தண்ணீர் குடித்தால் எடை குறையும்!
கலோரி நிறைந்த குளிர்பானங்களுக்குப் பதிலாக தண்ணீர் அல்லது `டயட்'
குளிர்பானங்களைப் பருகினால் ஆறு மாதங்களில் 2 கிலோ எடையைக் குறைக்க
முடியும் என்கிறார்கள் ஆரோக்கிய நிபுணர்கள்.
வடக்கு கரோலினா பல்கலைக் கழக ஆய்வாளர்கள் இதுதொடர்பாக, அதிக எடை கொண்ட 318 பேரிடம் எடை குறைந்த விதத்தை ஒப்பிட்டுப் பார்த்தனர்.
``குளிர்பானங்களுக்குப் பதிலாக, கலோரி இல்லாத -அது `டயட்'
குளிர்பானமாகவும் இருக்கலாம், தண்ணீராகவும் இருக்கலாம்- பானம் பருகுவது
என்ற எளிய, தெளிவான மாற்றம், எடையைக் குறைக்க விரும்புவோருக் கும், எடையைப்
பராமரிக்க விரும்புவோருக்கும் பயன் அளிக்கிறது'' என்று ஆய்வாளர்களில்
ஒருவரான டெபோரா டேட் தெரிவிக்கிறார்.
``இது பெரிய அளவில்
பின்பற்றப்பட்டால், இன்று சமுதாயத்தை அதிகம் பாதிக்கும் உடல் பருமன்
பிரச்சினையை குறிப்பிடத்தக்க அளவு குறைத்துவிட முடியும்'' என்பது அவரது
கருத்து.
குளிர்பானங்களில் கலோரியை நீக்குவது, எடையில் நல்ல
தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரம் உள்ளதா என்று மேற்கண்ட
குழுவினர் அறிய முயன்றனர். அது உண்மையே என்றும் கண்டறிந்தனர்.
நன்றி-தினத்தந்தி
1 comment:
எல்லாமே சுவையான தகவல்கள் .பாராட்டுகள்
Post a Comment