ஏப்ரல் 14
1699 - கால்சா என்ற சீக்கிய அறப்படை இயக்கத்துக்கு குருகோவிந்த் சிங் அடிக்கல் நாட்டிய நிகழ்வு இடம்பெற்றது.
1828 - நோவா வெப்ஸ்டர் தனது அகராதியின் முதலாவது பதிவுக்கான காப்புரிமையைப் பெற்றுக் கொண்டார்.
1849 - ஹங்கேரி ஆஸ்திரியாவிலிருந்து விடுதலையை அறிவித்தது.
1865 - அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் ஜோன் வில்க்ஸ் பூத் என்பவனால் சுடப்பட்டார்
1894 - தொமஸ் எடிசன் ஒளிப்படங்களைப் பாவித்து அசையும் படக்காட்சியை
காட்டும் கினட்டஸ்கோப் (kinetoscope) என்ற அசையும் ஒளிப்படக்கருவியை
காட்சிப்படுத்தினார்.
1912 - பிரித்தானியாவின் பயணிகள் கப்பல்
டைட்டானிக் வட அட்லாண்டிக் கடலில் பனிப்பாறை ஒன்றுடன் மோதியது. அடுத்த நாள்
இது 1,503 பேருடன் கடலில் மூழ்கியது.
1915 - துருக்கி ஆர்மீனியாவை முற்றுகையிட்டது.
1940 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய கடற்படையினர் நோர்வேயின் நம்சோஸ் என்ற இடத்தில் தரையிறங்கினர்.
1958 - சோவியத்தின் ஸ்புட்னிக் 2 என்ற செய்மதி 162 நாட்கள் பூமியைச் சுற்றிய பின்னர் சுற்று வட்டத்தில் இருந்து வீழ்ந்தது.
1961- ஈழத்தில் தந்தை செல்வா தமிழரசு அஞ்சல் சேவை துவக்கம்
1967- சென்னை மாநிலம் தமிழ்நாடாக மாற்றம்
1978 - ஜோர்ஜியாவில் ஜோர்ஜிய மொழியின் அரசியல் அந்தஸ்தை மாற்றும் சோவியத்
ஆட்சியாளரின் முயற்சிக்கெதிராக திபிலீசியில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி
இடம்பெற்றது.
1986 - மேற்கு பெர்லினில் ஏப்ரல் 5 இடம்பெற்ற
குண்டுவெடிப்பில் இரண்டு அமெரிக்கப் படைவீரர் இறந்ததற்குப் பழி வாங்கும்
முகமாக அதிபர் ரொனால்ட் ரேகன் உத்தரவின் பேரில் ஐக்கிய அமெரிக்கா
லிபியாவில் குண்டுவீச்சை நிகழ்த்தியதில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
1986 - வங்காள தேசத்தில் 1 கிகி எடையுள்ள பனிக்கட்டி மழை பொழிந்ததில் 92 பேர் கொல்லப்பட்டனர்.
1988 - சுவிட்சர்லாந்தில் ஜெனீவாவில் ஐநா அவையில் இடம்பெற்ற நிகழ்வில்
சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளைத் திரும்பப் பெறும்
உடன்பாட்டில் கைச்சாத்திட்டது.
1999 - யூகொஸ்லாவியாவில் நேட்டோ படைகள்
அல்பேனிய அகதிகளை ஏற்றிச் சென்ற ஊர்தி ஒன்றின் மேல் குண்டுவீச்சு
நடத்தியதில் 75 பேர் கொல்லப்பட்டனர்.
1999 - அவுஸ்திரேலியா, சிட்னியில் பலமான பனிக்கட்டி மழை பொழிந்ததில் A$ 1.7 பில்லியன் பெறுமதியான சேதம் ஏற்பட்டது..
No comments:
Post a Comment