Saturday, May 19, 2012

வீட்டுத் தோட்டம் - எரு சேகரிப்பு


வீட்டுத் தோட்டம் - எரு சேகரிப்பு

நண்பர்களே! விவசாய நிலத்துக்கு எருவிட நிறைய முயற்சி எடுக்கவேண்டும் .நிறைய வேலைசெயயவேண்டும். செலவும் செய்ய வேண்டும்.
ஆனால் வீட்டுத்தோட்டத்துக்கு இவையெல்லாம் தேவையில்லை. அதன்மேல் நாட்டம் இருந்தால் போதும்.
ஏனென்று சொன்னால் தேவை மிகக் குறைவு. 
அதை சுலபமாகப் பெற முடியும் நாமே சுலபமாக உற்பத்தி செய்யவும் முடியும்.
சுலபமாகப் பெரும் முறை:
வீடுகள் இல்லாமல் செடிகொடிகள் புதர்போல் மண்டிக்கிடக்கும் இடத்துக்கு ஒரு மொபெட்டில் நல்ல ஒரு பையுடன் செல்லவேண்டும்.உடன் நிலத்தில் மண்ணை சுரண்டக்கூடிய மாதிரி ஒரு கெட்டியான தகரம் ஒன்றைக் கொண்டு செல்ல வேண்டும்.
அந்தச் செடிகளை ஒதுக்கிப் பார்த்தால் நிறைய இடங்களில் இலை தழை நிலத்தில் விழுந்து இற்றுப்போய் மக்கி மண்டிக் கிடக்கும். அதை அப்படியே சுரண்டிச் சேகரித்துப் பையில் நிரப்பிக்கொள்ளலாம்.
அது நல்ல இயற்கையான உரமாகும். அதை நிலத்திலோ தொட்டிகளிலோ இட்டு அதில் விதைகளையோ நாற்றுக்களையோ நட்டு வளர்த்தால் அருமையாக வரும். அதைச் சேகரிக்க யாருடைய அனுமதியோ செலவோ தேவை இல்லை.

1 comment:

Bharathi Dhas said...

Source:
http://www.drumsoftruth.com

அடுத்தவர்களின் பதிவை எடுத்தாலும் போது, அவர்களிடம் அனுமதி பெற வேண்டும், அல்லது குறைந்தபட்சம் அவர்களது இணையதள முகவரி ஆவது தரவேண்டும் என்பது தான் நாகரிகம் ரமேஷ்.