடுமையான இதய வலி நீங்கி விடும்.
பெரிய இனிப்பு மாதுளம் பழத்தில் ஆறு எடுத்து இதன் முத்துக்களை ஒரு பாத்திரத்தில் போட்டு 200 கிராம் சீனியை இதில் கலந்து வைத்து அரைமணி நேரம் வரை இருந்தால், முத்துக்களின் சாறு நீர்த்துப் பிரியும். இந்த சாறு அரைலிட்டர் சேர்ந்தால், ஒரு கிலோ சீனியை பாகுபதத்தில் காய்ச்சி, இதனுடன் மாதுளம் பழச்சாற்றைக் கலந்து வைத்துக் கொண்டு மீண்டும் பாகுபதம் வரை சூடு செய்து பத்திரப்படுத்திக் கொண்டு தினசரி 30 மில்லி அளவு எடுத்து, தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால், பித்தநோய்கள் நீங்கும். ஆயாசம் அகலும். வீரிய விருத்திக்கான டானிக் ஆகும். நினைவாற்றல் பெருகும்.
மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகி விடும்.
மாதுளம்பூக்களை மருந்தாகப் பயன்படுத்தும் போது, இரத்த வாந்தி, இரத்த மூலம் வயிற்றுக் கடுப்பு, உடல் சூடு தணியும். இரத்தம் சுத்தியடையும், இரத்த விருத்தி உண்டாகும்.
மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும். மூக்கில் இரத்தம் வடியும் நோய் உள்ளவர்கள், மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால், இரத்தம் கொட்டுதல் நின்று விடும். பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கிற்கு இதே மருந்தை மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.
மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மாதுளம் மரப்பட்டை அல்லது வேர்ப்பட்டையை வெட்டி பச்சையாக இருக்கும்போதே இதன் எடைக்கு எட்டு மடங்கு தண்ணீர் சேர்த்து பாதியாக சுண்டக் காய்ச்சியதை, காலை நேரத்தில் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள தட்டைப் பூச்சிகள் மலத்துடன் வெளியேறி விடும்.
மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கட்டிக் கொண்டால் தலைவலி தீரும். வெப்பநோய் தீரும். மாதுளம் பூக்கள் அறுகம்புல், மிளகு, சீரகம் அதிமதுரம். சமமாகச் சேர்த்து கஷாயம் தயாரித்துக் கொண்டு, வேளைக்கு 30 மில்லி எடுத்து இதில் பசு வெண்ணெய் சேர்த்துக் கலக்கித் தொடர்ந்துசாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை நீங்கும்.
அலர்ஜியை நிவர்த்திக்கும் மூலச்சூடும் வெட்டை நோயும் நீர்க்கடுப்பும் நீங்க மாதுளம்பூச்சாறு 300 கிராம் சேகரித்து அதில் 200 கிராம் பசு நெய் சேர்த்து பூச்சாறு சுண்டும் அளவிற்கு காய்ச்சி நெய்யை வடித்து வைத்துக் கொண்டு தினசரி இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை சாப்பிட்டு வந்தால், இரண்டு மாதத்தில் கடுமையான சயரோகப்பாதிப்பு, படிப்படியாகக் குறைந்து விடும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து உடல் தேறும். தொடர்ந்து இருபது தினங்கள் இதே நெய்யை காலை மாலை சாப்பிட்டு வந்தால் எல்லா விதமான மூலநோயும் நீங்கும்.

மானம் காக்கும் தாவரம்!

மானம் காக்கும் தாவரம்!

மனிதன் தனது சொந்த முயற்சி காரணமாக முன்னேறினான், தொடர்ந்து முன்னேறி வருகிறான். அவன் தனது அறிவுத் திறன் காரணமாக பல அதிசயக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினான். இவ்வாறு அவன் நாகரீக ஏணியில் ஏறினான். இந்த உண்மைகள் ஒருபுறம் இருக்க, மனிதனுக்கு ஆடைகளை வழங்கி அவனை உண்மையான நாகரீக மனிதனாக்கிய பெருமை பருத்திச் செடிக்குத்தான் உரியது. பருத்தியில் இருந்து நூல் நூற்ற மனிதன், ஆடைகளை நெசவு செய்து கொண்டான்.
குகை மனிதன் விலங்குகளைப் போலவே திரிந்துவந்தான். அவன் தனது மானத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்காக தழைகளையும், மரப் பட்டைகளையும் ஆடைகளாக உபயோகித்தான். எத்தனையோ நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் பருத்தியின் உபயோகத்தை மனிதன் தெரிந்துகொண்டான்.
18-வது நூற்றாண்டு வரையில் பட்டு நூலைப் போலவும், கம்பளியைப் போலவும், பருத்தி நூல் நெசவும் கையாலேயே நடந்தது. பெரும்பாலான வெப்ப நாடுகளில் பருத்திச் செடிகளைக் காணலாம். பருத்திக் காய் நன்கு முற்றி, நெத்தாகி வெடித்ததும் பருத்தி வெளிப்படுகிறது. பருத்தி, விலங்குகளின் ரோமங்களில் இருந்து நூல் நூற்பதற்கு மனிதன் எவ்வாறு கற்றுக் கொண்டான்?
கற்காலத்து மனிதன் கூடைகளை முடையவும், கயிறுகளைத் தயாரிப்பதற்கும் நாணல், கோரை, தோல் துண்டுகள் ஆகியவற்றை முறுக்கத் தெரிந்துகொண்டான். அதன் பின்னர் பருத்தியிலிருந்தும் நூல் நூற்கலாம் என்ற சிந்தனை அவனுக்கு ஏற்பட்டிருக்கலாம். சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சணல் நூற்பு வழக்கத்தில் இருந்ததாகத் தெரிகிறது.
பருத்தியில் இருந்து நூல் நூற்பதற்கு இந்தியாவே வழிகாட்டியது. கிறிஸ்து பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பே பருத்தியையும், பருத்தி நூலில் நெசவு செய்யப்பட்ட ஆடைகளையும் அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்திருக்கிறது இந்தியா.
பருத்தி என்றால் என்ன என்பது பற்றியும், அதிலிருந்து நூல் நூற்று ஆடைகள் தயாரிக்க முடியும் என்பதையும் இந்தியர்கள் அறிந்துகொண்டிருந்தனர்.
ஐரோப்பா நாகரீக வாசத்தை உணராத காலத்திலேயே இந்தியா நாகரீகத்தில் தலைசிறந்த நாடாக விளங்கியது. இங்கு சாதாரணமாக நடைபெற்று வந்த பருத்தி நூல் நூற்பும், நெசவும் இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். பண்டைய இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிலும் கை ராட்டையாலும், கையாலும் நூல் நூற்று வந்தனர்.
பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு பிரிட்டீஷ்காரர்கள் பருத்தியின் உபயோகத்தைத் தெரிந்துகொண்டார்கள். லங்காஷயரிலும், மான்செஸ்டரிலும் ஆலைகள் உற்பத்தி செய்த துணிகளை இந்தியா மீது திணிப்பதற்கும், இந்தி யாவின் புராதன நெசவுத் தொழிலை அழிப்பதற்கும் ஆங்கிலேயர்கள் தமது ஆதிக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டு புரிந்த கொடுமைகள் கணக்கில் அடங்காது.
டாக்கா மஸ்லின் துணியைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். கைக்குள் அடங்கக்கூடிய மஸ்லின் துணியை டாக்கா நெசவாளர்கள் தமது நுட்பமான கைத்திறனால் உற்பத்தி செய்தனர். பொறாமை காரணமாக அந்த நெசவாளர்களின் கட்டை விரல்களை வெள்ளையர்கள் துண்டித்தனர்.
வெள்ளையர்கள் செய்த கொடுமைகளே தேசபக்தக் கனலாக மாறி ஒவ்வொரு இந்தியனின் உள்ளத்திலும் எரிய ஆரம்பித்தது. அந்தக் கனலை மகாத்மா காந்தி விசிறி விட்டார்.
அவரது சத்தியாகிரகப் போராட்டத்தில் அன்னியத் துணி எரிப்பு, நிராகரிப்பு, கை ராட்டையிலும், தக்ளியிலும் நூல் நூற்பு ஆகியவை முக்கிய இடம் பெற்றன.
காந்தியடிகள் ஆரம்பித்த கதர் இயக்கம் வெறும் நூலையும், துணியையும் மட்டும் சார்ந்திருக்கவில்லை. அந்த இயக்கம் பொருளாதார முனையில் பிரிட்டீஷ் ஆட்சியை எதிர்த்துப் போராடுவதற்கான ஆயுதமாகத் திகழ்ந்தது. பருத்தியையும், பருத்தி நூலையும் பற்றிக் கூறும் வரலாற்றில் மகாத்மா காந்திக்கு முக்கிய இடம் உண்டு.

