Saturday, May 26, 2012

கறிவேப்பிலை சாப்பிட்டால் புற்றுநோய் வராதாம்!


கறிவேப்பிலை சாப்பிட்டால் புற்றுநோய் வராதாம்!

பொதுவாக கறிவேப்பிலை உணவில் வாசனையை தர பயன்படுகிறது என்று தான் அனைவருக்கும் தெரியும். அதனால் தான் என்னவோ சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டுவிடுகிறோம். இனிமேல் அப்படி செய்ய வேண்டாம். ஏனென்றால் கறிவேப்பிலை சாப்பிட்டால் புற்றுநோய் வராது என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், அஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகளும் உள்ளன. இதனால் இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதோடு, நல்ல மணத்தையும் தருகிறது.

இத்தகைய குணங்கள் நிறைந்த கறிவேப்பிலை குறித்து ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் ஆய்வு செய்தனர். இதில் கறிவேப்பிலைக்கு புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உள்ளது என்று கண்டறிந்துள்ளனர். மேலும் இது ஒரு சிறந்த ஆன்டிஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்றும் கூறுகின்றனர். கருவேப்பிலை சாப்பிடுவதால் இதய நோய் வராது, மேலும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் நன்மை உண்டா? என்று திருவனந்தபுரத்திலுள்ள கேரளா பல்கலைக்கழகத்தில் மருத்துவ குழுவினர் ஆராய்ந்தனர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்றும், பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுக்கிறது என்றும் கண்டுபிடித்துள்ளனர். மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால் தான் டி.என்.ஏ. பாதித்து செல்களிலுள்ள புரோட்டின் அழிந்து, அதன் விளைவாக புற்றுநோய், வாதநோய்கள் வருகின்றன என்றும் கண்டறிந்துள்ளனர்.

இது தவிர நீரிழிவு நோயாளிகள் தினமும் கறிவேப்பிலை இலையை மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவு பாதியாக குறையும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

நன்றி - தமிழ் சமூகம்

No comments: