ஏப்ரல் 8
1767 - தாய்லாந்தின் அயுத்தயா பேரரசு பர்மியரிடம் வீழ்ந்தது.
1857 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காள இராணுவத்தைச்
சேர்ந்த மங்கல் பாண்டே என்ற சிப்பாய் பிரித்தானிய ஆட்சிக்கெதிராக
கிளர்ச்சியில் ஈடுபட்டமைக்காக தூக்கிலிடப்பட்டான்.
1861 - போலாந்து வரலாற்றில் முக்கியமான நாள். வார்சா படுகொலை அரங்கேறியது.
1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: லூசியானாவில் மான்ஸ்ஃபீல்ட் என்ற இடத்தில் கூட்டமைப்பு படைகள் கூட்டுப் படைகளை தோற்கடித்தன.
1866 - ஆஸ்திரியா-ஹங்கேரிக்கு எதிராக இத்தாலியும் புரூசியாவும் அணி திரண்டன.
1867 - முதலாவது உலக கண்காட்சி பாரிஸ் நகரில் ஆரம்பமானது.
1899 - மார்த்தா பிளேஸ் என்பவர் மின் இருக்கையில் மரண தண்டனை பெற்ற முதற் பெண்.
1919 - பஞ்சாபில் நுழையக்கூடாதென்ற தடையை மீறியதால் மகாத்மா காந்தி டில்லி
செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு பம்பாய்க்கு அழைத்துச்
செல்லப்பட்டார்.
1929 - டில்லி நடுவண் அரசு சட்டமன்ற கட்டிடத்தில்
பகத் சிங், மற்றும் பத்துகேஷ்வர் தத் ஆகியோர் துண்டுப் பிரசுரங்களையும்
குண்டுகளையும் வீசி தாமாகவே சரணடைந்தனர்.
1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர்கள் பிலிப்பீன்சின் பட்டான் மாநிலத்தைக் கைப்பற்றினர்.
1950 - இந்தியாவும் பாகிஸ்தானும் லியாக்கட்-நேரு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
1969 - மனிதனுக்கு முதல் முறையாக செயற்கை இருதயம் பொருத்தப்பட்டது.
கி.மு - 563 ல் புத்த மதத்தைத் தோற்றுவித்த கௌதம புத்தர் பிறந்தார்.
1957 - எகிப்தில் சூயஸ் கால்வாய் மீளத்திறக்கப்பட்டது.
1973 - சைப்பிரசில் 32 குண்டுவெடிப்புகள் இடம்பெற்றன.
1985 - போபால் அநர்த்தம்: போபாலில் நச்சு வாயுக் கசிவினால் 2,000 பேருக்கு
மேல் கொல்லப்பட்ட நிகழ்வுக்காக இந்தியா யூனியன் கார்பைட்
நிறுவனத்துக்கெதிராக வழக்குத் தொடர்ந்தது.
2000 - அரிசோனாவில் அமெரிக்கக் கடற்படை விமானம் ஒன்று வீழ்ந்ததில் 19 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
2004 - சூடான் அரசுக்கும் இரண்டு தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது.
No comments:
Post a Comment