Monday, April 2, 2012

மார்ச் 28


மார்ச் 28
193 - ரோம் பேரரசன் பேர்ட்டினாக்ஸ் படுகொலை செய்யப்பட்டான்.
845 - ரக்னார் லொட்புரொக் என்பவனின் தலைமையில் நடந்ததாகக் கருதப்படும் வைக்கிங் தாக்குதல்களுக்கு பாரிஸ் அடி பணிந்தது.
1802 - ஓல்பேர்ஸ் என்பவர் 2 பேலெஸ் என்ற சிறுகோளைக் கண்டுபிடித்தார்.
1809 - மெடெலின் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரான்ஸ் ஸ்பெயினை வென்றது.
... 1879 - ஆங்கிலோ-சூலு போர்: பிரித்தானியப் படைகள் ஹுலோபேன் நகரில் இடம்பெற்ற சமரில் படுதோல்வியடைந்தனர்.
1930 - Constantinople என்ற பெயரை இஸ்தான்புல் என்று மாற்றினர் துருக்கியின் புதிய தேசியவாதிகள். அதே சமயம் Angora என்ற பெயர் Ankara என்று மாறியது.
1939 - ஸ்பானிய உள்நாட்டுப் போரில் பிரான்சிஸ்கோ பிராங்கோ மாட்ரிட் நகரைக் கைப்பற்றினான்.
1979 ஐக்கிய அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்தில் ஓடும் ஸஸ்குவான ஆற்றின் கரையில் உள்ள மிடில்டன் நகரில் அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டது.
1986 - ஆப்பிரிக்கப் பசிக் கொடுமைக்காக பல்வேறு பிரபலங்கள் ஒன்று கூடி பாடி ஒலிப்பதிவு செய்த We are the World என்ற பாடலை அமெரிக்க கிழக்கு நேரப்படி காலை பத்தேகால் மணிக்கு அமெரிக்காவின் 6000 வானொலி நிலையங்கள் ஒரே நேரத்தில் ஒலிபரப்பின.
1988 : ஹலப்ஜா நகரின் குர்திய இன மக்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதில் சுமார் 5 ஆயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டது.

No comments: