கோயமுத்தூர் மாவட்டம்
- அந்து உருண்டை மற்றும் கறடபூரத்தை சம அளவில் எடுத்து அதைத்தண்ணீரில் கலந்து, பசைபோல் செய்து, கால்நடைகள் மேல் தடவி 2 மணி நேரத்தில் பூச்சிகள் எல்லாம் கட்டுப்படும்.
- வீடுகளில் பருப்பு வகைகளை சேமிக்கும் போது தாங்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த, சேமிப்பு கலனில் அடிப்பகுதியில் மிளகாய் வற்றலுடன் வேப்பிலையை போட்டு வைத்தால் போதும்.
ஈரோடு மாவட்டம்
- நாட்டு மண்புழுவை சேகரிக்க, நாட்டுக்கலப்பு மாட்டின் சாண கரைசலில் கோணிப்பையை நனைத்து அதை நிழலான பகுதியில் ஒரு நாள் வைக்கவேண்டும்.
- பருத்தி, தட்டைப்பயிறு, நிலக்கடலை இவற்றின் தாக்கத்தை ஏற்படுத்தி சாறு உறிஞ்சும் பூச்சியான அசுவனியை கட்டுப்படுத்த, மஞ்சள் தூள், சாம்பல் இவற்றை 1 கிலோ எடுத்து 100 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கலாம்.
- நெல், பழ மரங்களின் வளர்ச்சியை துரிதப்படுத்தி 5 சதவீதம் புளித்த / நொதித்த தேங்காய் பாலினை (1 லிட்டர் பால் - 20 லிட்டர் நீர்) தெளிக்கவேண்டும்.
- கோமாரி நோய்க்கு, 200 கிராம் பலா இலை, 300 கிராம் வேப்பம் பட்டையை 5 லிட்டர் தண்ணீர் போட்டு அது 3 லிட்டராக வற்றச்செய்து அரை லிட்டர் வீதம் 2 தடவை கொடுக்கவேண்டும்.
- கழிச்சல் ஏற்படும் சிறிய கால்நடைக்கு 1 வாழைப்பூவும், பெரிய விலங்கிற்கு 3 வாழைப்பூவும் கொடுத்து சரி செய்யலாம்.
- நிலக்கடலை, கரும்புப் பயிரில் வெள்ளை கூண் வண்டினால் ஏற்படும் தாக்குதலை மேலாண்மை செய்ய, நொதித்த ஆமணக்கு கரைசலிலுள்ள பொறியை வைத்து செய்யலாம். 5 கிலோ ஆமணக்கு விதையை பொடி செய்து 5 லிட்டர் தண்ணீரில் கலந்து 7-10 நாட்கள் வைத்திருந்து கரைசலில் 2 லிட்டர் எடுத்து, மண் பானையில் ஊற்றிபின், அப்பானையின் கடந்து வரை தண்ணீர் ஊற்றி, மண்ணில் புதைக்கவேண்டும். அப்படிப்பட்ட பொறியே கூன்வண்டை மேலாண்மை செய்ய பயன்படுத்தப்படுகிறது.
- ஆட்டு ஓட்டம் தயார் செய்து அதைப் பயிர் வளர்ச்சி ஊக்கியாக பயன்படுத்துகிறார்கள்.
ஆட்டு ஓட்டம் செய்ய தேவைப்படும் பொருட்கள்
வெள்ளாட்டு எரு
|
-
|
5 கிலோ
|
வெள்ளாட்டு கோமியம்
|
-
|
2 லிட்டர்
|
வெள்ளாட்டு பால்
|
-
|
2 லிட்டர்
|
வெள்ளாட்டு தயிர்
|
-
|
2 லிட்டர்
|
பசு நெய்
|
-
|
1 லிட்டர்
|
கரும்பு சாறு
|
-
|
2 லிட்டர்
|
வாழைப்பழம்
|
-
|
10 எண்ணிக்கை
|
இளநீர்
|
-
|
2 லிட்டர்
|
கள்
|
-
|
2 லிட்டர்
|
ஈஸ்ட்
|
-
|
800 கிராம்
|
சர்க்கரை
|
-
|
800 கிராம்
|
நீர்
|
-
|
5 லிட்டர்
|
வெள்ளாட்டு எருவையும், கோமியத்தையும்
ஒன்றாகக் கலந்து, இரவு முழுவதும் வைக்கவேண்டும். மறுநாள் காலை பசுநெய்
சேர்த்து 4 நாட்கள் வைத்திருந்து, பின் மீதமுள்ள அனைத்து பொருட்களையும்
அதனுடன் சேர்த்து கலக்கவேண்டும். அதை காலை, மாலை வேளைகளில் நன்றாக
கிளறிவிடவேண்டும். அப்படி 2 வாரங்களுக்கு செய்தால் ஆட்டு ஓட்டமானது 18
நாள் பயிருக்கு தெளிக்க பயன்படுத்தலாம்.
காஞ்சிபுரம் மாவட்டம்
- நெல் பயிரில் இலை மடக்குப்புழு மற்றும் தண்டு துளைப்பான் கட்டுப்படுத்த 1 லிட்டர் மண்ணெண்ணெயை, சோப்பு, நீர் கலந்து தெளிக்கலாம்.
- மிளகாய் மற்றும் புகையிலை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த செண்டுமல்லி செடியை கவர் பயிராக பயிரிடவேண்டும்.
- கரும்பு தண்டு துளைப்பானையும், நிலக்கடலை இலைத்துறைகளையும், கட்டுப்படுத்த கரும்பு சோகையை மேற்போர்வையாக இடவேண்டும்.
- நெல் தோகை அழுகல், உளுந்து சாம்பல் நோய், பச்சை இலைத் தத்துப்பூச்சியைக் கட்டுப்படுத்த 25 கிலோ வேப்பங்கொட்டை பருப்பை இடித்து 500 லிட்டர் தண்ணீரில் இட்டு 8 மணி நேரம் கழித்து எடுத்து தெளிக்கலாம்.
- வீட்டில் எறும்பு, சிலந்தியைக் கட்டுப்படுத்த, தரையில் சாணியைக் கொண்டு மெழுகவேண்டும்.
- ஊறுகாய் நீண்டநாள் கெடாமல் வைத்திருக்க புளி சேர்க்கவேண்டும்.
- நன்னீர் இறால் குஞ்சுகளில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சேதாரமில்லாது கொண்டு செல்ல ‘பிளாஸ்டிக்’ டியூப்களின் அடைத்துக் கொண்டு செல்லலாம்.
- முட்டையிடும் வண்ணமீன்கள் முட்டையிட வாழை இலையை பயன்படுத்தவேண்டும்.
- வண்ணமீன்கள் இனப்பெருக்கம் செய்ய மீன்தொட்டிகளின் அமிலத்தன்மையை பராமரிக்க தேக்கு இலையைப் பயன்படுத்தவேண்டும்.
- வண்ணமீன் குஞ்சுகளுக்கு தேவையான உயிர் உணவுகளை வழுக்க கேரட், உருளைக்கிழங்கு துண்டுகளையும், வாழைப்பழத் தோல்களையும் தொட்டியில் வைக்கவேண்டும்.
- சிறுநீர் தொந்தரவுக்கு கால்நடைக்கு சோற்று கற்றாழை ஆனை நெருஞ்சி அமுக்கிரா வேர் இவற்றை சம அளவில் கலந்துகொடுக்கலாம்.
- கால்நடைக்கு செரிமானத் தொந்தரவுக்கு, பிரண்டை - 300 கிராம் உப்பு 100 கிராம், காய்ந்த மிளகாய் 50 கிராம், மிளகு - 50 கிராம் பூண்டு - 50 கிராம் கட்ட திப்பிலி - 50 கிராம், ஏலக்காய் 10 கிராம் கலந்து கொடுக்கலாம்.
- கால்நடைகளில் குடற்புழு நீக்கம் செய்ய, வேப்பம்பட்டை, சிவனர்வெண்பு, கருணைக்கிழங்கு, சர்க்கரை, மலை வேம்பு இவற்றில் ஒவ்வொன்றிலும் 50 கிராம் எடுத்து 2 வேளை வீதம் 3 நாட்கள் கொடுக்கவேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டம்
- நெல் பயிரில், கதிர் நாவாய் பூச்சியைக் கட்டுப்படுத்த, 5 சதவிகிதம் மிளகாய் இலை கரைசலை தெளிக்கலாம். பூச்சித் தாக்குதல் ஏற்பட்டவுடன்பின் தெளிக்கவேண்டும்.
- நெல் பயிரில் எலி சேதாரத்தை கட்டுப்படுத்த, நெல் பூக்கும் தருணத்தில் ‘சைகஸ்’ செடி பூவை வயலில் அங்கு வைக்கவேண்டும்.
- கத்தரியில் வாடல் நோய்க்கு 1 லிட்டர் தண்ணீரில் பெருங்காயம், 10 கிராம் மஞ்சள் தூள் கலந்து நீரில் நாற்றுக்கள் நனைத்துபின் நடவுச் செய்யவேண்டும்.
கரூர் மாவட்டம்
- நெல் வயலில் கோரையைத் தடுக்க, ஏக்கருக்கு 100 கிலோ புளியங்கொட்டையைக் கடைசி உழவின் போது இடலாம்.
- நெல்லில் ஒரு குத்தின் எண்ணிக்கை அதிகரிக்க, 3 சதவீதம், பஞ்சகாவ்யா (300 மிலி / 10 லிட்டர் தண்ணீர்) பயிரின் குத்து பெருகும் பருவத்திலும், அதன் 15 நாட்கள் கழித்தும் தெளிக்கலாம்.
- நெல் பயிரில் விளைச்சலை அதிகரிக்க 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மிலி எலுமிச்சை பழச்சாறு என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கலாம் அல்லது 10 முட்டை மூழ்கும் அளவு எலுமிச்சைப் பழச்சாறு ஊற்றி, அதனுடன் 250 கிராம் சர்க்கரை சேர்த்து, 10 நாட்கள் வைத்திருந்து, பின் நன்றாக கலந்து, அந்த சாறு அளவு மீண்டும் சர்க்கரைத்தூள் கலந்து தெளிக்கலாம்.
- பாசன நீரின் உப்பு தன்மையைக் குறைக்க கிணற்றில் நெல்லி மரத்துண்டை போடலாம்.
- நெல்லில் இலைமடக்குப்புழுவின் சேதாரத்தைக் கட்டுப்படுத்த 200 லிட்டர் நீரில் 20 கிலோ காட்டாமணக்கு இலையை இடித்து போட்டு, வடிகட்டி தெளிக்கலாம்.
- நெல்லில் அசுவினி மற்றும் கம்பளிப்புழுவை கட்டுப்படுத்த 200 லிட்டர் தண்ணீருக்குள் 2 கிலோ மிளகாய் தூள் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கலாம்.
- அனைத்துப்பயிர்களிலும், விதை மூலம் பரவும் நோய்களைத் தடுக்க 100 கிராம் புதினா இலையை அரைத்து 1 லிட்டர் தண்ணீரில் போட்டு அச்சாற்றில் விதைகளை 1 மணி நேரம் ஊறவைத்துப் பின் விதைக்கலாம்.
- பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் அசுவினி, தத்துப்பூச்சிப் போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, 2 கிலோ மஞ்சள் தூள், 8 கிலோ சாம்பல் இவற்றை 200 லிட்டர் தண்ணீர் கலந்து ஒரு ஏக்கருக்கு தெளிக்கலாம்.
- காய்கறிப் பயிர்களில், காய் துளைப்பானைக் கட்டுப்படுத்த 2 கிலோ பூண்டு விழுதுயை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து 400 மிலி மண்ணெண்ணெய் கல:நத தெளிக்கலாம்.
- நெல் கொள்ளை நோயைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 20 கிலோ வேலிக்கருவேல் தெளிக்கலாம்.
- நெல் இலை மடக்குப்புழுவைக்கட்டுப்படுத்த, 2 கிலோ உப்பு, 8 கிலோ சாம்பல் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஏக்கருக்கு தெளிக்கலாம்.
- அனைத்துப் பயிர்களில் ஏற்படும் பாக்டீரியா மற்றும் வைரஸ் நோயைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ பப்பாளி இலைக் கலந்து தெளிக்கலாம்.
- மண்புழு உரம் தயாரிக்கும்போது, கரையான் தொல்லையைக் கட்டுப்படுத்த, எருக்கலை இலை சாணி, இவற்றை நீரில் கலந்து 3 நாள் வைத்திருந்து, அதில் கோணிப் பையை நனைத்துள, இந்த சாக்கை மண்புழு படுக்கையை மூட பயன்படுத்த வேண்டும்.
- நெல்லில் துத்தநாக குறைப்பாட்டை, சரிசெய்ய, புளியந்தழை மற்றும் வாதநாராயண இலைச்சாற்றைத் தெளிக்கலாம்.
- அனைத்துப் பயிற்சிகளிலும், போரான் குறைப்பாட்டை சரிசெய்ய, எருக்கலை இலைச்சாற்றை தெளிக்கலாம்.
மதுரை மாவட்டம்
- நெல் வயலில் தத்துப்பூச்சிகள் கட்டுப்படுத்த, எருக்கலை இலைகள் போட்டு, மடக்கி உழவேண்டும்.
- நெல்லில் இலைமடக்குப்புழு, தண்டு துளைப்பான் தாக்குதலைக் குறைக்க 15 கிலோ சாம்பலை ஒரு ஏக்கருக்கு போடலாம்.
நாகப்பட்டினம் மாவட்டம்
- நெல் சேமிக்கும்போது, பூச்சி தாக்குதலைப் போக்க, நொச்சி இலைகளை நெல்லுடன் கலந்து சேமிக்கலாம். பேப்பர் துண்டுகள், மூலிகை இலைக்கலவையையும் கலந்து நெல்லுடன் வைக்கலாம்.
- பயறு வகைப்பயிர்கள் சேமிக்கும் போது, செம்மண்ணையோ, வேப்ப எண்ணெயை கலந்து வைத்தால் பூச்சிகளை தூர ஒட்டலாம்.
- காய்கறிகள் பயிர்களில் சாறு உறிஞ்சும் பூக்கள் மற்றும் துளைப்பான் புழுவின் சேதாரத்தைக் கட்டுப்படுத்த, வேப்பம் சாறு / புங்கம் இலை / பஞ்சகாவ்யா பயன்படுத்தலாம்.
- காய்கறிப் பயிர்களின் விதையின் முளைப்புத் திறனைக் காக்க விதைகளை சாணியின் நேர்த்தி செய்து வைக்கலாம்.
நீலகிரி மாவட்டம்
- காய்கறிப் பயிர்களில் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த, பால் வடியும் அனைத்து களைச் செடிகளின் சாற்றைத் (பிரண்டை, எருக்கு, வில்வம் முதலியன) தெளிக்கலாம்.
- விரைவாக மட்கச்செய்யும், சத்துக்களை ஊட்டமேற்ற செய்யவும், (இயற்கை உரம் தயாரிக்கும்போது) அரை கிலோ உப்புடன் ஆய்செந்தூரத்தை சேர்க்கலாம்.
- மண்புழு உரம் தயாரிக்கும்போது, மண்புழுவை பல்லி சேதப்படுத்துவதைத் தடுக்க முட்டை ஓட்டை மண்புழு படுக்கை மீது வைக்கலாம்.
- ‘கார்னேசன்’ மலர்ச்செடியில் சிலந்திபேனைக் கட்டுப்படுத்த, 1 கிலோ சுண்ணாம்பு ள தூளை 20 லிட்டர் கோமியத்தில் ஒரு நாள் ஊற வைத்து அதில் தண்ணீர் கலந்து தெளிக்கவேண்டும்.
- காய்கறி விதைகள் சேமிக்கும்போது, அடுப்பு மேலே பரண் மீது பைளில் சேமிக்கலாம்.
- காய்கறிப் பயிர்களை, அதிக இடைவெளியில் நட்டால், நாற்றானது, தண்ணீர் நிற்பதால், ஏற்படும் அழுகலிலிருந்து தப்ப முடியும்.
- தேயிலையில் ஏற்படும் கெப்பள நோயை (blister blight) கட்டுப்படுத்த, 15 லிட்டர் தண்ணீரில் 5:2 என்ற விகிதத்தில் சோடா மற்றும் மஞ்சள் தூள் கலந்து 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கலாம்.
- தேயிலையில் களையைக் கட்டுப்படுத்த, களைக்கொல்லியுடன் டீசல் கலந்து தெளிக்கலாம்.
- தேயிலையின் இடையே நடப்படும் ‘சில்வர் ஓக்’ மரத்தை மாடுகள் கடிக்காமல் இருக்க சில்வர் ஓக் மரக்கன்றின் மீது சாணிக்கரைசலைத் தெளிக்கலாம்.
பாண்டிச்சேரி
- நெல், பச்சை இலைத்தத்துப்பூச்சியைக் கட்டுப்படுத்த, சீத்தாப்பழ சாற்றை தெளிக்கலாம்.
- படைப்புழுவைக் குறைக்க பூண்டுசாற்றை தெளிக்கலாம்.
- கொண்டைக்கடலையை ஊறவைத்து தின்றால் புரதச்சத்து அதிகம் உள்ளதால் நன்கு வளர்ந்து விரைவாக முதிர்ச்சிக்கு வரும்.
- இலைப்பேன் மேலாண்மை செய்ய, சாதாரண நீரை அதிக வேகத்தில் அடித்தால் அவையெல்லாம் கீழே விழுந்துவிடும்.
- சாறு உறிஞ்சும்போது பூச்சிகளைக் கட்டுப்படுத்த, பச்சை மிளகாய் சாற்றை தெளித்தால், அதிலுள்ள காரத்தன்மையை உருவாக்கக்கூடிய ‘கப்சைசின்’ என்ற வேதிப்பொருள் செயல் திறமையாக செயல்பட்டு கட்டுப்படுத்துகிறது.
- பயிர் வளர்ச்சியை ஊக்கப்படுத்த பஞ்காவ்யா தெளிக்கலாம்.
புதுக்கோட்டை மாவட்டம்
- நிலக்கடலை மற்றும் பயிறு வகையில், பறவைகளை விரட்ட, ஒரு நீண்ட குச்சியில் பாலித்தீன் பையைக் கட்டி வைக்கலாம்.
- கறி சமைக்கும்போது, பப்பாளிக் காய் துண்டுகளைப் போட்டால், கறியானது இலேசாகி, விரைவாக வேகும்.
- வாழைக்குலையை வாழை இலையினாலே மூடி வைத்திருந்தால், அது பழம் நிஜக்கலருடன், பெரியதாகவும் இருக்கும்.
- பசுமாட்டில் குடற்புழுவை நீக்க, வேப்பம் எண்ணெயை வாய் வழியாகக் கொடுக்கலாம்.
- வெள்ளாட்டின் செரிமானத்தை சரிசெய்ய, வெற்றிலை ஓமம்,சோம்பு சேர்த்து வாயில் வழியாகக் கொடுக்கலாம்.
- மாடுகள் பருவத்திற்கு வர சோற்றுக் கற்றாழை, ஆனை நொஞ்சி இலைகளைக் கொடுக்கலாம்.
- வாழைப்பழம் ஒரே சீராகவும், விரைவாகவும், பழுக்க செய்ய, வாழைவிலையை எரித்து புகைப் போட்டால் போதும்.
- யூகலிப்டஸ் மரக்கன்று விரைவாக வளர, அக்குழிகளில், அக்குழிகளில் காய்ந்ம கோழி எருப்போட்டு நடலாம்.
- நெல்லிக்காயின் மகசூலை அதிகரிக்க நெல்லி பூப்பதற்கு முன்பு அதன் கிளைகளைக் குச்சி வைத்து அடிக்கலாம்.
- மல்லிகைப்பூ சரியான நேரத்தில் அதிக மகசூல் பெற, தண்டுகளை கிள்ளிப்போடவேண்டும்.
சேலம் மாவட்டம்
- கரும்பு அறுவடை செய்ய, ஒரு குச்சியில் 15 செ.மீ நீளமும் 12 செ.மீ அகலமுள்ள தட்டைக் கத்தியைச் சொருகி பயன்படுத்தலாம்.
- பழைய காலங்களில் நெல் மற்றும் எண்ணெய் வித்துக்களை அளக்க பயன்படும் ‘வல்லம்’ என்று அளவுப் பாத்திரத்தை இரும்பினால் செய்யலாம். அது 23 செ.மீ உயரமும், 20 செ.மீ விட்டம் கொண்டதாகவும், 4 கிலோ கொள்ளளவு உடையதும் ஆன கொள்கலனை ரூ. 80 – ரூ. 100 விலையில் பெறலாம்.
சிவகங்கை மாவட்டம்
- உளுந்துப் பயிரில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை பருப்பு சாறு, வேப்பிலை, சாணிக்கலவை, கோமியம் கலந்து தெளிக்கலாம்.
- நெல் நாற்று நன்கு ஊற்றி வளர, நாற்றை பஞ்சகாவ்யா, சூடோமோனாஸ் கரைசலில் ஊறவைத்து நடலாம்.
- நெல் பயிருக்கு உரத்திலுள்ள சத்துக்கள் வீணாவதைத் தடுக்க, உரம் இட்டவுடன் அதை மண்ணில் புதைக்கவேண்டும்.
- நிலக்கடலையில் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, வெண்டை, தட்டைப்பயிறு, செண்டுமல்லி, மக்காச்சோளம் ஆகியவற்றை பூச்சிப் பொறி செடியாக சாகுபடி செய்யலாம்.
தஞ்சாவூர் மாவட்டம்
- மாடுகள் கன்று போட்டவுடன், கருப்பை விரிவதைத் தடுக்க, மணத்தக்காளி இலைகளை உண்ணக் கொடுக்கவேண்டும்.
- விலங்குகள் உணவு உண்ணாமல் இருந்தால், வயிற்றில் உணவு செரிமானத்தை அதிகரிக்க செய்யும் தரவத்தை உற்பத்தி செய்து, உயவு உண்ண செய்ய கீழ்க்கண்டவற்றை கடித்து உருண்டையாக, ஒரு பூண்டு, மிளகு, கடுகு, ஊமத்தை இலை.
திருவள்ளூர் மாவட்டம்
- நெல் இலை மடக்குப்புழுவை கட்டுப்படுத்த மண்பானையில் வேப்பிலையை கம்புடன் கோமியத்தில் ஊறவைத்து அதை மண்ணில் புதைத்து, 3 மாதம் கழித்து வடிகட்டி தெளிக்கலாம்.
- மிளகாய் செடியில், இலைப்பேன், வெள்ளை அசுவினியினால் ஏற்படும் முரணையைக் கட்டுப்படுத்த, பச்சை மிளகாய், பெருங்காயம், தண்ணீரில் 1:1 விகிதத்தில் கலந்து தெளிக்கலாம்.
- கரும்பு சால்களில் சோகையை மேற்போர்வையாக இட்டால், செம்மண்ணில்ள தரம் வரும்.
- தேக்கு விதைகளை கொதிநீரில் ஊறவைத்து நட்டால், முளைப்புத்திறன் அதிகரிக்கும்.
- விதைகளை மண்கலத்தில் சேமித்தால், முளைப்புத்திறன் 6 மாதம் வரை நன்றாக இருக்கும்.
- பயறுவகைகளை அரப்பு இலைத்தூளை பூச்சுப்பொருட்களாக பயன்படுத்தினால் எநும்பு, பறவை தொல்லை இராது.
