Saturday, May 19, 2012

மண்வளம்

மண்வளம்

மண் என்பது உலகின் இயற்கை ஆதாரங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வளமாகும். ஒரு அங்குல மண் உருவாதற்கு 300-1000 வருட காலம் தேவைப்படுகிறது. ஒரு செடி செழுமையுடன் வளர்ந்து அதிக மகசூல் தர வேண்டுமானால் அதற்கு ஏழு அடிப்படைத் தேவைகள் உள்ளன. அவை 1.சூரிய ஒளி 2.கரியமில வாயு 3.ஆக்ஸிஜன் 4.தண்ணீர் 5.தாது உப்புகள் 6.மண் பிடிமானம் மற்றும் 7.மண்வெப்பம் இதில் முதல் மூன்றும் சூரிய மூலமும், காற்று மூலமும் பயிருக்கு கிடைத்துவிடுகிறது. மற்றைய ஐந்து தேவைகளும் மண்ணிலிருந்து தான் பெற்றாக வேண்டும். அதிகபடியான மழை, காற்று மற்றும் வெப்பம் ஆகிய தாக்குதல்களால் மண்ணிலுள்ள தாதுக்கள் நீக்கப்பட்டு மண் குறைவு ஏற்படுகிறது. எனவே மண் வள மேலாண்மை அதிக மகசூல் பெறவும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.


   



தமிழ்நாட்டின் மண் பிரிவுகள்

1. செம்மண் (65 சதவீதம்)
2. கரிசல் மண் (12 சதவீதம்)
3. செம்பொறை மண் (3 சதவீதம்)
4. கடற்கரை மண் (7 சதவீதம்)

செம்மண் வகைகள்


1. இரு பொறை செம்மண் (30 சதவீதம்)
2. வளம் குறைந்த செம்மண் (6 சதவீதம்)
3. மணற்பாங்கான செம்மண் (6 சதவீதம்)
4. ஆழம் குறைந்த செம்மண் (2 சதவீதம்)
5. ஆழமான இருபொறை செம்மண் (8 சதவீதம்)

தமிழ்நாட்டின் வேளாண் தட்ப வெப்ப மண்டலத்தின் மண் வகைகள்
Soil Types - Agro-Climatic Zones Red sandy loam, clay loam, saline coastal - alluvium Red sandy loam, clay loam, saline coastal - alluvium Red sandy loam, clay loam, saline coastal - alluvium Red loamy (new delta), alluvium (old delta) Red loamy (new delta), alluvium (old delta) Coastal alluvium, black, red sandy soil, deep red soil Saline coastal alluvium, deep red loam Lateritic Lateritic Red loams, black Non-calcareous red, non-calcareous brown, calcareous black
வ.எண்.
மண்டலம்
மாவட்டம்
மண் வகைகள்
1.
வடகிழக்கு மண்டலம்
செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம்
மணற்பாங்கான செம்மண், களிமண் பாங்கான மண், உவர் தன்மை கடலோர வண்டல் மண், இருபொறை மண்
2.
வடமேற்கு மண்டலம்
சேலம்
சுண்ணாம்புத்தன்மையுள்ள செம்மண்
சுண்ணாம்புத்தன்மையுள்ள கரிசல்மண்
3.
மேற்கு மண்டலம்
கோவை, ஈரோடு
இருபொறை செம்மண், கரிசல் மண்
4.
காவேரி படுகை மண்
தஞ்சை, திருச்சி
இருபொறை செம்மண், வண்டல் மண்
5.
தெற்கு மண்டலம்
புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர்
கடலோ வண்டல் மண், கரிசல் மண், ஆழமான செம்மண், மணற்பாங்கான செம்மண்
6.
அருக மழை மண்டலம்
திருநெல்வேலி
கன்னியாகுமரி
கடலோர உவர்தன்மையுள்ள வண்டல்மண், ஆழமான இருபொறை மண்
7.
மலைத்தொடர் மண்டலம்
நீலகிரி, ஆணைமலை, பரணி மலைத்தொடர், கொல்லி மலை
செம்பொறை மண்

வளமான மண்ணின் தன்மைகள்
  • செடியின் வளர்ச்சிக்கு தேவைப்படும் அடிப்படை ஊட்டச்சத்துக்களான தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துக்கள் செடிக்கு கிடைக்கும் நிலையில் அமைந்துள்ள மண் “வளமான மண்”
  • வளமான மண், போரான், கினோசின், கோபால்ட், செம்பு, இரும்புச்சத்து, மாங்கனிஸ், மெக்னிஸியம், மாலிப்பிடினம், கந்தகம் மற்றும் துத்தநாக தாதுக்கள் போதுமான அளவில் கிடைக்ககூடிய நிலையில் அமைந்திருக்கும்
  • வளமான மண்ணில் அங்ககப் பொருள் இருப்பதனால் மண்ணின் அமைப்பு மேம்படுவதுடன், ஈர பதத்தையும் தக்க வைத்துக் கொள்கிறது.
  • மண்ணின் கார் அமில தன்மை 6.0 முதல் 6.8 வரை இருப்பின் அவை வளமான மண்ணாகும்
  • மண் சரியான மண் அமைப்புடன் நன்கு வடியக் கூடிய நிலையில்  அமைந்துள்ள மண் “வளமான மண்”
  • வளமான மண்ணில் பயிர் வளர்ச்சிக்கு நன்மை செய்யும் பல்வேறு நுண்ணுயயிர்கள் காணப்படும்
  • வளமான மண் ஆழமான மண் அமைப்புடன் இருக்கும்

    மண் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம்


    1. இரசாயன உரங்கள், தேவைக்கேற்ப அதிகமாக உபயோகிப்பதை தடுக்கவும், சுற்றுசூழலை பாதுகாப்பதற்கும் மண் பரிசோதனை அவசியமாகும்
    2. பயிர் அறுவடைக்கு பின் மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறைந்து விடும். எனவே மண் பரிசோதனை செய்து மண் வளம் அறிய வேண்டியது அவசியமாகும்.
    3. மண் அரிப்பு, நீர் கரையோட்டம் மற்றும் சத்துக்கள் ஆவியாதல் போன்ற காரணத்தினால் மண்வளம் குன்றிவிடும். எனவே மண் பரிசோதனை மூலம் மண் வளத்தை அறிந்துக்கொள்வது அவசியமாகும்.
    4. மண் வளத்தை நிலைநிறுத்துவதன் மூலம் பயிரின் உற்பத்தி, மற்றும் லாபத்தை மேம்படுத்தலாம்
    5. மண்ணின் வளத்தை பேணிக்காப்பதற்கு தேவையான அளவு அங்கக உரங்கள் மற்றும் கனிசமான இரசாயன உரங்கள் இடவேண்டும்
    6. பயிரின் தேவை, மண்ணின் தன்மை, உர உபயோகத் திறன் முதலியவற்றை கருத்தில் கொண்டு உர நிர்வாகம் அமைந்திட வேண்டும்
    7. தேவையான நேரத்தில் மண் பரிசோதனை செய்வதன் மூலம் சரிவிகித சம அளவு சத்துக்களை பயன்படுத்தி பயிரின் உற்பத்தியை அதிகரிக்கலாம்

    மண்மாதிரிகள் சேகரிக்கும் முறை
    மண் மாதிரிகள் எடுப்பதற்கு முன்பு கவனிக்க வேண்டிய குறிப்புகள்
    • மண் மாதிரி எடுக்கும் பகுதி முழுவதையும் குறுக்கும் நெடுக்குமாக நடந்து, அப்பகுதியில் காணப்படும் நிலச்சரிவு, நிறம், நயம் மேலாண்மை முறை, பயிர் சுழற்சி இவற்றிற்கு ஏற்றாற்போல பல பகுதிகளாகப் பிரித்து, தனித் தனியாக மண் மாதிரிகள் சேகரிக்க வேண்டும். வரப்பு, வாய்க்கால்கள், மரத்தடி நிழல் பகுதிகள் மற்றும் கிணற்றுக்கு அருகிலும் மக்கு, குப்பை உரங்கள், பூஞ்சான மற்றும் பூச்சி மருந்து இடப்பட்ட பகுதிகளில் மண் மாதிரி எடுக்கக் கூடாது.
    • அதிக பட்சமாக 5 எக்டேருககு ஒரு மாதிரியும், குறைந்த பட்சம் கால் எக்டேருக்கு ஒரு மாதிரியும் சேகரிக்க வேண்டும்
    மண்மாதிரிகள் சேகரிக்க வேண்டிய காலம்
    • நிலம் தரிசாக இருக்கும் காலத்தில் மண் மாதிரிகள் எடுக்க வேண்டும்
    • உரமிட்டடவுடன் சேகரிக்கக்கூடாது. குறைந்தது 3 மாத இடைவெளி தேவை
    • பயிர்கள் உள்ள நிலங்களில் மண் மாதிரிகள் எடுக்கக் கூடாது
    மண்மாதிரிகள் சேகரிக்கும் முறை
    • மண் மாதிரிகள் எடுக்க வேண்டிய இடத்திலுள்ள இலை, சருகு, புல், செடி ஆகியவற்றை கையினால் மேல் மண்ணை நீக்காமல் அப்புறப்படுத்த வேண்டும்.
    • மாதிரி எடுக்கும் பொழுது ஆங்கில் எழுத்து “V” போல் மண்வெட்டியால் இருபுறமும் வெட்டி அந்த மண்ணை நீக்கி விட வேண்டும். பிறகு நிலத்தின் மேல்மட்ட பகுதியிலிருந்து கொழு ஆழம் வரை (0-15 செ.மீ. அல்லது 0-23 செ.மீ.) ஒரு இஞ்சு (அ) 2.5 செ.மீ. பருமனில் மாதிரி சேகரிக்க வேண்டும்.
    • இவ்வாறாக குறைநத பட்சம் ஒரு எக்டரில் 10 முதல் 20 இடங்களில் மாதிரிகள் சேகரிக்க வேண்டும். மண் மாதிரிகள் ஈரமாக இருந்தால் முதலில் அதனை நிழலில் உலர்த்த வேண்டும்.
    • நுண் ஊட்டங்கள் அறிய வேண்டுமானால் எவர்சில்வர் அல்லது பிளாஸ்டிக் குறுப்பி மூலம் தான் மண் மாதிரிகள் எடுத்து, பிளாஸ்டிக் பக்கெட்டில் மாதிரிகள் சேகரிக்க வேண்டும். மண்வெட்டி, இரும்பு சட்டிகளை பயன்படுத்தக் கூடாது.
    • பின்பு சேகரித்த மாதிரிகளை ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு நன்றாக கலக்கி அதிலிருந்து ஆய்வுக்கு 12 கிலோ மண் மாதிரியை கால் குறைப்பு முறையில் எடுக்க வேண்டும்.

    கால் குறைப்பு(Quartering)
    • வாளியில் சேகரித்த மண் மாதிரியை சுத்தமான சாக்கு அல்லது பாலித்தீன் தாள் மீது பரப்பி, அதனை நான்காகப் பிரித்து, எதிர் முனைகளில் காணப்படும். இரண்டு பகுதிகளை கழித்து விட வேண்டும். தேவைப்படும் 12 கிலோ அளவு வரை இம்முறையினை திரும்பத் திரும்ப கையாள வேண்டும்.

    X
    •  
    •  
    X

    •  
    X
    X
    •  
    • சேகரித்த மண் மாதிரியை சுத்தமான ஒரு துணிப்பை பாலித்தீன் பையில் போட்டு அதன் மீது மாதிரியைப் பற்றிய விவரங்களைக் குறிப்பிட வேண்டும். உரம் மற்றும் பூச்சி  மருந்துகள் வைக்கப்பட்டிருந்த சாக்குகளை அல்லது பைகளை மண் மாதிரிகள் அனுப்ப உபயோகிக்கக் கூடாது.
    பயிர் வகை
    மண் மாதிரி எடுக்கும் ஆழம்
    (அங்குலத்தில)
    (செ.மீ.)
    1.
    புல் மற்றும் புல் வெளி
    2

    6

    9

    12,24,36 அங்குல ஆழங்களில் மூன்று மண் மாதிரிகள் எடுக்க வேண்டும்
    5
    2.
    நெல், கேழ்வரகு, நிலக்கடலை, கம்பு மற்றும் சிறு தானிய பயிர்கள் (சல்லி வேர் பயிர்கள்)

    15
    3.
    பருத்தி, கரும்பு, வாழை, மரவள்ளி மற்றும் காய்கறிகள் (ஆணி வேர் பயிர்கள்)

    22
    4.
    நிரந்தர பயிர்கள், மலைப் பயிர்கள், பழத்தோட்டப்பயிர்கள்
    30, 60, 90 செ.மீ. ஆழங்களில் மூன்று மண் மாதிரிகள் எடுக்க வேண்டும்
    Soil Sampling
    Soil Sampling
    Soil Sampling
    Soil Sampling
    Soil Sampling
    Soil Sampling
    Soil Sampling


No comments: