ஏப்ரல் 17
உலகச் செய்தித் தொடர்பு நாள்
1492 - வாசனைப் பொருட்களை ஆசியாவில் கொள்வனவு செய்யும் உரிமையை கொலம்பஸ் ஸ்பெயின் அரசிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
1524 - இத்தாலிய நாடுகாண் பயணி ஜோவானி டா வெரசானோ நியூயோர்க் துறைமுகத்தை அடைந்தார்.
1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜீனியா கூட்டணியில் இருந்து விலகியது.
1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் வட கரோலினாவின் பிளைமவுத் நகரைத் தாக்கினர்.
1895 - சீன-ஜப்பான் போரை முடிவுக்குக் கொண்டு வந்த ஒப்பந்தம் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டது.
1941 - இரண்டாம் உலகப் போர்: யூகொஸ்லாவியப் பேரரசு ஜெர்மனியிடம் சரணடைந்தது.
1961 - அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏயினால் பயிற்சியளிக்கப்பட்ட கியூபா
அகதிகள் குழு ஒன்று பிடெல் காஸ்ட்ரோவைப் பதவியில் இருந்து அகற்றும்
நோக்குடன் பிக்ஸ் விரிகுடாவில் தரையிறங்கினார்.
1951 - ஒலிம்பிக்
போட்டிகளைப் போல் ஆசிய கண்டத்திலுள்ள நாடுகள் மட்டும் பங்கு பெறும் Asian
Games எனப்படும் முதல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் புது டெல்லியில்
தொடங்கின.
1969 - செக்கோசிலவாக்கியாவின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் அலெக்சாண்டர் டூப்செக் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1970 - அப்போலோ 13 விண்கப்பல் பழுதடைந்த நிலையில் தனது பயணத்தை இடைநிறுத்தி பூமிக்குத் திரும்பியது.
1971 - முஜிபுர் ரகுமான் தலைமையில் வங்காள தேச மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.
1975 - கம்போடியாவில் கெமர் ரூச் படைகள் தலைநகர் நாம் பென்னைக் கைப்பற்றினர். கம்போடிய அரசு சரணடைந்தது.
1975 - அமர காவியம் என்று வருணிக்கப்படும் "Gone with the wind" என்ற
திரைப்படத்தை தொலைக்காட்சியில் ஒரே ஒரு முறை ஒளிபரப்புவதற்காக ஐந்து
மில்லியன் டாலர் கட்டணம் செலுத்தியது அமெரிக்காவின் NBC தொலைக்காட்சி.
1986 - 335 ஆண்டுகள் போரை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தம் நெதர்லாந்துக்கும் சில்லி தீவுகளுக்கும் இடையில் கைச்சாத்தானது.
No comments:
Post a Comment