- நெல் மடக்குப்புழுவை திறம்பட கட்டுப்படுத்த, இலைச்சாற்றுடன் சோப் கரைசல் கலந்து தெளிக்கலாம்.
- நெல் எலித் தொல்லை தடுக்க தஞ்சாவூர் குட்டி பொறியைப் பயன்படுத்தலாம்.
- உளுந்து, பாசிப்பயிறு வகைகளில் ஏற்படும் பூச்சித் தொல்லைக்கு நொக்சி, ஆடாதொடா, ஊமத்தை இலைச்சாற்றைத் தெளிக்கலாம்.
- பயறுவகைகளை சேதப்படுத்தும் பயிறு வண்டினை தடுக்க அமாவாசை அன்று எடுத்து காயவைக்கவேண்டும்.
- பயறு சேமிப்பின்போது ஏற்படும் பூச்சி, நோய்களுக்கு சேமிக்கும் மண் கலன்களில், காய்ந்த வேப்பிலை அல்லது மிளகாய் வற்றலை சேர்க்க வேண்டும்.
திருச்சி மாவட்டம்
- வாழை, நெல், காய்கறிப்பயிர்களின், விளைச்சலை அதிகரிக்க, 3 சதவீதம் பஞ்சகாவ்யா கரைசலை அடித்தால் போதும்.
- நெல் வயலில் எலித் தொல்லையைத் தடுக்க காய்ந்த சாணத்தை மண்ணெண்ணெயில் நனைத்து வயலில் அங்கு வைக்கலாம்.
- கிணற்றுநீர் உப்பாக இருந்தால் அதை மாற்றி, குடிக்க பயன்படுத்த வேண்டுமெனில், கிணற்றில் நெல்லி மரக்குச்சியை போட்டால் போதும்.
- பயறு வகைகளில் பயிறு வண்டைக் கட்டுப்படுத்த பச்சை இளம் ஆகாய தாமரை இலையை 5 மணி நேரம் ஊறவைத்து 10 சதவீதம் கரைசலை அடிக்கலாம்.
தூத்துக்குடி மாவட்டம்
- வாழையில் களையைக் கட்டுப்படுத்தவும், அதிக நீரை தாக்கி வளரவும் பருத்தி ஆலை கழிவு பஞ்சை வயலில் மேற்போர்வையாகப் பயன்படுத்தலாம்.
வேலூர் மாவட்டம்
- துவரையைச் சேமிக்கும் முன்பாக செம்மண் சாந்தில் கலந்து காய வைத்து சேமிக்கலாம்.
- பாகற்காய், புடலை, சுரை போன்ற வகை விதைகளை சாம்பலுடன் கலந்து காயவைக்கவேண்டும்.
- பயறுவகைகளில் சேமிப்பு கிடங்கு பூச்சிகளைத் தடுக்க, நொச்சி, வேப்பிலையை சேர்த்து சேமிக்கலாம்.
- மஞ்சள் அறுவடை செய்தவுடன், சாணி கரைசலை இட்டால் பூச்சி, பூஞ்சாண நோய்களை தடுப்பதோடு, நூற்புழு தாக்குதலும் தடுக்கலாம்.
- அடி உரமாக வேப்பம் புண்ணாக்கை வயலில் இட்டால் பூச்சி, பூஞ்சாண நோய்களை் தடுப்பதோடு, நூற்புழு தாக்குதலும் தடுக்கலாம்.
- சிறிய விதை பயிர்களை விதைக்கும் போது மணலுடன் கலந்து விதைத்தல் விதை சுலபமாக விழுவதோடு, பலவலாகவும், விதைக்க முடியும்.
- தானியங்களை சேமிக்க ‘குதிர்’ எனப்படும் பழங்கால கலன்களில் சேமித்தால் பூச்சித்தாக்குதலைத் தடுக்கலாம்.
- தானியங்களை அமாவாகை அன்று தடுத்து காய வைத்து, பூச்சித் தொல்லையத் தடுக்கலாம்.
- பழவகைகள் மற்றும காய்கறி வகைகளின் விதைகளைக் கலத்தில் மண்பானையில் சேமித்தால், அதிக நாளுக்கு கெடாமல் வைத்திருக்கலாம்.
திண்டுக்கல் மாவட்டம்
- 250 கிராம் மணலுடன் 100 கிராம் வேப்பங்கொட்டை தூளுடன் கலந்து, தென்னை ஓலைக்கு கழிக்கும்போது, இலைத் தூரில் போட்டால், காண்டாமிருக வண்டின் கழுத்துப்பகுதியில் இரண்டும் சேர்ந்து, வண்டு தலையை ஆட்டும்போது தலை உடம்பிலிருந்து தனியாக பிரித்துவிடும் அதன் மூலம் காண்டாமிருக வண்டினை பழனி மஞ்சள் நாயக்கன்பட்டி கிராமத்தைச் சார்ந்த விவசாயிகள் கட்டுப்படுத்துகின்றனர்.
- துளசி, வேப்பிலை, ஆடாதொடா போன்றவற்றின் காய்ந்த இலைகளை பயறுவகைப் பயிர் விதையுடன் கலந்து வைக்கும்போது, பூச்சிகள் சேதாரத்தை உருவாக்காது.
- விதைக்க சோளப்பயிரில் பறவை மற்றும அணில் மூலம் ஏற்படும் சேதாரத்தைத் தவிர்க்க / விரட்ட, 2 மீட்டர் நீளக் குச்சியில் பாலித்தீன் பையை கட்டி வைத்தால், காற்றில் ஆடும்போது ஏற்படும் ஓசையினால் பறவைகளை 2 மீட்டர் தூரம் வரை வராமல் செய்யலாம். இதை ரொட்டியார்சத்திரம் வட்டம் புதுப்படி விவசாயிகள் செய்கின்றனர்.
- கால்நடைகளுக்கு செரிக்காமல் போனால் வெற்றிலையை பாக்குடன் சேர்த்து அடித்து கொடுத்தால் போதும்.
- அதை நிலக்கோட்டை வட்ட - பள்ளப்பட்டி விவசாயிகள் கடைபிடிக்கின்றனர்.
- சாண எரிவாயு கலன் கழிவை தண்ணீருடன் 1:10 விகிதத்தில் கலந்து மல்லிகைச் செடிக்கு தெளித்தால் பூ உதிர்வதும், இரும்பு சத்து குறைபாடும் தடுக்கப்படுகிறது. இப்படி நிலக்கோட்டை வட்ட கட்டமநாயக்கன்பட்டி விவசாயிகள் செய்கின்றனர்.
- மடிவீக்க நோய்க்கு வனஸ்பதியை மடியில் தடவினால், மனிதர்களால் ஏற்படும் நோய்களை தடுக்கமுடியும்.
விருதுநகர் மாவட்டம்
- விதை வெங்காயத்தை சேமிக்கும்போது, அதை கல் தரையின் மீது பரப்பி அதன் மீது வைக்கோல் வேய்ந்த மூங்கில் தட்டைகளைக் கொண்டு மூடலாம்.
- துவரைப் பயிரை உடைக்க, அதன் மீது நல்லெண்ணெய் தடவி, வெயிலில் காய் வைத்தால் சுலபமாக உடைப்படும்.
- பயறுவகைகளை செம்மண் சாந்தில் கலந்து காயவைத்து சேமித்தால் பயறு வண்டுகள் முட்டையிடுவது தடுக்கப்படும்.
- சூரியகாந்தி மற்றும் பயிர்களைத் தின்ன வரும் பறவைகளை விரட்ட, தகர டப்பாவைக் கொண்டு ஒலி எழுப்பலாம்.
- நெல், சோளம் போன்றவற்றை சேமிக்கும்போது தாக்கும் நெல் அந்துப்பூச்சியை வராமல் செய்ய, புங்கம், வேப்பிலை இவற்றை தானியத்துடன் கலந்து வைக்கவேண்டும்.
1 comment:
very useful article
hello Mr.ramesh can i get your e-mail address?
thanks
babu
contactbabu@yahoo.com
Post a Comment