ஏப்ரல் 9
1241 - மங்கோலியப் படைகள் போலந்து மற்றும் ஜெர்மனியப் படைகளைத் தாக்கி தோற்கடித்தனர்
1413 - ஐந்தாம் ஹென்றி இங்கிலாந்து மன்னனாக மூடிசூடினான்.
1667 - உலகின் முதல் திறந்த வெளி ஓவியக் கண்காட்சி 300 ஆண்டுகளுக்கு முன்பு பாரிசில் Palais-Royale எனுமிடத்தில் தொடங்கியது.
1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ரொபேர்ட் லீ தனது 26,765 பேருடனான
படைகளுடன் வேர்ஜீனியாவில் சரணடைந்ததில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு
வந்தது.
1940 - இரண்டாம் உலகப் போர்: நோர்வே, மற்றும் டென்மார்க் மீது ஜெர்மனி தாக்குதலைத் தொடுத்தது.
1947 - டெக்சாஸ், ஒக்லகோமா, மற்றும் கன்சாஸ் மாநிலங்களில் சூறாவளி தாக்கியதில் 181 பேர் கொல்லப்பட்டனர். 970 பேர் காயமடைந்தனர்.
1948 - ஜெருசலேம் நகரில் டெயிர் யாசின் என்ற கிராமத்தில் 120 அரபு மக்கள் இஸ்ரேலியரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1953 - வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் முதல் முப்பரிமாணத் திரைப்படமான "ஹவுஸ் ஒவ் வக்ஸ்" (House of Wax) இனை வெளியிட்டது
1959 - மேர்க்குரித் திட்டம்: ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது விண்வெளி வீரர்கள் ஏழு பேரின் பெயர்களை நாசா அறிவித்தது.
1963 - அமெரிக்காவின் முதல் கௌரவக் குடிமகன் என்ற பெருமையை வின்ஸ்டன்
சர்ச்சில் (winston Churchill) க்கு வழங்கிச் சிறப்பித்தது அமெரிக்கா.
ஆனால் அவர் அப்போது உயிரோடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1967 - முதல் போயிங் 737 பறப்பு.
1984 - ஸ்ரீ லங்கா கஜபா றெஜிமென்ட் இராண்வ வண்டி மீது யாழ்ப்பாணம்
ஆஸ்பத்திரி வீதியில் விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட கண்ணிவெடித்
தாக்குதலில் 19 படையினர் கொல்லப்பட்டனர்.
1991 - ஜோர்ஜியா சோவியத் ஒன்றியத்திலிருந்து விடுதலையை அறிவித்தது.
1992 - முன்னாள் பனாமா அதிபர் மனுவேல் நொரியேகாவுக்கு ஐக்கிய அமெரிக்காவின் சமஷ்டி நீதிமன்றம் 30 ஆண்டுகால சிறைத்தண்டனை அளித்தது.
1998 - ஹஜ் பயணத்தின் கடைசி நாளான மெக்காவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 150 யாத்திரிகள் மாண்டனர். ராகுல்ஜி பிறப்பு
1999 - நைஜர் அதிபர் இப்ராகிம் மைனசாரா படுகொலை செய்யப்பட்டார்.
2003 - ஈராக்கை அமெரிக்கக் கூட்டுப் படையினர் கைப்பற்றினர். சதாமின் 24 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.
No comments:
Post a Comment