புற்றுநோயைத் தடுக்கும் தக்காளி!

புற்றுநோயைத் தடுக்கும் தக்காளி!

`புராஸ்டேட் கேன்சர்' என்பது ஆண்களை அதிகளவில் தாக்கும் புற்றுநோய். குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்தப் புற்றுநோய் அதிகம் ஏற்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
புராஸ்டேட் புற்றுநோய், ஆண் உறுப்புக்கு இணையான சுரப்பித் திரள்களால் ஆன பெருஞ்சுரப்பியைத் தாக்குகிறது. இதனால் சிறுநீரக மண்டலம் பாதிக்கப்படுகிறது. விளைவு, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் போலத் தோன்றும். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படும். சிறுநீருடன் ரத்தம் கலந்துபோகும் அறிகுறியும் ஏற்படலாம்.
இந்நிலையில், புராஸ்டேட் புற்றுநோயைக் குணப்படுத்தும் ஆற்றல் தக்காளிக்கு இருப்பதாக டாக்டர் மைக்கேல் டபிள்யூ ஸ்மித் கூறுகிறார். தக்காளிக்கு, அதுவும் சமைத்த தக்காளிக்கு புராஸ்டேட் புற்றுநோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக அவர் கூறுகிறார்.
தக்காளியில் காணப்படும் `லைக்கோபீன்' என்ற பொருள்தான் புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படுகிறது. தர்ப்பூசணி பழம், இளஞ்சிவப்பு திராட்சைப் பழங்களிலும் லைக்கோபீன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, June 13, 2012

குடல் கேன்சரை குணமாகும் காலிஃப்ளவர்

குடல் கேன்சரை குணமாகும் காலிஃப்ளவர்

சமையலில் பயன்படுத்தப்படும் காலிஃப்ளவர் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த பூக்களில் மாவுச்சத்து, உயிர்சத்து, சிறிதளவு கால்சியம், சோடியம், கொழுப்பு ஆகியவை காணப்படுகின்றன. இந்த பூவில் கண்பார்வைக்குத் தேவையான கரோட்டின் சத்து அதிகம் உள்ளது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

காலிஃப்ளவரில் ஆண்டின் ஆக்ஸிடேசன் அதிகம் உள்ளது. வைட்டமின் சி, மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துக்களும் காணப்படுகின்றன. மேலும் பீட்டா கரோட்டீன் போன்றவையும் உள்ள சத்தான உணவாகும். இதன் மூலம் மன அழுத்தம், இதய நோய்களும் குணமாகும். புற்றுநோய் செல்களையும் கட்டுப்படுத்துகிறது. காலிஃப்ளவரில் வைட்டமின் கே, மற்றும் ஒமேகா 3 சத்துக்கள் உள்ளன.

இதை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். ஒபிசிட்டி குணமடையும். இதில் நார்ச்சத்து காணப்படுவதால் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. வயிற்றுக்கு இதமளித்து வயிறு தொடர்புடைய நோய்களை குணமாக்குகிறது. அல்சர் மற்றும் குடல் கேன்சரையும் கட்டுப்படுத்துகிறது. இந்த பூக்களில் சின்னஞ்சிறு புழுக்கள் காணப்படும்.

எனவே நீரை கொதிக்க வைத்து அதில் மஞ்சத்தூளை போட்டு கொதிக்க வைத்து பின்னர் சமையலில் உபயோகப்படுத்த வேண்டும். இது சூட்டை தணிக்கும் தன்மையுடையது. மூலத்தை கட்டுப்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்கும்.

ஜுன் 8

ஜுன் 8
உலகக் கடல் நாள்
1405 - யோர்க் ஆயர் ரிச்சார்ட் ஸ்க்ரோப், நோர்ஃபோக் இரண்டாம் நிலை மன்னர் தொமஸ் மோபிறே ஆகியோர் மன்னர் இங்கிலாந்தின் நான்காம் ஹென்றியின் ஆணையின் பேரில் தூக்கிலிடப்பட்டனர்.
1783 - ஐஸ்லாந்தில் லாக்கி எரிமலை வெடிக்க ஆரம்பித்ததில் எட்டு மாதங்களில் வரட்சி, மற்றும் வறுமை காரணமாக 9,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: டென்னசி அமெரிக்கக் கூட்டில் இருந்து விலகியது.
1887 - ஹேர்மன் ஹொலரித் துளையிடும் அட்டை கொண்ட கணிப்பானுக்கான காப்புரிமம் பெற்றார்.
1929 - ஐக்கிய இராச்சியத்தில் முதற் தடவையாக தொழிற் கட்சி ஆட்சி அமைத்தது.
1941 - இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகள் சிரியா, மற்றும் லெபனான் மீது தாக்குதலை ஆரம்பித்தன.
1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய நீர்மூழ்கிக் கப்பல்கள் அவுஸ்திரேலியாவின் சிட்னி, நியூகாசில் நகரங்கள் மீது குண்டுத்தாக்குதலை நடத்தின.
1984 - அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஓரினச்சேர்க்கை சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டது.
1992 - முதலாவது உலகக் கடல் நாள் கொண்டாடப்பட்டது.
1995 - படிவ நிரலாக்க மொழி பி.எச்.பி வெளியிடப்பட்டது.
1996 - நிலத்தடி அணுவெடிச் சோதனை ஒன்றைச் செய்தது சீனா.
2001 - பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் தொழில் கட்சி வெற்றி பெற்று Tony Blair மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினார்.
2006 - அல் குவைதாவின் ஈராக்கியத் தலைவர் அபு முசாப் அல்-ஜர்காவி அமெரிக்க விமானக் குண்டுவீச்சில் கொல்லப்பட்டார்.
2006 - ஒஸ்லோ பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகுவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்தனர்.
2007 - அட்லாண்டிஸ் விண்கப்பல் 7 பேருடன் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஏவப்பட்டது.
2007 - இலங்கையில் புத்தளத்தில் 9 உடல்கள் மிகவும் சிதைந்த நிலையில் காவற்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டன.

பழங்கள்



அவசர காலத்தில் எதையெல்லாமோ மறந்து போனோம். அதில் அந்தந்த சீசனுக்கு கிடைக்கும் பழங்களையும் தான். இயற்கையே மனிதனுக்கு சூட்சுமாக காட்டுவதை பற்றி நாம் அக்கறை கொள்வதில்லை. 'இப்போ நான் பழமா பழுத்துருக்கேன்.சாப்பிட்டு போனீங்கன்னா உங்க உடம்புக்கு நல்லது' ன்கு எந்த பழமும் வாய் திறந்து சொல்ல முடியாது. வெயில் காலத்தில் நெல்லிக்காய் சந்தைக்கு வரும். அதை வாங்கி வாயில் பாட்டு சுவைத்தால் உடம்புக்கு குளிர்ச்சி. எவ்வளவு தூரம் நடந்தாலும் களைக்காது. நெல்லிக்காய் வற்றலை வாயில் போட்டு புட்பால் விளையாடினால் ரொனால்டோவை கூட மிஞ்சி விடலாம். அது தான் அவ்வை கொடுத்த நெல்லிக்கனிக்கு சிறப்பு.சரி அதை பிறகு பார்க்கலாம்.



இப்போது சீத்தாப்பழ சீசன். சின்னப்பிள்ளைகள் கையில கெடச்சா அப்படியே ஒவ்வொரு விதையிலயும் ஒட்டியிருக்கிற வெண்மை நிற கரகரப்பான இனிப்போட இருக்கிற சதையை சீதாப்பழத்துல இருந்து எடுத்து சாப்பிடற விதமே அழகு. இந்த பழத்தின் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள்.முடிந்தால் உங்கள் வீட்டில் ஒரு சீதாப்பழ மரத்தை நடுங்கள்.

