Tuesday, April 3, 2012

ஏப்ரல் 2

ஏப்ரல் 2
அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாள்
1863 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜினியாவில் ரிச்மண்ட் நகரில் உணவுப் பற்றாக்குறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கும் அதிகமான பெண்கள் அமெரிக்கக் கூட்டமைப்புக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜெபர்சன் டேவிஸ் மற்றும் அவரது அமைச்சர்கள் கூட்டமைப்பின் தலைநகர் ரிச்மண்ட்டை விட்டுப் புறப்பட்டனர்.
1899 - பெல்ஜியத்தைச் சேர்ந்த கேமில் ஜெனாட்சி மணிக்கு 106 கிலோமீட்டர் வேகத்தில் காரை ஓட்டிச் சென்று சாலைப் போக்குவரத்தில் முதல் உலகச் சாதனை எற்படுத்தினார்.
1902 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது திரையரங்கு கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் திறக்கப்பட்டது.
1917 - ரஷ்யாவில் எட்டு மணி நேர வேலை அமுலுக்கு வந்தது. பெண்களுக்குச் சமஉரிமை உறுதிப்படுத்தப்பட்டது.
1930 - ஹைலி செலசி எதியோப்பியாவின் மன்னராக முடி சூடினார்.
1972 - நடிகர் சார்லி சப்ளின் 1950களில் கம்யூனிஸ்ட் என குற்றம் சாட்டப்பட்டபின்னர் முதற்தடவையாக ஐக்கிய அமெரிக்கா வந்தார்.
1975 - வியட்நாம் போர்: குவாங் காய் மாநிலத்தினுள் வடக்கு வியட்நாம் படைகள் முன்னேறியதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் அம்மாநிலத்தில் இருந்து இடம்பெயர்ந்தனர்.
1975 - கனடா, டொரொண்டோவில் சி.என் கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. 553.33 மீட்டர் உயரமான இக்கோபுரம் உலகில் மிக உயரமானதாகும்.
1982 - போக்லாந்து தீவுகளை ஆர்ஜெண்டீனா முற்றுகையிட்டது.
1983 - யாழ்ப்பாணம் அரச அதிபரின் செயலகத்தில் விடுதலைப் புலிகள் குண்டுத்தாக்குதல் நடத்தினர்.
1984 - ராகேஷ் சர்மா சோயூஸ் T-11 விண்கலத்தில் பயணித்து, விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

No comments: