பப்பாளி பழ பார் தயாரிக்க....................
பப்பாளி மரம் ஆண்டு முழுவதும் பலன் தரக்கூடியது. நல்ல வடிகால் வசதி கொண்ட எந்த மண்ணிலும் வளரும். எல்லா தட்பவெப்ப நிலையும் தாங்கி வளரும். தற்போது சந்தையில் பப்பாளி வரத்து சிறப்பாக உள்ளது. வாழைப்பழத்திற்கு அடுத்தபடி வருமானம் தரும் பப்பாளியில் சத்தும் ஏராளம். பப்பாளி பழம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். குறிப்பாக தற்போது பள்ளியில் படிக்கும் குழந்தைகளில் அதிகம் பேர் பார்வைக்கு குறைபாட்டால் பாதிப்புக்குள்ளாகின்றனர். கண்ணாடி அணிந்த மாணவ, மாணவிகள் ஏராளம்.
கண்களுக்கு அதிக சிரமம் கொடுப்பது, அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது உள்ளிட்ட காரணங்களால் தான் இது போல் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த குறைபாட்டுக்கு பப்பாளி ஒரு அருமருந்து. பப்பாளியில் வைட்டமின் ஏ 2020 மைக்ரோ கிராம் அளவு உள்ளது. வைட்டமின் பி 40 மில்லி கிராம், மற்றும் ரிபோபிளேவின் 250 மில்லி கிராம், இத்துடன் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஏராளமான தாதுஉப்புக்கள் உள்ளன.
பப்பாளி அஜீரணக்கோளாறு, குடற்புண், மூலம், மூச்சிறைப்பு, தோல் கொப்புளம் ஆகியவற்றை குணப்படுத்துகிறது. பப்பாளியில் இருந்து பெறப்படும் பெக்டின் என்ற வேதிப்பொருள் சிறுகுடலில் உருவாகும் ரத்தக்கசிவை சரிசெய்ய உதவுகிறது. வெயில் காலத்தில் அதிகம் கிடைக்கும் பப்பாளியை பதப்படுத்தி விடுவதன் மூலம் ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம். குறிப்பாக குழந்தைகள் விரும்பும் வகையில் பப்பாளி பழ பார் செய்து தரலாம். இதனை அவர்கள் விரும்பி உண்பார்கள். குறிப்பாக கிராம மகளிர் சுய உதவிக்குழுவினர் பப்பாளி பார் செய்து விற்பனை செய்யலாம்.
பப்பாளி பழ பார்
பப்பாளி பழக்கூழ்-1 குவளை, கான்பிளவர்-1 தேக்கரண்டி, சர்க்கரை-அரை தேக்கரண்டி, சிட்ரிக் அமிலம்-1 தேக்கரண்டி.
செய்முறை
பழுத்த பப்பாளியை தேர்வு செய்து இரண்டாக நறுக்கவும். விதை, நார்கள் மற்றும் தோலை நீக்கிவிடவும். பழக்கூழுடன் சர்க்கரை, சிட்ரிக் அமிலம், மற்றும் கான்பிளவர் ஆகியவற்றை கலந்து இளஞ்சூட்டில் நன்கு கிளறவும். அதிக கொதிப்பு ஏறி சுண்டிவிடாமல் எடுத்து எண்ணெய் தடவிய தட்டில் பழக்கூழை பரப்பவும். முதல் பழக்கூழ் உலர்ந்த பின் அடுத்த அடுக்கை பரப்பவும். சிறிது உலர வைத்து வில்லைகளாக்கி எடுத்து வைக்கவும்.

No comments:
Post a Comment