சீதாப்பழத்திற்கு ஆங்கிலத்தில் 'கஸ்டர்ட் ஆப்பிள்' என்று பெயர். இதன் மரப்பெயர் 'அனோனா ஸ்குவோமோசா'. தென்அமெரிக்காவிலிருந்து வந்து இந்தியாவில் பயிரானது. அதாவது இதன் தாய்வீடு அமெரிக்கா பகுதிகள் தான். இந்தியாவிலேயே தென்இந்திய பகுதிகளில் தான் ரொம்பவே செழிப்பா வளருது.
இந்த சீதா மரம் விதை,நெருக்கு ஒட்டு முறைகளால் கன்றுகளாக வளர்க்கப்பட்டு சிறிய மரமாக வளர வகை செய்யப்படுகிறது. எவ்வளவு தான் வெயிலிடிச்சாலும், மழை பெய்தாலும் அதையெல்லாம் எதிர்த்து சளைக்கமால் வளரும் இந்த சீதாப்பழம்.

விதையை வெச்சு சாகுபடி செஞ்சா சீதாசெடி மரமா வளர்ந்து வர்றதுக்கு 4 ஆண்டு ஆகும். நெருக்கு ஒட்டு மூலம பதியமா போட்டு வளர்த்தா,இரண்டாண்டுகளில் காய்ப்புக்கு வரும். ஒரு மரத்தில இருந்து ஆண்டுக்கு 25 முதல் 30 கிலோ பழங்கள் கிடைக்கும்( நீங்க சாப்பிட்டது போக பக்கத்துக்கு வீட்டுக்கு காரங்களுக்கு விற்கலாம்,மனம் இருந்தால் இலவசமாக கொடுக்கலாம்)

சீத்தா மரத்துல இருந்து அது காயா இருக்கும் போதே பறிச்சு பழுக்க வெக்கணும். பழத்திலிருந்து சாறு எடுத்தும் சாப்பிடலாம்.
இதில இருக்கிற சத்துக்கள பார்ப்போம்.

புரதம் 1.6, கொழுப்பு 0.4,நார்ப்பொருள் 3.1,மாவுப்பொருள் 23.5,கால்சியம் 17 மிகி.இரும்பு 1.5 மிகி,தயமின் 0.07,ரைபோபிளவின் 0,17மிகி,நியாசின் 1,3 மிகி,வைட்டமின் சி 37 மிகி,மெக்னீசியம் 48 மிகி,பொட்டாசியம் 340 மிகி,தாமிரம் 0,52 மிகி,குளோரின் 37 மிகி,ஆக்சாலிக் அமிலம் 30 மிகி,சக்தி 104 கலோரிகள்.

மருத்துவ குணஙகள் இதில் அதிகமாக இருக்கிறது. சீதாப்பழ மரத்தின் இலை,பட்டை,காய்,பழம்,விதை அனைத்துமே மருந்து தான். காய்துவர்ப்பாக இருப்பதால் கழிச்சல்,சீதக்கழிச்சல் இருக்கும் போது சாப்பிடலாம். சற்று நேரத்தில் இந்த கழிச்சல் நோய் சரியாக போகும். பழம் இனிப்பாகவும், சுவையாகவும் இருப்பதால் ரத்தம் அதிகம் ஊற வழிசெய்யும்.

உடல் வெயிட் போட நினைப்பவர்கள் நிறைய சீதாப்பழம் சாப்பிட்டால் போதும். சில மாதங்களில் நன்றாக குண்டடித்து விடலாம். பழம் உடலுக்கு குளிர்ச்சி தருவதாக இருப்பதால் உடல் எரிச்சல் இருப்பவர்கள் இதை வாங்கி சாப்பிட்டு உடலின் எரிச்சலை தணிக்கலாம்.

வாந்தி அதிகம் இருக்கும் போது சீதாப்பழம் சாப்பிட்டால் வாந்தி நின்று போகும். டி,பி என்ற காசநோய் இருக்கும் நோயாளிகள் சீதப்பழத்தை கண்டிப்பாக சாப்பிடணும். ரொம்ப நல்லது. காசநோயின் தீவிரத்தை குறைக்கும்.

சீதாப்பழத்தின் விதைகளை பொடியாக ஆக்கி ஆறாத புண்களின் மேல் போட்டால் அந்த புண்கள் நாளடைவில் காய்ந்து ஆறிவிடும். அதே போல் இலைகளை தண்ணீர் விடாமல் அரைத்து புண்களின் மேல் பற்று போல் போட்டாலும் புண்கள் ஆறிவிடும்.

பிரேசில் நாட்டில் இலைகளை அரைத்து பற்று போட்டு புண்களை குணப்படுத்துகிற பழக்கம் இப்போதும் உண்டு.தலையில் பேன்கள் அதிகம் இருந்தால் விதையின் பொடியை தலைக்கு தேய்த்து குளித்தால் பேன்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.

ஒற்றைத் தலைவலி'க்குக் காரணம் என்ன?

ஒற்றைத் தலைவலி'க்குக் காரணம் என்ன?

ஒற்றைத் தலைவலி ஏற்பட முக்கியக் காரணம், அதிகமான மன அழுத்தம்தான். ஒற்றைத்
தலைவலி உள்ளவர்கள் மிகுந்த கண்டிப்புடனும், வளைந்து கொடுக்காமலும்
இருப்பார்கள். ஒற்றைத் தலைவலிக்கு வயிறு மற்றும் பார்வையுடனும் தொடர்பு
இருக்கிறது. எனவே வயிற்றைச் சுத்தமாக வைத்துக்கொள்வதும், பார்வைத் திறனை
அவ்வப்போது பரிசோதித்து தகுந்த நிவர்த்திகளைச் செய்துகொள்வதும் அவசியம்.

குறைவான சர்க்கரை அளவு, ஒவ்வாமை, சில மருந்துகளை அதிகமாக எடுத்துக்கொள்வது,
சத்துக் குறைபாடு, அதிகப்படியான வேலை, சரியான தூக்கம், ஓய்வு இல்லாமை,
அதிகப்படியான குடிப் பழக்கம், புகைப் பழக்கம், அதீத பாலுணர்வு இச்சை
போன்றவையும் ஒற்றைத் தலைவலிக்குக் காரணமாக அமைகின்றன.

இடைவிடாத தலைவலி, வாந்தி, உடல் வலி, கண் மங்குதல், வயிறுப் பிரச்சினைகள்
ஆகியவை ஒற்றைத் தலைவலியின் அறிகுறிகளாக இருக்கின்றன.

மேலே குறிப்பிட்டவாறு, பல்வேறு காரணங்களால் ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது. எனவே
எந்தக் காரணத்தால் தங்களுக்கு ஒற்றைத் தலைவலி ஏற்பட்டிருக்கும் என்று
கண்டறிந்து தீர்வு காண முயல வேண்டும்.

எலுமிச்சைத் தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்றுப் போடுவது
ஒற்றைத் தலைவலிக்கு நல்ல பலனைத் தரும்.

மரங்கள்.. மனிதர்கள்.. மகத்தான உறவுகள்..!

மரங்கள்.. மனிதர்கள்.. மகத்தான உறவுகள்..

உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன்-5

வ்வொரு ஆண்டும் ஜூன் 5-ம் நாள் உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளை சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தினமாக ஐக்கிய நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. அரசியல் கவனத்தையும் மற்றும் செயல்முறைகளையும் அதிகரிக்கவும் இந்த நாள் பயன்படுகிறது.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருத்தின் அடிப்படையில் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. அதற்கேற்ப இளைஞர்களும், குழுக்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தொழில்வர்த்தக ஊடக அமைப்புகளும், சுற்றுச்சூழலை மேம்படுத்தி அதை பாதுகாப்பதில் தங்களின் உறுதிபாட்டை வெளிப்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக UNESCO மற்றும் WHO அமைப்புகள் வருடம் தோறும் இந்த பிரச்சனையை கருத்தில் கொண்டு பல நாடுகளின் பிரதிநிதிகளை கொண்டு பல திட்டங்களை தீட்டி வருகிறது.
2012 ஆம் ஆண்டின் மையக்கருத்தாக "Green Economy: Does it include YOU'' என்ற கருத்தை வலியுறுத்துகிறது.
***

இன்றைய சுற்றுச்சூழல் பிரச்சினைகள்...?

இன்றைய சூழலில் நகரமயமாதலால் காடுகள் பெருமளவு அழிக்கப்படுகிறது. இன்னும் அழித்துக்கொண்டே தான் இருக்கிறார்கள். இதன் பின்விளைவாக புவி வெப்பமயமாதல் காரணமாக துருவப்
பகுதிகளில் உள்ள பெருமளவு பனிக்கட்டிகள் உருகுவதால் கடல் மட்டம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மேலும் பருவநிலை மாற்றமும் ஏற்படுகிறது. சுனாமி, நிலநடுக்கம், பூகம்பம் மற்றும் கடல் சீற்றம் போன்ற பேரழிவு சீற்றங்களும் ஏற்படுகிறது.
மக்கள் தொகை பெருக்கத்தாலும் புதுப்புது நோய்கள் பரவிய வண்ணம் உள்ளது. 2005 ஆம் ஆண்டின் மதிப்பீட்டின் படி சுமாராக 8,90,000 ஏக்கர் அளவு மரங்கள் வெட்டப்படுகிறது என்று United Nations Food and Agriculture Organization (FAO) அமைப்பு தெரிவிக்கிறது. இந்த மதிப்பீட்டானது வெப்பமண்டல பகுதிகளில் எடுக்கப்பட்ட கணக்கீடாகும்.
***

நகரங்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள்

நகரங்களில் இன்றைய முக்கிய பிரச்சினையாக மின்கழிவுகள் பூதாகரம் எடுத்து வருகிறது.இது சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு ஒரு பெரிய சவாலாக இருந்துகொண்டு இருக்கிறது.
மின்கழிவுகளை பொறுத்தவரை தற்போது மூன்று அடிப்படை கொள்கைகள் உலக நாடுகளால் பின்பற்றப்படுகிறது.
1. குறைப்பது (Reduce)
மின் மற்றும் மின்னியல் சாதனங்களின் உற்பத்தியை குறைக்க வேண்டும். இதற்கு பொருள் நாம் மின்னியல் சாதனங்களின் தேவையில்லாத பயன்பாட்டை தவிர்க்கவேண்டும். நம்மால் முடிந்தவரை மின்னியல் சாதனங்களின் ஆயுள்காலத்தை அதிகமாக்க வேண்டும்.
2. மறு பயன்பாடு (Recovery)
மின்னியல் சாதனங்களை திரும்ப திரும்ப சரிசெய்து உபயோகிக்க வேண்டும். வளர்ந்த நாடுகள் தங்களிடம் உபயோகிக்கும் நிலையில் உள்ள மின்னியல் கழிவுகளை பின் தங்கிய மற்றும் வளரும் நாடுகளுக்கு உபயோகப்படுத்த கொடுக்க வேண்டும்.
3. மீள் சுழற்சி (Recycle)
மீள்சுழற்சி என்பது மின்னியல் கழிவுகளிலிருந்து மூலப்பொருட்களை பிரித்தெடுத்தல். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் மின்னியல் கழிவுகளில் உள்ள உலோகங்களையும் தாதுக்களையும் மற்ற வளங்களையும் பிரித்தெடுக்க வேண்டும். அதற்கு சிறந்த மறுசுழற்சி தொழில்நுட்பங்களுடனும் பாதுகாப்புடனும் தொழிற்கூடங்கள் அமைந்திருக்க வேண்டும்.
***

தீர்வுகள்

* சுற்றுச்சூழல் பற்றி விழிப்புணர்வு மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும்.
* குழந்தைகளுக்கு பள்ளி பருவத்திலிருந்தே சுற்றுசூழல் விழிப்புணர்வு பற்றிய பாட திட்டங்களை வடிவமைக்க வேண்டும்.
* கல்லூரி மாணவர்களும் சுற்றுசூழல் சீர்கேட்டை தடுக்கும் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் மரங்கள் அழிக்கப்படாவண்ணம் மாற்று திட்டத்தையும் மேற்கொள்ள வேண்டும்.
* நகரமயமாதல் திட்டத்தை சரிவர பயன்படுத்தி நவீன கட்டமைப்புகள் கொண்ட கழிவு நீர் கால்வாய்களும் அமைக்கப்பட வேண்டும்.
இயற்கை வளங்களான நீர் நிலைகள், காடுகள், வனாந்திரங்கள், வனஜீவராசிகள், வளிமண்டலம், பறவைகள், சோலைகள், கடற்கரைகள் அனைத்தும் மனித குலத்துக்காக வடிவமைக்கப்பட்ட பொக்கிஷங்களாகும். மனிதகுலம், விலங்கினம், பறவையினம், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்வு இந்த சுற்றுச்சுழலின் சமநிலையிலேயே தங்கியுள்ளது. இச்சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச்சுழலை மட்டுமின்றி, உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் அமைந்து விடுகின்றது.
உயிருள்ள மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும். மனிதனின் இருப்புக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதைப் பலரும் உணருவதில்லை. மரங்கள் இல்லையெனில் நாம் இறந்துவிடுவோம். இதனாலேயே சுற்றுச்சூழலியலாளர்கள் மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுவதற்கு எதிராகப் பெரும் இயக்கங்களை முன்னெடுத்து வந்திருக்கிறார்கள். மனிதர்களினால் செய்யப்படக்கூடிய மிகவும் மூர்க்கத்தனமான செயல்களில் ஒன்று மரங்களையும் காடுகளையும் அழித்து அதன்மூலம் பூமியை ஒரு பாலைவனம் ஆக்குவதுதான். பாதுகாக்கப்பட்ட சில பகுதிகளையும் எட்டுவதற்கு கடினமான இடங்களையும் தவிர்த்து இந்த வனப்புமிகு உலகத்தின் பெரும்பகுதி இப்போது இழக்கபட்டுவிட்டது. எஞ்சியுள்ள காடுகளும் மிகவும் மோசமாகச் சீரழிக்கப்பட்டு வருகின்றன. மனித அபிவிருத்திக்காகவும் அடுத்த சந்ததிக்காகவும் இயற்கை வளங்களை மனிதன் திட்டமிட்டு பேண வேண்டிய பொறுப்புடையவன்.
இயற்கை வளங்களின் இன்றியமையாமையையும், அவற்றை பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் அடுத்த தலைமுறைக்கும் சொல்லி கொடுக்க வேண்டும்.

வரலாற்றில் இன்று TODAY IN HISTORY ஜுன் 9

வரலாற்றில் இன்று TODAY IN HISTORY ஜுன் 9

நிகழ்வுகள்

68 - ரோமப் பேரரசன் நீரோ தற்கொலை செய்து கொண்டான்.
... 1873 - இரு வாரங்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்ட லண்டன் அலெக்சாந்திரா அரண்மனை தீயினால் அழிந்தது.
1903 - அநுராதபுரத்தில் இடம்பெற்ற கலவரத்தில் கத்தோலிக்க ஆலயம் ஒன்று பௌத்தர்களினால் சேதமாக்கப்பட்டு மதகுரு தாக்கப்பட்டார்.
1923 - பல்கேரியாவில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
1928 - அவுஸ்திரேலியாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் முதற்தடவையாக சார்ல்ஸ் கிங்ஸ்போர்ட் ஸ்மித் வானூர்தியில் கடந்தார்.
1934 - வால்ட் டிஸ்னியின் டொனால்ட் டக் வரைகதை வெளிவந்தது.
1935 - வடமேற்கு சீனாவில் ஜப்பானியரின் ஆக்கிரமிப்பை சீனக் குடியரசு அங்கீகரித்தது.
1944 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் கிழக்கு கரேலியாவினுள் ஊடுருவியது.
1946 - பூமிபோன் ஆடுல்யாடெ தாய்லாந்தின் அரசனாக முடி சூடினார். இவரே இன்று உலகில் மிக நீண்டகால அரசர் ஆவார்.
1962 - தங்கனீக்கா குடியரசாகியது.

பிறப்புகள்

1945 - கிரண் பேடி, இந்தியாவின் முதல் பெண் இந்திய காவல் சேவை அதிகாரி
1975 - ஆன்ட்ரூ சைமன்ஸ், அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்
1977 - பேஜா ஸ்டொயாகொவிக், செர்பிய கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

68 - நீரோ, ரோமப் பேரரசன் (பி. 37)
1870 - சார்ல்ஸ் டிக்கன்ஸ், ஆங்கில எழுத்தாளர் (பி. 1812)
1946 - ஆனந்தா மஹிடோல், (எட்டாவது ராமா), தாய்லாந்து மன்னர் (பி. 1925)
1974 - மிகுவேல் ஆஸ்டூரியாஸ், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (பி. 1890)
1989 - ஜோர்ஜ் பீடில்ல், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1903)
1994 - ஜான் டின்பேர்ஜென், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1903);
1834 - வில்லியம் கேரி, பப்திஸ்த சபையைத் தொடக்கியவர்களில் ஒருவர், பைபிளைப் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்த்தவர் (பி. 1761)